இந்த உலகம் யார் கையில்?
இந்த உலகம் யார் கையில்?
நிழல் உலக தாதாக்களை அநேகர் நேரில் பார்த்திருக்க மாட்டார்கள். அதற்காக, அப்படி யாருமே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? திரைமறைவில் இருந்துகொண்டு அட்டூழியங்கள் செய்வதில் அவர்கள் கில்லாடிகள்; சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருந்துகூட அவர்களால் காய்களை நகர்த்த முடியும். செய்தித்தாளைத் திறந்தால் போதும், போதைப் பொருள் கடத்தல்... விபச்சாரத் தொழில்... ஆள் கடத்தல்... என்று தாதாக்களின் அட்டகாசங்கள் நீண்டுகொண்டே போகும். இதனால் வரும் மோசமான விளைவுகளோ ஏராளம் ஏராளம்! ஆம், தாதாக்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இவையே தடயங்கள்.
பிசாசு நிஜமாகவே இருக்கிறான் எனக் கடவுளுடைய புத்தகமான பைபிள் சொல்கிறது. நிழல் உலகத் தலைவர்களைப் போல திரைமறைவில் இருந்து தன் காய்களை நகர்த்துகிறான். “பொய்யான அடையாளங்களும் . . . அநீதியும் ஏமாற்று வேலைகளும்” அவனுக்குக் கைவந்த கலை. சொல்லப்போனால், அவன் ‘ஒளியின் தூதனைப் போல் நடித்து வருகிறான்’ என்று பைபிள் சொல்கிறது. (2 தெசலோனிக்கேயர் 2:9, 10; 2 கொரிந்தியர் 11:14) இந்த உலகில் நடக்கும் மோசமான செயல்கள் அவன் இருக்கிறான் என்பதற்கு அத்தாட்சி அளிக்கின்றன. ஆனால், அவன் ஒரு பொல்லாத தேவதூதன், நம்மால் அவனைப் பார்க்க முடியாது என்றெல்லாம் சொன்னால் பலர் நம்புவதில்லை. பிசாசைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் இந்தக் கேள்விக்குப் பதில்களைப் பார்க்கலாம்: பிசாசு நிஜமாகவே இருக்கிறான் என்பதை மக்கள் நம்புவதற்குத் தடையாக இருக்கும் சில தவறான நம்பிக்கைகள் என்னென்ன?
◼ “அன்பான கடவுள் பிசாசைப் படைத்திருப்பாரா?” கடவுள் நல்லவர், பரிபூரணமானவர் என்றெல்லாம் பைபிள் சொல்கிறது. அப்படியென்றால் பொல்லாத, கொடூரமான, வஞ்சகமான பிசாசைக் கடவுள் படைத்தார் என்று சொல்வது நியாயமாகுமா? அதுமட்டுமல்ல, பிசாசைக் கடவுள்தான் படைத்தார் என்று பைபிளில் எந்த இடத்திலும் இல்லை. அதற்குப் பதிலாக கடவுளை அது எப்படி வர்ணிக்கிறது என்று கவனியுங்கள்: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது [“செயல்கள் பரிபூரணமானது,” NW]; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”—உபாகமம் 32:4; சங்கீதம் 5:4.
அப்படியென்றால், கடவுள் படைத்த பரிபூரணமான ஒரு நபர் தவறே செய்ய மாட்டார் என்று அர்த்தமா? இல்லை, கடவுள் யாரையும் ஒரு ‘ரோபோட்டை’ போல படைக்கவில்லை. சொந்தமாக முடிவெடுக்கும் திறமையுடன்தான் படைத்தார். அதனால், பரிபூரணமாகப் படைக்கப்பட்ட ஒருவரால் நல்லதையும் செய்ய முடியும் கெட்டதையும் செய்ய முடியும். இல்லாவிட்டால், தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கடவுள் கொடுத்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடுமே.
ஒருபக்கம் தம்முடைய படைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் அவர்கள் தவறு செய்யத் தீர்மானிக்கும்போது அதைக் கடவுள் தடுத்தார் என்றால் அது நியாயமாக இருக்குமா? பிசாசுடைய விஷயத்திலும் இதுதான் நடந்தது. தனக்குக் கொடுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கும் சுதந்தரத்தை அவன் தவறாகப் பயன்படுத்தினான். அதனால்தான், “சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:44) ஆக, ஆரம்பத்தில் அவன் பரிபூரண தேவதூதனாக இருந்தான். ஆனால், அவன் தொடர்ந்து ‘சத்தியத்தில் நிலைத்திருக்கவில்லை,’ பிசாசாக மாறிவிட்டான். * அப்படியென்றால், யெகோவா தேவன் ஏன் தேர்ந்தெடுக்கும் சுதந்தரத்தைக் கொடுத்தார்? அவர் தம் படைப்புகளை நேசித்தார், அவர்கள் சரியானதைச் செய்வார்கள் என்று நம்பினார்.—பக்கம் 26-ல், “பரிபூரணமாகப் படைக்கப்பட்டவர் பரிபூரணத்தை இழக்க முடியுமா?” என்ற பெட்டியைப் பார்க்கவும்.
◼ “பிசாசு கடவுளுடைய கையாள்” பைபிளிலுள்ள யோபு புத்தகத்தைப் படிக்கும் சிலர், பிசாசு கடவுளுடைய கையாள் என்ற முடிவுக்கே வருகிறார்கள். பிசாசு “பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து” வந்தான் என்று யோபு புத்தகம் சொல்கிறது. (யோபு 1:7) இந்தச் சொற்றொடரைப் பற்றி பைபிள் விளக்கவுரை ஒன்று இவ்வாறு விளக்கமளிக்கிறது: பூர்வ காலங்களில், பெர்சிய நாட்டு உளவாளிகள் இப்படித்தான் எல்லா இடங்களுக்கும் சென்று உளவு பார்த்து ராஜாவுக்குத் தகவல் சொல்வார்களாம். ஒருவேளை பிசாசு கடவுளுடைய உளவாளி என்றால், “பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து” வருகிறேன் என்று கடவுளிடம் விளக்கமளித்திருக்க வேண்டிய அவசியம் இருக்காதே? யோபு புத்தகம் அவனைக் கடவுளுடைய கூட்டாளி என்று சொல்வதில்லை. மாறாக, சாத்தான், அதாவது “எதிரி” என்றே அவனை அறிமுகம் செய்கிறது. அவன் கடவுளுடைய முக்கிய எதிரி என்பது தெளிவாகத் தெரிகிறது. (யோபு 1:6) அப்படியென்றால், பிசாசு கடவுளுடைய கையாள் என்ற கருத்து எப்படித் தோன்றியது?
கி.பி. முதலாம் நூற்றாண்டிலேயே, “ஜூப்ளியின் புத்தகம்,” கும்ரான் மதப்பிரிவினரின் “பொதுச் சட்டம்” போன்ற அதிகாரப்பூர்வமற்ற புத்தகங்கள், கடவுளிடம் பிசாசு வாக்குவாதம் செய்வதாகவும், அதேசமயம் அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும் விவரித்தன. சரித்திராசியர் ஜே. ப. ரசல், மெஃபிஸ்டஃபெலஸ் என்ற தன்னுடைய புத்தகத்தில், புராட்டஸ்டன்ட் மத சீர்திருத்தவாதியான மார்ட்டின் லூத்தரின் கருத்தைச் சொல்கிறார்: பிசாசு கடவுளுடைய கையிலுள்ள ஒரு கருவி, “களைவெட்டியையும் மண்வெட்டியையும் பயன்படுத்துவதுபோல [பிசாசை பயன்படுத்தி] கடவுள் தம்முடைய தோட்டத்தைப் பண்படுத்துகிறார்.” அதை ரசல் இவ்வாறு விளக்குகிறார்: “களைகளை அழிக்க மண்வெட்டிக்கும் விருப்பம்தான்” ஆனால், அது கடவுளுடைய வல்லமையுள்ள கைக்குள்ளேயே இருந்துதான் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறது. ஆக, சாத்தானை வைத்து கடவுள் தம் விருப்பத்தை நிறைவேற்றுகிறார் என்பதே இவர்கள் சொல்ல வரும் கருத்து. லூதரின் கருத்தை பிரான்சு நாட்டு இறையியல் வல்லுநர் ஜான் கேல்வின் பிற்பாடு ஆதரித்தார். என்றாலும், தேவபக்தியுள்ள பலரை இந்தக் கருத்து புண்படுத்தியதால் இது நியாயமில்லை என்று நினைத்தார்கள். ‘அன்பான கடவுள் தீமையை அனுமதிப்பது யாக்கோபு 1:13) இந்த நம்பிக்கையினாலும், 20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கோர சம்பவங்களினாலும் அநேக மக்கள் கடவுளும் இல்லை, பிசாசும் இல்லை என்ற முடிவுக்கு வந்தார்கள்.
மட்டுமல்லாமல் அதற்கு காரணமும் ஆவாரா?’ என்று கேட்டார்கள். (◼ “மனிதனுக்குள் இருக்கும் ஒரு தீய குணம்தான் பிசாசு” பிசாசை வெறும் ஒரு தீய குணம் என்று சொன்னால் பைபிளில் உள்ள சில வசனங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும். யோபு 2:3-6-ல் உள்ள பதிவை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு கடவுள் யாரிடம் பேசிக்கொண்டிருந்தார்? யோபுவுக்குள் இருந்த ஒரு தீய குணத்திடமா அல்லது தமக்குள்ளேயே இருந்த ஒரு தீய குணத்திடமா? அப்படி கடவுளுக்குள்ளேயே ஒரு தீய குணம் இருந்திருந்தால், முதலில் யோபுவின் உத்தமத்தன்மையை வாய்நிறைய பாராட்டிவிட்டு அடுத்தநிமிடமே அவருக்குப் பல பிரச்சினைகளைக் கொடுத்துச் சோதித்திருப்பாரா? இப்படியெல்லாம் கடவுளைப் பற்றி சொல்வது அவரை மோசமானவராகத்தானே சித்தரிக்கிறது; அப்படிப்பார்த்தால், “அவரிடத்தில் அநீதியில்லையென்று” பைபிள் சொல்வது பொய்யாகிவிடுமே! (சங்கீதம் 92:14) யோபுவுக்குத் தீமை செய்வதற்குத் தம் ‘கையை நீட்ட’ கடவுள் மறுத்தார் என்பதுதான் உண்மை. பிசாசு என்பது கடவுளுக்குள் இருக்கும் ஒரு தீய குணமோ அல்லது கடவுளின் இன்னொரு முகமோ இல்லை. அவன் ஒரு நிஜமான தேவதூதன். தன்னையே கடவுளுடைய எதிரியாக மாற்றிக்கொண்டவன்.
நிஜமாக உலகத்தை ஆளுவது யார்?
பிசாசு, சாத்தான் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று அநேகர் இன்று சொல்கிறார்கள். ஆனால், துன்பத்திற்கு யார் காரணம் என்று கேட்டால் விளக்கம் அளிக்கத் தடுமாறுகிறார்கள். அதோடு, பிசாசு இல்லை என்று அவர்கள் சொல்வதால் கடவுளையும் நிராகரிக்கிறார்கள். அதனால், அவர் கொடுத்த ஒழுக்கநெறிகளையும் ஒதுக்கித் தள்ளுகிறார்கள்.
“தான் இல்லையென நம்மை நம்ப வைப்பதே பிசாசின் படுதந்திரமான சூழ்ச்சி” என்று எழுதினார் 19-ஆம் நூற்றாண்டு கவிஞர், ஷார்ல் பையர் போட்லாயர். பிசாசு என்று ஒன்றே இல்லை என அவன் எல்லா மக்களையும் நம்ப வைக்கிறான். ஏன்? பிசாசே இல்லாவிட்டால் எல்லா துன்பத்திற்கும் கடவுள்தான் காரணம் என்று மக்கள் நினைக்க ஆரம்பிப்பார்கள்; இதன்மூலம் கடவுள் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடுவார்கள். இதுதானே அவனுக்கு வேண்டும்!
ஒரு தாதாவைப் போல தலைமறைவாயிருந்து தன்னுடைய லட்சியத்தை அடைய வேண்டும் என்பதே பிசாசின் ஆசை. அவன் லட்சியம் என்ன? பைபிளே இதற்கு பதில் அளிக்கிறது: ‘விசுவாசிகளாக இல்லாதவர்களுடைய மனக்கண்களை இந்த உலகத்தின் கடவுள் குருடாக்கியிருக்கிறான்; அதனால், தேவசாயலில் இருக்கிற கிறிஸ்துவைப் பற்றிய அருமையான நற்செய்தியின் ஒளியை அவர்களால் காண முடிவதில்லை.’—2 கொரிந்தியர் 4:4.
தலைமறைவாயிருக்கும் இந்த ‘தாதாவை’... எல்லா தீமைக்கும் துன்பத்திற்கும் காரணமாயிருக்கும் சாத்தானை... கடவுள் என்ன செய்வார்? இந்த முக்கியமான கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டுமா? அடுத்த கட்டுரையைப் பாருங்கள். (w11-E 09/01)
[அடிக்குறிப்பு]
^ பாரா. 6 பிசாசு கலகம் செய்தபோது, கடவுள் ஏன் அவனை உடனே அழிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 11-ஐப் பார்க்கவும். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
பிசாசு—கடவுளின் கையாளா? எதிரியா?
[பக்கம் 26-ன் பெட்டி/படம்]
பரிபூரணமாகப் படைக்கப்பட்டவர் பரிபூரணத்தை இழக்க முடியுமா?
புத்திக்கூர்மையுள்ள தம் படைப்புகளுக்கு யெகோவா கொடுத்திருக்கும் பரிபூரணத்தன்மை வரம்புக்குட்பட்டது. ஆதாம் பரிபூரணமாகப் படைக்கப்பட்டபோதிலும் படைப்பாளர் கொடுத்திருக்கும் சில இயற்கைச் சட்டங்களை அவன் மீறாமல் இருக்க வேண்டும். உதாரணமாக, அவன் குப்பையையோ கல்லையோ மரத்தையோ சாப்பிட்டால் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். புவி-ஈர்ப்பு சக்தியை அலட்சியப்படுத்திவிட்டு உயரமான மலையிலிருந்து குதித்தால் அவனுக்குப் படுகாயம் ஏற்படும், ஏன் மரணம்கூட வரலாம்.
அதுபோலவே, பரிபூரணமாகப் படைக்கப்பட்டவர்—அவர் மனிதனானாலும் சரி தேவதூதனானாலும் சரி—கடவுள் கொடுத்திருக்கும் ஒழுக்கநெறிகளை மீறி நடந்தால் தீய விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். ஆக, புத்திக்கூர்மையுள்ள ஒருவர் தனக்குக் கொடுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் பாவியாகிவிடுவார்.—ஆதியாகமம் 1:29; மத்தேயு 4:4.