Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | நான் கடவுளுடைய நண்பனாக முடியுமா?

நீங்க கடவுளுடைய நண்பரா?

நீங்க கடவுளுடைய நண்பரா?

கடவுளுக்கு நண்பரா இருக்க என்னெல்லாம் செய்யனும்?

  1. கடவுளோட பெயரை தெரிஞ்சிக்கனும், அதை பயன்படுத்தனும்.

  2. அவர்கிட்ட எப்பவும் பேசனும். அதுக்கு ஜெபம் செய்யனும், பைபிள் படிக்கனும்.

  3. அவருக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கனும்.

கடவுளுடைய நண்பராக... அவருடைய பெயரை தெரிஞ்சிக்கங்க, ஜெபம் செய்யுங்க, பைபிள படிங்க, கடவுளுக்கு பிடிச்சத செய்யுங்க

இதையெல்லாம் நீங்க செய்றீங்களா? அப்படி இல்லனா, இதை செய்றதுக்கு முயற்சி பண்ணுங்க. கடவுளோட நண்பரா இருந்தா எவ்ளோ சந்தோஷமா இருக்கலாம்னு யோசிச்சு பாருங்க!

அமெரிக்காவில இருக்கிற ஜெனிபர் சொல்றாங்க: “முயற்சி செஞ்சா கண்டிப்பா கடவுளுடைய நண்பராக முடியும். அப்படி முயற்சி செஞ்சதுனால நான் கடவுள பத்தி நல்லா தெரிஞ்சிக்கிட்டேன்; அவர்மேல முழு நம்பிக்கை வைக்க கத்துக்கிட்டேன்; இப்போ கடவுள்மேல ரொம்ப அன்பு வச்சிருக்கேன். கடவுளுக்கு நண்பரா இருக்கேன்! சந்தோஷமா வாழ்றேன்!”

கடவுளுடைய நண்பரா ஆக ஆசைப்படுறீங்களா? அதுக்கு, யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வாங்க. பைபிள பத்தி இலவசமா சொல்லிக்கொடுப்பாங்க. அவங்க நடத்துற கூட்டங்களுக்கும் நீங்க போகலாம். கடவுளுடைய நண்பரா இருக்கிற நிறைய பேர நீங்க அங்க பார்க்கலாம். அவங்களோடயும் நீங்க நண்பராகலாம். * (அடிக்குறிப்பை பாருங்க.) இப்படியெல்லாம் செஞ்சா, “கடவுளோடு நண்பராக இருப்பதுதான் நல்லது”னு நீங்களே புரிஞ்சிப்பீங்க!—சங்கீதம் 73:28, NW. ▪ (w14-E 12/01)

^ பாரா. 9 பைபிள பத்தி தெரிஞ்சிக்கனுமா? யெகோவாவின் சாட்சிகள் நடத்துற கூட்டங்களுக்கு போகனுமா? இந்தப் பத்திரிகைய கொடுத்தவர்கிட்ட இதை பத்தி கேளுங்க. இல்லனா www.pr418.comவெப்சைட்ல, கீழே இருக்கிற “எங்களைத் தொடர்புகொள்ள”-ன்ற தலைப்ப பாருங்க.