காவற்கோபுரம் (படிப்பு இதழ்) பிப்ரவரி 2014  

இந்த இதழ், 45-ஆம் சங்கீதத்திலுள்ள சிலிர்ப்பூட்டும் சம்பவங்களை விவரிக்கிறது. கொடையாளரும், பாதுகாப்பவரும், மிகச் சிறந்த நண்பருமான யெகோவா தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க இது உதவுகிறது.

மகிமையின் ராஜாவான கிறிஸ்துவை வாழ்த்துங்கள்!

சங்கீதம் 45-ல் விவரிக்கப்பட்டுள்ள சிலிர்ப்பூட்டும் சம்பவங்கள் இன்று நமக்கு என்ன அர்த்தத்தைத் தருகின்றன?

ஆட்டுக்குட்டியானவரின் திருமணம்—மனமகிழுங்கள்!

மணமகள் யார்? திருமணத்திற்காக அவளைக் கிறிஸ்து எப்படித் தயார்படுத்தியிருக்கிறார்? ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்தின்போது உண்டாகும் மகிழ்ச்சியில் யார் பங்குகொள்வார்கள்?

விதவையின் விசுவாசத்திற்கு கிடைத்த வெகுமதி

விதவையின் மகன் உயிர்த்தெழுப்பப்பட்டது அவளது வாழ்வில் நிகழ்ந்த மறக்கமுடியாத, அவளுடைய விசுவாசத்தை வெகுவாக பலப்படுத்திய சம்பவம். அவளிடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

யெகோவா—கொடையாளர், பாதுகாப்பவர்

நம் பரலோகத் தகப்பனான யெகோவா தேவனைத் தெரிந்துகொள்ளுங்கள். மாபெரும் கொடையாளரும் பாதுகாப்பவருமான கடவுளுடன் எப்படி நெருங்கிய பந்தத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவா—மிகச் சிறந்த நண்பர்

யெகோவாவின் நெருங்கிய நண்பர்களான ஆபிரகாம் மற்றும் கிதியோனின் உதாரணங்களைச் சிந்தித்துப் பாருங்கள். யெகோவாவின் நண்பராக வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

எதன் அடிப்படையில் முதல் நூற்றாண்டு யூதர்கள் மேசியாவின் வருகையை ‘எதிர்பார்த்தார்கள்’?

‘யெகோவாவின் இனிய குணத்தைத் தியானியுங்கள்’

பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீது உண்மை வழிபாட்டிற்காக கடவுள் செய்த ஏற்பாட்டிற்கு நன்றியுள்ளவராக இருந்தார். இன்று நாம் எப்படி உண்மை வழிபாட்டில் மகிழ்ச்சி காணலாம்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

நூறு வயதைத் தொட்ட விசுவாசக் காவியம்!

கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் விசுவாசத்தை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” அரங்கேறி இப்போது நூறு ஆண்டுகள் கடந்துவிட்டன.