Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

சங்கீதம் 37:25-லும் மத்தேயு 6:33-லும் உள்ள வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? யெகோவாவின் மக்கள் உணவு இல்லாமல் கஷ்டப்படவே மாட்டார்கள் என்று அர்த்தமா?

“நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை” என்று தாவீது சொன்னார். இதை அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து சொன்னார். கடவுள் ஒருபோதும் அவரைக் கைவிடமாட்டார் என்று தாவீது உறுதியாக நம்பினார். (சங். 37:25) ஆனால், யெகோவாவின் மக்கள் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டதே இல்லை, இனிமேலும் கஷ்டப்படவே மாட்டார்கள் என்று தாவீது சொல்லவில்லை.

சில சமயங்களில் தாவீதுகூட உணவு இல்லாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். ஒருமுறை சவுலுக்கு பயந்து ஓடியபோது அவருக்கும் அவருடைய ஆட்களுக்கும் உணவு தேவைப்பட்டது. (1 சா. 21:1-6) அப்போது அவர் ‘அப்பத்துக்கு இரந்துதிரிந்தார்,’ அதாவது தேடி அலைந்தார். ஆனால், பிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு வரவில்லை. இருந்தாலும், யெகோவா அவரை ஒருபோதும் கைவிட மாட்டர் என்று தாவீது உறுதியாக நம்பினார்.

யெகோவாவுடைய சேவைக்கு முதலிடம் கொடுப்பவர்களின் தேவைகளை அவர் கவனித்துக்கொள்வார். இதைத்தான் மத்தேயு 6:33-ல் இயேசு சொன்னார்: “முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள், அப்போது இவற்றையெல்லாம் [உணவு, உடை போன்றவற்றை] அவர் உங்களுக்குக் கொடுப்பார்.” ஆனால், அவருடைய சீடர்கள் பசியாலும் தாகத்தாலும் கஷ்டப்படும் காலம் வரும் என்றும் சொன்னார். (மத். 25:35, 37, 40) அப்போஸ்தலன் பவுலின் வாழ்க்கையில் அதுதான் நடந்தது. அவர் பலமுறை “பசியோடும் தாகத்தோடும்” இருந்தார், “பலமுறை பட்டினி” கிடந்தார்.—2 கொ. 11:27.

நம் வாழ்க்கையிலும் பல சோதனைகள் வரும் என்று பைபிள் சொல்கிறது. யோபுவைச் சோதிக்க சாத்தானை யெகோவா அனுமதித்தார். அதேபோல் நம்மையும் சோதிக்க அனுமதிப்பார். (யோபு 2:3-5) உதாரணமாக, நாசி சித்திரவதை முகாம்களில் நம் சகோதரர்கள் நிறைய சோதனைகளை அனுபவித்திருக்கிறார்கள். அவர்களுடைய விசுவாசத்தைச் சோதிப்பதற்காக அவர்களைப் பட்டினி போட்டிருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவுக்கு உண்மையோடு இருந்ததால் யெகோவா அவர்களைக் கைவிடவில்லை. மற்ற சோதனைகளை அனுமதிப்பது போல் இந்தச் சோதனையையும் யெகோவா அனுமதித்தார். இருந்தாலும் ஒருவரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு சோதனைகளை யெகோவா அனுமதிக்க மாட்டார். (1 கொ. 10:13) “கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைப்பதற்கு மட்டுமல்ல, அவருக்காகப் பாடுகளை அனுபவிப்பதற்கும் நீங்கள் பாக்கியம் பெற்றீர்கள்” என்று பைபிள் சொல்கிறது.—பிலி. 1:29.

தம்முடைய உண்மை ஊழியர்களை யெகோவா எப்போதும் பாதுகாப்பார். “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” என்று யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 54:17) அவருடைய மக்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துபோக அவர் அனுமதிக்க மாட்டார். ஆனால், தனி நபர்களுக்கு நிறைய சோதனைகள் வரலாம், சாகும் அளவுக்குக்கூட அவர்கள் சோதிக்கப்படலாம்.