Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேச ஆரம்பிப்பது

பாடம் 5

மரியாதை

மரியாதை

நியமம்: “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பதில் சொல்ல எப்போதும் தயாராக இருங்கள்.”—1 பே. 3:15.

பவுல் என்ன செய்தார்?

1. வீடியோவைப் பாருங்கள், அல்லது அப்போஸ்தலர் 17:22, 23-ஐ வாசியுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்:

  1.   அ. அத்தேனே நகரத்தில் பொய் மத பழக்கவழக்கங்களைப் பார்த்தபோது பவுலுக்கு எப்படி இருந்தது?—அப்போஸ்தலர் 17:16-ஐப் பாருங்கள்.

  2.  ஆ. அத்தேனே நகர மக்கள் செய்வது தவறு என்று சொல்வதற்குப் பதிலாக, பவுல் எப்படி அவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி மரியாதைக்குரிய விதத்தில் பேசி, நல்ல செய்தியைச் சொன்னார்?

பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2. என்ன சொல்லப்போகிறோம்... எப்போது சொல்லப்போகிறோம்... எப்படிச் சொல்லப்போகிறோம்... என்பதில் கவனமாக இருந்தால் மக்கள் காதுகொடுத்துக் கேட்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.

பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்

3. வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். உதாரணத்துக்கு, கிறிஸ்தவராக இல்லாத ஒருவரிடம் பைபிளைப் பற்றியோ இயேசுவைப் பற்றியோ சொல்லும்போது நீங்கள் வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கலாம்.

4. ஒருவர் சொல்வதை உடனடியாகத் திருத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். அவருடைய மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்ல வாய்ப்பு கொடுங்கள். அவர் சொல்வது பைபிள் போதனைக்கு எதிராக இருந்தால், அது தவறு என்று உடனடியாக நிரூபிக்க நினைக்காதீர்கள். (யாக். 1:19) அவர் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பதன் மூலமாக, அவர் எதை நம்புகிறார், அதை ஏன் நம்புகிறார் என்றெல்லாம் உங்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.—நீதி. 20:5.

5. ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயத்தை ஒத்துக்கொள்ளுங்கள், பாராட்ட வேண்டிய விஷயத்தைப் பாராட்டுங்கள். தன்னுடைய மத நம்பிக்கைகள்தான் சரியானது என்று ஒருவர் மனதார நம்பிக்கொண்டிருக்கலாம். அதனால், உங்களுக்கும் அவருக்கும் பொதுவாக இருக்கிற விஷயங்களை முதலில் பேச ஆரம்பியுங்கள். பிறகு, பைபிள் சொல்லித்தருகிற விஷயங்களை அவர் புரிந்துகொள்ள படிப்படியாக உதவி செய்யுங்கள்.

இதையும் பாருங்கள்