இயேசு அற்புதமாய் சுகப்படுத்தினார்
இளம் வாசகருக்கு
இயேசு அற்புதமாய் சுகப்படுத்தினார்
செய்ய வேண்டியவை: ஓர் அமைதியான சூழலில் இந்த பைபிள் பகுதியை ஆழ்ந்து படியுங்கள். வசனங்களை வாசிக்கையில் நீங்களும் அங்கே இருப்பதுபோல் கற்பனை செய்யுங்கள். காட்சிகளை மனக்கண்ணில் ஓடவிடுங்கள். அங்கு ஒலிக்கும் சத்தங்களைக் கேளுங்கள். அவற்றை நிஜ சம்பவங்களாய் கற்பனை செய்து பாருங்கள்.
நடந்ததை யோசித்துப் பாருங்கள்.—மத்தேயு 15:21–28-ஐ வாசியுங்கள்.
அந்தத் தாயின் மனதில் என்னென்ன உணர்ச்சிகள் எழுந்திருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
_______
பின்வரும் வசனங்களில் இயேசு எப்படிப் பதில் சொல்லியிருப்பார் என்பதை உங்களால் “கேட்க” முடிகிறதா?
24 _______ 26 _______ 28 _______
ஆழ்ந்து சிந்தியுங்கள்.
அந்தப் பெண்ணின் மகளை தாம் குணப்படுத்தப்போவதில்லை என்பதை தம் சொல்லிலும் செயலிலும் இயேசு எத்தனை முறை குறிப்பிட்டார்?
_______
அவளைக் குணப்படுத்த இயேசு ஏன் முதலில் மறுத்தார்?
_______
பிறகு ஏன் இயேசு அவளைக் குணப்படுத்தினார்?
_______
கற்றுக்கொண்டதைக் கடைப்பிடியுங்கள். பின்வருபவை குறித்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை எழுதுங்கள்:
இயேசு நியாயமாய் நடந்துகொண்ட விதம்.
_______
மற்றவர்களுடன் பழகுகையில் நீங்களும் எவ்வாறு நியாயமாய் நடந்துகொள்ளலாம்.
_______
நடந்ததை யோசித்துப் பாருங்கள்.—மாற்கு 8:22–25-ஐ வாசியுங்கள்.
அந்தக் கிராமத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உங்களால் என்னவெல்லாம் பார்க்க முடிகிறது, என்னென்ன சத்தங்களைக் கேட்க முடிகிறது?
_______
ஆழ்ந்து சிந்தியுங்கள்.
இயேசு ஏன் அந்த மனிதனை கிராமத்திற்கு வெளியே அழைத்துச் சென்று குணப்படுத்தினார்?
_______
கற்றுக்கொண்டதைக் கடைப்பிடியுங்கள். பின்வருபவை குறித்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதை எழுதுங்கள்:
இயேசுவின் உடலில் எந்த ஊனமும் இல்லாவிட்டாலும் ஊனமுற்றோரைக் குறித்து அவர் எப்படி உணர்ந்தார்?
_______
பைபிளிலுள்ள இந்த இரண்டு பதிவுகளில் என்ன விஷயங்கள் உங்கள் மனதைத் தொட்டன, ஏன்?
_______ (w08 5/1)