Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாவீது, சாலொமோன் காலத்தில் இஸ்ரவேல்

தாவீது, சாலொமோன் காலத்தில் இஸ்ரவேல்

தாவீது, சாலொமோன் காலத்தில் இஸ்ரவேல்

‘எகிப்தின் நதி துவக்கி ஐப்பிராத்து நதி மட்டுமுள்ள’ தேசத்தை ஆபிராமின் வித்துவுக்குக் கொடுப்பதாக கடவுள் வாக்குறுதி அளித்தார். (ஆதி 15:18; யாத் 23:31; உபா 1:7, 8; 11:24) யோசுவா கானானுக்குள் நுழைந்த பிறகு, சுமார் 400 ஆண்டுகளுக்குப் பின்னரே வாக்குப்பண்ணப்பட்ட தேசம் இந்த எல்லைகளை எட்டியது.

சோபாவின் கைவசமிருந்த அரமேயன் ராஜ்யத்தை தாவீது ராஜா கைப்பற்றினார், அந்த ராஜ்யம் வடக்கு சீரியாவிலிருந்த ஐப்பிராத்து நதி வரை பரவியிருந்தது. a தாவீது பெலிஸ்தரை வென்றதால், தெற்கே எகிப்தின் எல்லை வரை அவருடைய ராஜ்யம் பரவியது.​—2சா 8:3; 1நா 18:1-3; 20:4-8; 2நா 9:26.

ஆகவே, “[ஐப்பிராத்து] நதி தொடங்கி, பெலிஸ்தர் தேச வழியாய் எகிப்தின் எல்லை மட்டும்” சாலொமோன் ஆண்டு வந்தார். அவரது ஆட்சி மேசியாவின் சமாதான ஆட்சிக்கு முன்நிழலாக இருந்தது. (1இரா 4:21-25; 8:65; 1நா 13:5; சங் 72:8; சக 9:10) என்றாலும், இஸ்ரவேல் ஆக்கிரமித்திருந்த பகுதி ‘தாண் துவக்கி பெயெர்செபா மட்டும்’ பரவியிருந்ததாக பொதுவாய் கருதப்படுகிறது.​—2சா 3:9; 2நா 30:5.

சாலொமோன் ராஜா கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் குதிரைகளையும் ரதங்களையும் திரட்டினார். (உபா 17:16; 2நா 9:25) அவற்றை அன்றிருந்த சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் அவர் ஓட்டிக்கொண்டு செல்ல முடிந்தது. (யோசு 2:22, NW; 1இரா 11:29, NW; ஏசா 7:3, NW; மத் 8:28, NW) இந்த சாலைகளில் சிலவற்றின் மார்க்கம் மட்டுமே நமக்கு விவரமாக தெரியும். உதாரணமாக, ‘லிபோனாவுக்குத் தெற்கே, பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற நெடுஞ்சாலையை’ பற்றிய விவரம் உள்ளது.​—நியா 5:6; 21:19, NW.

பூர்வ இஸ்ரவேலின் சாலைகளும் நெடுஞ்சாலைகளும் என்ற ஆங்கில நூல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பூர்வ இஸ்ரவேலின் சாலைகளை ஆராய்வதில் மிகச் சிக்கலான பிரச்சினை என்னவென்றால், பழைய ஏற்பாட்டின் காலப்பகுதியில் இருந்த இஸ்ரவேலின் சாலைகளைக் கண்டுபிடிப்பதற்கு காணக்கூடிய எவ்வித தெளிவான தடயங்களும் இல்லை; ஏனென்றால் [அந்தக் காலப்பகுதியில்] கற்கள் பாவிய சாலைகள் அமைக்கப்படவில்லை.” இருந்தாலும், இடஇயல்பு விவரமும் (topography) அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நகரங்களின் இடிபாடுகளும் இத்தகைய சாலைகள் பலவற்றின் பாதையை சுட்டிக்காட்டுகின்றன.

பெரும்பாலும் சாலைகளைப் பொறுத்தே படைகள் எந்த வழியில் அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது. (1சா 13:17, 18; 2இரா 3:5-8) இஸ்ரவேலை தாக்குவதற்கு, பெலிஸ்தர்கள் எக்ரோன் மற்றும் காத்திலிருந்து “சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே” இருக்கிற இடம் வரை அணிவகுத்துச் சென்றனர். சவுலின் படை அவர்களை “ஏலா பள்ளத்தாக்கிலே” சந்தித்தது. கோலியாத்தை தாவீது வெட்டி வீழ்த்தியபின், பெலிஸ்தர்கள் மீண்டும் காத் மற்றும் எக்ரோனுக்குத் தப்பியோடினர்; தாவீதோ எருசலேமுக்கு சென்றார்.​—1சா 17:1-54.

லாகீஸ் (D10), அசெக்கா (D9), பெத்ஷிமேஸ் (D9) ஆகியவை ஷெஃபிலா வழியாகவும் யூதேய குன்றுகளை நோக்கியும் சென்ற இயற்கைப் பாதைகளில் அமைந்திருந்தன. இவ்வாறு, வயா மாரிஸ் வழியாக எதிரிகள் இஸ்ரவேலின் மையப் பகுதிக்குள் நுழைந்து விடாதபடி தடுப்பதில் இந்நகரங்கள் கோட்டைபோல் அமைந்திருந்தன.​—1சா 6:9, 12; 2இரா 18:13-17.

[அடிக்குறிப்பு]

a ரூபன் கோத்திரத்து பிராந்தியம் சீரியா வனாந்தரம் வரை பரவியிருந்தது; அந்த வனாந்தரத்தின் கிழக்குக் கோடியில் ஐப்பிராத்து நதி ஓடியது.​—⁠1நா 5:9, 10.

[பக்கம் 16-ன் பெட்டி]

இந்தக் காலப்பகுதியில் எழுதப்பட்ட பைபிள் புத்தகங்கள்:

1 & 2 சாமுவேல்

சங்கீதங்கள் (சில பகுதிகள்)

நீதிமொழிகள் (சில பகுதிகள்)

சாலொமோனின் உன்னதப்பாட்டு

பிரசங்கி

[பக்கம் 17-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஒன்றுபட்ட முடியாட்சியில் பிராந்தியமும் சாலைகளும்

திப்சா

ஆமாத்

தத்மோர்

பேரொத்தாய் (கூன்?)

சீதோன்

தமஸ்கு

தீரு

தாண்

எருசலேம்

காசா

ஆரோவேர்

பெயெர்செபா

தாமார்

எசியோன்கேபேர்

ஏலாத் (ஏலோத்)

ஐப்பிராத்து

எகிப்தின் நதிப் பள்.

B10 கோசா

C8 யோப்பா

C9 அஸ்தோத்

C10 அஸ்கலோன்

C11 சிக்லாக்

C12 பாரான் வனாந்தரம்

D5 தோர்

D6 எப்பேர்

D8 ஆப்பெக்

D8 ராமா

D9 சால்பீம்

D9 கேசேர்

D9 மாக்காத்ஸ்

D9 எக்ரோன்

D9 பெத்ஷிமேஸ்

D9 காத்

D9 அசெக்கா

D10 சோக்கோ

D10 அதுல்லாம்

D10 கேகிலா

D10 லாகீஸ்

D11 யாத்தீர்

D12 பெயெர்செபா

E2 தீரு

E4 காபூல்

E5 யொக்னியாம் (யோக்மேயாம்?)

E5 மெகிதோ

E6 தானாக்

E6 அறுபோத்

E7 பிரத்தோன்

E8 லிபோனா

E8 சேரேதா

E8 பெத்தேல்

E9 கீழ் பெத்தொரோன்

E9 மேல் பெத்தொரோன்

E9 கேபா

E9 கிபியோன்

E9 கிபியா

E9 கீரியாத்யாரீம்

E9 நோப்

E9 பாகால்பிராசீம்

E9 எருசலேம்

E9 பெத்லகேம்

E10 தெக்கோவா

E10 எப்ரோன்

E11 சீப்

E11 ஹோரெஷ்?

E11 கர்மேல்

E11 மாகோன்

E11 எஸ்தெமோவா

F5 எந்தோர்

F5 சூனேம்

F5 யெஸ்ரயேல்

F6 பெத்செயான்

F7 திர்சா

F7 சீகேம்

F8 சார்தான்

F8 சீலோ

F8 ஒப்ரா?

F9 எரிகோ

F11 என்கேதி

G2 பெத்மாக்கா-ஆபேல்

G2 தாண்

G3 ஆத்சோர்

G3 மாக்கா

G5 லோதேபார் (தெபீர்)

G5 ரோகிலிம்

G6 ஆபேல்மேகொலா

G7 சுக்கோத்

G7 மகனாயீம்

H1 சீரியா

H4 கேசூர்

H6 கீலேயாத்- ராமோத்

H8 ரப்பா

H9 மேதேபா

H11 ஆரோவேர்

H12 மோவாப்

I4 ஏலாம்?

I9 அம்மோன்

C10 வயா மாரிஸ்

H6 ராஜ பாதை

F5 கில்போவா மலை

C8 மத்தியதரைக் கடல் (பெருங்கடல்)

F10 உப்புக் கடல் (சவக் கடல்)

G4 கலிலேயாக் கடல்

E9 என்ரொகேல்

[பக்கம் 16-ன் படங்கள்]

வலது: ஏலா பள்ளத்தாக்கு, கிழக்கே யூதாவின் குன்றுகள்

கீழே: வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் பயணிப்பதற்கு உதவிய சாலைகள்