Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:

இயேசு எப்போது “காவலிலுள்ள தேவதூதர்களிடம் போய்ப் பிரசங்கித்தார்”? (1 பே. 3:19)

இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு சில காலத்திற்கு பின்பு, அந்தப் பொல்லாத தூதர்களுக்கு எதிராக கடவுள் நிர்ணயித்த தண்டனைத் தீர்ப்பைப் பற்றி அறிவித்திருக்க வேண்டும்.—6/15, பக்கம் 23.

மக்களைச் செம்மறியாடுகளாகவும் வெள்ளாடுகளாகவும் இயேசு எப்போது நியாயந்தீர்ப்பார்? (மத். 25:32)

பொய் மதத்தின் அழிவுக்குப் பிறகு, மிகுந்த உபத்திரவத்தின்போது இயேசு வருகையில் மக்களை செம்மறியாடுகளாகவும் வெள்ளாடுகளாகவும் நியாயந்தீர்ப்பார்.—7/15, பக்கம் 6.

கோதுமை-களைகள் பற்றிய உவமையிலுள்ள அக்கிரமக்காரர்கள் எப்போது அழுது அங்கலாய்ப்பார்கள்? (மத். 13:36, 41, 42)

மிகுந்த உபத்திரவத்தின்போது தப்பிக்க வழியே இல்லை என்பதை அறிந்ததும் அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள்.—7/15, பக்கம் 13.

உண்மையும் விவேகமும் உள்ள அடிமை பற்றிய இயேசுவின் வார்த்தைகள் எப்போது நிறைவேறின? (மத். 24:45-47)

கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளில் அல்ல, மாறாக 1914-க்குப் பின் நிறைவேற ஆரம்பித்தது. 1919-ல் வீட்டார்மீது இயேசு இந்த அடிமையை நியமித்தார். ஆன்மீக உணவைப் பெறும் எல்லா கிறிஸ்தவர்களும் இந்த வீட்டாரில் அடங்குவர்.—7/15, பக்கங்கள் 21-23.

தம்முடைய உடமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள உண்மையுள்ள அடிமையை இயேசு எப்போது நியமிப்பார்?

மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில் உண்மையுள்ள அடிமை பரலோகத்திற்குப் போன பிறகு இயேசு இந்த நியமிப்பைக் கொடுப்பார்.—7/15, பக்கம் 25.

சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமில் ஆரம்பித்த நீண்ட மரண அணிவகுப்பிலிருந்து உயிர்தப்ப 230 யெகோவாவின் சாட்சிகளுக்கு கடவுளுடைய சக்தியோடுகூட வேறு எதுவும் உதவியது?

பட்டினியாலும் நோயாலும் பலவீனமாக இருந்தபோதிலும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்ததுதான் அவர்களுக்கு உதவியது.—8/15, பக்கம் 18.

இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்ற சம்பவம் நமக்கு ஏன் ஊக்கமளிக்கிறது?

யோர்தானில் தண்ணீர் கரைபுரண்டோடியபோதிலும், ஜனங்கள் அதைக் கடப்பதற்காக யெகோவா தண்ணீரின் ஓட்டத்தை நிற்கும்படிச் செய்தார். இது, யெகோவாமீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தையும் நம்பிக்கையையும் எப்படிப் பலப்படுத்தியதோ அதே போல நம்மையும் பலப்படுத்துகிறது.—9/15, பக்கம் 16.

மீகா 5:5-ல் மேய்ப்பரையும் அதிபதிகளையும் பற்றி கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் இன்று எவ்வாறு நிறைவேறுகிறது?

மீகா 5:5-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ள ‘ஏழு மேய்ப்பரும் எட்டு அதிபதிகளும்’ சபை மூப்பர்களைக் குறிக்கிறார்கள். வரப்போகும் தாக்குதலைச் சமாளிப்பதற்கு கடவுளுடைய மக்களை அவர்கள் இப்போதே பலப்படுத்துகிறார்கள்.—11/15, பக்கம் 20.