Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்தீர்களா? அப்படியென்றால் இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.

கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் ஜெபம் செய்வது சரியா?

இல்லை. நாம் யெகோவாவிடம்தான் ஜெபம் செய்ய வேண்டும் என்று இயேசுவே சொன்னார். அவரும் யெகோவாவிடம்தான் ஜெபம் செய்தார். (மத். 6:6-9; யோவா. 11:41; 16:23) இயேசுவின் ஆரம்ப கால சீடர்களும் யெகோவாவிடம்தான் ஜெபம் செய்தார்கள், இயேசுவிடம் செய்யவில்லை. (அப். 4:24, 30; கொலோ. 1:3)—4/1, பக்கங்கள் 14-15.

ஒவ்வொரு வருடமும் இயேசுவின் நினைவு நாளுக்கு தயாராக நாம் என்ன செய்யலாம்?

இயேசுவின் மரணத்திற்கு முன்பும் பின்பும் நடந்த சம்பவங்களைப் பற்றி பைபிளில் படிக்கலாம். ஊழியத்தில் அதிக நேரம் செலவு செய்யலாம். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிற நம்பிக்கையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கலாம்.—1/15, பக்கங்கள் 14-16.

ஜப்பானில் இருக்கும் நம் சகோதரர்களுக்கு என்ன பரிசு கிடைத்தது?

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இருக்கிற மத்தேயு புத்தகம் மட்டும் ஒரு தனி புத்தகமாக வெளியிடப்பட்டது. ஊழியத்தில் கொடுப்பதற்காக இது தயாரிக்கப்பட்டது. பைபிளைப் பற்றி தெரியாத நிறையப் பேர் இதை ஆர்வமாக வாங்கி படிக்கிறார்கள்.—2/15, பக்கம் 3.

முதல் நூற்றாண்டில் இருந்த சூழ்நிலைமை நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு எப்படி உதவியாக இருந்தது?

ரோமர்கள் ஆட்சி செய்த சமயத்தில் சமாதானமான சூழ்நிலை இருந்தது. இதைத்தான் பாக்ஸ் ரோமானா என்று அழைக்கிறார்கள். அந்த சமயத்தில் நல்ல ரோடுகள் இருந்த காரணத்தினால் சீடர்களால் சுலபமாக பயணம் செய்ய முடிந்தது. அன்று உலகத்தில் இருந்த நிறையப் பேர் கிரேக்க மொழியைப் பேசியதால், சீடர்களால் மற்றவர்களுக்கு நற்செய்தியை சொல்ல முடிந்தது. முக்கியமாக, ரோம சாம்ராஜ்யத்தில் சிதறியிருந்த யூதர்களுக்கும் சொல்ல முடிந்தது. நற்செய்தியை சட்டப்பூர்வமாக நிலைநாட்டுவதற்கு ரோம சட்டமும் சீடர்களுக்கு உதவியாக இருந்தது.—2/15, பக்கங்கள் 20-23.

இப்போதெல்லாம் நம் பத்திரிகைகளில் ஏன் நிழல்-நிஜம் என்று அடிக்கடி விளக்குவது இல்லை?

நிழல்-நிஜம் என்பதற்கு பைபிளிலேயே சில உதாரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று கலாத்தியர் 4:21-31-ல் இருக்கிறது. ஆனால் ஒரு பைபிள் பதிவிற்கு பெரியளவு நிறைவேற்றம் இருக்கிறது என்று நாமே சொந்தமாகத் தீர்மானிக்கக் கூடாது. இருந்தாலும், பைபிளில் சொல்லப்பட்டு இருக்கும் சம்பவங்களிலிருந்தும் நபர்களிடமிருந்தும் நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். (ரோ. 15:4)—3/15, பக்கங்கள் 17-18.

மனந்திரும்பாமல் இருக்கிற ஒருவரை சபைநீக்கம் செய்வது ஓர் அன்பான செயல் என்று எப்படி சொல்லலாம்?

எப்படிப்பட்டவர்களை சபைநீக்கம் செய்ய வேண்டும் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. இந்த ஏற்பாடு சபைக்கு நன்மை அளிக்கிறது. (1 கொ. 5:11-13) அது கடவுளுடைய பெயருக்கு மகிமை சேர்க்கிறது, சபையைப் பாதுகாக்கிறது, தவறு செய்தவர் மனந்திரும்புவதற்கு உதவி செய்கிறது.—4/15, பக்கங்கள் 29-30.