அட்டைப்படக் கட்டுரை | கடவுளிடம் வேண்டினால் பலன் கிடைக்குமா?
கடவுள் நம்மை ஏன் ஜெபம் செய்ய சொல்கிறார்?
கடவுள் உங்களுடைய நண்பராக வேண்டும் என்று விரும்புகிறார்.
நல்ல நண்பர்கள் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். கடவுளிடம் நாம் அடிக்கடி பேச வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். ஏனென்றால், நாம் அவருடைய நண்பராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். “நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள்; என்னிடம் வந்து வேண்டிக்கொள்வீர்கள். அப்போது நான் உங்களுக்குப் பதில் சொல்வேன்” என்று கடவுள் சொல்கிறார். (எரேமியா 29:12, NW) கடவுளிடம் நீங்கள் அடிக்கடி பேசினால், “அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக்கோபு 4:8) “தன்னை நோக்கிக் கூப்பிடுகிறவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்.” (சங்கீதம் 145:18, NW) நாம் கடவுளிடம் பேசப்பேசத்தான் அவரோடு நல்ல நண்பராக இருக்க முடியும்.
“தன்னை நோக்கிக் கூப்பிடுகிறவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்.” —சங்கீதம் 145:18, NW.
கடவுள் உங்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறார்.
“உங்களில் எந்த மனிதனாவது, தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? . . . நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தகப்பன் தம்மிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார்!” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 7:9-11) கடவுள் “உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:7) “எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை நன்றியுடன்கூடிய ஜெபத்தினாலும் மன்றாட்டினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்.”—பிலிப்பியர் 4:6.
நமக்குக் கடவுளுடைய ஆலோசனை தேவை.
கடவுளை நம்புகிறவர்கள் நம்பாதவர்கள் என எல்லாருமே ஜெபம் செய்கிறார்கள். * (அடிக்குறிப்பை பாருங்கள்.) ஏனென்றால், கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும், அவரை வணங்க வேண்டும், அவருடைய ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்று நாம் எல்லாருமே நினைக்கிறோம். கடவுள் நம்மை அப்படித்தான் படைத்திருக்கிறார். கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறவர்கள் “சந்தோஷமானவர்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:3) கடவுளிடம் ஜெபம் செய்யும்போதுதான் அவருடைய ஆலோசனை நமக்கு கிடைக்கும்.
கடவுளிடம் ஜெபம் செய்தால் வேறென்ன நன்மைகள் கிடைக்கும்? (w15-E 10/01)
^ பாரா. 8 2012-ல் பியூ ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்காவில் ஒரு ஆய்வு செய்தது. அதில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களில் 11 சதவீதம் பேர் மாதம் ஒரு முறையாவது ஜெபம் செய்கிறார்கள் என்று தெரியவந்தது.