பைபிள் தேசங்கள்
பைபிள் தேசங்கள்
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் கால் பதிக்க தயாராக இருந்தபோது மோசே தன் உள்ளார்ந்த ஆசையை கடவுளிடம் தெரிவித்தார். “நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும் [“மலைப் பிரதேசத்தையும்,” NW] . . . பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும்” என்று கேட்டார்.—உபா 3:25.
ஆனால், அந்தத் தேசத்திற்குள் அடியெடுத்து வைக்க மோசே அனுமதிக்கப்படவில்லை. என்றாலும், எரிகோவுக்கு எதிரேயுள்ள ஒரு மலையில் ஏறி, அந்த தேசத்தை—‘தாண் மட்டுமுள்ள கீலேயாத்தையும் மேற்கு சமுத்திரம் வரைக்குமுள்ள யூதா தேசத்தையும் நெகெபையும் யோர்தான் பள்ளத்தாக்கையும்’—அவர் பார்த்தார். (உபா 3:27; 34:1-4, NW) இந்தப் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த இடங்கள் உங்களுக்குத் தெரியுமா?
பைபிள் குறிப்பிடும் அநேக இடங்களை இன்று யெகோவாவின் ஜனங்கள் எல்லாராலும் நேரில் சென்று பார்க்க முடிவதில்லை. ஆபிரகாமிடம் கடவுள் சொன்னது போல், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டுமோ அம்மட்டும் அவர்களால் பயணிக்க முடிவதில்லை. (ஆதி 13:14-17) இருந்தாலும், பைபிள் இடங்களைப் பற்றியும் அவை எவ்வாறு ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றியும் அறிந்துகொள்ள மெய்க் கிறிஸ்தவர்கள் அதிக ஆவலாக இருக்கிறார்கள்.
வேத வசனங்களை நீங்கள் இன்னும் நன்றாக புரிந்துகொள்வதற்கு, ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற இந்தச் சிற்றேட்டை கருவியாக பயன்படுத்தலாம். அட்டை படத்திலுள்ள கீலேயாத் போன்ற இடங்களின் தற்போதைய புகைப்படங்கள் இதில் உள்ளன. இன்னும் கூடுதலான தகவல்களை வரைபடங்களில் காணலாம்; இத்தகவல்கள் பைபிள் இடங்களைப் பற்றிய உங்கள் அறிவை இன்னும் ஆழமாக்கும்.
பக்கங்கள் 2 மற்றும் 3-ல் உள்ள வரைபடம் முக்கியமான தேசங்களை அல்லது வட்டாரங்களை காட்டுகிறது. உதாரணமாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வைத்துப் பார்க்கையில் அசீரியாவும் எகிப்தும் எங்கே இருந்தன என்பதை தெரிந்துகொள்ளும்போது, அந்தத் தேசங்களைப் பற்றி குறிப்பிடும் தீர்க்கதரிசனங்களை நீங்கள் நன்கு புரிந்துகொள்ளலாம். (ஏசா 7:18; 27:13; ஓசி 11:11; மீ 7:12) வாக்குப்பண்ணப்பட்ட தேசம் என அழைக்கப்பட்ட அந்த சிறிய பகுதி நீளமாகவும் குறுகலாகவும் இருந்தது; பூர்வ காலத்தில் முக்கிய சாலைகள் பல சந்திக்கும் இடமாக இருந்தது. அதன் செழுமையான வயல்களையும், திராட்சை தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் ஆக்கிரமிப்பதற்கு மற்ற தேசத்தார் முயன்றனர்.—உபா 8:8; நியா 15:5.
சில சமயங்களில் வரைபடங்களை ஒப்பிட்டுப் பார்க்க நீங்கள் விரும்புவீர்கள். உதாரணமாக, அசீரியாவின் தலைநகருக்கு செல்லும்படி யோனா கட்டளையிடப்பட்டார், அவரோ தர்ஷீசுக்கு செல்ல கப்பல் ஏறினார். (யோனா 1:1-3) முதல் வரைபடத்தில் அப்பகுதிகளை நீங்கள் பார்க்கிறீர்களா? ஆனால் தர்ஷீசையும் அப்போஸ்தலன் பவுலின் ஊராகிய தர்சுவையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. தர்சுவையும் குறிப்பிடத்தக்க இன்னும் பல பட்டணங்களையும் இங்கே உள்ள வரைபடத்தில் நீங்கள் காண்பீர்கள்.
ஊர், ஆரான், எருசலேம் ஆகிய இடங்களை கண்டுபிடிக்கையில் ஆபிரகாம் எவ்வளவு தூரம் பயணித்தார், எந்த வழியில் சென்றார் என்பதைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஊர் பட்டணத்தை விட்டுப் புறப்படும்படி யெகோவா சொன்னதும் அவர் ஆரானுக்கு சென்று அங்கு தங்கினார், பிறகு அங்கிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு மாறிச் சென்றார். (ஆதி 11:28–12:1; அப் 7:2-5) பக்கங்கள் 6, 7-ல் “முற்பிதாக்களின் உலகம்” என்ற பகுதியை வாசிக்கையில் ஆபிரகாம் பயணம் செய்த பாதை உங்களுக்கு இன்னும் தத்ரூபமாக இருக்கும்.
முதல் வரைபடமும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வரைபடமும் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியோடு சம்பந்தப்பட்டவை அல்ல. இந்த இரண்டையும் தவிர, அடுத்து வரும் மற்ற வரைபடங்கள் பொதுவாக கால வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு வரைபடத்திலுள்ள பட்டணங்கள் அல்லது விவரங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடந்த நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவை. வரைபடங்களில் உள்ள எல்லா இடங்களின் பெயர்களும் இன்டெக்ஸில் (பக்கங்கள் 34, 35) கொடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் ஆராய்ச்சி செய்யும் குறிப்புடன் சம்பந்தப்பட்ட வரைபடங்களை கண்டுபிடிக்க இந்த இன்டெக்ஸ் உங்களுக்கு உதவும்.
மற்ற வரைபடங்களைவிட சிற்றேட்டின் நடுவில் (பக்கங்கள் 18, 19-ல்) உள்ள வரைபடத்தில்தான், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் நகரங்களும் பட்டணங்களும் ஏராளமாக காட்டப்பட்டுள்ளன. லேவியரின் பட்டணங்களையும் ஆறு அடைக்கலப் பட்டணங்களையும் கண்டுபிடிக்க வரைபட குறியீடுகள் உங்களுக்கு
உதவும். அதோடு ஓர் இடம் எபிரெய வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது கிரேக்க வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா அல்லது இரண்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை அறியவும் அவை உதவும்.சில பைபிள் இடங்கள் எங்கே அமைந்திருந்தன என்பது தற்போது தெரியாததால் அந்த இடங்களின் பெரும்பாலான பெயர்கள் நடுப்பக்கத்திலுள்ள வரைபடத்தில் இடம்பெறவில்லை. அதுமட்டுமல்ல, அன்றிருந்த எல்லா பட்டணத்தையும் நகரத்தையும் குறிப்பிட முடியவில்லை; உதாரணமாக, கோத்திர எல்லை பட்டியல்களில் இடம்பெறும் அத்தனை பட்டணங்களையும் குறிப்பிட முடியவில்லை. (யோசு, அதி. 15-19) ஆனாலும் அவற்றிற்கு அருகிலிருந்த பட்டணங்களின் பெயர்கள் அந்த வரைபடத்தில் உள்ளன, அதை வைத்து இடங்களை உத்தேசமாக கண்டுபிடிக்க முடியும். நிலவியல் அமைப்புகள் சில (மலைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள்) அதில் குறிக்கப்பட்டுள்ளன; மேட்டுநிலப் பகுதியும் நிலப்பரப்பின் தன்மையும் வர்ணங்களில் காட்டப்பட்டுள்ளன. பைபிள் சம்பவங்களைப் பற்றிய அம்சங்களை மனத்திரையில் ஓட விடுவதற்கு இந்த விவரங்கள் உதவலாம்.
பைபிள் இடங்களைப் பற்றிய கூடுதலான தகவல்கள் வேதாகமத்தின் பேரில் உட்பார்வை என்ற என்ஸைக்ளோப்பீடியாவில் இருக்கின்றன; இது ஆங்கிலத்திலும் வேறுசில மொழிகளிலும் கிடைக்கிறது. a இந்த என்ஸைக்ளோப்பீடியாவையும் பிற பைபிள் படிப்பு உபகரணங்களையும் பயன்படுத்துகையில், ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற இந்த சிற்றேட்டையும் உங்களுடைய கையில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமான வேதவாக்கியங்களை படிக்கும்போதும் இதை பயன்படுத்துங்கள்.—2தீ 3:16, 17.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 5-ன் பெட்டி]
பைபிள் புத்தகங்கள் எழுதப்பட்ட இடங்கள்
பாபிலோன்
செசரியா
கொரிந்து
எகிப்து
எபேசு
எருசலேம்
மக்கெதோனியா
மோவாப்
பத்மு
வாக்குப்பண்ணப்பட்ட தேசம்
ரோமாபுரி
சூசான்
[பக்கம் 4, 5-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
Bible Lands and முக்கிய நகரங்கள்
A1 இத்தாலியா
A2 ரோமாபுரி
A3 சிசிலி
A3 மெலித்தா
C2 மக்கெதோனியா
C2 பிலிப்பி
C2 கிரேக்கு
C3 அத்தேனே
C3 கொரிந்து
C3 கிரேத்தா
C4 லீபியா
D3 அந்தியோகியா (பிசீதியா)
D3 எபேசு
D3 பத்மு
D3 ரோது
D4 மோப்
D5 எகிப்து
E2 ஆசியா மைனர்
E2 தர்சு
E3 அந்தியோகியா (சீரியா)
E3 சீப்புரு
E4 சீதோன்
E4 தமஸ்கு
E4 தீரு
E4 செசரியா
E4 வாக்குப்பண்ணப்பட்ட தேசம்
E4 எருசலேம்
E4 மோவாப்
E4 காதேஸ்
E4 ஏதோம்
F3 ஏதேன் தோட்டம்?
F3 அசீரியா
F3 ஆரான்
F3 சீரியா
F5 அரபி தேசம்
G3 நினிவே
G4 பாபிலோன்
G4 கல்தேயா
G4 சூசான்
G4 ஊர்
H3 மேதியா
[மலைகள்]
E5 சீனாய் மலை
G2 அரராத் மலை
[நீர்நிலைகள்]
C3 மத்தியதரைக் கடல் (பெருங்கடல்)
E1 கருங்கடல்
E5 செங்கடல்
H2 காஸ்பியன் கடல்
H5 பெர்சியவளைகுடா
[நதிகள்]
D5 நைல் நதி
F3 ஐப்பிராத்து நதி
G3 டைக்ரிஸ் நதி