Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

புதிய உலகத்துக்காக இன்றே தயாராகுங்கள்

புதிய உலகத்துக்காக இன்றே தயாராகுங்கள்

‘நன்மை செய்கிறவர்களாக இருக்க வேண்டுமென்று கட்டளையிடு; இப்படிச் செய்யும்போது, உண்மையான வாழ்வைக் கண்டிப்பாக அவர்கள் அடைவார்கள்.’—1 தீ. 6:18, 19.

பாடல்கள்: 125, 40

1, 2. (அ) புதிய உலகத்தில் நீங்கள் எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? (ஆரம்பப் படம்) (ஆ) புதிய உலகத்தில் எது நமக்கு அதிக சந்தோஷத்தைத் தரும்?

நாம் எல்லாருமே முடிவில்லா வாழ்க்கைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். இதைத்தான் பவுல், ‘உண்மையான வாழ்வு’ என்று சொன்னார். (1 தீமோத்தேயு 6:12, 19-ஐ வாசியுங்கள்.) இந்த வார்த்தையைக் கேட்ட உடனேயே, புதிய உலகம்தான் நம் ஞாபகத்திற்கு வரும். ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் ஆரோக்கியமாக, சந்தோஷமாக, திருப்தியாக எழுந்திருப்பது எவ்வளவு நன்றாக இருக்கும்! (ஏசா. 35:5, 6) உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக இருப்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அதுவும் உயிர்த்தெழுந்து வரும் உங்கள் அன்பானவர்களோடு சந்தோஷமாக இருப்பதை யோசித்துப் பாருங்கள். (யோவா. 5:28, 29; அப். 24:15) உங்களுக்குப் பிடித்ததை செய்யவும் புது புது விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் நேரம் இருக்கும். உதாரணத்துக்கு, அறிவியலைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம். இசைக் கருவியை வாசிக்க கற்றுக்கொள்ளலாம். நீங்கள் கற்பனை செய்திருக்கும் வீட்டை எப்படி அழகாகக் கட்டலாம் என்றும் யோசிக்கலாம்.

2 புதிய உலகத்தில் இதெல்லாம் நடக்கும்போது நமக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால், யெகோவாவை வணங்குவதுதான் இதைவிட அதிக சந்தோஷத்தைத் தரும். அப்போது, யெகோவாவுடைய பெயர் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கும், எல்லாரும் அவரை ராஜாவாக ஏற்றுக்கொண்டிருப்பார்கள். (மத். 6:9, 10) யெகோவா ஆசைப்பட்டது போலவே, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையே இல்லாதவர்களாக ஆவார்கள். அப்போது, யெகோவாவுடைய நெருங்கிய நண்பர்களாக இருப்பது ரொம்ப சுலபமாக இருக்கும்.—சங். 73:28; யாக். 4:8.

3. நாம் எதற்காக இப்போதே தயாராகலாம்?

3 இந்த அருமையான விஷயங்களை எல்லாம் யெகோவா நிச்சயம் செய்வார். ஏனென்றால், அவரால் “எல்லாமே முடியும்.” (மத். 19:25, 26) நாம் புதிய உலகத்தில் என்றென்றும் வாழ வேண்டும் என்றால் முடிவில்லா வாழ்வை இப்போதே ‘உறுதியாகப் பற்றிக்கொள்ள’ வேண்டும். முடிவு எப்போது வேண்டுமானாலும் வரும் என்று நமக்குத் தெரியும். நாம் அதற்காக காத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் வாழும் விதம் காட்ட வேண்டும். புதிய உலகத்தில் வாழ்வதற்காக நாம் இப்போதே தயாராக வேண்டும். அதற்காக, நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அதை எப்படியெல்லாம் செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

எப்படித் தயாராகலாம்?

4. புதிய உலகத்தில் வாழ இப்போதே எப்படித் தயாராகலாம்? உதாரணம் சொல்லுங்கள்.

4 நாம் வேறொரு நாட்டிற்குப் போய் வாழ நினைக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்குபோய் வாழ்வதற்குத் தேவையான எல்லா விஷயங்களையும் நாம் செய்வோம். அந்த நாட்டின் மொழியைக் கற்றுக்கொள்வோம். அந்த மக்களுடைய பழக்கவழக்கங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். அவர்களுடைய உணவையும் சாப்பிட்டு பார்ப்போம். அதேபோல், புதிய உலகத்துக்காக நாம் இப்போதே தயாராக வேண்டும். நாம் புதிய உலகத்தில் இருந்தால் எப்படி வாழ்வோமோ அதேபோல் இப்போதே வாழ வேண்டும். இதை எப்படிச் செய்யலாம் என்று பார்க்கலாம்.

5, 6. புதிய உலகத்தில் வாழ அமைப்பு தரும் ஆலோசனைக்கு நாம் ஏன் இப்போதே கீழ்ப்படிய வேண்டும்?

5 தங்களுக்குப் பிடித்ததை எல்லாம் செய்யலாம் என்று சாத்தான் மக்களை நினைக்க வைக்கிறான். அதனால், கடவுள் சொல்கிறபடி எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, தங்கள் இஷ்டத்திற்கு வாழலாம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறார்களா? இல்லை. ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள். (எரே. 10:23) யெகோவா ஒரு அன்பான ஆட்சியாளராக இருக்கிறார். அதனால், புதிய உலகத்தில் மக்கள் எல்லாரும் அவருக்குக் கீழ்ப்படியும்போது வாழ்க்கை ரொம்ப அருமையாக இருக்கும்!

6 புதிய உலகத்திலும் யெகோவாவின் அமைப்பு தரும் ஆலோசனைப்படி நடப்போம், சந்தோஷமாக இருப்போம். அங்கு யெகோவா நமக்கு நிறைய வேலைகள் கொடுப்பார். நாம் இந்தப் பூமியை ஒரு அழகான தோட்டமாக மாற்றுவோம், உயிர்த்தெழுந்து வருபவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுப்போம். ஆனால் நம்மை வழிநடத்துபவர்கள், நாம் விரும்பாத ஒரு விஷயத்தை செய்ய சொன்னால் என்ன செய்வோம்? அவர்களுக்குக் கீழ்ப்படிவோமா? நமக்குக் கொடுக்கப்பட்டு இருக்கும் நியமிப்பை சந்தோஷமாகச் செய்வோமா? புதிய உலகத்துக்குத் தயாராக வேண்டும் என்றால், யெகோவாவின் அமைப்பு தரும் ஆலோசனைக்கு நாம் இப்போதே கீழ்ப்படிய வேண்டும்.

7, 8. (அ) நம்மை வழிநடத்துபவர்களுக்கு ஏன் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்? (ஆ) சிலர் என்ன மாற்றங்களை செய்தார்கள்? (இ) புதிய உலகத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும்?

7 புதிய உலகத்துக்குத் தயாராக வேண்டும் என்றால், திருப்தியாக இருக்கவும் மற்றவர்களுக்கு ஒத்துழைக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதோடு, அமைப்பு சொல்வதுபோல் நடக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நமக்கு ஒரு புது நியமிப்பு கிடைக்கும்போது அதை சந்தோஷமாகவும் திருப்தியாகவும் செய்வோம்; முழுமனதோடு ஒத்துழைப்போம். நம்மை வழிநடத்துபவர்களுக்கு இப்போதே ஒத்துழைக்க கற்றுக்கொண்டால்தான், புதிய உலகத்திலும் அப்படி செய்வோம். (எபிரெயர் 13:17-ஐ வாசியுங்கள்.) யெகோவா இஸ்ரவேலர்களுக்குக் கொடுப்பதாக சொன்ன தேசத்துக்குள் அவர்கள் போன பிறகு, ஒவ்வொருவரும் எங்கு வாழ வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. (எண். 26:52-56; யோசு. 14:1, 2) புதிய உலகத்தில் நம் ஒவ்வொருவரையும் எங்கு வாழ சொல்வார்கள் என்பது நமக்குத் தெரியாது. அதனால், மற்றவர்களோடு ஒத்துழைக்க இன்றே கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால், புதிய உலகத்தில் நாம் எங்கு வாழ்ந்தாலும் சரி, யெகோவா விரும்புவதைச் சந்தோஷமாக செய்வோம்.

8 யெகோவாவுடைய அரசாங்கத்தில், அவருக்கு சேவை செய்யும் மிகப் பெரிய பாக்கியம் நமக்குக் கிடைக்கப்போகிறது. அதனால், யெகோவாவின் அமைப்புக்கு இப்போதே ஒத்துழைக்கிறோம்; என்ன நியமிப்பு கிடைத்தாலும் அதை சந்தோஷமாக செய்கிறோம். சில நேரங்களில், நமக்கு வேறு ஏதாவது நியமிப்பு கிடைக்கலாம். உதாரணத்துக்கு, அமெரிக்காவிலுள்ள சில பெத்தேல் ஊழியர்கள் பயனியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். வயது மற்றும் வேறு சில காரணங்களுக்காக, சில பயணக் கண்காணிகள் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் அவர்களுடைய புதிய நியமிப்புகளை சந்தோஷமாக செய்கிறார்கள். யெகோவாவும் அவர்களை ஆசீர்வதிக்கிறார். யெகோவாவுடைய உதவிக்காக ஜெபம் செய்தால்... எந்த நியமிப்பையும் திருப்தியோடு செய்ய கற்றுக்கொண்டால்... அவரை சேவிக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்தால்... நாம் சந்தோஷமாக இருப்போம். யெகோவாவும் நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பார். (நீதிமொழிகள் 10:22-ஐ வாசியுங்கள்.) புதிய உலகத்தில், நமக்குப் பிடித்த ஒரு இடத்தில் வாழ நாம் ஆசைப்படலாம். ஆனால், நம் அமைப்பு வேறு எங்கேயாவது நம்மை வாழ சொன்னால் என்ன செய்வோம்? நாம் எங்கு இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பதைவிட புதிய உலகத்தில் இருப்பதற்காகவே நாம் நன்றியோடு இருப்போம்.—நெ. 8:10.

9, 10. (அ) புதிய உலகத்தில் நாம் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்? (ஆ) நாம் பொறுமையாக இருக்கிறோம் என்பதை இப்போதே எப்படிக் காட்டலாம்?

9 புதிய உலகத்தில்கூட நாம் பொறுமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். சிலர் அவர்களுடைய சொந்தக்காரர்களும் நண்பர்களும் உயிர்த்தெழுந்து வந்ததை நினைத்து சந்தோஷத்தில் இருக்கலாம். ஆனால், நமக்குப் பிடித்தவர்கள் இன்னும் உயிர்த்தெழுந்து வராமல் இருக்கலாம். அந்த சமயத்தில், நாம் மற்றவர்களோடு சேர்ந்து சந்தோஷப்படுவோமா? நமக்குப் பிடித்தவர்கள் உயிர்த்தெழுந்து வரும்வரை பொறுமையாகக் காத்துக்கொண்டிருப்போமா? (ரோ. 12:15) யெகோவா அவருடைய வாக்குறுதிகளை நிறைவேற்றும்வரை நாம் பொறுமையாக இருக்க இப்போதே கற்றுக்கொண்டால் புதிய உலகத்திலும் பொறுமையாக இருப்போம்.—பிர. 7:8.

10 புதிய உலகத்துக்குத் தயாராக இன்னொரு வழி இருக்கிறது. பைபிள் சத்தியங்களில் ஏதாவது புதிய விளக்கம் கிடைக்கும்போது நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அதைப் பற்றி நன்றாகப் படிக்க வேண்டும், அதை முழுமையாகப் புரிந்துகொள்ளும்வரை பொறுமையாக இருக்க வேண்டும். அப்படி செய்தால், புதிய உலகத்தில் யெகோவா நம்மை ஏதாவது புதிதாக செய்ய சொல்லும்போது நாம் பொறுமையாக இருப்போம்.—நீதி. 4:18; யோவா. 16:12.

11. நாம் ஏன் இப்போதே மற்றவர்களை மன்னிக்க வேண்டும், இது ஏன் புதிய உலகத்திலும் நமக்கு உதவியாக இருக்கும்?

11 புதிய உலகத்துக்குத் தயாராக, நாம் மற்றவர்களை மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில் எல்லா மக்களும் தவறே செய்யாதவர்களாக ஆவதற்கு சில காலம் எடுக்கும். (அப். 24:15) அந்த சமயத்தில், நாம் மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்வோமா, ஒருவரையொருவர் மன்னிப்போமா? இப்போதே மற்றவர்களை மன்னித்தால்... மற்றவர்களோடு நல்ல நட்பு வைத்துக்கொண்டால்... புதிய உலகத்திலும் இப்படி செய்வது நமக்கு சுலபமாக இருக்கும்.கொலோசெயர் 3:12-14-ஐ வாசியுங்கள்.

12. புதிய உலகத்தில் வாழ்வதற்காக நாம் ஏன் இப்போதே தயாராக வேண்டும்?

12 புதிய உலகத்தில் நாம் ஆசைப்படும் எல்லாமே கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. அதற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். எந்த சூழ்நிலையில் வாழ்ந்தாலும் சரி, நாம் நன்றியோடு இருக்க வேண்டும், திருப்தியாக இருக்க வேண்டும். யெகோவா நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கும் குணங்களை எல்லாம் புதிய உலகத்திலும் காட்ட வேண்டியிருக்கும். அதனால், அவர் எதிர்பார்க்கும் குணங்களை நாம் இன்றே காட்டுவது முக்கியம். அப்படி செய்யும்போது, புதிய உலகம் நிச்சயம் வரும் என்று நம்புவோம்; முடிவில்லா வாழ்வுக்குத் தயாராக இருப்போம். (எபி. 2:5; 11:1) யெகோவாவுக்கு கீழ்ப்படிகிற மக்கள் மட்டும் இருக்கும் புதிய உலகத்தில் வாழ ஏங்குவோம்.

யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுங்கள்

நன்றாக ஊழியம் செய்யுங்கள்

13. புதிய உலகத்தில் நாம் எதற்கு முதலிடம் கொடுப்போம்?

13 புதிய உலகத்தில், நாம் சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையான எல்லாமே இருக்கும். ஆனால், யெகோவாவோடு இருக்கும் நெருங்கிய நட்புதான் நமக்கு அதிக சந்தோஷத்தைத் தரும். (மத். 5:3) யெகோவாவுடைய சேவையை நாம் சந்தோஷமாகவும் சுறுசுறுப்பாகவும் செய்வோம். அதற்கே முதலிடம் கொடுப்போம். (சங். 37:4) புதிய உலகத்தில் வாழ தயாராக இருந்தால், நம் வாழ்க்கையில் இன்றே யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்போம்.மத்தேயு 6:19-21-ஐ வாசியுங்கள்.

14. இளைஞர்கள் யெகோவாவுக்கு சேவை செய்வதில் என்ன இலக்குகள் வைக்கலாம்?

14 யெகோவாவுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்ய, இலக்குகள் வையுங்கள். நீங்கள் இளைஞராக இருந்தால், யெகோவாவுக்கு சேவை செய்வதைப் பற்றி ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். வித்தியாசமான முழு நேர சேவையைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். அதில் ஏதாவது ஒரு சேவையைத் தேர்ந்தெடுங்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) பல வருஷங்களாக யெகோவாவுக்குப் முழு நேர சேவை செய்தவர்களிடம் பேசுங்கள். உங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு சேவை செய்ய பயன்படுத்தும்போது, நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். புதிய உலகத்திலும் யெகோவாவுக்கு சேவை செய்ய இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

யெகோவாவுக்கு சேவை செய்ய இலக்குகள் வையுங்கள்

15. யெகோவாவுக்கு சேவை செய்ய வேறு என்ன இலக்குகள் வைக்கலாம்?

15 யெகோவாவுக்கு சேவை செய்ய நாம் நிறைய இலக்குகள் வைக்கலாம். உதாரணத்துக்கு, ஊழியத்தை இன்னும் நன்றாக செய்ய திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம். பைபிளில் இருக்கும் ஆலோசனைகளை நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம், அவற்றை வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று யோசிக்கலாம். இன்னும் நன்றாக பேச்சு கொடுக்க... கூட்டங்களில் பதில் சொல்ல... பைபிள் வாசிப்பு செய்ய... முயற்சி செய்யலாம். இலக்குகள் வைக்கும்போதுதான், யெகோவாவுக்கு இன்னும் சுறுசுறுப்பாக சேவை செய்ய முடியும். புதிய உலகத்துக்குத் தயாராகவும் முடியும்.

மிகச் சிறந்த வாழ்க்கை

யெகோவா கொடுக்கும் எல்லாவற்றிற்கும் நன்றியோடு இருங்கள்

16. யெகோவாவுக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கையில் நாம் செய்யும் மிகச் சிறந்த விஷயம் என்று ஏன் சொல்லலாம்?

16 புதிய உலகத்துக்குத் தயாராக நாம் நிறைய நேரம் ஒதுக்குகிறோம். அதனால், வாழ்க்கையில் நாம் எதையோ இழந்துவிட்டோம் என்று அர்த்தமா? இல்லை! மற்றவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதற்காகவோ மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைக்க வேண்டும் என்பதற்காகவோ நாம் யெகோவாவுக்கு சேவை செய்வது கிடையாது. அவருக்கு சேவை செய்வதுதான் நமக்கு அதிக சந்தோஷத்தைத் தரும். இப்படி சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் நம்மை படைத்திருக்கிறார். வேறு எதையும்விட யெகோவாவின் அன்பும் அவருடைய வழிநடத்துதலும்தான் நமக்கு ரொம்ப முக்கியம். (சங்கீதம் 63:1-3-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு முழு மனதோடு சேவை செய்வதில் கிடைக்கும் சந்தோஷத்தை நாம் இப்போதே அனுபவிக்கிறோம். ‘யெகோவாவுக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கையில் நாம் செய்யும் மிகச் சிறந்த விஷயம்’ என்று பல வருஷங்களாக அவருக்கு சேவை செய்தவர்கள் சொல்கிறார்கள்.—சங். 1:1-3; ஏசா. 58:13, 14.

பைபிள் தரும் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள்

17. நமக்குப் பிடித்த விஷயங்களை செய்வதும் பொழுதுபோக்கில் ஈடுபடுவதும் புதிய உலகத்தில் எந்தளவு முக்கியம்?

17 புதிய உலகத்தில், நமக்குப் பிடித்த விஷயங்களை செய்யவும், பொழுதுபோக்கில் ஈடுபடவும் நேரம் கிடைக்கும். ஏனென்றால், வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற ஆசையோடு யெகோவா நம்மை படைத்திருக்கிறார். ‘சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குவதாக’ அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (சங். 145:16; பிர. 2:24) பொழுதுபோக்கில் ஈடுபடுவதும் ஓய்வெடுப்பதும் நமக்குத் தேவைதான். ஆனால், யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்த முதலிடம் கொடுத்தால்தான் பொழுதுபோக்கும் ஓய்வும் நமக்கு அதிக சந்தோஷத்தைத் தரும். புதிய உலகத்திலும் நாம் இப்படித்தான் வாழ்வோம். அதனால், நாம் “முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை” தேட வேண்டும், யெகோவாவுக்கு சேவை செய்வதில் கிடைக்கும் ஆசீர்வாதத்தை முக்கியமாக நினைக்க வேண்டும்.—மத். 6:33.

18. புதிய உலகத்தில் வாழ நாம் தயாராக இருக்கிறோம் என்று எப்படிக் காட்டலாம்?

18 நினைத்துப் பார்க்காத அளவுக்கு புதிய உலகத்தில் நம் வாழ்க்கை அருமையாக இருக்கும். புதிய உலகத்தில் வாழ நாம் எந்தளவு ஆசைப்படுகிறோம் என்பதை அதற்கு தயாராவதன் மூலம் காட்டலாம். யெகோவா நமக்குக் கற்றுக்கொடுக்கும் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்ளலாம். சுறுசுறுப்பாக ஊழியம் செய்யலாம். யெகோவாவுக்கு சேவை செய்ய முதலிடம் கொடுக்கலாம். யெகோவாவுடைய எல்லா வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. அதனால், நாம் புதிய உலகத்தில் வாழ்வதுபோல் இன்றே வாழலாம்!

^ பாரா. 14 இளைஞர் கேட்கின்றனர்—பகுதி 2 (ஆங்கிலம்) பக். 311-318; காவற்கோபுரம் நவம்பர் 15, 2010 பக். 12-16; காவற்கோபுரம் செப்டம்பர் 15, 2014 பக். 30-ஐ பாருங்கள்.