Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எகிப்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு

எகிப்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு

எகிப்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலை பெற்று வந்த விஷயத்தைப் பற்றி தெரியாதவர்கள் யாருமே இல்லை. ஆனால், மோசேயும் கடவுளுடைய ஜனங்களும் செங்கடலை கடந்த பின்பு, அவர்களுக்கு என்ன காத்திருந்தது? அவர்கள் எங்கே சென்றார்கள்? வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்காக யோர்தான் நதி மட்டும் அவர்கள் எப்படி வந்து சேர்ந்தார்கள்?

கானான் தேசத்திற்குள் அடியெடுத்து வைப்பதுதான் அவர்களுடைய குறிக்கோள். ஆனால், மிகக் குறைந்த தூரமுடைய பாதையில் மோசே செல்லவில்லை, அதாவது மத்தியதரைக் கடலின் மணற்பாங்கான கரையோரப் பகுதி வழியே சுமார் 400 கிலோமீட்டர் தூரமுடைய பாதையில் செல்லவில்லை. ஏனென்றால் அந்தப் பாதை நேராக எதிரிகளின் பிராந்தியமான பெலிஸ்தியா வழியே சென்றது. சீனாய் தீபகற்பத்தின் பரந்த மையப்பகுதி வழியாகவும் அவர் செல்லவில்லை; சரளைக் கற்களும் சுண்ணாம்புக் கற்களும் நிறைந்த அனல் கக்கும் பீடபூமி அது. ஆகவே, தெற்கு நோக்கி குறுகலான கடற்கரை சமவெளி வழியாக ஜனங்களை மோசே வழிநடத்தினார். அவர்கள் கூடாரமிட்ட முதல் இடம் மாரா, அங்குதான் கசப்பான தண்ணீரை யெகோவா மதுரமாக மாற்றினார். a ஏலிமை விட்டு வந்த பின்பு உணவுக்காக ஜனங்கள் முறுமுறுத்தார்கள்; அவர்களுக்கு காடையையும் அதற்குப்பின் மன்னாவையும் கடவுள் கொடுத்தார். ரெவிதீம் என்ற இடத்தில்தான் இஸ்ரவேலர் மீண்டும் தண்ணீர் பிரச்சினையை கிளப்பினார்கள். தாக்க வந்த அமலேக்கியரை முறியடித்ததும், திறமையுள்ள மனிதரை தேர்ந்தெடுக்கும்படி மோசேயின் மாமன் அவரை ஊக்குவித்ததும் இங்குதான்.​—⁠யாத், அதி. 15-18.

பிறகு, இஸ்ரவேலரை இன்னும் தெற்கே மலைகளுக்கு மோசே கூட்டிச் சென்றார்; அவர்கள் சீனாய் மலை அருகே கூடாரமிட்டார்கள். இங்குதான் கடவுளுடைய ஜனங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள், ஆசரிப்புக் கூடாரத்தை அமைத்து பலிகளையும் செலுத்தினார்கள். இரண்டாம் வருஷத்தில், வடக்கு நோக்கி “பயங்கரமான பெரிய வனாந்தர வழி”யாக, b காதேசுக்கு (காதேஸ்பர்னேயா) சென்றார்கள். அப்பயணம் 11 நாட்கள் பிடித்திருக்கலாம். (உபா 1:1, 2, 19; 8:15) பத்து வேவுகாரரின் பாதகமான அறிக்கையை கேட்டு பயந்ததால், ஜனங்கள் 38 ஆண்டுகள் சுற்றித்திரிய வேண்டியதாயிற்று. (எண் 13:1–14:34) எப்ரோனா, எசியோன்கேபேர் என பற்பல இடங்களில் அவர்கள் தங்கினார்கள், அதன் பின்பு மீண்டும் காதேசுக்கு வந்தார்கள்.​—எண் 33:33-36.

கடைசியாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நெருங்கும் சமயம் வந்தபோது, இஸ்ரவேலர் நேராக வடக்கு நோக்கி செல்லவில்லை. மாறாக, ஏதோமின் மையப் பகுதியை சுற்றி, “ராஜ பாதை”​—⁠ராஜாவின் பெரும்பாதை​—⁠வழியாக வடக்கு நோக்கி சென்றார்கள். (எண் 21:22; உபா 2:1-8) வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் பிள்ளைகளையும் மிருகங்களையும் கூடாரங்களையும் கொண்டு செல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அப்படிப்பட்ட பாதையில், கடப்பதற்கு கடினமாக இருந்த செங்குத்தான மலை இடுக்குகளில்​—⁠சேரேத் மற்றும் அர்னோன் மலை இடுக்குகளில் (சுமார் 520 மீட்டர் ஆழம்)​—⁠அவர்கள் ஏறி இறங்க வேண்டியிருந்தது.​—உபா 2:13, 14, 24.

கடைசியில், நேபோ மலையை இஸ்ரவேலர் வந்தடைந்தனர். இதற்குள் காதேசில் மிரியாம் இறந்தாள், ஓர் என்ற மலையில் ஆரோன் மரித்தார். மோசேயும், எந்த தேசத்திற்குள் அடியெடுத்து வைக்க ஆவலாயிருந்தாரோ அந்த தேசத்திற்கு அருகே இறந்து போனார். (உபா 32:48-52; 34:1-5) அதன் பிறகு, அந்தத் தேசத்திற்கு இஸ்ரவேலரை வழிநடத்தும் பொறுப்பு யோசுவாவிடம் ஒப்படைக்கப்பட்டது; 40 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பமான அந்தப் பயணம் முடிவுக்கு வந்தது.​—யோசு 1:1-4.

[அடிக்குறிப்புகள்]

a அவர்கள் கூடாரமிட்ட பெரும்பாலான இடங்கள் சரியாக எங்கே இருந்தன என்பது தெரியாது.

b தமிழ் பைபிளில் ‘சீன் வனாந்தரத்திற்கும்’ ‘சின் வனாந்தரத்திற்கும்’ வித்தியாசம் இல்லாமல் எல்லா இடங்களிலும் ‘சீன் வனாந்தரம்’ என்றே இருக்கிறது. ‘சின் வனாந்தரம்’ என இருக்க வேண்டிய இடங்கள்: எண் 13:21; 20:1; 27:14; 33:36; 34:3, 4; உபா 32:50; யோசு 15:1, 3. பக்கம் 9-⁠ல் உள்ள வரைபடத்தைக் காண்க.

[பக்கம் 8-ன் பெட்டி]

இந்தக் காலப்பகுதியில் எழுதப்பட்ட பைபிள் புத்தகங்கள்:

ஆதியாகமம்

யாத்திராகமம்

லேவியராகமம்

எண்ணாகமம்

உபாகமம்

யோபு

சங்கீதம் (ஒரு பகுதி)

[பக்கம் 9-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

வணிக கூட்டத்தாரின் பாதை

இஸ்ரவேலர் பயணித்த வழி

A7 எகிப்து

A5 ராமசேஸ்?

B5 சுக்கோத்?

C5 ஏத்தாம்?

C5 ஈரோத்

D6 மாரா

D6 ஏலிம்

E6 சீன் வனாந்தரம்

E7 தொப்கா

F8 ரெவிதீம்

F8 சீனாய் மலை (ஓரேப்)

F8 சீனாய் வனாந்தரம்

F7 கிப்ரோத் அத்தாவா

G7 ஆஸரோத்

G6 ரிம்மோன்பேரேஸ்

G5 ரீசா

G3 காதேஸ்

G3 பெனெயாக்கான்

G5 கித்காத்

H5 யோத்பாத்தா

H5 எப்ரோனா

H6 எசியோன்கேபேர்

G3 காதேஸ்

G3 சின் வனாந்தரம்

H3 ஓர் மலை

H3 சல்மோனா

I3 பூனோன்

I3 அபாரீம்

I2 மோவாப்

I1 தீபோன்

I1 அல்மோன் திப்லாத்தாயிம்

H1 எரிகோ

[மற்ற இடங்கள்]

A3 கோசேன்

A4 ஓன்

A5 மோப் (நோப்)

B3 சோவான்

B3 தக்பானேஸ்

C5 மிக்தோல்

D3 சூர்

D5 ஏத்தாம் வனாந்தரம்

F5 பாரான் வனாந்தரம்

G1 பெலிஸ்தியா

G1 அஸ்தோத்

G2 காசா

G2 பெயெர்செபா

G3 அஸ்மோனா

G3 நெகெப்

H1 எருசலேம்

H1 எப்ரோன் (கீரியாத்அர்பா)

H2 ஆராத் (கானானியர்)

H4 சேயீர்

H4 ஏதோம்

I7 மீதியான்

முக்கிய சாலைகள்

பெலிஸ்தரின் தேசத்திற்குப் போகிற வழி

சூருக்குப் போகிற வழி

I4 ராஜ பாதை

வணிகரின் பாதை

எல் ஹஜ் பாதை

[மலைகள்]

F8 சீனாய் மலை (ஓரேப்)

H3 ஓர் மலை

I1 நேபோ மலை

[நீர்நிலைகள்]

E2 மத்தியதரைக் கடல் (பெருங்கடல்)

D7 செங்கடல்

I1 உப்புக் கடல்

நதிகள்

A6 நைல் நதி

F3 எகிப்தின் நதிப் பள்.

I2 அர்னோன்

I3 சேரேத்

[பக்கம் 8-ன் படம்]

வணிகர் கூட்டம் கடந்து சென்ற சீனாய் தீபகற்பம்

[பக்கம் 8-ன் படம்]

சீனாய் மலைக்கு முன் இஸ்ரவேலர் கூடாரமிட்டனர்

[பக்கம் 9-ன் படம்]

காதேசில் அல்லது அதற்கு அருகில் இருந்த நீரூற்றுகளிலிருந்து தண்ணீர் கிடைத்தது

[பக்கம் 9-ன் படம்]

அர்னோன் நதிப் பள்ளத்தாக்கை இஸ்ரவேலர் அனைவரும் கடக்க வேண்டியிருந்தது