Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“யெகோவாவின் நாமத்தை அறிவிப்பதற்காக”

“யெகோவாவின் நாமத்தை அறிவிப்பதற்காக”

“யெகோவாவின் நாமத்தை அறிவிப்பதற்காக”

ஆன்மீக விஷயங்களும் அறிவொளியூட்டும் தகவல்களும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் அடங்கியிருப்பதால் அவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் உயர்வாக மதிக்கிறார்கள். இது சம்பந்தமாக பிரான்ஸில் வசிக்கும் வாசகர் ஒருவர் சமீபத்தில் பின்வரும் கடிதத்தை எழுதினார்:

“நான் ஓர் இளம் பெண், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவள், அதிக படிப்பு இல்லாதவள். சமீப காலத்தில், உங்களுடைய பத்திரிகைகளை நான் வாசிக்க ஆரம்பித்தேன். அதிலுள்ள விஷயங்கள் என்னைக் கவர்ந்தன, இதனால் வாசிப்பதன் மதிப்பை நான் உணர ஆரம்பித்திருக்கிறேன். உங்களுடைய பத்திரிகைகளின் வாயிலாக என்னுடைய சொல்வளத்தைப் பெருக்கியிருக்கிறேன்; அதுமட்டுமல்ல, இப்பொழுது என்னால் அதிக தவறில்லாமல் கடிதங்கள் எழுத முடிகிறது.

“மனிதன், பூமி மற்றும் படைப்பாளர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களின் பேரிலும் நீங்கள் கட்டுரைகள் எழுதுவது எனக்கு வியப்பூட்டுகிறது. இந்தக் கட்டுரைகளெல்லாம் அத்தனை தெளிவாக இருப்பதால் அவற்றை ஆர்வமாக வாசிக்க ஒருவரைத் தூண்டுகின்றன. எல்லா வகையான மக்களுக்கும் ஒரே சமயத்தில் போதிக்கும் திறமை வேறு யாருக்குமே கிடையாது.

“இதையெல்லாம் எந்தவொரு இலாபத்திற்கும் இல்லாமல் யெகோவாவின் நாமத்தை அறிவிப்பதற்காகவே செய்வதும் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. உங்களுக்கு அவருடைய அங்கீகாரம் இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன், உங்களுக்கு நன்றி. நீங்கள் கற்பிப்பதற்கு படைப்பாளர் உங்களுக்குத் தொடர்ந்து பலம் தருவாராக.”

யெகோவாவின் சாட்சிகள் தற்பொழுது 235 நாடுகளில் பைபிள் கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். காவற்கோபுரம் 148 மொழிகளிலும் விழித்தெழு! 87 மொழிகளிலும் பிரசுரிக்கப்படுகின்றன. இந்தப் பத்திரிகைகள் எந்தவொரு மனிதனையும் போற்றி புகழ்வதற்கு அச்சிடப்படவில்லை. அவற்றில் வெளிவரும் பைபிள் அடிப்படையிலான அறிவுரையும் புதுப் புது தகவல்களும், ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதிக்கிற . . . [யெகோவா] நானே’ என்று கூறுகிற படைப்பாளருக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. (ஏசாயா 48:17) பைபிளை படிக்க உதவும் இந்தப் பிரசுரங்களைப் பயன்படுத்தி பரிசுத்த வேதாகமத்தை தொடர்ந்து வாசித்து பயனடைவீர்களாக.