Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இவர்களை உயர்வாக மதியுங்கள்

இவர்களை உயர்வாக மதியுங்கள்

ஆளும் குழு 6 குழுக்களாக செயல்படுகிறார்கள். 1992-ல் இருந்து இந்த குழுக்களுக்கு உதவி செய்ய முதிர்ச்சியுள்ள அனுபவமுள்ள மூப்பர்களை ஆளும் குழு நியமித்திருக்கிறார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இவர்களை உதவியாளர்கள் என்று சொல்கிறோம். இவர்கள் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்கள். (யோவா. 10:16) இவர்கள் ஆளும் குழுவில் இருக்கும் சகோதரர்களுக்கு உதவி செய்கிறார்கள். இவர்கள் எந்தக் குழுவில் சேவை செய்கிறார்களோ அந்தக் குழுவின் வாராந்திர கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். ஆளும் குழுவுக்குத் தேவைப்படுகிற தகவல்களையும் ஆலோசனைகளையும் இவர்கள் கொடுக்கிறார்கள். இருந்தாலும், ஆளும் குழுதான் கடைசியில் தீர்மானம் எடுக்கிறார்கள். அவர்கள் எடுத்த தீர்மானத்தின்படி எல்லா விஷயங்களும் நடக்கிறதா என்று இந்த சகோதரர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். இவர்களுக்கு எந்த நியமிப்பு கிடைத்தாலும் அதை செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆளும் குழுவை சேர்ந்த சகோதரர்களோடு சேர்ந்து விசேஷ மாநாடுகளிலும் சர்வதேச மாநாடுகளிலும் கலந்துகொள்கிறார்கள். தலைமை அலுவலக பிரதிநிதிகளாக கிளை அலுவலகங்களை சந்திக்கவும் நியமிக்கப்படுகிறார்கள்.

1992-ல் இருந்து ஆளும் குழுவுக்கு உதவியாளராக இருந்த ஒரு சகோதரர் இப்படி சொல்கிறார்: “என்னோட நியமிப்ப நான் சரியா செஞ்சா, ஆளும் குழுவால அவங்களோட பொறுப்புகள்ல முழு கவனம் செலுத்த முடியும்.” 20 வருஷங்களாக ஆளும் குழுவுக்கு உதவியாளராக இருந்த இன்னொரு சகோதரர் சொல்கிறார், “இவ்ளோ பெரிய நியமிப்பு எனக்கு கிடைக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல, இது எனக்கு கிடைச்ச மிக பெரிய பாக்கியம்!”

ஆளும் குழு, அவர்களுக்கு உதவி செய்யும் சகோதரர்களுக்கு நிறைய பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய கடினமான உழைப்பைப் பாராட்டுகிறார்கள். அதனால், நாமும் இந்த ‘சகோதரர்களை உயர்வாக மதிக்க’ வேண்டும்.—பிலி. 2:29.

^ பாரா. 2 ஆளும் குழுவின் 6 குழுக்களைப் பற்றி தெரிந்துகொள்ள கடவுளது அரசைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’ என்ற புத்தகத்தில் பக்கம் 110-ஐ பாருங்கள். அதோடு, கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது! என்ற ஆங்கில புத்தகத்தில் பக்கம் 131-ஐயும் பாருங்கள்.