Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

இயேசு என்ற ஒரு மனிதர் உண்மையிலேயே வாழ்ந்தார் என்பதற்கு பைபிளைத் தவிர வேறென்ன ஆதாரம்?

இயேசுவின் காலத்திற்குச் சற்று பின் வாழ்ந்த எழுத்தாளர்கள் பலர் இயேசுவைப் பற்றி குறிப்பிட்டார்கள். அவர்களில் ஒருவர்தான் கொர்நேலியஸ் டாசிட்டஸ்; பேரரசர்கள் ஆண்ட ரோமின் சரித்திரத்தை இவர் பதிவு செய்தார். ரோம் நகரில் கி.பி. 64-ல் தீயினால் ஏற்பட்ட பெரும் அழிவைக் குறித்து டாசிட்டஸ் எழுதியபோது, அதற்கு பேரரசர் நீரோதான் காரணம் என்ற வதந்தி பரவியதாகக் குறிப்பிடுகிறார். அன்று கிறிஸ்தவர்கள் என மக்களால் அழைக்கப்பட்ட ஒரு வகுப்பார்மீது அந்தப் பழியைப் போட்டுவிட நீரோ முயற்சி செய்தாரென டாசிட்டஸ் சொல்கிறார். “திபேரியுவின் ஆட்சி காலத்தில், தேசாதிபதி பொந்தியு பிலாத்துவின் ஆணைப்படி கிறிஸ்து (இவருடைய பெயரிலிருந்தே கிறிஸ்தவர்கள் என்ற பெயர் தோன்றியது) கொல்லப்பட்டார்” என்று டாசிட்டஸ் எழுதுகிறார்.—பதிவேடுகள், XV, 44.

யூத சரித்திராசிரியர் ஃபிளேவியஸ் ஜொஸிஃபஸ் என்பவரும் இயேசுவைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். சுமார் கி.பி. 62-ல், யூதேயாவை ஆண்ட ரோம ஆளுநர் பெஸ்துவின் மறைவுக்கும் அவருக்கு அடுத்து வந்த ஆளுநர் அல்பீனஸுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த சம்பவங்களை விவரிக்கையில், தலைமைக் குரு அனானஸை (அன்னா) குறித்து ஜொஸிஃபஸ் இவ்வாறு சொல்கிறார்: “அவர் யூத உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் நடத்திய கூட்டத்தில், கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட இயேசுவின் சகோதரன் யாக்கோபையும் மற்ற சிலரையும் அவர்களுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினார்.”—ஜூயிஷ் ஆண்டிகுவிட்டீஸ், XX, 200 (ix1). (w10-E  04/01)

இயேசு ஏன் கிறிஸ்து என அழைக்கப்பட்டார்?

மரியாளுக்கு ஒரு மகன் பிறப்பான் என்ற செய்தியை காபிரியேல் தூதர் அவரிடம் அறிவிக்க வந்தபோது, அந்தப் பிள்ளைக்கு இயேசு என பெயரிடும்படி அவர் சொன்னதாக சுவிசேஷப் பதிவுகள் விவரிக்கின்றன. (லூக்கா 1:31) பூர்வ காலங்களில் வாழ்ந்த யூதர்கள் பலருக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்ததால், இது அவர்களுக்குப் பரிச்சயமான பெயர். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தவிர, அந்தப் பெயருள்ள 12 நபர்களைப் பற்றி யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் குறிப்பிட்டிருக்கிறார். மரியாளின் மகன் “நாசரேத்தூர் இயேசு” என அழைக்கப்பட்டார், அதனால் அவரை நாசரேத்திலிருந்து வந்த இயேசு என மக்கள் சுலபமாக அடையாளம் கண்டுகொண்டார்கள். (மாற்கு 10:47) “கிறிஸ்து” அல்லது இயேசு கிறிஸ்து என்றும் அவர் அழைக்கப்பட்டார். (மத்தேயு 16:16) அதன் அர்த்தம் என்ன?

“கிறிஸ்து” என்ற வார்த்தை கிறிஸ்டோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு ஒத்த எபிரெய வார்த்தை மாஷீயாக் (மேசியா). இந்த இரண்டு வார்த்தைகளின் நேர்பொருள் “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்பதாகும். இயேசுவுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கும் இந்தப் பெயர் சூட்டப்பட்டது பொருத்தமாக இருந்தது. உதாரணத்திற்கு, மோசே, ஆரோன், தாவீது ராஜா ஆகியோர் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், அதாவது கடவுள் கொடுத்த பொறுப்பையும் அதிகாரத்தையும் ஏற்க நியமிக்கப்பட்டவர்கள். (லேவியராகமம் 4:3; 8:12; 2 சாமுவேல் 22:51; எபிரெயர் 11:24-26, அடிக்குறிப்பு) என்றாலும், முன்னறிவிக்கப்பட்ட மேசியாவான இயேசுவே யெகோவாவின் முக்கிய பிரதிநிதியாக இருந்தார். எனவே இயேசுவுக்கு, “கிறிஸ்து, உயிருள்ள கடவுளுடைய மகன்” என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது பொருத்தமாக இருந்தது.மத்தேயு 16:16; தானியேல் 9:25.

[பக்கம் 15-ன் படம்]

ஓவியரின் வரைபடம்: ஃபிளேவியஸ் ஜொஸிஃபஸ்

(w10-E  04/01)