இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் இந்தப் புத்தகத்தில் படியுங்கள்.
முன்னுரை
வழி, சத்தியம், வாழ்வு
சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் போதனைகளும் செயல்களும் உங்கள் வாழ்க்கையையே மாற்றும்.
பகுதி 1
இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை
அதிகாரம் 1
கடவுளிடமிருந்து வந்த இரண்டு செய்திகள்
நம்ப முடியாத செய்திகளை காபிரியேல் தூதர் சொல்கிறார்.
அதிகாரம் 2
பிறப்பதற்கு முன்பே இயேசு மகிமைப்படுத்தப்படுகிறார்
எலிசபெத்தும் அவள் வயிற்றிலிருக்கிற குழந்தையும் இயேசுவை எப்படி மகிமைப்படுத்துகிறார்கள்?
அதிகாரம் 3
வழியைத் தயார்படுத்துகிறவர் பிறக்கிறார்
சகரியாவுக்கு அற்புதமாகப் பேச்சு வந்ததும், ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தைச் சொல்கிறார்.
அதிகாரம் 4
கன்னிப்பெண் கர்ப்பமாக இருக்கிறாள்
தன்னுடைய கர்ப்பத்துக்குக் காரணம் கடவுளுடைய சக்திதான், வேறு யாரும் அல்ல என்று மரியாள் சொன்னபோது யோசேப்பு அதை நம்பினாரா?
அதிகாரம் 5
இயேசுவின் பிறப்பு—எங்கே? எப்போது?
டிசம்பர் 25-ல் இயேசு பிறக்கவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?
அதிகாரம் 6
வாக்குக் கொடுக்கப்பட்ட பிள்ளை
யோசேப்பும் மரியாளும் குழந்தையாக இருந்த இயேசுவைத் தூக்கிக்கொண்டு ஆலயத்துக்கு வந்தபோது, வயதான இஸ்ரவேலர்கள் இரண்டு பேர் இயேசுவின் எதிர்காலத்தைப் பற்றி தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்.
அதிகாரம் 7
இயேசுவைப் பார்க்க ஜோதிடர்கள் வருகிறார்கள்
கிழக்கில் இருந்தபோது அவர்கள் பார்த்த நட்சத்திரம் அவர்களை ஏன் நேரடியாக இயேசுவிடம் வழிநடத்தாமல், கொலைகார ராஜாவான ஏரோதுவிடம் வழிநடத்தியது?
அதிகாரம் 8
கொலைகார ராஜாவிடமிருந்து தப்பிக்கிறார்கள்
இயேசு சின்னப் பிள்ளையாக இருந்த சமயத்தில், மேசியாவைப் பற்றிய மூன்று தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுகின்றன.
அதிகாரம் 10
இயேசுவின் குடும்பத்தார் எருசலேமுக்குப் போகிறார்கள்
இயேசுவைக் காணாமல் யோசேப்பும் மரியாளும் பதறுகிறார்கள். அவர் எங்கே இருப்பார் என்று அவர்களுக்குத் தெரியாததைப் பார்த்து இயேசு ஆச்சரியப்படுகிறார்.
அதிகாரம் 11
யோவான் ஸ்நானகர் வழியைத் தயார்படுத்துகிறார்
பரிசேயர்களையும் சதுசேயர்களையும் யோவான் ஏன் கண்டிக்கிறார்?
பகுதி 2
இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கிறார்
அதிகாரம் 12
இயேசு ஞானஸ்நானம் எடுக்கிறார்
இயேசு பாவமே செய்யவில்லை என்றாலும் ஏன் ஞானஸ்நானம் எடுத்தார்?
அதிகாரம் 13
இயேசுவுக்கு வந்த சோதனைகளிலிருந்து பாடங்கள்
இயேசுவைப் பிசாசு சோதித்ததிலிருந்து, அவனைப் பற்றி இரண்டு முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம்.
அதிகாரம் 14
சீஷர்களைத் தேர்ந்தெடுக்க ஆரம்பிக்கிறார்
இயேசுதான் மேசியா என்பதை அவருடைய முதல் ஆறு சீஷர்கள் எதை வைத்து நம்புகிறார்கள்?
அதிகாரம் 15
இயேசுவின் முதல் அற்புதம்
தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியது தன்னுடைய பரலோகத் தகப்பன்தான், தன் அம்மா அல்ல என்பதை மரியாளுக்கு இயேசு புரியவைக்கிறார்.
அதிகாரம் 16
கடவுளுடைய வீட்டின்மேல் பக்திவைராக்கியம்
பலி கொடுப்பதற்காக எருசலேமில் மிருகங்களை வாங்குவதற்குத் திருச்சட்டம் அனுமதித்திருந்தது. பிறகு ஏன் ஆலயத்திலிருந்த வியாபாரிகளைப் பார்த்து இயேசு கோபப்படுகிறார்?
அதிகாரம் 18
யோவானைவிட இயேசுவின் செயல்கள் அதிகமாகின்றன
யோவான் ஸ்நானகரின் சீஷர்கள் இயேசுவைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள், ஆனால் யோவான் ஸ்நானகர் பொறாமைப்படவில்லை.
அதிகாரம் 19
சமாரியப் பெண்ணுக்குக் கற்பிக்கிறார்
அநேகமாக, வேறு யாரிடமும் நேரடியாகச் சொல்லாத ஒரு விஷயத்தை அவளிடம் இயேசு சொல்கிறார்.
அதிகாரம் 20
கானாவில் இரண்டாவது அற்புதம்
கிட்டத்தட்ட 26 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற ஒரு பையனை இயேசு குணமாக்குகிறார்.
அதிகாரம் 21
நாசரேத் ஜெபக்கூடத்தில் இயேசு
இயேசு சொன்ன எந்த விஷயத்தைக் கேட்டு அவருடைய ஊர்க்காரர்கள் கோபப்படுகிறார்கள்?
அதிகாரம் 22
நான்கு சீஷர்கள் மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆகிறார்கள்
மீன்பிடிப்பதை விட்டுவிட்டு மனிதர்களைப் பிடிக்க வரும்படி அவர்களைக் கூப்பிடுகிறார்.
அதிகாரம் 23
கப்பர்நகூமில் இயேசு நிறைய அற்புதங்களைச் செய்கிறார்
இயேசு பேய்களைத் துரத்துகிறார். அவர் கடவுளுடைய மகன் என்று அந்தப் பேய்கள் சொல்கின்றன. இயேசு அவற்றை ஏன் தடுக்கிறார்?
அதிகாரம் 24
கலிலேயாவில் பெரியளவில் செய்த ஊழியம்
குணமாவதற்காக இயேசுவிடம் மக்கள் வருகிறார்கள். ஆனால், குணமாக்குவதைவிட முக்கியமான ஒரு வேலையைச் செய்வதற்காகவே தான் வந்ததாக இயேசு சொல்கிறார்.
அதிகாரம் 25
தொழுநோயாளியைக் கரிசனையோடு குணமாக்குகிறார்
தான் குணப்படுத்தியவர்கள்மேல் தனக்கு இருந்த அக்கறையை இயேசு எளிமையாக, அதேசமயத்தில் வலிமையான விதத்தில் காட்டுகிறார்.
அதிகாரம் 26
“உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”
பாவத்துக்கும் நோய்க்கும் என்ன சம்பந்தம் இருப்பதாக இயேசு சொல்கிறார்?
அதிகாரம் 28
இயேசுவின் சீஷர்கள் ஏன் விரதம் இருப்பதில்லை?
திராட்சமது ஊற்றி வைக்கிற தோல் பைகளைப் பற்றிய உதாரணத்தின் மூலம் இயேசு பதில் சொல்கிறார்.
அதிகாரம் 29
ஓய்வுநாளில் நல்லது செய்யலாமா?
38 வருஷங்களாக நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒருவரை குணமாக்கியதற்காக யூதர்கள் ஏன் இயேசுவைத் துன்புறுத்துகிறார்கள்?
அதிகாரம் 30
கடவுளின் மகன்தான் இயேசு
இயேசு தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொள்வதாக யூதர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கடவுள் தன்னைவிடப் பெரியவர் என்று இயேசு தெளிவாகச் சொல்கிறார்.
அதிகாரம் 31
ஓய்வுநாளில் கதிர்களைப் பறிக்கலாமா?
இயேசு ஏன் தன்னை ‘ஓய்வுநாளுக்கு எஜமான்’ என்று சொல்கிறார்?
அதிகாரம் 32
ஓய்வுநாளில் எதைச் செய்வது சரி?
எதிரும் புதிருமான சதுசேயர்களும் பரிசேயர்களும் ஒரு விஷயத்தில் மட்டும் கூட்டுச் சேர்கிறார்கள்.
அதிகாரம் 33
ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்
தன்னைப் பற்றியும் தான் செய்ததைப் பற்றியும் யாரிடமும் சொல்லக் கூடாது என்று தான் குணமாக்கியவர்களிடம் இயேசு ஏன் சொல்கிறார்?
அதிகாரம் 34
பன்னிரண்டு அப்போஸ்தலர்களை இயேசு தேர்ந்தெடுக்கிறார்
அப்போஸ்தலருக்கும் சீஷருக்கும் என்ன வித்தியாசம்?
அதிகாரம் 35
புகழ்பெற்ற மலைப்பிரசங்கம்
இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் இருக்கிற முக்கிய விஷயங்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
அதிகாரம் 36
படை அதிகாரியின் விசுவாசம்
இந்த அதிகாரி செய்த எந்த விஷயத்தைப் பார்த்து இயேசு ஆச்சரியப்படுகிறார்?
அதிகாரம் 37
விதவையின் மகனை உயிர்த்தெழுப்புகிறார்
இந்த அற்புதத்தைப் பார்க்கிறவர்கள் ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்கிறார்கள்.
அதிகாரம் 38
இயேசுவைப் பற்றி யோவான் விசாரிக்கிறார்
இயேசுதான் மேசியாவா என்று யோவான் ஸ்நானகர் ஏன் கேட்கிறார்? அவருக்குச் சந்தேகமா?
அதிகாரம் 39
திருந்தாத தலைமுறைக்குக் கேடு
கப்பர்நகூம் நகரம்தான் இயேசுவுடைய ஊழியத்தின் மைய இடமாக இருக்கிறது. நியாயத்தீர்ப்பு நாளில், சோதோம் நகரத்துக்குக் கிடைக்கும் தண்டனையைவிட கப்பர்நகூமுக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும் என்று இயேசு சொல்கிறார்.
அதிகாரம் 40
மன்னிப்பைப் பற்றிய ஒரு பாடம்
‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று இயேசு ஒரு பெண்ணிடம் சொல்கிறார். அவள் ஒரு விபச்சாரியாக இருந்திருக்கலாம். அப்படியானால், கடவுளுடைய சட்டத்தை மீறினால் தப்பில்லை என்று இயேசு சொல்கிறாரா?
அதிகாரம் 41
அற்புதங்களுக்குப் பின்னால் இருப்பது யார்?
இயேசுவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக அவருடைய சகோதரர்கள் நினைக்கிறார்கள்.
அதிகாரம் 43
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உவமைகள்
பரலோக அரசாங்கத்தைப் பற்றி விளக்குவதற்காக இயேசு எட்டு உவமைகளைச் சொல்கிறார்.
அதிகாரம் 44
புயல்காற்றை இயேசு அடக்குகிறார்
காற்றையும் கடலையும் இயேசு அமைதிப்படுத்துகிறார். அவருடைய ஆட்சியில் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்தச் சம்பவத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம்.
அதிகாரம் 46
இயேசுவின் உடையைத் தொட்டதால் குணமாகிறாள்
மனதைத் தொடும் இந்தச் சம்பவம், இயேசுவின் வல்லமையையும் கரிசனையையும் காட்டுகிறது.
அதிகாரம் 47
ஒரு சிறுமி உயிரோடு எழுப்பப்படுகிறாள்
இறந்துபோன சிறுமி தூங்கிக்கொண்டிருப்பதாக இயேசு சொன்னதைக் கேட்டு எல்லாரும் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாத எந்த விஷயம் இயேசுவுக்குத் தெரியும்?
அதிகாரம் 48
நாசரேத் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை
நாசரேத் மக்கள் இயேசுவின் போதனைகளைக் கேட்டும், அற்புதங்களைப் பார்த்தும்கூட அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அதிகாரம் 49
அப்போஸ்தலர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்
‘அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது’ என்றால் என்ன அர்த்தம்?
அதிகாரம் 50
துன்புறுத்தல் மத்தியிலும் பிரசங்கிக்கத் தயார்படுத்துகிறார்
சாவை நினைத்து பயப்பட வேண்டாம் என்று இயேசு சொல்கிறார். பிறகு ஏன், துன்புறுத்தல் வரும்போது வேறு இடத்துக்கு ஓடும்படி சொல்கிறார்?
அதிகாரம் 51
பிறந்தநாள் விருந்தில் ஒரு கொலை
சலோமேயின் நடனத்தைப் பார்த்து ஏரோது அசந்துபோகிறான். அவள் என்ன கேட்டாலும் தருவதாகச் சொல்கிறான். அவளுடைய கொடூரமான வேண்டுகோள் என்ன?
அதிகாரம் 52
ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கிறார்
இது ஒரு முக்கியமான அற்புதமாக இருப்பதால் நான்கு சுவிசேஷங்களும் இதைக் குறிப்பிடுகின்றன.
அதிகாரம் 53
இயற்கைச் சக்திகளைக் கட்டுப்படுத்துகிற ஒரு ராஜா
இயேசு தண்ணீர்மேல் நடந்து, புயல்காற்றை அடக்கியதைப் பார்த்த அப்போஸ்தலர்கள் என்ன பாடம் கற்றுக்கொள்கிறார்கள்?
அதிகாரம் 54
இயேசு—“வாழ்வு தரும் உணவு”
ரொம்ப முயற்சி எடுத்து, தன்னைத் தேடிவந்த மக்களை இயேசு ஏன் கண்டிக்கிறார்?
அதிகாரம் 55
இயேசுவின் போதனையால் பலர் அதிர்ச்சி அடைகிறார்கள்
இயேசுவின் போதனையைக் கேட்டு அவருடைய சீஷர்கள் பலர் அதிர்ச்சி அடைகிறார்கள், அவரைப் பின்பற்றுவதையே நிறுத்திவிடுகிறார்கள்.
அதிகாரம் 57
ஒரு சிறுமியையும் காது கேட்காதவனையும் குணமாக்குகிறார்
தன்னுடைய தேசத்தாரை நாய்க்குட்டிகள் என்று இயேசு சொன்னதைக் கேட்டு ஒரு பெண் ஏன் கோபப்படவில்லை?
அதிகாரம் 58
அற்புதமாக உணவளிக்கிறார், புளித்த மாவைப் பற்றி எச்சரிக்கிறார்
இயேசு எந்தப் புளித்த மாவைப் பற்றிப் பேசுகிறார் என்பதைக் கடைசியில் சீஷர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
அதிகாரம் 59
மனிதகுமாரன் யார்?
அரசாங்கத்தின் சாவிகள் என்னென்ன? அவற்றை யார் பயன்படுத்துவார்? எப்படிப் பயன்படுத்துவார்?
அதிகாரம் 60
கிறிஸ்து மகிமையோடு தோன்றுகிறார்
இயேசு எப்படித் தோற்றம் மாறுகிறார்? அது எதற்கு அடையாளமாக இருக்கிறது?
அதிகாரம் 61
பேய் பிடித்த பையனைக் குணமாக்குகிறார்
விசுவாசக் குறைவினால்தான் அந்தப் பையன் குணமாகவில்லை. யாருடைய விசுவாசம் குறைவாக இருக்கிறது? பையனுடையதா, அவன் அப்பாவுடையதா, சீஷர்களுடையதா?
அதிகாரம் 62
மனத்தாழ்மை பற்றிய ஒரு முக்கியமான பாடம்
சின்னப் பிள்ளையிடமிருந்து பெரியவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்கிறார்கள்.
அதிகாரம் 63
கூடுதல் ஆலோசனைகளை இயேசு கொடுக்கிறார்
சகோதரர்களுக்கு இடையில் பெரிய பிரச்சினைகள் வரும்போது எடுக்க வேண்டிய மூன்று படிகளை இயேசு விளக்குகிறார்.
அதிகாரம் 64
ஏன் மன்னிக்க வேண்டும்?
இரக்கமில்லாமல் நடந்துகொண்ட அடிமையைப் பற்றிய உதாரணத்தை இயேசு சொல்கிறார். மற்றவர்களை மன்னிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் கடவுள் அதை எவ்வளவு முக்கியமாகக் கருதுகிறார் என்பதையும் இதிலிருந்து கற்றுக்கொள்கிறோம்.
அதிகாரம் 65
எருசலேமுக்குப் போகும் வழியில் கற்பிக்கிறார்
மூன்று பேரிடம் இயேசு பேசுகிறார். எப்படிப்பட்ட மனப்பான்மை இருந்தால் ஒருவர் தன்னைப் பின்பற்றி வர முடியாது என்று சொல்கிறார்.
அதிகாரம் 66
எருசலேமில் கூடாரப் பண்டிகை
இயேசுவுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று மக்கள் ஏன் சொல்கிறார்கள்?
அதிகாரம் 67
“அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”
கிட்டத்தட்ட, யூத உயர் நீதிமன்றத்தில் இருக்கிற எல்லாருமே இயேசுவை எதிர்க்கிறார்கள். ஆனால், ஒருவர் மட்டும் தைரியமாக இயேசுவை ஆதரித்துப் பேசுகிறார்.
அதிகாரம் 68
கடவுளின் மகன் “உலகத்துக்கு ஒளியாக” இருக்கிறார்
“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொல்கிறார். எதிலிருந்து?
அதிகாரம் 69
அவர்களுடைய தகப்பன்—ஆபிரகாமா, பிசாசா?
ஆபிரகாமின் பிள்ளைகள் யார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது என்று இயேசு சொல்கிறார். தன்னுடைய தகப்பன் யார் என்பதையும் சொல்கிறார்.
அதிகாரம் 70
பிறந்ததிலிருந்தே பார்வை இல்லாதவனைக் குணமாக்குகிறார்
இந்த மனிதன் ஏன் பார்வை இல்லாதவனாகப் பிறந்தான் என்று சீஷர்கள் கேட்கிறார்கள். இவன் செய்த பாவத்தினாலா? இவனுடைய அப்பா-அம்மா செய்த பாவத்தினாலா? இயேசு அவனைக் குணமாக்கிய பிறகு, மக்கள் அவரைப் பற்றி ஒவ்வொரு விதமாகப் பேசுகிறார்கள்.
அதிகாரம் 71
பார்வை பெற்ற மனிதனைப் பரிசேயர்கள் விசாரிக்கிறார்கள்
இயேசுவினால் பார்வை பெற்ற மனிதனின் நியாயமான வாதத்தைக் கேட்டு பரிசேயர்கள் கோபப்படுகிறார்கள். அவனுடைய அப்பா-அம்மா பயந்தது போலவே அவனை ஜெபக்கூடத்திலிருந்து நீக்கிவிடுகிறார்கள்.
அதிகாரம் 72
பிரசங்கிப்பதற்காக 70 பேரை அனுப்புகிறார்
யூதேயாவில் பிரசங்கிப்பதற்கு இயேசு தன்னுடைய 70 சீஷர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்புகிறார். இந்தச் சீஷர்கள் மக்களை எங்கே போய்ப் பார்ப்பார்கள்? ஜெபக்கூடங்களிலா, வீடுகளிலா?
அதிகாரம் 73
ஒரு சமாரியர் அன்பு காட்டுகிறார்
‘நல்ல சமாரியரை’ பற்றிய கதையின் மூலம் இயேசு எப்படி ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறார்?
அதிகாரம் 74
உபசரிப்பதும் ஜெபம் செய்வதும்
மார்த்தாள்-மரியாளின் வீட்டுக்கு இயேசு போகிறார். உபசரிப்பதைப் பற்றி அவர் என்ன கற்றுக்கொடுக்கிறார்? பிறகு, ஜெபம் செய்ய தன்னுடைய சீஷர்களுக்கு எப்படிக் கற்றுக்கொடுக்கிறார்?
அதிகாரம் 75
எது உண்மையான சந்தோஷம்?
இயேசு தன்னை எதிர்க்கிறவர்களிடம் ‘கடவுளுடைய விரலை’ பற்றிச் சொல்கிறார். ‘கடவுளுடைய அரசாங்கம் வந்துவிட்டதை அவர்கள் எப்படிக் கவனிக்கவில்லை’ என்றும் சொல்கிறார். உண்மையான சந்தோஷம் எப்படிக் கிடைக்கும் என்றும்கூட சொல்கிறார்.
அதிகாரம் 76
பரிசேயனோடு விருந்து சாப்பிடுகிறார்
பரிசேயர்களும் வேத அறிஞர்களும் பக்திமான்களைப் போல் வெளிவேஷம் போடுவதாக இயேசு சொல்கிறார். மக்கள்மீது என்ன பாரமான சுமைகளை அவர்கள் சுமத்துகிறார்கள்?
அதிகாரம் 77
சொத்து சேர்ப்பதைப் பற்றிய ஆலோசனை
பெரிய பெரிய களஞ்சியங்களைக் கட்டிய பணக்காரனைப் பற்றிய உவமையை இயேசு சொல்கிறார். சொத்து சேர்ப்பதில் குறியாக இருப்பதைப் பற்றிய என்ன ஆலோசனையை அவர் மறுபடியும் கொடுக்கிறார்?
அதிகாரம் 78
உண்மையுள்ள நிர்வாகி தயாராக இருக்க வேண்டும்
தன் சீஷர்களின் ஆன்மீக நலனில் இயேசு அக்கறை வைத்திருக்கிறார். அவர்கள் ஆன்மீக ரீதியில் நன்றாக இருப்பதற்கு நிர்வாகி எப்படி உதவுவார்? தயாராக இருப்பது ஏன் ரொம்ப முக்கியம்?
அதிகாரம் 79
ஏன் அவர்களுக்கு அழிவு?
மனம் திருந்தவில்லை என்றால் கண்டிப்பாக அழிந்துபோவார்கள் என்று மக்களிடம் இயேசு சொல்கிறார். கடவுள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அவர்களை யோசிக்க வைக்க இயேசு முயற்சி செய்கிறார். மக்கள் அதைப் புரிந்துகொள்வார்களா?
அதிகாரம் 80
நல்ல மேய்ப்பனும் தொழுவங்களும்
மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் இருக்கிற பந்தம், இயேசு தன் சீஷர்களை எப்படிக் கருதுகிறார் என்பதைக் காட்டுகிறது. அவர் கற்றுக்கொடுக்கிற விஷயங்களை அவர்கள் புரிந்துகொண்டு அவரைப் பின்பற்றுவார்களா?
அதிகாரம் 81
எந்த விதத்தில் இயேசுவும் கடவுளும் ஒன்றாயிருக்கிறார்கள்?
இயேசு தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொள்வதாக அவரை எதிர்க்கிற சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அது பொய் என்பதை இயேசு எப்படித் திறமையாக நிரூபிக்கிறார்?
அதிகாரம் 82
பெரேயாவில் இயேசு ஊழியம் செய்கிறார்
மீட்புப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இயேசு விளக்குகிறார். அவர் கொடுத்த ஆலோசனை அன்று முக்கியமானதாக இருந்தது. இன்று?
அதிகாரம் 83
விருந்துக்கு அழைப்பு
ஒரு பரிசேயனின் வீட்டில் விருந்து சாப்பிடும்போது, பெரிய விருந்தைப் பற்றிய உவமையை இயேசு சொல்கிறார். கடவுளுடைய மக்கள் எல்லாருக்கும் இயேசு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார். அது என்ன?
அதிகாரம் 84
இயேசுவின் சீஷராக இருப்பது மிகப் பெரிய பொறுப்பு
கிறிஸ்துவின் சீஷராக ஆவது மிகப் பெரிய பொறுப்பு. அதில் என்ன உட்பட்டிருக்கிறது என்று இயேசு தெளிவாகச் சொல்கிறார். அதைக் கேட்டு சிலர் அதிர்ச்சியடைகிறார்கள்.
அதிகாரம் 85
பாவி மனம் திருந்தும்போது சந்தோஷம்
சாதாரண மக்களோடு இயேசு பழகுவதைப் பார்த்து பரிசேயர்களும் வேத அறிஞர்களும் குறை சொல்கிறார்கள். இதற்குப் பதில் சொல்லும் விதத்தில், இயேசு இரண்டு உவமைகளைச் சொல்கிறார். பாவிகளைக் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதை அவற்றின் மூலம் விளக்குகிறார்.
அதிகாரம் 86
காணாமல் போன மகன் திரும்பி வருகிறான்
ஊதாரி மகனைப் பற்றி இயேசு சொன்ன உவமையிலிருந்து நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
அதிகாரம் 87
ஞானமாக, முன்கூட்டியே திட்டமிடுங்கள்
திட்டம்போட்டு ஏமாற்றுகிற ஒரு நிர்வாகியைப் பற்றிய உவமையின் மூலம் வித்தியாசமான ஒரு பாடத்தை இயேசு கற்பிக்கிறார்.
அதிகாரம் 88
பணக்காரனும் லாசருவும்
இயேசு சொன்ன உவமையைப் புரிந்துகொள்ள, அதில் சொல்லப்பட்ட முக்கியமான இரண்டு கதாபாத்திரங்கள் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதிகாரம் 89
யூதேயாவுக்குப் போகிற வழியில் பெரேயாவில் கற்பிக்கிறார்
ஒருவர் திரும்பத் திரும்ப நமக்கு விரோதமாகப் பாவம் செய்தாலும், அவரை மன்னிக்க எந்தக் குணம் நமக்கு உதவும் என்று இயேசு சொல்கிறார்.
அதிகாரம் 90
‘உயிர்த்தெழுதலும் வாழ்வும்’
என்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் “இறந்துபோகவே மாட்டார்கள்” என்று இயேசு ஏன் சொல்கிறார்?
அதிகாரம் 91
லாசரு உயிரோடு எழுப்பப்படுகிறார்
இந்த அற்புதம் நடந்ததை இயேசுவின் எதிரிகளால்கூட மறுக்க முடியாமல் போனதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
அதிகாரம் 92
ஒரு தொழுநோயாளி நன்றி சொல்கிறார்
குணமான ஒருவர், இயேசுவுக்கு மட்டுமல்ல, வேறொருவருக்கும் நன்றி சொல்கிறார்.
அதிகாரம் 94
மனத்தாழ்மையும் ஜெபமும் மிக முக்கியம்
விதவையையும் மோசமான நீதிபதியையும் பற்றிய உவமையின் மூலம், ஒரு முக்கியமான குணத்தை இயேசு வலியுறுத்துகிறார்.
அதிகாரம் 95
விவாகரத்தையும் குழந்தைகளிடம் அன்பு காட்டுவதையும் பற்றிக் கற்பிக்கிறார்
சின்னப் பிள்ளைகளை இயேசு பார்ப்பதற்கும், சீஷர்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதற்கு என்ன காரணம்?
அதிகாரம் 96
பணக்காரத் தலைவனுக்கு இயேசு பதிலளிக்கிறார்
கடவுளுடைய அரசாங்கத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம் என்று இயேசு ஏன் சொல்கிறார்?
அதிகாரம் 97
திராட்சைத் தோட்டத்து கூலியாட்கள் பற்றிய உவமை
முந்தினவர்கள் எப்படிப் பிந்தினவர்களாக ஆகிறார்கள்? பிந்தினவர்கள் எப்படி முந்தினவர்களாக ஆகிறார்கள்?
அதிகாரம் 98
அப்போஸ்தலர்கள் பதவிக்காக ஆசைப்படுகிறார்கள்
அரசாங்கத்தில் முக்கிய இடம் வேண்டும் என்று யாக்கோபும் யோவானும் ஆசைப்படுகிறார்கள். மற்றவர்களுக்கும் அதே ஆசை இருக்கிறது.
அதிகாரம் 99
கண் தெரியாதவர்களைக் குணமாக்குகிறார், சகேயுவுக்கு உதவுகிறார்
எரிகோவுக்குப் பக்கத்தில் ஒரு பிச்சைக்காரனை இயேசு குணமாக்கியதைப் பற்றிய பைபிள் பதிவுகள் ஒன்றுக்கொன்று முரண்படுவது போலத் தெரியலாம். அந்தப் பதிவுகளை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?
அதிகாரம் 100
பத்து மினாவைப் பற்றிய உவமை
“இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்று இயேசு சொல்கிறார். இதற்கு என்ன அர்த்தம்?
பகுதி 6
இயேசுவின் கடைசி ஊழியம்
அதிகாரம் 101
பெத்தானியாவில் சீமோனின் வீட்டில் விருந்து
லாசருவின் சகோதரியான மரியாள் செய்த ஒரு செயலால் சலசலப்பு ஏற்படுகிறது. இயேசு அவளுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
அதிகாரம் 102
எருசலேமுக்குள் ராஜா நுழைகிறார்
500 வருஷங்களுக்கு முன்பு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்.
அதிகாரம் 103
ஆலயத்தை மறுபடியும் சுத்தப்படுத்துகிறார்
எருசலேமில் இருக்கிற வியாபாரிகள் சட்டப்படி வியாபாரம் செய்வதுபோல் தெரிகிறது. இயேசு ஏன் அவர்களைக் கொள்ளைக்காரர்கள் என்று சொல்கிறார்?
அதிகாரம் 104
கடவுள்மீது யூதர்கள் விசுவாசம் காட்டுவார்களா?
இயேசுமேல் விசுவாசம் வைப்பதற்கும், அதற்கு ஏற்றபடி நடப்பதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறதா?
அதிகாரம் 105
அத்தி மரத்தை வைத்து ஒரு பாடம்
விசுவாசத்துக்கு எந்தளவு சக்தி இருக்கிறது என்பதை இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இஸ்ரவேல் தேசத்தை கடவுள் ஏன் ஒதுக்கித்தள்ளுகிறார் என்பதையும் விளக்குகிறார்.
அதிகாரம் 106
திராட்சைத் தோட்டத்தைப் பற்றிய இரண்டு உவமைகள்
திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்யும்படி தன் மகன்களிடம் சொன்னவரைப் பற்றிய உவமைக்கும், தன்னுடைய திராட்சைத் தோட்டத்தைப் பொல்லாத தோட்டக்காரர்களிடம் குத்தகைக்குக் கொடுத்த மனிதரைப் பற்றிய உவமைக்கும் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
அதிகாரம் 107
திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை ராஜா கூப்பிடுகிறார்
இயேசுவின் உவமை ஒரு தீர்க்கதரிசனம்.
அதிகாரம் 108
அவர்களுடைய வலையில் இயேசு சிக்கவில்லை
முதலில் பரிசேயர்களையும், பிறகு சதுசேயர்களையும், கடைசியாக கூட்டுச் சேர்ந்துகொண்டு வந்த எதிரிகளையும் இயேசு வாயடைத்துபோக வைக்கிறார்.
அதிகாரம் 109
தன்னை எதிர்க்கிறவர்களை இயேசு கண்டனம் செய்கிறார்
மதத் தலைவர்களின் போதனைகளை இயேசு ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?
அதிகாரம் 110
ஆலயத்தில் இயேசுவின் கடைசி நாள்
ஏழை விதவையின் உதாரணத்தைக் காட்டி ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்.
அதிகாரம் 111
அப்போஸ்தலர்கள் அடையாளம் கேட்கிறார்கள்
அவருடைய தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் நிறைவேறியது. அது பிற்பாடு பெரியளவில் நிறைவேறுமா?
அதிகாரம் 112
விழிப்போடு இருக்க வேண்டும்—கன்னிப்பெண்கள் உவமை
தன்னுடைய சீஷர்களில் பாதி பேர் புத்தியில்லாதவர்கள், பாதி பேர் புத்தியுள்ளவர்கள் என்று இயேசு சொல்கிறாரா?
அதிகாரம் 113
சுறுசுறுப்பாக உழைக்க வேண்டும்—தாலந்து உவமை
“இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும்” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை இயேசு சொன்ன உவமையிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
அதிகாரம் 114
செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்
நிரந்தர நியாயத்தீர்ப்பு எதன் அடிப்படையில் கொடுக்கப்படும் என்பதை முக்கியமான ஒரு உவமையின் மூலம் இயேசு விளக்குகிறார்.
அதிகாரம் 115
இயேசுவின் கடைசி பஸ்கா நெருங்குகிறது
இயேசுவைக் காட்டிக்கொடுப்பதற்காக யூதாசுக்கு சரியாக 30 வெள்ளிக் காசுகள் கொடுக்க மதத் தலைவர்கள் முன்வந்தது ஏன் குறிப்பிடத்தக்கது?
அதிகாரம் 116
கடைசி பஸ்காவின்போது மனத்தாழ்மையைக் கற்பிக்கிறார்
ஒரு அடிமை செய்கிற வேலையைச் செய்து அப்போஸ்தலர்களை ஆச்சரியப்படுத்துகிறார்.
அதிகாரம் 117
எஜமானின் இரவு விருந்து
இயேசு ஒரு நினைவுநாளை ஆரம்பித்துவைக்கிறார். ஒவ்வொரு வருஷமும் நிசான் 14 அன்று அவருடைய சீஷர்கள் அதைக் கொண்டாட வேண்டும்.
அதிகாரம் 118
யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம்
அன்று மாலையில் இயேசு கற்றுக்கொடுத்த பாடத்தை அப்போஸ்தலர்கள் அதற்குள் மறந்துவிட்டார்கள்.
அதிகாரம் 119
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
கடவுளை அணுகுவது எப்படி என்ற முக்கியமான உண்மையை இயேசு கற்பிக்கிறார்.
அதிகாரம் 120
இயேசுவின் நண்பராக, கனி கொடுப்பவராக இருக்க வேண்டும்
இயேசுவின் சீஷர்கள் எப்படி ‘கனி கொடுக்கிறார்கள்’?
அதிகாரம் 121
“தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்”
இந்த உலகம் இயேசுவைக் கொலை செய்தது. பிறகு, அவரால் எப்படி இந்த உலகத்தை ஜெயிக்க முடியும்?
அதிகாரம் 122
மாடி அறையில் இயேசுவின் முடிவான ஜெபம்
மனிதர்களை மீட்பதைவிட ரொம்ப முக்கியமான ஒன்றைத் தான் நிறைவேற்றிவிட்டதாக இயேசு சொல்கிறார்.
அதிகாரம் 123
மிகுந்த துக்கத்தோடு ஜெபிக்கிறார்
“இந்தக் கிண்ணத்தை என்னிடமிருந்து எடுத்துவிடுங்கள்” என்று இயேசு ஏன் ஜெபம் செய்கிறார்? மீட்புவிலையைக் கொடுக்காமல் பின்வாங்கிவிட இயேசு நினைக்கிறாரா?
அதிகாரம் 124
கிறிஸ்து காட்டிக்கொடுக்கப்பட்டு, கைது செய்யப்படுகிறார்
நடுராத்திரியிலும்கூட இயேசுவை யூதாஸ் கண்டுபிடித்துவிடுகிறான்.
அதிகாரம் 125
அன்னாவிடமும், பிறகு காய்பாவிடமும் கொண்டுபோகப்படுகிறார்
இயேசுவின் விசாரணையில் நீதி கேலிக்கூத்தானது.
அதிகாரம் 126
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுகிறார்
விசுவாசமுள்ள, கடவுள்பக்தியுள்ள நபரான பேதுரு, எப்படி இவ்வளவு சீக்கிரமாக இயேசுவைத் தெரியாது என்று சொன்னார்?
அதிகாரம் 128
இயேசு நிரபராதி என்று பிலாத்துவும் ஏரோதுவும் புரிந்துகொள்கிறார்கள்
பிலாத்து ஏன் இயேசுவை விசாரிக்கும்படி ஏரோதுவிடம் அனுப்புகிறார்? இயேசுவுக்குத் தீர்ப்பு சொல்கிற அதிகாரம் பிலாத்துவுக்கு இல்லையா?
அதிகாரம் 130
இயேசு கொல்லப்படுவதற்காகக் கொண்டுபோகப்படுகிறார்
‘எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ என்று எருசலேம் பெண்களிடம் இயேசு ஏன் சொல்கிறார்?
அதிகாரம் 131
மரக் கம்பத்தில் ராஜா அறையப்படுகிறார்
தன் பக்கத்தில் இருக்கிற மரக் கம்பத்தில் தொங்குகிற குற்றவாளிகளில் ஒருவனுக்கு இயேசு ஒரு அருமையான எதிர்கால வாக்குறுதியைக் கொடுக்கிறார்.
அதிகாரம் 132
“நிச்சயமாகவே இந்த மனுஷர் கடவுளுடைய மகன்தான்”
பகல் நேரத்தில் அசாதாரண இருள்... நிலநடுக்கம்... ஆலயத்தின் திரைச்சீலை கிழிந்தது... இவை எல்லாமே ஒரே விஷயத்தைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.
அதிகாரம் 133
இயேசு அடக்கம் செய்யப்படுகிறார்
சூரியன் மறைவதற்கு முன்னால், இயேசுவை ஏன் அவசர அவசரமாக அடக்கம் செய்கிறார்கள்?
அதிகாரம் 134
இயேசு உயிரோடு இருக்கிறார்!
இயேசு உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, அப்போஸ்தலர்கள் முன்னால் தோன்றாமல், முதன்முதலில் ஒரு சிஷ்யை முன்னால் தோன்றுகிறார்.
அதிகாரம் 135
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு பலர் முன்னால் தோன்றுகிறார்
தான் உயிரோடு எழுப்பப்பட்டதை இயேசு தன் சீஷர்களுக்கு எப்படி நிரூபிக்கிறார்?
அதிகாரம் 136
கலிலேயா கடலோரத்தில்
தன்மேல் அன்பு வைத்திருப்பதை எப்படிக் காட்டலாம் என்று பேதுருவுக்கு மூன்று தடவை இயேசு ஞாபகப்படுத்துகிறார்.
அதிகாரம் 137
பெந்தெகொஸ்தேக்கு முன் நூற்றுக்கணக்கானோர் பார்க்கிறார்கள்
உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, பரலோகத்துக்குப் போவதற்கு முன்னால் தன்னுடைய சீஷர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதையும், அதை வைத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் திரும்பத் திரும்பச் சொல்கிறார்.
அதிகாரம் 138
கடவுளுடைய வலது பக்கத்தில் கிறிஸ்து
தன்னுடைய எதிரிகள்மீது நடவடிக்கை எடுப்பதற்காகக் காத்திருக்கிற சமயத்தில் இயேசு என்ன செய்வார்?
அதிகாரம் 139
இயேசு இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுகிறார்
தன்னுடைய கடவுளாகவும் தகப்பனாகவும் இருக்கிறவரிடம் அரசாங்கத்தை ஒப்படைப்பதற்கு முன் அவர் நிறைய விஷயங்களைச் செய்து முடிக்க வேண்டியிருக்கிறது.
இயேசுவைப் பின்பற்றுங்கள்
இந்த எட்டு குணங்களை இயேசு தன் வாழ்க்கை முழுவதும் காட்டினார்.
வசனங்களின் பட்டியல்
இந்தப் பட்டியலைப் பயன்படுத்தி சுவிசேஷங்களில் உள்ள வசனங்கள் இந்தப் புத்தகத்திலுள்ள எந்த அதிகாரங்களில் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உவமைகளின் பட்டியல்
இயேசு சொன்ன ஒவ்வொரு உவமையும் இந்த புத்தகத்திலுள்ள எந்த அதிகாரத்தில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
மேசியாவைப் பற்றிய சில தீர்க்கதரிசனங்கள்
மேசியா பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்களையும் அவை இயேசுவின் வாழ்க்கையில் எப்படி நிறைவேறின என்பதையும் பாருங்கள். அந்தச் சம்பவங்கள் இந்தப் புத்தகத்தின் எந்த அதிகாரங்களில் இருக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
இயேசு வாழ்ந்த, கற்பித்த இடங்கள்
இயேசு ஊழியம் செய்த இடங்களை இந்த வரைபடத்தில் பார்க்கலாம்.