Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்

ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவில் ஒரு புதிய அங்கத்தினர் சேர்க்கப்பட்டிருப்பதாக செப்டம்பர் 5, 2012, புதன்கிழமை காலை, அமெரிக்கா மற்றும் கனடா பெத்தேல் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 1, 2012 முதல் சகோதரர் மார்க் சான்டர்சன் ஆளும் குழுவின் அங்கத்தினராகச் சேவை செய்ய ஆரம்பித்தார்.

சகோதரர் சான்டர்சன் அமெரிக்காவில் கலிபோர்னியாவிலுள்ள சான் டியகோ என்ற நகரில் கிறிஸ்தவ பெற்றோரால் வளர்க்கப்பட்டவர். பிப்ரவரி 9, 1975-ல் ஞானஸ்நானம் பெற்றார். செப்டம்பர் 1, 1983 முதல் கனடாவிலுள்ள சஸ்காட் செவனில் பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தார். டிசம்பர் 1990-ல், அமெரிக்காவில் நடந்த ஊழியப் பயிற்சி பள்ளியின் (மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளி என இப்போது அழைக்கப்படுகிறது) ஏழாவது வகுப்பில் பட்டம் பெற்றார். ஏப்ரல் 1991-ல், கனடாவிலுள்ள நியூபௌண்ட்லாந்து தீவில் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டார். துணை வட்டாரக் கண்காணியாக சேவை செய்த பிறகு, பிப்ரவரி 1997-ல் கனடா பெத்தேலில் சேவை செய்வதற்காக அழைக்கப்பட்டார். நவம்பர் 2000-ல், அமெரிக்க கிளை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவ தகவல் சேவை இலாகாவிலும், பின்பு ஊழிய இலாகாவிலும் சேவை செய்தார்.

செப்டம்பர் 2008-ல், கிளை அலுவலகக் குழுவினருக்கான பள்ளியில் சகோதரர் சான்டர்சன் கலந்துகொண்டார். பின்பு பிலிப்பைன்ஸ் கிளை அலுவலகக் குழுவின் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 2010-ல், மறுபடியும் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். அங்கு ஆளும் குழுவின் ஊழியக் குழுவிற்கு உதவியாளராகச் சேவை செய்தார்.