Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் காலத்தில் எருசலேமும் அதன் ஆலயமும்

இயேசுவின் காலத்தில் எருசலேமும் அதன் ஆலயமும்

இயேசுவின் காலத்தில் எருசலேமும் அதன் ஆலயமும்

இயேசு பிறந்த சில நாட்களில் யோசேப்பும் மரியாளும் அவரை எருசலேம் நகரத்திற்கு எடுத்துச் சென்றார்கள்; அது இயேசுவின் பரலோக தகப்பன் தமது பெயரை விளங்கச் செய்த நகரம். (லூ 2:22-39) 12-ஆம் வயதில் பஸ்கா பண்டிகைக்காக இயேசு மீண்டும் அங்கே சென்றார். தமது அறிவாற்றலால் ஆலயத்திலிருந்த போதகர்களை ஆச்சரியப்பட வைத்தார். (லூ 2:41-51) அந்த ஆலயத்தின் வளாகத்தில், மகா ஏரோதுவின் கட்டடத் திட்டத்தின் பாகமாக “நாற்பத்தாறு வருஷம்” வேலை நடைபெற்று வந்தது.​—யோவா 2:20.

இயேசு தமது ஊழிய காலத்தில், பண்டிகைகளுக்காக எருசலேம் சென்றார்; அப்போது அங்கு கூடிவந்தவர்களிடத்தில் அடிக்கடி போதித்தார். ஆலயத்தின் பிராகாரத்திலிருந்து காசுக்காரர்களையும் வியாபாரிகளையும் இரண்டு தடவை விரட்டியடித்தார்.​—மத் 21:12; யோவா 2:13-16.

ஆலயத்திற்கு வடக்கே இருந்த பெதஸ்தா குளத்தண்டையில், 38 ஆண்டுகளாக சுகவீனத்தால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதனை இயேசு சுகப்படுத்தினார். கண்பார்வை இழந்திருந்த ஒருவனுக்குப் பார்வையும் அளித்தார்; எப்படியெனில், இந்நகரத்தின் தென் பகுதியிலிருந்த சீலோவாம் குளத்திலே அவனுடைய கண்களை கழுவும்படி சொல்லி அவனை குணப்படுத்தினார்.​—யோவா 5:1-15; 9:1, 7, 11.

எருசலேமுக்கு கிழக்கே “ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்த” பெத்தானியாவில் தமது நண்பர்களாகிய லாசரு, மரியாள், மார்த்தாள் ஆகியோரை அடிக்கடி இயேசு சந்தித்தார். (யோவா 11:1, 18; NW அடிக்குறிப்பு; 12:1-11; லூ 10:38-42; 19:29; பக்கம் 18-⁠ல் “எருசலேம் நிலப்பரப்பு” என்பதைக் காண்க.) இயேசு தமது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, ஒலிவ மலையைக் கடந்து எருசலேமை நோக்கி வந்தார். அவர் மேற்கே அந்நகரத்தைப் பார்த்து அதற்காக அழுததை சற்று கற்பனை செய்து பாருங்கள். (லூ 19:37-44) அடுத்தப் பக்கத்தின் மேலே நீங்கள் காண்பதைப் போலத்தான் அவர் கண்ட காட்சியும் இருந்திருக்கும். பிற்பாடு, கழுதைக் குட்டியின் மேல் அமர்ந்தவாறே எருசலேமுக்குள் சென்றார்; அந்நகரத்தின் கிழக்கு வாயில்களில் ஒன்றின் வழியாக அவர் சென்றிருக்கலாம். இஸ்ரவேலின் வருங்கால ராஜா என உற்சாகம் பொங்க மக்கள் அவரை வாழ்த்தி வரவேற்றனர்.​—மத் 21:9-12.

எருசலேமில் அல்லது அதற்கு அருகில் இயேசுவின் மரணத்திற்கு சற்று முன்பு முக்கியமான சம்பவங்கள் நடைபெற்ற இடங்கள்: இயேசு ஜெபம் செய்த கெத்செமனே தோட்டம்; நியாயசங்கம்; காய்பாவின் வீடு; தேசாதிபதி பிலாத்துவின் அரண்மனை, கடைசியில் கொல்கொதா.​—மாற் 14:32, 53-15:1, 16, 22; யோவா 18:1, 13, 24, 28.

உயிர்த்தெழுந்த பிறகு, எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இயேசு தரிசனமானார். (லூ 24:1-49) பின்னர், ஒலிவ மலையிலிருந்து பரலோகத்திற்கு சென்றார்.​—அப் 1:6-12.

[பக்கம் 31-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஆலயத்தின் அம்சங்கள்

1. மகா பரிசுத்த ஸ்தலம்

2. பரிசுத்த ஸ்தலம்

3. தகன பலிபீடம்

4. வெண்கலக் கடல்

5. ஆசாரியர்களின் பிராகாரம்

6. இஸ்ரவேலரின் பிராகாரம்

7. பெண்களின் பிராகாரம்

8. புறஜாதியாரின் பிராகாரம்

9. தடுப்புச்சுவர் (சோரக்)

10. அரசவை மண்டபம்

11. சாலொமோன் மண்டபம்

ஆலயம்

வாயில்

 

ஆசாரியர்களின் பிராகாரம்

வாயில்

மகா பரிசுத்த தகன

பரிசுத்த ஸ்தலம் பலிபீடம் இஸ்ரவேலரின் பெண்களின்

ஸ்தலம் பிராகாரம் பிராகாரம்

வெண்கலக்

கடல்

 

வாயில் சாலொமோன்

மண்டபம்

தடுப்புச்சுவர் (சோரக்)

 

புறஜாதியாரின் பிராகாரம்

 

வாயில்

அரசவை மண்டபம்

 

வாயில்கள்

 

அன்டோனியா கோபுரம்

பாலம்

நியாயசங்கம்?

டைரோப்பியன் பள்ளத்தாக்கு

சீலோவாம் குளம்

கால்வாய்

காய்பாவின் வீடு?

தேசாதிபதியின் அரண்மனை

கொல்கொதா?

கொல்கொதா?

பெதஸ்தா குளம்

கெத்செமனே தோட்டம்?

ஒலிவ மலை

கீதரோன் பள்ளத்தாக்கு

கீகோன் நீரூற்று

என்ரொகேல்

இன்னோம் பள்ளத்தாக்கு (கெஹென்னா)

[பக்கம் 30-ன் படங்கள்]

நவீன எருசலேமுக்கு கிழக்கேயுள்ள காட்சி: (A) ஆலயம் இருந்த இடம், (B) கெத்செமனே தோட்டம், (C) ஒலிவ மலை, (D) யூதாவின் வனாந்தரம், (E)சவக் கடல்

[பக்கம் 31-ன் படம்]

இயேசுவின் நாளில் ஒலிவ மலையிலிருந்து மேற்கு நோக்கிய காட்சி