Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்கு மகிமை சேர்க்க ஒரு டிவி நிகழ்ச்சி அவளுக்கு உதவியது

கடவுளுக்கு மகிமை சேர்க்க ஒரு டிவி நிகழ்ச்சி அவளுக்கு உதவியது

ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை

கடவுளுக்கு மகிமை சேர்க்க ஒரு டிவி நிகழ்ச்சி அவளுக்கு உதவியது

“சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்” என அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (பிலிப்பியர் 1:15) யெகோவாவின் ஜனங்களின் பெயரைக் கெடுக்க நினைத்தவர்கள்கூட சில சமயங்களில், தங்களை அறியாமலேயே நல்மனமுடையவர்களை சத்தியத்திடம் திருப்புவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.

நவம்பர் 1998-⁠ல், பிரான்சிலுள்ள லூவியேவில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தை​—⁠பெத்தேலை​—⁠பற்றிய டாக்குமென்ட்டரி படம் ஒன்று பிரெஞ்சு தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதைப் பார்த்த பலர் பல விதமாக பிரதிபலித்தாலும், அது எதிர்பாராத விதங்களில் நல்ல பலன்களை தந்தது.

அந்த நிகழ்ச்சியை கவனித்தவர்களில் ஒருவர் அன்னா-போலா. அவர் பெத்தேலிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில்தான் வசித்து வந்தார். விவாகரத்து செய்திருந்த அன்னா-போலா இரண்டு பிள்ளைகளுக்கு தாய். அவர் ஒரு வேலையை தேடிக்கொண்டிருந்தார். அதனால் அடுத்தநாள் காலையில் தனக்கு அங்கு வேலை கிடைக்குமா என பெத்தேலுக்கு போன் செய்து கேட்டார். “உங்களுடைய இடம் ஒரு அருமையான இடம், அங்கு நடக்கிற வேலை பயனுள்ள வேலை என்பதை தெளிவாக பார்த்தேன்” என அவர் சொன்னார். பெத்தேலில் உள்ள எல்லாருமே சம்பளமின்றி மனப்பூர்வமாக வேலை செய்யும் ஊழியர்கள் என்பதை அறிந்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம்! யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகளைப் பற்றி சிறிது நேரம் கேட்டறிந்த பின்பு தன்னை ஒரு யெகோவாவின் சாட்சி வந்து சந்திப்பதற்கு சம்மதித்தார்.

அங்குள்ள சபையில் முழுநேர ஊழியம் செய்யும் லேனா என்பவர் அவரை சந்தித்தார், அவர்கள் நீண்ட நேரம் உரையாடினார்கள். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு * என்ற புத்தகத்தை அவரிடமிருந்து அன்னா-போலா பெற்றுக்கொண்டார். அடுத்த முறை சந்திப்பதற்குள் அன்னா-போலா அந்தப் புத்தகம் முழுவதையும் படித்து முடித்துவிட்டிருந்தார். அவருக்கு பல கேள்விகளும் இருந்தன. அவர் உடனடியாக பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். “கடவுளுடைய வார்த்தையை கற்றுக்கொள்வதற்கு அதுவே சந்தர்ப்பமாக இருந்தது. இதற்கு முன் நான் பைபிளை தொட்டுகூட பார்த்ததில்லை” என அவர் சொன்னார்.

ஜனவரியில் அன்னா-போலா பெத்தேலைப் பார்க்க வந்தார், மறுவாரத்தில் முதன்முதலாக கிறிஸ்தவ கூட்டத்தில் கலந்துகொண்டார். அதற்கு பிறகு விரைவிலேயே தன் பிள்ளைகளுக்கு பைபிளை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார், நண்பர்களுக்கும் சாட்சி கொடுக்க ஆரம்பித்தார். “நான் கற்றுக்கொண்டவற்றை மற்றவர்களிடம் சொல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. ஆட்களிடம் பைபிள் சத்தியங்களை எடுத்து சொல்லி அவர்களை ஆறுதல்படுத்த விரும்பினேன்” என அவர் சொல்கிறார். தன்னுடைய சொந்த பிரச்சினைகளை எல்லாம் கஷ்டப்பட்டு சமாளித்தபின், அவர் கூட்டங்களுக்கு தவறாமல் போகத் தொடங்கினார். அவர் படுவிரைவாக முன்னேறி மே 5, 2002-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றார்.

அதுமட்டுமா, அன்னா-போலா சிறந்த முன்மாதிரியாக இருப்பதையும் வைராக்கியமாக பிரசங்கிப்பதையும் கவனித்த அவருடைய அம்மா பைபிளை படிக்க ஆரம்பித்தார், சீக்கிரத்தில் முழுக்காட்டுதலும் பெற்றார். அன்னா-போலா இவ்வாறு சொல்கிறார்: “என்னுடைய சந்தோஷத்தை வாய்விட்டுச் சொல்ல வார்த்தைகளே இல்லை. யெகோவாவைப் பற்றி தெரிந்து அவரை சேவிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காகவும் அவர் தந்த எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் நான் தினம்தினம் அவருக்கு நன்றி சொல்கிறேன்.”

[அடிக்குறிப்பு]

^ பாரா. 6 யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 8-ன் படங்கள்]

மேலே: அன்னா-போலா

கீழே: பிரான்சு கிளை அலுவலகத்தின் நுழைவாயில்