‘நற்பண்பையும் அன்பையும் பற்றி பேசுகிறார்கள்’
‘நற்பண்பையும் அன்பையும் பற்றி பேசுகிறார்கள்’
பிரான்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளை சமீப ஆண்டுகளில் அவதூறு எனும் சூறாவளி கடுமையாக தாக்கி வருகிறது. உண்மைகளை எதிரிகள் சற்று திரித்து அல்லது ஒரேடியாக புரட்டிப் பேசி அவர்களை தவறாக சித்தரித்து வருகின்றனர். 1999-ன் தொடக்கத்தில், பிரான்ஸ் மக்களே, ஏமாறாதீர்! என்ற தலைப்பை கொண்ட துண்டுப்பிரதிகளை யெகோவாவின் சாட்சிகள் பிரான்ஸ் முழுவதும் 1.2 கோடி விநியோகம் செய்தார்கள். தங்களுக்கு விரோதமாக கூறப்பட்ட அவதூறான கூற்றுகளுக்கு, இந்தத் துண்டுப்பிரதியில் வெளிப்படையாக அவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.
இந்த நடவடிக்கை எடுத்து சிறிது நாட்களுக்குப் பின்பு, மருத்துவரும் முன்னாள் சட்ட மாமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஷான் பொனோம் ஒரு செய்தித்தாளுக்கு கடிதம் அனுப்பினார். அவர் எழுதினதாவது: “எப்போதாவது யெகோவாவின் சாட்சிகள் என் வீட்டுக்கு வருவதுண்டு. நற்பண்பையும் அன்பையும் பற்றி என்னிடம் பேசுவார்கள். . . . அவர்கள் வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் புகுவதில்லை. சாந்தமாக பேசுவார்கள், அவர்கள் சொல்வதில் நம்பிக்கை காட்டாவிட்டாலும் என் கருத்துக்களை பொறுமையாக கேட்பார்கள்.”
யெகோவாவின் சாட்சிகள் ஆன்மீகத்திற்கே முதலிடம் கொடுப்பதால், “அவர்களுக்கு உலகப்பிரகாரமான நடைமுறை அறிவு இல்லை. அதனால் யாருக்கும் எந்தத் தீங்கும் இல்லை. ஆனால் சில அரசியல்வாதிகளுக்கு இத்தகைய நடைமுறை அறிவு இல்லாததே மக்களின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் அதிக ஆபத்தாயுள்ளது” என மிஸ்டர் பொனோம் சொன்னார்.