Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவைப் பின்பற்றுங்கள்

இயேசுவைப் பின்பற்றுங்கள்

கரிசனை காட்டுவதில்

இயேசு பரிபூரண மனிதராக இருந்தார். அதனால், மற்ற மனிதர்கள் அனுபவித்த பல கஷ்டங்களையும் வேதனைகளையும் அவர் அனுபவிக்கவில்லை. ஆனாலும், மக்களை நன்றாகப் புரிந்து நடந்துகொண்டார். அவரே வலியப் போய் அவர்களுக்கு உதவி செய்தார். தேவைக்கும் அதிகமாகவே அவர்களுக்கு உதவி செய்தார். கரிசனை என்ற குணம், மற்றவர்களுக்கு உதவி செய்ய அவரைத் தூண்டியது. இந்த அதிகாரங்களில் இருக்கிற சம்பவங்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள்: 32, 37, 57, 99.

எளிதில் அணுகத்தக்கவராக இருப்பதில்

இயேசு தன்னை ஒரு பெரிய ஆளாகவோ, படுபிஸியான ஆளாகவோ காட்டிக்கொள்ளவில்லை. அதனால், பெரியவர்கள் சிறியவர்கள் என எல்லாருமே இயேசுவை அணுகினார்கள். அவர் தங்கள்மீது அக்கறை வைத்திருக்கிறார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால், அவரிடம் நன்றாகப் பழகினார்கள். இதைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த அதிகாரங்களைப் பாருங்கள்:  25, 27, 95.

ஜெபம் செய்வதில்

இயேசு தன்னுடைய தகப்பனிடம் தவறாமல் ஜெபம் செய்தார்; ஊக்கமாக ஜெபம் செய்தார். தனியாக இருக்கும்போதும், யெகோவாவை வணங்குகிற மற்றவர்களோடு இருக்கும்போதும் அவர் ஜெபம் செய்தார். சாப்பிடும் நேரத்தில் மட்டுமல்ல, பல சந்தர்ப்பங்களில் இயேசு ஜெபம் செய்தார். தன்னுடைய தகப்பனுக்கு நன்றி சொல்வதற்காகவும், அவரைப் புகழ்வதற்காகவும், முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதற்குமுன் அவருடைய உதவியைக் கேட்பதற்காகவும் ஜெபம் செய்தார். இந்த அதிகாரங்களில் இருக்கிற சம்பவங்களைப் படித்துப் பாருங்கள்: 24, 34, 91, 122, 123.

சுயநலமில்லாமல் நடந்துகொள்வதில்

சில சமயம், இயேசுவுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அப்போதும்கூட மற்றவர்களுடைய நலனுக்குத்தான் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். ‘நான்தான் முக்கியம்’ என்பதுபோல் சுயநலமாக அவர் நடந்துகொள்ளவில்லை. இந்த விஷயத்திலும், அவர் நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். இந்த அதிகாரங்களைப் பாருங்கள்: 19, 41, 52.

மன்னிப்பதில்

மன்னிப்பதைப் பற்றி இயேசு வாயளவில் மட்டும் சொல்லவில்லை, அதைச் செயலிலும் காட்டினார். தன்னுடைய சீஷர்களையும் மற்றவர்களையும் அவர் மன்னித்தார். இந்த அதிகாரங்களில் இருக்கிற உதாரணங்களைப் பாருங்கள்: 26, 40, 64, 85, 131.

பக்திவைராக்கியம் காட்டுவதில்

பெரும்பாலான யூதர்கள் மேசியாவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், அவருடைய எதிரிகள் அவரைக் கொலை செய்வார்கள் என்றும் வேதவசனங்கள் சொல்லியிருந்தன. ஆனாலும், இயேசு ஏனோதானோவென்று ஊழியம் செய்யவில்லை. உண்மை வணக்கத்துக்கு ஆதரவாகப் பக்திவைராக்கியத்தோடு செயல்பட்டார். மக்கள் நம்மை அலட்சியம் செய்தாலும், எதிர்த்தாலும் நாம் எப்படிப் பக்திவைராக்கியத்தோடு நடந்துகொள்ளலாம் என்பதை அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். இந்த அதிகாரங்களைப் பாருங்கள்: 16, 72, 103.

மனத்தாழ்மை காட்டுவதில்

பாவத்தன்மையுள்ள மனிதர்களைவிட இயேசு எத்தனையோ விதங்களில் உயர்ந்தவராக இருந்தார். அவருக்கு இருந்த அளவுக்கு யாருக்குமே அறிவோ ஞானமோ இல்லை. அவர் பரிபூரணராக இருந்ததால், வேறு யாரையும்விட உடல் பலமும் மன பலமும் அவருக்கு அதிகமாக இருந்தது. ஆனாலும், அவர் மனத்தாழ்மையோடு மற்றவர்களுக்குச் சேவை செய்தார். இதைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த அதிகாரங்களைப் பாருங்கள்:  10, 62, 66, 94, 116.

பொறுமை காட்டுவதில்

அப்போஸ்தலர்களும் மற்றவர்களும் நிறைய சமயங்களில் இயேசுவைப் போல நடந்துகொள்ளவில்லை, அவர் சொன்னபடி செய்யவில்லை. ஆனாலும், இயேசு அவர்களிடம் எப்போதுமே பொறுமையாக இருந்தார். யெகோவாவிடம் அவர்கள் நெருங்கி வர வேண்டும் என்று விரும்பினார். அதனால், சில அறிவுரைகளை ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருந்தாலும், பொறுமையாக அவற்றைத் திரும்பத் திரும்பச் சொன்னார். இயேசுவின் பொறுமையைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த அதிகாரங்களைப் பாருங்கள்: 74, 98, 118, 135.