Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

2014-ல் வெளிவந்த காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் கவனமாக வாசித்திருப்பீர்கள். இங்கே இருக்கிற கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா என்று பாருங்கள்:

கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை எரிக்கலாமா?

பைபிளில் இதற்கு நேரடியான பதில் இல்லை. ஆனால், சவுல் ராஜாவுடைய உடலும் யோனத்தானுடைய உடலும் எரிக்கப்பட்ட பிறகு எலும்புகள் மட்டும் புதைக்கப்பட்டது என்று பைபிள் சொல்கிறது. (1 சா. 31:2, 8-13) இறந்தவர்களுடைய உடலை எரிக்கிறதா புதைக்கிறதா என்பது ஒருவருடைய சொந்த விருப்பம்.—6/15, பக்கம் 7.

நம்முடைய கஷ்டங்களுக்கு கடவுள் காரணம் இல்லை என்று எப்படி உறுதியாக நம்பலாம்?

கடவுளைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது: ‘கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர்.’ “அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.” “யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்.” அதனால், நமக்கு வரும் கஷ்டங்களுக்கு கடவுள் காரணம் இல்லை என்று நாம் உறுதியாக நம்பலாம். (உபா. 32:4; சங். 145:17; யாக். 5:11)—10/1, பக்கம் 4

தேவை அதிகமுள்ள இடத்திற்கு ஒருவர் மாறிப் போகும்போது என்ன சவால்கள் வரலாம்?

மூன்று சவால்கள் வரலாம்: (1) புது இடத்தில், மக்கள் வாழும் விதம் வித்தியாசமாக இருக்கலாம், (2) அடிக்கடி வீட்டு ஞாபகம் வரலாம், (3) அங்கிருக்கும் சகோதர சகோதரிகளோடு பேசிப் பழக கொஞ்ச நாள் எடுக்கலாம். ஆனால், இந்த சவால்களை சமாளித்த சகோதர சகோதரிகளுக்கு நிறைய ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது.—7/15, பக்கங்கள் 3-5.

புது துண்டுப்பிரதியை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்?

எல்லா துண்டுப்பிரதியும் ஒரே மாதிரிதான் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு துண்டுப்பிரதியிலும் பொருத்தமான வசனங்கள் இருக்கிறது. துண்டுப்பிரதியின் முதல் பக்கத்தில் இருக்கிற கேள்வியை ஒருவரிடம் கேளுங்கள். அவர் என்ன பதில் சொன்னாலும் சரி, அடுத்த பக்கத்தில் இருக்கிற “கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது?” என்ற பகுதியை காட்டுங்கள். மறுசந்திப்பு செய்ய ஒரு கேள்வியையும் கேளுங்கள்.—8/15, பக்கங்கள் 13-14.

பெற்றோர்கள் நல்ல மேய்ப்பரை போல இருக்க என்ன செய்ய வேண்டும்?

பிள்ளைகளை நன்றாகப் புரிந்துகொள்ள அவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்க வேண்டும். பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்களை சரியான வழியில் வழிநடத்த வேண்டும். முக்கியமாக, பைபிள் விஷயங்களில் பிள்ளைகளுக்கு சந்தேகம் இருந்தால் அதை பற்றி பொறுமையாக அவர்களிடம் பேச வேண்டும்.—9/15, பக்கங்கள் 18-21.

இயேசுவோடு மற்றவர்களும் ஆட்சி செய்வார்கள் என்று எந்த ஒப்பந்தத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம்?

இயேசு புதிய ஒப்பந்தத்தைப் பற்றி சொன்ன பிறகு, அப்போஸ்தலர்களோடு வேறொரு ஒப்பந்தத்தை செய்தார். அதுதான் அரசாங்கத்திற்கான ஒப்பந்தம். (லூக்கா 22:28-30) இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாக ஆட்சி செய்யும் வாய்ப்பு மற்றவர்களுக்கும் கிடைத்தது.—10/15, பக்கங்கள் 16-17.

அப்போஸ்தலர் 15:14-ல் யெகோவாவுடைய “பெயருக்கென்று ஒரு மக்கள் தொகுதி”என்று யாக்கோபு யாரை பற்றி சொன்னார்?

‘இந்த மக்கள் தொகுதியில்’ யூதர்களும் மற்ற நாட்டு மக்களும் இருந்தார்கள். யெகோவாவுடைய “மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதற்கென்று” கடவுள் இந்த மக்களை தேர்ந்தெடுத்தார். (1 பே. 2:9, 10)—11/15, பக்கங்கள் 24-25.