Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நியாயாதிபதிகளை யெகோவா எழும்பப் பண்ணினபோது’

‘நியாயாதிபதிகளை யெகோவா எழும்பப் பண்ணினபோது’

‘நியாயாதிபதிகளை யெகோவா எழும்பப் பண்ணினபோது’

தாபோர் மலையை (F4) நீங்கள் வரைபடத்தில் எளிதாக கண்டுபிடித்து விடலாம். அது கலிலேயாக் கடலுக்கு தென்மேற்கே யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அந்த மலையின் உச்சியில் 10,000 பேரைக் கொண்ட ஒரு சேனை கூடிவந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள். கானானிய ராஜாவாகிய யாபீன் 20 ஆண்டுகளாகவே இஸ்ரவேலரை கொடுமைப்படுத்தி வந்தான். ஆகவே, அவனுக்கு எதிராக இஸ்ரவேலரை ஒன்று திரட்டுவதற்கு நியாயாதிபதியாகிய பாராக்கையும் தீர்க்கதரிசினியாகிய தெபொராளையும் யெகோவா பயன்படுத்தினார். சேனாதிபதியாகிய சிசெராவின் தலைமையில், பயங்கரமான இரும்பு அரிவாள்கள் பொருத்தப்பட்ட யாபீனின் 900 இரதங்கள் அரோசேத்திலிருந்து கீசோனின் வறண்ட ஆற்றுப்படுகைக்கு வந்தன. மெகிதோவுக்கும் தாபோர் மலைக்கும் இடையே கீசோன் அமைந்திருந்தது.

நியாயாதிபதியாகிய பாராக், சிசெராவின் சேனைகளோடு போரிட இஸ்ரவேல் ஆண்களை அழைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் இறங்கினார். இஸ்ரவேலருக்கு யெகோவா வெற்றி தேடித் தந்தார். எப்படியெனில், வெள்ளம் திடீரென பெருக்கெடுத்து வரும்படி யெகோவா செய்ததால் சிசெராவின் இரதங்கள் சேற்றில் மாட்டிக்கொண்டன; இது கானானியரை கலக்கமடையச் செய்தது. (நியா 4:1–5:31) இவ்விதமாக நியாயாதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேலருக்கு கடவுள் அளித்த வெற்றிகள் பல.

கானான் தேசம் கைப்பற்றப்பட்ட பிறகு, அது இஸ்ரவேலரின் கோத்திரங்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. லேவியரல்லாத மற்ற பல கோத்திரங்கள் குடியிருந்த பகுதிகளைப் பாருங்கள். சிறியதாயிருந்த சிமியோன் கோத்திரம், யூதாவுக்கு கொடுக்கப்பட்ட பிராந்தியத்தில் சில பட்டணங்களைப் பெற்றது. யோசுவாவின் மரணத்திற்கு பின், இஸ்ரவேலர் ஆவிக்குரிய ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் சீர்கெட்டுப் போனார்கள். விரோதிகளால் அவர்கள் ஒடுக்கப்பட்டு “மிகவும் நெருக்கப்பட்டார்கள்.” அதைக் கண்டு யெகோவா மனம் உருகியதால், விசுவாசமும் தைரியமுமிக்க 12 ‘நியாயாதிபதிகளை எழும்பப் பண்ணினார்.’ அவர்கள் 300 ஆண்டுகள் இஸ்ரவேலரை காப்பாற்றினார்கள்.​—நியா 2:15, 16, 19.

நியாயாதிபதி கிதியோன் அதிகமான ஆயுதங்களை தரித்திராத, ஆனால் சுறுசுறுப்பான 300 பேரை மட்டுமே பயன்படுத்தி 1,35,000 மீதியானிய வீரர்களை முறியடித்தார். அவர்கள் போரிட்ட இடம் கில்போவா மலைக்கும் மோரேக்கும் இடையே இருந்தது. ஆரம்ப வெற்றிக்குப் பின்பு, விரோதிகளை கிழக்கே வனாந்தரம் மட்டும் கிதியோன் விரட்டிச் சென்று பிடித்தார்.​—நியா 6:1–8:32.

மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த கீலேயாத்தியனாகிய யெப்தா, யோர்தானுக்கு கிழக்கே இருந்த இஸ்ரவேலரின் நகரங்களை கொடுமைக்கார அம்மோனியரிடமிருந்து விடுவித்தார். தன்னுடைய வெற்றிக்காக அவர் ஒருவேளை ராஜ பாதையில் பயணித்திருக்கலாம். அப்பாதை கீலேயாத்-ராமோத்தையும் ஆரோவேர் பகுதியையும் இணைத்தது.​—நியா 11:1–12:7.

பெலிஸ்தருக்கு எதிராக சிம்சோன் வீரதீர செயல்கள் நடப்பித்தது காசா மற்றும் அஸ்கலோனைச் சூழ்ந்த கடலோரப் பகுதியில்தான். வேளாண்மைக்கு பெயர்போன, நீர்வளம் பொருந்திய இடத்தில் காசா அமைந்துள்ளது. சிம்சோன் 300 நரிகளை பயன்படுத்தி, பெலிஸ்தரின் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவத் தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டார்.​—நியா 15:4, 5.

நியாயாதிபதிகளின் செயல்களை பைபிள் குறிப்பிடுவதிலிருந்து அல்லது அவர்களின் கோத்திரத்தை குறிப்பிடுவதிலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசம் முழுவதிலும் நியாயாதிபதிகள் மும்முரமாக செயல்பட்டு வந்தார்கள் என்பது தெளிவாகிறது. எந்த இடமாக இருந்தாலும்சரி, நெருக்கடியான காலங்களில் மனந்திரும்பிய தம் மக்களை யெகோவா நன்கு கவனித்துக்கொண்டார்.

[பக்கம் 15-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

Tribes and Judges

நியாயாதிபதிகள்

1. ஒத்னியேல்

2. ஏகூத்

3. சம்கார்

4. பாராக்

5. கிதியோன்

6. தோலா

7. யாவீர்

8. யெப்தா

9. இப்சான்

10. ஏலோன்

11. அப்தோன்

12. சிம்சோன்

கோத்திரங்களுக்குரிய பகுதிகள் (See publication)

மனாசேக்குரிய அந்நிய பட்டணங்கள்

E4 தோர்

E5 மெகிதோ

E5 தானாக்

F4 எந்தோர்

F5 பெத்செயான் (பெத்சான்)

F5 இப்லெயாம் (காத்ரிம்மோன்)

சிமியோனுக்குரிய அந்நிய பட்டணங்கள்

C9 சருகேன் (சாராயீம்) (சில்லீம்)

C10 பெத்லெபாவோத் (பெத்பிரி)

D8 எத்தேர் (தோகேன்)

D9 சிக்லாக்

D9 ஆயின்

D9 ஆத்சார்சூசா?

D9 ஆசான்

D9 பெயெர்செபா

D10 ஆத்சார்சுவால்

E9 ஏத்தாம்

E9 பெத்- மார்காபோத்

E9 பெத்தூவேல் (கெசீல்?)

E9 சேபா? (யெசுவா)

E10 பாலாத்பெயேர் (பாகால்)

E10 ஆத்சேம்

லேவிய அடைக்கலப் பட்டணங்கள்

E8 எப்ரோன்

F3 கேதேஸ்

F6 சீகேம்

H4 கோலான்

H5 கீலேயாத்-ராமோத்

H8 பேசேர்

முக்கிய சாலைகள்

B10 வயா மாரிஸ்

G10 ராஜ பாதை

இஸ்ரவேல் கோத்திரங்கள்

தாண் (D7)

D7 யோப்பா

E8 சோரா

யூதா (D9)

C8 அஸ்கலோன்

C9 காசா

C9 சருகேன் (சாராயீம்) (சில்லீம்)

C10 பெத்லெபாவோத் (பெத்பிரி)

C12 அஸ்மோனா

C12 காதேஸ்

D7 யாப்னியேல்

D8 எத்தேர் (தோகேன்)

D9 சிக்லாக்

D9 ஆயின்

D9 ஆத்சார்சூசா?

D9 ஆசான்

D9 பெயெர்செபா

D10 ஆத்சார்சுவால்

E8 லேகி

E8 பெத்லகேம்

E8 எப்ரோன்

E9 ஏத்தாம்

E9 பெத்- மார்காபோத்

E9 பெத்தூவேல் (கெசீல்?)

E9 சேபா? (யெசுவா)

E10 பாலாத்பெயேர் (பாகால்)

E10 ஆத்சேம்

F8 எருசலேம்

ஆசேர் (E3)

E2 தீரு

E4 அரோசேத்

E4 தோர்

F1 சீதோன்

மனாசே (E5)

E6 சாமீர் (சமாரியா)

E6 பிரத்தோன்

F6 சீகேம்

ஆபேல் மேகொலா

எப்பிராயீம் (E7)

E7 திம்னாத்சேரா

F6 தப்புவா

F6 சீலோ

F7 பெத்தேல் (லூஸ்)

நப்தலி (F3)

F2 பெத்தானாத்

F3 கேதேஸ்

G3 ஆத்சோர்

செபுலோன் (F4)

E4 பெத்லகேம்

இசக்கார் (F5)

E5 மெகிதோ

E5 கேதேஸ் (கிஷியோன்)

E5 தானாக்

F4 எந்தோர்

F5 பெத்சித்தா

F5 பெத்செயான் (பெத்சான்)

F5 இப்லெயாம் (காத்ரிம்மோன்)

பென்யமீன் (F7)

F7 கில்கால்

தாண் (G2)

G2 தாண் (லாயீஸ்)

மனாசே (H3)

H4 கோலான்

ரூபன் (H8)

G7 எஸ்போன்

G9 ஆரோவேர்

H7 மின்னித்

H8 பேசேர்

காத் (I6)

G6 சுக்கோத்

G6 பெனூவேல்

G6 மிஸ்பா (மிஸ்பே)

G7 யொகிபேயா

H5 கீலேயாத்-ராமோத்

H7 ரப்பா

H7 ஆபேல்கெராமிம்

[மற்ற இடங்கள்]

I1 தமஸ்கு

[மலைகள்]

F4 தாபோர் மலை

F4 மோரே

F6 ஏபால் மலை

F5 கில்போவா மலை

F6 கெரிசீம் மலை

[நீர்நிலைகள்]

C5 மத்தியதரைக் கடல் (பெருங்கடல்)

F9 உப்புக் கடல்

G4 கலிலேயாக் கடல்

[நதிகள்]

B11 எகிப்தின் நதிப் பள்.

F6 யோர்தான் நதி

G6 யாபோக் நதிப் பள்.

G9 அர்னோன் நதிப் பள்.

G11 சேரேத் நதிப் பள்.

[பக்கம் 14-ன் படம்]

இசக்காரின் பிராந்தியத்திலுள்ள தாபோர் மலை, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் உயர்ந்து நிற்கிறது

[பக்கம் 14-ன் படம்]

கீசோனில் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தால் சிசெராவின் இரதங்கள் சேற்றில் மாட்டிக்கொண்டன