Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேச ஆரம்பிப்பது

பாடம் 1

அக்கறை

அக்கறை

நியமம்: “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலி. 2:4.

இயேசு என்ன செய்தார்?

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது யோவான் 4:6-9-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1.   அ. அந்தப் பெண்ணிடம் பேச ஆரம்பிப்பதற்கு முன்பு இயேசு எதையெல்லாம் கவனித்தார்?

  2.  ஆ. “குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று இயேசு கேட்டது பேச்சை ஆரம்பிக்க ஏன் சிறந்த வழியாக இருந்தது?

இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. எதைப் பற்றிப் பேசினால் ஒருவர் அக்கறை காட்டுவாரோ, அதைப் பற்றிப் பேச ஆரம்பியுங்கள். இப்படிச் செய்தால், அவரும் நம்மிடம் நன்றாகப் பேசுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. வளைந்துகொடுங்கள். நீங்கள் தயாரித்த விஷயத்தைப் பற்றித்தான் பேச ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். மற்றவர்கள் அந்த சமயத்தில் எதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருப்பார்களோ அதைப் பற்றிப் பேச ஆரம்பியுங்கள். முன்கூட்டியே இப்படி யோசியுங்கள்:

  1.   அ. ‘செய்தியில் என்ன வந்திருக்கிறது?’

  2.  ஆ. ‘அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள், கூட வேலை செய்கிறவர்கள், இல்லையென்றால் கூடப் படிக்கிறவர்கள் எதைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்?’

4. கவனியுங்கள். இப்படி யோசியுங்கள்:

  1.   அ. ‘இப்போது அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவர் எதைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கலாம்?’

  2.  ஆ. ‘அவருடைய உடை, தோற்றம், அல்லது வீட்டைப் பார்க்கிறபோது, அவருடைய நம்பிக்கைகளைப் பற்றியோ அவருடைய கலாச்சாரத்தைப் பற்றியோ ஏதாவது தெரிகிறதா?’

  3.  இ. ‘இப்போது அவரிடம் பேசுவது சரியாக இருக்குமா?’

5. காதுகொடுங்கள்.

  1.   அ. நீங்களே பேசிக்கொண்டிருக்காதீர்கள்.

  2.  ஆ. மற்றவர்கள் மனம்விட்டுப் பேசுவதற்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்ளுங்கள். பொருத்தமாக இருந்தால், கேள்விகளைக் கேளுங்கள்.

இதையும் பாருங்கள்