சீஷர்களை உருவாக்குவது
பாடம் 12
வெளிப்படையாகப் பேசுவது
நியமம்: “அக்கறையோடு ஆலோசனை தருகிறவருடைய இனிய நட்பு, எண்ணெயையும் தூபப்பொருளையும் போலவே இதயத்துக்குச் சந்தோஷம் தரும்.”—நீதி. 27:9.
இயேசு என்ன செய்தார்?
1. வீடியோவைப் பாருங்கள், அல்லது மாற்கு 10:17-22-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:
இயேசுவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
2. யெகோவாவிடம் தொடர்ந்து நெருங்கிப் போக என்ன செய்ய வேண்டும் என்பதை மாணவரிடம் அன்பாகவும், அதேசமயம் வெளிப்படையாகவும் சொல்ல வேண்டும்.
இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்
3. குறிக்கோள்களை வைப்பதற்கும் அடைவதற்கும் உதவுங்கள்.
-
அ. இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தின் ஒவ்வொரு பாடத்திலும் இருக்கிற “குறிக்கோள்” பகுதியைப் பயன்படுத்துங்கள்.
-
ஆ. குறுகிய கால, நீண்ட கால குறிக்கோள்களை அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மாணவருக்குப் புரிய வையுங்கள்.
4. முன்னேற எது தடை என்று கண்டுபிடியுங்கள், அதைத் தாண்ட உதவுங்கள்
-
-
‘என் மாணவர் ஞானஸ்நானம் எடுக்கிற அளவுக்கு ஏன் முன்னேறாமல் இருக்கிறார்?’
-
‘நான் எப்படி அவருக்கு உதவலாம்?’
-
-
ஆ. அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அன்பாகவும் வெளிப்படையாகவும் சொல்வதற்கு தைரியத்தைக் கேட்டு ஜெபம் செய்யுங்கள்.
5. முன்னேறாத படிப்புகளை நிறுத்திவிடுங்கள்
-
அ. மாணவர் முன்னேறுகிறாரா இல்லையா என்று முடிவு செய்ய இப்படி யோசித்துப் பாருங்கள்:
-
‘கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்கிறாரா?’
-
‘சபைக் கூட்டங்களுக்கு வருகிறாரா, கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் பேசுகிறாரா?’
-
‘ரொம்ப நாளாகப் படிப்பதால் இப்போது யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு ஆசைப்படுகிறாரா?’
-
-
ஆ. மாணவர் முன்னேற தயங்குகிறார் என்றால்:
-
அவரை எது தடுக்கிறது என்று யோசித்துப் பார்க்கச் சொல்லுங்கள்.
-
நீங்கள் ஏன் படிப்பை நிறுத்துகிறீர்கள் என்பதை அன்பாகச் சொல்லுங்கள்.
-
மறுபடியும் படிப்பை ஆரம்பிக்க வேண்டுமென்றால், அவர் என்ன முன்னேற்றம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.
-