Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிரேக்கும் ரோமாபுரியும் யூதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன

கிரேக்கும் ரோமாபுரியும் யூதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன

கிரேக்கும் ரோமாபுரியும் யூதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன

ஒரு பேரரசாக உருவெடுத்த கிரேக்கு, மக்கெதோனியா மலைகளிலிருந்து விஸ்தரிக்க ஆரம்பித்தது. அங்கு அலெக்ஸாந்தர் சுமார் 22 வயதில் கிழக்கு நோக்கி படையெடுப்பதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினார். பொ.ச.மு. 334-⁠ல் தன் படைகளோடு ஹெலஸ்பான்டை (டார்டனெல்ஸை) கடந்து சென்றார். அது ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிக்கும் ஒரு ஜலசந்தி. பாய்ந்து செல்லும் “சிறுத்தையைப்” போல அலெக்ஸாந்தருடைய தலைமையில் கிரேக்கர் அடுத்தடுத்து பல வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தனர். (தானி 7:6, NW) டிராய் பட்டணத்திற்கு அருகே, கிரனைகஸ் நதி சமவெளிகளில் பெர்சியரை மேற்கொண்டு இஸஸ் என்ற ஊரில் அவர்களை அலெக்ஸாந்தர் தோற்கடித்தார்.

சீரியாவுக்கும் பெனிக்கேவுக்கும் எதிராக கிரேக்கர் படையெடுத்து சென்றனர்; ஏழு மாத கால முற்றுகைக்குப் பின், தீரு பட்டணத்தை வென்று அதை அழித்துப்போட்டனர். (எசே 26:4, 12) அலெக்ஸாந்தர் எருசலேமை தாக்காமல் விட்டுவிட்டு, காத்சாவை கைப்பற்றினார். (சக 9:5) அவர் எகிப்திற்கு வந்தபோது அலெக்சந்திரியா பட்டணத்தை நிறுவினார். அது வாணிகத்திற்கும் கல்விக்கும் மையமாக ஆனது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அவர் திரும்பவும் கடந்து வந்து நினிவேயின் இடிபாடுகளுக்கு அருகே அமைந்த கௌகமெலாவில் பெர்சியர்களை சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் முறியடித்தார்.

பெர்சியரின் நிர்வாக மையங்களான பாபிலோன், சூசான் (சூஷா), பெர்சிபோலிஸ் ஆகிய இடங்களை கைப்பற்றுவதற்காக அலெக்ஸாந்தர் தெற்கு நோக்கி சென்றார். பின்பு, பெர்சியரின் பிராந்தியம் வழியாக விரைந்து, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து நதியை வந்தடைந்தார். எட்டே ஆண்டுகளில் அன்றைய உலகின் பெரும்பகுதியை அலெக்ஸாந்தர் வளைத்துப் பிடித்தார். ஆனால், பொ.ச.மு. 323-⁠ம் ஆண்டு தனது 32-⁠ம் வயதில் பாபிலோனில் இருந்தபோது மலேரியா காய்ச்சலால் இறந்து போனார்.​—தானி 8:8.

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் கிரேக்கரின் ஆதிக்கம் பலமாக இருந்தது. அலெக்ஸாந்தரின் படையை சேர்ந்த முன்னாள் போர்வீரர்கள் சிலர் நிரந்தரமாக அங்கேயே குடியிருந்து விட்டனர். முதல் நூற்றாண்டுக்குள் கிரேக்க மொழி பேசும் பட்டணங்களைக் கொண்ட ஒரு சங்கம் (தெக்கப்போலி) உருவானது. (மத் 4:25; மாற் 7:31) பிற்பாடு, எபிரெய வேதாகமம் கிரேக்க மொழியில் கிடைக்க ஆரம்பித்தது. கொய்னி (பொதுவாக பேசப்படும் கிரேக்கு) மொழி கிறிஸ்தவ போதனைகளைப் பரப்புவதற்கு ஏற்ற சர்வதேச மொழியாயிற்று.

ரோம வல்லரசு

மேற்கே என்ன நடந்து கொண்டிருந்தது? டைபர் நதியருகே ஒருசமயம் கிராமங்களின் தொகுதியாக இருந்த ரோமாபுரி செல்வாக்கு பெற ஆரம்பித்தது. நாளடைவில், திறமைமிக்க இராணுவ ஒழுங்கமைப்பும் மத்திய அரசு அதிகாரமும் கைகொடுத்ததால், அலெக்ஸாந்தரின் நான்கு தளபதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளை ரோமாபுரி விரைவில் வென்றது. பொ.ச.மு. 30-⁠க்குள் ரோமாபுரி ஒரு வல்லரசாக தலைதூக்கியது; தரிசனத்தில் தானியேல் பார்த்த விதமாக ‘அஞ்சிநடுங்க வைக்கும் மிருகமாக’ உருவெடுக்க ஆரம்பித்தது.​—தானி 7:7, NW.

ரோம வல்லரசு பிரிட்டனிலிருந்து வட ஆப்பிரிக்கா வரையிலும், அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து பெர்சிய வளைகுடா வரையிலும் பரவியிருந்தது. இந்த வல்லரசு மத்தியதரைக் கடலை சூழ்ந்திருந்ததால் இதை மாரே நோஸ்ட்ரும் (எங்கள் கடல்) என ரோமர் அழைத்தனர்.

யூதர்களின் மீது ரோமாபுரியும் ஆதிக்கம் செலுத்தியது. அவர்களுடைய தேசம் ரோம பேரரசின் பாகமாக இருந்தது. (மத் 8:5-13; அப் 10:1, 2) இயேசு முழுக்காட்டுதல் பெற்றதும், மரித்ததும் சக்கரவர்த்தி திபேரியு அரசாண்ட காலத்தில்தான். கிறிஸ்தவர்களை ரோம ஆட்சியாளர்கள் சிலர் மிருகத்தனமாக துன்புறுத்தினர், ஆனாலும் மெய் வணக்கத்தை அவர்களால் குலைத்துப்போட முடியவில்லை. 13 நூற்றாண்டுகளுக்குப் பின்பு வடக்கேயிருந்த ஜெர்மானிய இனத்தவர் மற்றும் கிழக்கேயிருந்த நாடோடிகளின் படையெடுப்புகளால் இந்த வல்லரசு வீழ்ந்தது.

[பக்கம் 26-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கிரேக்க பேரரசு

அலெக்ஸாந்தருக்குப் பின் அந்தப் பரந்த வல்லரசை அவரது நான்கு தளபதிகள் ஆண்டனர்

▪ கஸாண்டர்

▫ லைசிமாக்கஸ்

○ முதலாம் தாலமி

• முதலாம் செலூக்கஸ்

A2 ▪ கிரேக்கு

A2 ▪ அத்தேனே

A2 ▪ அகாயா

A3 ○ சிரேனே

A3 ○ லீபியா

B2 ▫ பைசான்டியம்

B3 ○ சீப்புரு

B4 ○ நோஅம்மோன் (தீப்ஸ்)

C3 பல்மைரா (தத்மோர்)

C3 ○ கெரசா

C3 ○ பிலதெல்பியா

C3 ○ எருசலேம்

C5 ○ செவெனே

G2 • அலெக்சந்திரியா மார்ஜானா

அலெக்ஸாந்தரின் பாதை

A2 ▪ மக்கெதோனியா

A2 ▪ பெல்லா

A2 ▫ திரேஸ்

B2 ▫ டிராய்

B2 ▫ சர்தை

B2 ▫ எபேசு

B2 ▫ கார்டியம்

C2 ▫ அன்கரா

C3 • தர்சு

C3 • இஸஸ்

C3 • அந்தியோகியா (சீரியா)

C3 ○ தீரு

C4 ○ காசா

B4 ○ எகிப்து

B4 ○ மோப்

B4 ○ அலெக்சந்திரியா

A4 ○ சைவா பாலைவனச் சோலை

B4 ○ மோப்

C4 ○ காசா

C3 ○ தீரு

C3 ○ தமஸ்கு

C3 • அலேப்போ

D3 • நிஸபஸ்

D3 • கௌகமெலா

D3 • பாபிலோன்

E3 • சூசான்

E4 • பெர்சியா

E4 • பெர்சிபோலிஸ்

E4 • பஸார்கடி

E3 • மேதியா

E3 • அக்மேதா

E3 • ரேஜி

E3 • ஹெக்கடோம்பலாஸ்

F3 • பார்த்தியா

G3 • ஆரியா

G3 • அலெக்சந்திரியா ஆரியான்

G3 • அலெக்சந்திரியா ஃப்ராஃப்தாசியா

F4 • டிரான்ஜியேனா

G4 • அரகோஸா

G4 • அலெக்சந்திரியா அரகோசியோரம்

H3 • காபுல்

G3 • டிராப்சாக்கா

H3 • அலெக்சந்திரியா ஆக்ஸியானா

G3 • டிராப்சாக்கா

G3 • பாக்டிரியா

G3 • பாக்ட்ரா

G2 • டர்பென்ட்

G2 • சாக்டியானா

G2 • மரகன்டா

G2 • பூகாரா

G2 • மரகன்டா

H2 • அலெக்சந்திரியா எஸ்சாட்டி

G2 • மரகன்டா

G2 • டர்பென்ட்

G3 • பாக்ட்ரா

G3 • பாக்டிரியா

G3 • டிராப்சாக்கா

H3 • காபுல்

H3 • டாக்ஸிலா

H5 • இந்து தேசம்

H4 • அலெக்சந்திரியா

G4 • ஜட்ரோஸா

F4 • பியூரா

E4 • பெர்சியா

E4 • கார்மானியா

E4 • பஸார்கடி

E4 • பெர்சிபோலிஸ்

E3 • சூசான்

D3 • பாபிலோன்

[மற்ற இடங்கள்]

A3 கிரேத்தா

D4 அரபி தேசம்

[நீர்நிலைகள்]

B3 மத்தியதரைக் கடல்

C5 செங்கடல்

E4 பெர்சிய வளைகுடா

G5 அரபிக் கடல்

[நதிகள்]

B4 நைல்

D3 ஐப்பிராத்து

D3 டைக்ரிஸ்

G4 சிந்து

[பக்கம் 27-ன் தேசப்படம்]

ரோம பேரரசு

A1 பிரிட்டன்

A3 ஸ்பானியா

B1 ஜெர்மானியா

B2 கால்

B2 இத்தாலியா

B2 ரோமாபுரி

B2 கார்தேஜ்

C2 இல்லிரிக்கம்

C3 கிரேக்கு

C3 ஆக்டியம்

C3 சிரேனே

D2 பைசான்டியம் (கான்ஸ்டான்டிநோப்பிள்)

D3 ஆசியா மைனர்

D3 எபேசு

D3 அலேப்போ

D3 அந்தியோகியா (சீரியா)

D3 தமஸ்கு

D3 கெரசா (ஜாரஷ்)

D3 எருசலேம்

D3 அலெக்சந்திரியா

D4 எகிப்து

[நீர்நிலைகள்]

A2 அட்லாண்டிக் பெருங்கடல்

C3 மத்தியதரைக் கடல்

D2 கருங்கடல்

D4 செங்கடல்

[பக்கம் 26-ன் படம்]

ரப்பா பட்டணத்தை இரண்டாம் தாலமி திரும்ப கட்டி முடித்ததும் அதற்கு பிலதெல்பியா என பெயரிட்டார். ஒரு பெரிய ரோம அரங்கத்தின் இடிபாடுகள் அங்கு உள்ளன

[பக்கம் 27-ன் படம்]

தெக்கப்போலி பட்டணமான கெரசா (ஜாரஷ்)

[பக்கம் 27-ன் படம்]

அலேப்போவுக்கு அருகேயுள்ள ஒரு சாலை; இதுபோன்ற ரோம சாலைகள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய நாடுகள் வரை அமைக்கப்பட்டிருந்தன. பைபிள் சத்தியத்தை பரப்புவதற்கு கிறிஸ்தவர்கள் இந்த சாலைகளில் பயணித்தனர்