Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

முற்பிதாக்களின் உலகம்

முற்பிதாக்களின் உலகம்

முற்பிதாக்களின் உலகம்

ஸ்தேவான் தன்னுடைய பிரசித்தி பெற்ற பேச்சின் ஆரம்பத்தில் சில இடங்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்: “நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே [ஆரானிலே] குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது . . . [யெகோவா] அவனுக்குத் தரிசனமாகி: . . . நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.” (அப் 7:1-4) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் உட்பட்ட சில முக்கிய சம்பவங்கள், அதாவது மனிதகுலத்தை கடவுள் ஆசீர்வதிக்கப் போகும் நோக்கத்தோடு சம்பந்தப்பட்ட சம்பவங்கள், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நிகழ்வதற்கு இது அடித்தளம் போட்டது.​—ஆதி 12:1-3; யோசு 24:3.

ஊர் என்ற கல்தேயரின் பட்டணத்தை விட்டு வரும்படி ஆபிரகாமுக்கு (அல்லது ஆபிராமுக்கு) கடவுள் கட்டளையிட்டார். செல்வச் செழிப்புமிக்க அந்தப் பட்டணம் ஐப்பிராத்து நதியின் கிழக்குக் கரையில் அமைந்திருந்தது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குப் போக எந்தப் பாதையை ஆபிரகாம் தேர்ந்தெடுத்தார்? சுமேரியா அல்லது சிநேயார் என்றும் அழைக்கப்பட்ட கல்தேயாவிலிருந்து நேரடியாக மேற்கே செல்வது சுலபமாக தோன்றியிருக்கும். அப்படியிருக்கும்போது எதற்காக ஆரான் வரை செல்ல வேண்டும்?

ஊர் பட்டணம் வளமான பிறைப்பிரதேசத்தின் கிழக்குக் கோடியில் அமைந்திருந்தது; இந்தப் பிறைப்பிரதேசம் பாலஸ்தீனா முதல் ஐப்பிராத்து, டைக்ரிஸ் நதிகளின் இடையிலிருந்த நிலம் வரை பரந்து கிடந்த அரை வட்டப்பகுதியாகும். இப்பிரதேசத்தில் முன்பு மிகவும் மிதமான தட்பவெப்பம் நிலவியிருக்கலாம். பிறைப்பிரதேசத்தின் வளைந்த பகுதிக்குக் கீழே சீரிய-அரபிய பாலைவனம் இருந்தது; இது சுண்ணாம்புப்பாறை குன்றுகளும் மணற்பாங்கான சமவெளிகளும் நிறைந்தது. இந்தப் பாலைவனம் மத்தியதரைக் கடலின் கரையோரப் பகுதிக்கும் மெசொப்பொத்தாமியாவுக்கும் இடையே “கடக்க முடியாத ஒரு வேலி போல இருந்தது” என தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. பொதுவாக, வணிக கூட்டத்தார் சிலர் ஐப்பிராத்திலிருந்து இப்பாலைவனத்தைக் கடந்து தத்மோருக்கு செல்வார்கள், பின் அங்கிருந்து தமஸ்குவுக்கு செல்வார்கள். ஆனால், ஆபிரகாம் தன் குடும்பத்தையும் கால்நடைகளையும் இந்தப் பாலைவனம் வழியாக அழைத்து செல்லவில்லை.

மாறாக, ஆபிரகாம் ஐப்பிராத்து நதிப் பள்ளத்தாக்கு வழியாக ஆரானுக்கு சென்றார். அங்கிருந்து வணிக மார்க்கமாக கர்கேமிசிலுள்ள ஆற்றுத் துறைக்கு சென்றார். பின்பு தெற்கு நோக்கி தமஸ்கு வழியாக பயணித்து, கலிலேயாக் கடல் என பிற்பாடு அழைக்கப்பட்ட கடல் வரை சென்றார். வயா மாரிஸ், அதாவது “கடல் வழி,” மெகிதோ வழியாக எகிப்து வரை சென்றது. ஆனால் ஆபிரகாம் இந்த வழியாக செல்லாமல் சமாரியாவிலுள்ள மலைகள் வழியாக பயணித்து கடைசியாக சீகேமுக்கு வந்து அங்கே கூடாரங்களில் தங்கினார். அதற்குப்பின் அங்கிருந்து தொடர்ந்து தெற்கு நோக்கி உயர்ந்த மலைப் பிரதேசங்கள் வழியாக பயணித்தார். ஆதியாகமம் 12:8–13:4 வரை வாசிக்கும்போது வரைபடத்தின் உதவியுடன் நீங்களும் அவரோடுகூட பயணியுங்கள். அவருடைய வாழ்க்கையில் பற்பல சம்பவங்கள் நடந்த மற்ற இடங்களையும்​—⁠தாண், தமஸ்கு, ஓபா, மம்ரே, சோதோம், கேரார், பெயெர்செபா, மோரியா (எருசலேம்) ஆகிய இடங்களையும்​—⁠பாருங்கள்.​—ஆதி 14:14-16; 18:1-16; 20:1-18; 21:25-34; 22:1-19.

புவியியலை கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பது, ஈசாக்கு மற்றும் யாக்கோபின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள உதவுகிறது. உதாரணமாக, ஆபிரகாம் பெயெர்செபாவில் இருந்தபோது, ஈசாக்குக்கு பெண் பார்க்க தன் ஊழியக்காரனை எங்கே அனுப்பினார்? மெசொப்பொத்தாமியாவிலுள்ள (“ஆறுகளுக்கு மத்தியிலுள்ள நிலம்” என்பது இதன் அர்த்தம்) பதான் அராமுக்கு அனுப்பினார். அப்படியானால், ஈசாக்கை சந்திக்க ரெபெக்காள் ஒட்டகத்தின் மேலேறி நெகெப் வரை​—⁠ஒருவேளை காதேசுக்கு அருகில் வரை​—⁠பயணித்த தூரத்தை சற்று கற்பனை செய்து பாருங்கள்!​—ஆதி 24:10, 62-64, NW.

பிற்பாடு, இவர்களுடைய மகன் யாக்கோபும் (இஸ்ரவேல்) யெகோவாவை வணங்கும் ஒரு பெண்ணை மணம் புரிய இதே விதமாக நீண்டதூர பயணத்தை மேற்கொண்டார். யாக்கோபு தன் தேசத்துக்குத் திரும்பியபோது சற்று வித்தியாசமான வழியில் வந்தார். பெனியேலுக்கு அருகே யாபோக் என்ற ஆற்றுத் துறையைக் கடந்த பின்பு, ஒரு தேவதூதனுடன் அவர் போராடினார். (ஆதி 31:21-25; 32:2, 22-30) அந்தப் பகுதியில்தான் யாக்கோபை ஏசா சந்தித்தார், பின்பு அவர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்று குடியிருந்தார்கள்.​—ஆதி 33:1, 15-20.

சீகேமில் தீனாள் கற்பழிக்கப்பட்ட பின், யாக்கோபு பெத்தேலுக்கு குடிமாறினார். ஆனால், யாக்கோபின் குமாரர்கள் தங்கள் தகப்பனின் மந்தையை மேய்ப்பதற்காக எவ்வளவு தூரம் சென்றார்கள் என்பதையும் கடைசியாக அவர்களை யோசேப்பு எங்கே கண்டுபிடித்தார் என்பதையும் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? எப்ரோனுக்கும் தோத்தானுக்கும் இடையிலுள்ள தூரத்தை அறிந்துகொள்ள இந்த வரைபடம் (மற்றும் 18, 19 பக்கங்கள்) உங்களுக்கு உதவலாம். (ஆதி 35:1-8; 37:12-17) யோசேப்பின் சகோதரர்கள் அவரை எகிப்துக்குச் செல்லும் வியாபாரிகளிடத்தில் விற்றுப்போட்டார்கள். இந்த சம்பவம், இஸ்ரவேலர் பிற்பாடு எகிப்துக்கு செல்லவும் அங்கிருந்து விடுதலை பெற்று வரவும் வழிநடத்தியது; அந்த வியாபாரிகள் எந்த வழியில் சென்றிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?​—ஆதி 37:25-28.

[பக்கம் 7-ன் தேசப்படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஆபிரகாமின் பயணங்கள் (see publication)

ஈசாக்கின் பயணங்கள் (see publication)

யாக்கோபின் பயணங்கள் (see publication)

முக்கிய சாலைகள் (see publication)

முற்பிதாக்கள் (கண்ணோட்டம்)

A4 கோசேன்

A5 எகிப்து

B4 சூர்

B5 பாரான்

C3 தமஸ்கு

C3 தாண் (லாயீஸ்)

C4 சீகேம்

C4 பெத்தேல்

C4 எப்ரோன் (கீரியாத்அர்பா)

C4 கேரார்

C4 பெயெர்செபா

C4 சேயீர்

C4 காதேஸ்

C5 ஏதோம்

D1 கர்கேமிஸ்

D2 தத்மோர்

D3 ஓபா

E1 பதான் அராம்

E1 ஆரான்

F2 மெசொப்பொத்தாமியா

G1 நினிவே

G2 வளமான பிறைப்பிரதேசம்

G3 பாபிலோன்

H4 கல்தேயா

H4 ஊர்

[மலைகள்]

C4 மோரியா

[நீர்நிலைகள்]

B3 மத்தியதரைக் கடல் (பெருங்கடல்)

[நதிகள்]

E2 ஐப்பிராத்து

G2 டைக்ரிஸ்

முற்பிதாக்கள் (வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில்)

கானான்

மெகிதோ

கீலேயாத்

தோத்தான்

சீகேம்

சுக்கோத்

மகனாயீம்

பெனூவேல்

பெத்தேல் (லூஸ்)

ஆயி

எருசலேம் (சாலேம்)

பெத்லகேம் (எப்பிராத்தா)

மம்ரே

எப்ரோன் (மக்பேலா)

கேரார்

பெயெர்செபா

சோதோம்?

நெகெப்

ரெகொபோத்?

லகாய்ரோயீ

காதேஸ்

முக்கிய சாலைகள்

வயா மாரிஸ்

ராஜ பாதை

[மலைகள்]

மோரியா

[நீர்நிலைகள்]

உப்புக் கடல்

நதிகள்

யாபோக்

யோர்தான்

[பக்கம் 6-ன் படம்]

பாபிலோனுக்கு அருகே ஐப்பிராத்து நதி

[பக்கம் 6-ன் படம்]

ஆபிரகாம் வாழ்ந்த இடமான பெயெர்செபாவும் அதற்கு அருகே ஆடுகளை மேய்த்த நிலங்களும்

[பக்கம் 6-ன் படம்]

யாபோக் நதிப் பள்ளத்தாக்கு