Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நலமும் விசாலமுமான தேசம்’

‘நலமும் விசாலமுமான தேசம்’

‘நலமும் விசாலமுமான தேசம்’

கடவுள் தம்முடைய ஜனங்களை ‘எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கி, . . . பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதாக’ ஜூவாலித்து எரிந்த புதர்ச்செடியின் அருகே மோசேயிடம் கூறினார்.​—யாத் 3:8.

கம்ப்யூட்டரில் வடிவமைக்கப்பட்ட இந்த இரண்டு ‘மாடல்கள்’ வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் பல்வகை இயற்கைப் பிரதேசங்களையும் நிலப்பகுதிகளையும் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். (அளவு விகிதத்தை எடுத்துக்காட்ட மேட்டுநிலப் பகுதிகள் எடுப்பாக காட்டப்பட்டுள்ளன.) கடல் மட்டத்திலிருந்து அதன் உயரத்தைக் காண்பதற்கு வர்ணமிடப்பட்ட கிராஃப் படத்தைப் பாருங்கள்.

இத்தேசத்தின் இயற்கைப் பிரதேசங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் ஒரு விதத்தை அட்டவணையில் காணலாம். a தமிழ் பைபிளில் அராபா என்பது “சமனான வெளி” என்றும், ஷெஃபிலா என்பது ‘பள்ளத்தாக்கு’ என்றும் நெகெப் என்பது “தென்திசை” அல்லது “தென்தேசம்” என்றும் ஹோரெஷ் என்பது ‘காடு’ என்றும் ஆபேல்கெராமிம் என்பது “திராட்சத் தோட்டத்து நிலங்கள்” என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.​—ஆதி 13:1; உபா 1:7; 1சா 23:15, 16; நியா 11:33.

[அடிக்குறிப்பு]

a ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’ (படிப்பு 1, பக்கங்கள் 270-8), வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (தொகுதி 2, பக்கங்கள் 568-71) ஆகியவற்றில் இப்பிரதேசங்களைப் பற்றிய விவரங்களையும் அவற்றைக் குறிப்பிடும் பைபிள் வசனங்களையும் காணலாம். இவை யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.

[பக்கம் 12, 13-ன் அட்டவணை/தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

இயற்கை பகுதிகளின் அட்டவணை

A. பெருங்கடலின் கரை

B. யோர்தானுக்கு மேற்கேயுள்ள சமவெளிகள்

1.ஆசேர் சமவெளி

2.தோர் கடலோர பகுதி

3.சாரோனின் புல்வெளிகள்

4.பெலிஸ்த சமவெளி

5.மத்திய கிழக்கு-மேற்கு பள்ளத்தாக்கு

a.மெகிதோ சமவெளி

b.யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு

C. யோர்தானுக்கு மேற்கேயுள்ள மலைகள்

1.கலிலேயா குன்றுகள்

2.கர்மேல் குன்றுகள்

3.சமாரியா குன்றுகள்

4.ஷெஃபிலா (தாழ்வான குன்றுகள்)

5.யூதாவின் மலைநாடு

6.யூதாவின் வனாந்தரம்

7.நெகெப்

8.பாரான் வனாந்தரம்

D. அராபா (பிளவு பள்ளத்தாக்கு)

1.ஹூலா நீர்த்தேக்கம்

2.கலிலேயாக் கடல் பகுதி

3.யோர்தான் பள்ளத்தாக்கு

4.உப்புக் கடல் (சவக் கடல்)

5.அராபா (உப்புக் கடலின் தென்பகுதி)

E. மலைகள்/யோர்தானின் கிழக்கே உள்ள பீடபூமிகள்

1.பாசான்

2.கீலேயாத்

3.அம்மோன் மற்றும் மோவாப்

4.ஏதோமின் மலைப் பீடபூமி

F. லீபனோன் மலைகள்

வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்

மீட்டர் அடி

2,500 7,500

2,000 6,000

1,500 4,500

1,000 3,000 யூதாவின் மோவாப்

மலைநாடு தேசம்

500 1,500

ஷெஃபிலா யூதாவின்

பெலிஸ்த வனாந்தரம்

சமவெளி பிளவு

0 0 (கடல் மட்டம்) பள்ளத்தாக்கு

உப்புக் கடல்

-500 -1,500

[பக்கம் 13-ன் படம்]

எர்மோன் மலை (2,814 மீ; 9,232 அடி)

[பக்கம் 13-ன் படம்]

உப்புக் கடலின் கரையோரம்; பூமியிலேயே மிகத் தாழ்வான பகுதி (கடல் மட்டத்திற்குக் கீழே சுமார் 400 மீ, 1,300 அடி)