Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 5

யோர்தானுக்குக் கிழக்கே இயேசு பிற்பாடு செய்த ஊழியம்

“அவர்மேல் நிறைய பேர் விசுவாசம் வைத்தார்கள்.”​—யோவான் 10:42

யோர்தானுக்குக் கிழக்கே இயேசு பிற்பாடு செய்த ஊழியம்

இந்தப் பகுதியில்

அதிகாரம் 82

பெரேயாவில் இயேசு ஊழியம் செய்கிறார்

மீட்புப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இயேசு விளக்குகிறார். அவர் கொடுத்த ஆலோசனை அன்று முக்கியமானதாக இருந்தது. இன்று?

அதிகாரம் 83

விருந்துக்கு அழைப்பு

ஒரு பரிசேயனின் வீட்டில் விருந்து சாப்பிடும்போது, பெரிய விருந்தைப் பற்றிய உவமையை இயேசு சொல்கிறார். கடவுளுடைய மக்கள் எல்லாருக்கும் இயேசு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார். அது என்ன?

அதிகாரம் 84

இயேசுவின் சீஷராக இருப்பது மிகப் பெரிய பொறுப்பு

கிறிஸ்துவின் சீஷராக ஆவது மிகப் பெரிய பொறுப்பு. அதில் என்ன உட்பட்டிருக்கிறது என்று இயேசு தெளிவாகச் சொல்கிறார். அதைக் கேட்டு சிலர் அதிர்ச்சியடைகிறார்கள்.

அதிகாரம் 85

பாவி மனம் திருந்தும்போது சந்தோஷம்

சாதாரண மக்களோடு இயேசு பழகுவதைப் பார்த்து பரிசேயர்களும் வேத அறிஞர்களும் குறை சொல்கிறார்கள். இதற்குப் பதில் சொல்லும் விதத்தில், இயேசு இரண்டு உவமைகளைச் சொல்கிறார். பாவிகளைக் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதை அவற்றின் மூலம் விளக்குகிறார்.

அதிகாரம் 86

காணாமல் போன மகன் திரும்பி வருகிறான்

ஊதாரி மகனைப் பற்றி இயேசு சொன்ன உவமையிலிருந்து நாம் என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

அதிகாரம் 87

ஞானமாக, முன்கூட்டியே திட்டமிடுங்கள்

திட்டம்போட்டு ஏமாற்றுகிற ஒரு நிர்வாகியைப் பற்றிய உவமையின் மூலம் வித்தியாசமான ஒரு பாடத்தை இயேசு கற்பிக்கிறார்.

அதிகாரம் 88

பணக்காரனும் லாசருவும்

இயேசு சொன்ன உவமையைப் புரிந்துகொள்ள, அதில் சொல்லப்பட்ட முக்கியமான இரண்டு கதாபாத்திரங்கள் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதிகாரம் 89

யூதேயாவுக்குப் போகிற வழியில் பெரேயாவில் கற்பிக்கிறார்

ஒருவர் திரும்பத் திரும்ப நமக்கு விரோதமாகப் பாவம் செய்தாலும், அவரை மன்னிக்க எந்தக் குணம் நமக்கு உதவும் என்று இயேசு சொல்கிறார்.

அதிகாரம் 90

‘உயிர்த்தெழுதலும் வாழ்வும்’

என்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் “இறந்துபோகவே மாட்டார்கள்” என்று இயேசு ஏன் சொல்கிறார்?

அதிகாரம் 91

லாசரு உயிரோடு எழுப்பப்படுகிறார்

இந்த அற்புதம் நடந்ததை இயேசுவின் எதிரிகளால்கூட மறுக்க முடியாமல் போனதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

அதிகாரம் 92

ஒரு தொழுநோயாளி நன்றி சொல்கிறார்

குணமான ஒருவர், இயேசுவுக்கு மட்டுமல்ல, வேறொருவருக்கும் நன்றி சொல்கிறார்.

அதிகாரம் 93

மனிதகுமாரன் வெளிப்படுவார்

கிறிஸ்துவின் பிரசன்னம் எப்படி மின்னலைப் போல இருக்கும்?

அதிகாரம் 94

மனத்தாழ்மையும் ஜெபமும் மிக முக்கியம்

விதவையையும் மோசமான நீதிபதியையும் பற்றிய உவமையின் மூலம், ஒரு முக்கியமான குணத்தை இயேசு வலியுறுத்துகிறார்.

அதிகாரம் 95

விவாகரத்தையும் குழந்தைகளிடம் அன்பு காட்டுவதையும் பற்றிக் கற்பிக்கிறார்

சின்னப் பிள்ளைகளை இயேசு பார்ப்பதற்கும், சீஷர்கள் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதற்கு என்ன காரணம்?

அதிகாரம் 96

பணக்காரத் தலைவனுக்கு இயேசு பதிலளிக்கிறார்

கடவுளுடைய அரசாங்கத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம் என்று இயேசு ஏன் சொல்கிறார்?

அதிகாரம் 97

திராட்சைத் தோட்டத்து கூலியாட்கள் பற்றிய உவமை

முந்தினவர்கள் எப்படிப் பிந்தினவர்களாக ஆகிறார்கள்? பிந்தினவர்கள் எப்படி முந்தினவர்களாக ஆகிறார்கள்?

அதிகாரம் 98

அப்போஸ்தலர்கள் பதவிக்காக ஆசைப்படுகிறார்கள்

அரசாங்கத்தில் முக்கிய இடம் வேண்டும் என்று யாக்கோபும் யோவானும் ஆசைப்படுகிறார்கள். மற்றவர்களுக்கும் அதே ஆசை இருக்கிறது.

அதிகாரம் 99

கண் தெரியாதவர்களைக் குணமாக்குகிறார், சகேயுவுக்கு உதவுகிறார்

எரிகோவுக்குப் பக்கத்தில் ஒரு பிச்சைக்காரனை இயேசு குணமாக்கியதைப் பற்றிய பைபிள் பதிவுகள் ஒன்றுக்கொன்று முரண்படுவது போலத் தெரியலாம். அந்தப் பதிவுகளை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

அதிகாரம் 100

பத்து மினாவைப் பற்றிய உவமை

“இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்” என்று இயேசு சொல்கிறார். இதற்கு என்ன அர்த்தம்?