Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நன்னெறிகள் நலிவடைந்து வருகின்றன

நன்னெறிகள் நலிவடைந்து வருகின்றன

நன்னெறிகள் நலிவடைந்து வருகின்றன

“பெரும்பாலும் அப்படியெல்லாம் முன்பு நடந்ததில்லை” என்று சொன்னார் ஜெர்மனியின் முன்னாள் முதல்வர் ஹெல்மட் ஷ்மிட். அவர் எதைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்தார்? அரசாங்க அதிகாரிகளின் அப்பட்டமான நேர்மையற்ற செயல்களைப் பற்றித்தான். இவை சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருந்தன. “பேராசையால் ஒழுக்க தராதரங்கள் சீரழிந்துவிட்டன” என அவர் கூறினார்.

அவர் சொன்னதை அநேகர் ஒத்துக்கொள்வர். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் வேரூன்றப்பட்ட நன்னெறி முறைகள், எது சரி எது தவறு என்பதற்குரிய வழிகாட்டியாக பலரால் வெகுகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நன்னெறி முறைகள் ஒதுக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ நாடுகளில் இதுவே நடக்கிறது.

பைபிளின் நன்னெறி காலத்திற்கு ஏற்றதா?

நேர்மையும் நாணயமும்கூட பைபிள் நன்னெறியில் உள்ளன. என்றாலும், ஏமாற்றுதலும் ஊழலும் மோசடியும் எல்லா இடங்களிலும் ஊடுருவி காணப்படுகின்றன. “துப்பறியும் அதிகாரிகளில் சிலர், போலீஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை குற்றவாளிகளிடமே திரும்பக் கொடுத்து மொத்தமாக 70,00,000 ரூபாயை சுருட்டிக்கொண்டதாக” லண்டன் த டைம்ஸ் அறிக்கையிடுகிறது. ஆஸ்திரியாவில் இன்ஸூரன்ஸ் மோசடி சர்வ சாதாரணம். “ஜெர்மனியில் நடந்த மிகப் பயங்கரமான விஞ்ஞான மோசடிகளில் ஒன்றை” சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோது

விஞ்ஞானிகள் திகைத்துவிட்டனர். “ஜெர்மன் மரபியலாளர்களில் நட்சத்திர நாயகமாக திகழ்ந்த” பேராசிரியர் ஒருவர் பேரளவில் ‘டேட்டா’ மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

கணவனுக்கு அல்லது மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது என்றும் பைபிள் நன்னெறி சொல்கிறது. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்​—⁠என்றென்றும் நிலைத்திருக்க வேண்டிய உறவு. ஆனால் பெரும்பாலான தம்பதியினர் நீதிமன்றத்தில் விவாகரத்து செய்து தங்களுடைய உறவை துண்டித்துக் கொள்கின்றனர். “‘பழமைவாத’ ஸ்விட்ஸர்லாந்திலும் அநேக திருமணங்கள் முறிவடைகின்றன” என கிறைஸ்ட் இன் டே கேஜென்வார்ட் (சமகாலத்து கிறிஸ்தவம்) என்ற கத்தோலிக்க செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. நெதர்லாந்தில் 33 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைகின்றன. கடந்த சில வருடங்களில் ஜெர்மனியில் ஏற்பட்ட சமூக மாற்றங்களை கவனித்த ஒரு பெண் தன்னுடைய கவலையைப் பற்றி எழுதினார்: “இப்பொழுது திருமணம் பழம்பாணியாக, காலத்திற்கு ஒவ்வாததாக கருதப்படுகிறது. வாழ்க்கை பூராவும் சேர்ந்து வாழும் எண்ணத்தில் மக்கள் திருமணம் செய்வதில்லை.”

மறுபட்சத்தில், பைபிள் போதிக்கும் நன்னெறிகள் நம்பத்தக்கதாகவும் நாம் வாழும் இந்த நவீன உலகிற்கு ஏற்றதாகவும் இருப்பதாக லட்சோப லட்சம் பேர் நினைக்கிறார்கள். பைபிளின் ஒழுக்க தராதரங்களின்படி வாழ கற்றுக்கொண்டது தங்களுக்கு மகிழ்ச்சியை தந்ததாக ஸ்விட்ஸர்லாந்து-ஜெர்மனி எல்லையில் வசிக்கும் ஒரு தம்பதியினர் அனுபவத்தில் அறிந்துகொண்டனர். அவர்களைப் பொருத்தவரையில், “வாழ்க்கையின் எல்லா அம்சங்களுக்கும் வழிகாட்டி ஒன்றுதான். அதுவே பைபிள்.”

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பைபிள் மதிப்புமிக்க வழிகாட்டியாக இருக்க முடியுமா? பைபிள் நன்னெறி இன்றைய காலத்துக்கு நடைமுறையானதா?