அவர்களுடைய உலகலாவிய அமைப்பும் வேலையும்
அவர்களுடைய உலகலாவிய அமைப்பும் வேலையும்
இப்பொழுது சாட்சிகொடுக்கும் வேலை செய்யப்பட்டுவரும் 200-க்கும் மேற்பட்ட தேசங்களில் அதை வழிநடத்துவதற்காக பல்வேறு இணைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக வழிநடத்துதல் நியூ யார்க், புரூக்லினில் உலக தலைமைக்காரியாலயத்திலுள்ள நிர்வாகக் குழுவிடமிருந்து வருகிறது. நிர்வாகக் குழு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமுள்ள 15 அல்லது அதற்கும் அதிகமான “மண்டலங்களுக்கு” பிரதிநிதிகளை ஒவ்வொரு மண்டலத்திலுமுள்ள கிளைப் பிரதிநிதிகளோடு கலந்துபேசுவதற்காக அனுப்பிவைக்கிறது. கிளைக்காரியாலயத்தில், அவற்றினுடைய கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் தேசங்களில் வேலையைக் கண்காணிப்பதற்காக மூன்றிலிருந்து ஏழு உறுப்பினர்கள் கொண்ட கிளைக்காரியாலய ஆலோசனைக் குழுக்கள் இருக்கின்றன. அநேக கிளைக்காரியாலயங்கள் அச்சுசெய்யும் வசதிகளைக்கொண்டவையாய் இருக்கின்றன, சில அதிவேக சுழல் அச்சு இயந்திரங்களை இயக்குகின்றன. ஒவ்வொரு கிளைக்காரியாலயமும் கவனித்துக்கொள்ளும் தேசம் அல்லது பிராந்தியம் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வட்டாரமும் சுமார் 20 சபைகளை அதில் கொண்டிருக்கின்றன. ஒரு மாவட்டக் கண்காணி சுற்றுமுறைப்படி தன்னுடைய மாவட்டத்திலுள்ள வட்டாரங்களைச் சந்திக்கிறார். ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஆண்டுதோறும் இரண்டு அசெம்பிளிகள் நடத்தப்படுகின்றன. ஒரு வட்டாரக் கண்காணியும்கூட இருக்கிறார், அவர் தன்னுடைய வட்டாரத்திலுள்ள ஒவ்வொரு சபையையும் பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை சந்தித்து, அந்தச் சபைக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் பிரசங்க வேலையை ஒழுங்குப்படுத்திச் செய்வதில் சாட்சிகளுக்கு உதவிசெய்கிறார்.
இராஜ்ய மன்றத்தை உடையதாக இருக்கும் உள்ளூர் சபை, உங்கள் சமுதாயத்தில் நற்செய்தியைச் சொல்வதற்குரிய மையமாக இருக்கிறது. ஒவ்வொரு சபையின் கவனிப்பின் கீழும் இடங்கள் சிறிய பிராந்தியங்களாக படம் வரையப்பட்டிருக்கின்றன. இவை அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலுமுள்ள ஆட்களைச் சந்தித்துப் பேச முயற்சிசெய்யும் தனிப்பட்ட சாட்சிகளுக்கு நியமிக்கப்படுகின்றன. குறைவான எண்ணிக்கையிலிருந்து சுமார் 200 சாட்சிகள் வரையாக கொண்டுள்ள ஒவ்வொரு சபையும் பல்வேறு கடமைகளை கவனிப்பதற்கு நியமிக்கப்பட்ட மூப்பர்களைக் கொண்டிருக்கிறது. நற்செய்தியை அறிவிக்கும் தனிநபரே யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பில் இன்றியமையாதவராவார். ஒவ்வொரு சாட்சியும், உலக தலைமைக்காரியாலயத்தில் இருந்தாலும் சரி, கிளைக்காரியாலயங்களில் அல்லது சபைகளில் இருந்தாலும் சரி,
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்குத் தனிப்பட்ட விதமாக சொல்லும் இந்த வேலையைச் செய்கின்றனர்.இந்தச் செயல்நடவடிக்கையின் அறிக்கைகள் கடைசியில் உலக தலைமைக்காரியாலயத்தை வந்தடைகின்றன, ஆண்டுதோறும் வருடாந்தர புத்தகம் (Yearbook) ஒன்று தொகுக்கப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது. மேலுமாக, ஜனவரி 1 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில் ஒவ்வொரு ஆண்டும் அட்டவணை ஒன்று பிரசுரிக்கப்படுகிறது. இந்த இரண்டு பிரசுரங்களும் யெகோவாவுக்கும் கிறிஸ்து இயேசுவின் கீழ் அவருடைய ராஜ்யத்துக்கும் சாட்சிப்பகருவதில் ஒவ்வொரு ஆண்டின் சாதனைகளைப் பற்றிய விளக்கமான அறிக்கைகளை அளிக்கின்றன. இயேசுவினுடைய வருடாந்தர மரண நினைவு ஆசரிப்புக்கு 1993-ன்போது, 1,18,65,765 சாட்சிகளும் அக்கறையுள்ள ஆட்களும் ஆஜராயிருந்ததாக 1994 வருடாந்தர புத்தகம் அறிவிப்புசெய்கிறது. யெகோவாவின் சாட்சிகள் 1993 ஊழிய ஆண்டின் போது, நற்செய்தியை அறிவிப்பதில் 105,70,00,000-க்கும் அதிகமான மணிநேரங்களைச் செலவழித்தனர், 2,96,004 புதியவர்கள் முழுக்காட்டப்பட்டனர். இலக்கியங்கள் மொத்தமாக கோடிக்கணக்கில் அளிக்கப்பட்டிருக்கின்றன.