Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘யூதருடைய தேசத்தில்’ இயேசு

‘யூதருடைய தேசத்தில்’ இயேசு

‘யூதருடைய தேசத்தில்’ இயேசு

கொர்நேலியுவுக்கு சாட்சி கொடுக்கையில், “யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும்” இயேசு செய்த காரியங்களை அப்போஸ்தலன் பேதுரு குறிப்பிட்டார். (அப் 10:39) உலக சரித்திரத்தையே பாதிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஊழியத்தை இயேசு எங்கெல்லாம் செய்தார் என நினைக்கிறீர்கள்?

‘யூதருடைய தேசத்தின்’ பாகமான யூதேயாவில், இயேசு சிறிதளவு கடவுளுடைய வேலையை செய்தார். (லூ 4:44, NW) முழுக்காட்டுதல் பெற்ற பின்பு யூதாவின் (அல்லது யூதேயா) வனாந்தரத்தில் இயேசு 40 நாட்கள் செலவிட்டார். அது மனித சஞ்சாரமற்ற வறண்ட இடம், கலவரமும் திருட்டும் அடிக்கடி நடந்த இடம். (லூ 10:30) பிற்பாடு ஒரு சமயம், யூதேயாவிலிருந்து அவர் வடக்கு நோக்கி பிரயாணம் செய்தபோது, சீகாருக்கு அருகே ஒரு சமாரிய பெண்ணுக்கு சாட்சி கொடுத்தார்.​—யோவா 4:2-8.

ஆனால், கலிலேயாவில்தான் இயேசு அதிகமாக பிரசங்கித்தார் என சுவிசேஷங்கள் காட்டுகின்றன. வருடாந்தர பண்டிகைகளை ஆசரிப்பதற்காக தெற்கே எருசலேமுக்கு சென்றபோதிலும், தம் ஊழியத்தின் முதல் இரண்டு வருடங்களில் பெரும்பாலான காலத்தை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வட பகுதியிலேயே கழித்தார். (யோவா 7:2-10; 10:22, 23) உதாரணமாக, கலிலேயாக் கடலில் அல்லது அதற்கருகே இருந்தபோது குறிப்பிடத்தக்க அநேக விஷயங்களைப் போதித்தார், பெரிய அற்புதங்களையும் செய்தார். கலிலேயாக் கடல் புயல் காற்றினால் கொந்தளித்தபோது அதை அடக்கியதையும், அதன்மீது நடந்ததையும்கூட நினைவுபடுத்திப் பாருங்கள். கூழாங்கற்கள் நிறைந்த அந்தக் கடற்கரையில் அமர்ந்திருந்த ஜனக்கூட்டத்தாருக்கு படகில் இருந்தவாறு பிரசங்கித்தார். அவரோடு நெருக்கமாயிருந்த ஆரம்ப கால சீஷர்கள் அப்பகுதிக்கு அருகேயிருந்த மீனவ மற்றும் விவசாய சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள்.​—மாற் 3:7-12; 4:35-41; லூ 5:1-11; யோவா 6:16-21; 21:1-19.

கலிலேயாவின் கரையோரப் பகுதியில் அமைந்திருந்த ‘தம்முடைய பட்டணமாகிய’ கப்பர்நகூம் இயேசுவின் ஊழியத்திற்கு மையமாக விளங்கியது. (மத் 9:1) அதற்கு சற்று அருகிலிருந்த ஒரு மலைப் பகுதியில்தான் அவர் தமது பிரபலமான மலைப் பிரசங்கத்தை கொடுத்தார். சில சமயங்களில் கப்பர்நகூமிலிருந்து மக்தலா, பெத்சாயிதா அல்லது அதற்கு அருகேயிருந்த இடங்களுக்கு படகில் சென்றார்.

இயேசுவின் ‘பட்டணத்துக்கு’ அருகே அமைந்திருந்த இடங்களை பாருங்கள்: அவர் வளர்ந்த ஊரான நாசரேத்து; தண்ணீரை அவர் திராட்சை ரசமாக மாற்றிய ஊரான கானா; ஒரு விதவையின் மகனை அவர் உயிர்த்தெழுப்பிய ஊரான நாயீன்; 5,000 ஆண்களுக்கு அற்புதமாக உணவளித்த இடமும், ஒரு குருடனுக்கு பார்வையளித்த இடமுமான பெத்சாயிதா.

பொ.ச. 32-⁠ல் பஸ்கா பண்டிகையை ஆசரித்த பின்பு, வடக்கேயுள்ள பெனிக்கே நாட்டு துறைமுகங்களான தீருவுக்கும் சீதோனுக்கும் இயேசு சென்றார். அதன் பிறகு, கிரேக்கமயமாக விளங்கிய தெக்கப்போலி என்றழைக்கப்பட்ட பத்துப் பட்டணங்களில் சிலவற்றிற்கும் சென்று ஊழியம் செய்தார். பிலிப்புச் செசரியாவுக்கு (F2) அருகே இயேசு இருந்தபோதுதான் பேதுரு அவரை மேசியாவாக ஏற்றுக்கொண்டார்; அதைத் தொடர்ந்து இயேசு மறுரூபமானார்; இது ஒருவேளை எர்மோன் மலையில் நடந்திருக்கலாம். பிற்பாடு, யோர்தானுக்கு கிழக்கேயிருந்த பெரேயாவில் இயேசு பிரசங்கித்தார்.​—மாற் 7:24-37; 8:27–9:2; 10:1; லூ 13:22, 33.

‘மகா ராஜாவினுடைய நகரமாகிய’ எருசலேமிலும் அதைச் சுற்றியிருந்த இடங்களிலும் இயேசு தம் சீஷர்களுடன் பூமியில் கடைசி வாரத்தை செலவிட்டார். (மத் 5:35) எம்மாவு, பெத்தானியா, பெத்பகே, பெத்லகேம் ஆகிய இடங்களை நீங்கள் சுவிசேஷங்களில் வாசித்திருப்பீர்கள். எருசலேமுக்கு அருகேயிருந்த அவ்விடங்களை இந்த வரைபடத்தில் நீங்கள் காணலாம்.​—லூ 2:5; 19:29; 24:13; பக்கம் 18-⁠லுள்ள “எருசலேம் நிலப்பரப்பு” என்ற உள்படத்தைக் காண்க.

[பக்கம் 29-ன் தேசப்படம்]

இயேசுவின் காலத்தில் அந்த தேசம்

தெக்கப்போலி பட்டணங்கள்

E5 ஹிப்போ

E6 பெல்லா

E6 சித்தோபாலிஸ்

F5 கதரா

F7 கெரசா

G5 தியொன்

G9 பிலதெல்பியா

H1 தமஸ்கு

H4 ரஃபானா

I5 கானத்தா

முக்கிய சாலைகள் (புத்தகத்தைப் பார்க்கவும்)

கலிலேயாவுக்கும் எருசலேமுக்கும் இடையிலான நேரடியான பாதை (புத்தகத்தைப் பார்க்கவும்)

கலிலேயாவுக்கும் எருசலேமுக்கும் இடையிலான மாற்றுப் பாதை, பெரேயா வழியாக (புத்தகத்தைப் பார்க்கவும்)

A11 காசா

B6 செசரியா

B8 யோப்பா

B9 லித்தா

B12 பெயெர்செபா

C4 பித்தொலோமாய்

C8 சமாரியா

C8 அந்திப்பத்திரி

C8 அரிமத்தியா

C9 எம்மாவு

C10 யூதேயா

C11 எப்ரோன்

C12 இதுமேயா

D1 சீதோன்

D2 தீரு

D3 பெனிக்கே

D4 கலிலேயா

D4 கானா

D5 செஃபோரிஸ்

D5 நாசரேத்

D5 நாயீன்

D7 சமாரியா

D7 சீகார்

D9 எப்பிராயீம்

D9 பெத்பகே

D9 எருசலேம்

D9 பெத்தானியா

D10 பெத்லகேம்

D10 ஹெரோடியம்

D10 யூதாவின் வனாந்தரம்

D12 மசாடா

E4 கோராசின்

E4 பெத்சாயிதா

E4 கப்பர்நகூம்

E5 திபேரியா

E5 ஹிப்போ

E6 பெத்தானியா? (யோர்தானுக்கு அக்கரையில்)

E6 சித்தோபாலிஸ்

E6 பெல்லா

E6 சாலிம்

E6 அயினோன்

E6 எரிகோ

F1 அபிலேனே

F2 பிலிப்புச் செசரியா

F4 கமாலா

F5 அபிலா?

F5 கதரா

F7 பெரேயா

F7 கெரசா

G3 இத்துரேயா

G5 தியொன்

G6 தெக்கப்போலி

G9 பிலதெல்பியா

H1 தமஸ்கு

H3 திராகொனித்தி

H4 ரஃபானா

H12 அரபி தேசம்

I5 கானத்தா

[மலைகள்]

D7 ஏபால் மலை

D7 கெரிசீம் மலை

F2 எர்மோன் மலை

[நீர்நிலைகள்]

B6 மத்தியதரைக் கடல் (பெருங்கடல்)

E4 கலிலேயாக் கடல்

E10 உப்புக் கடல் (சவக் கடல்)

[நதிகள்]

E7 யோர்தான் நதி

[ஊற்றுகள், கிணறுகள்]

D7 யாக்கோபின் கிணறு

[பக்கம் 28-ன் படம்]

கலிலேயாக் கடல். இடது முன்புறத்தில் கப்பர்நகூம். கெனேசரேத்து சமவெளிக்கு குறுக்கான தென்மேற்கு காட்சி

[பக்கம் 28-ன் படம்]

சமாரியர்கள் கெரிசீம் மலையில் வழிபட்டார்கள். பின் பகுதியில் ஏபால் மலை