அவர்கள் நம்புவதென்ன
அவர்கள் நம்புவதென்ன
யெகோவாவின் சாட்சிகள் வானங்களையும் பூமியையும் படைத்தவரான சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவை நம்புகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ள சர்வலோகத்தில் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட அதிசயங்கள் இருப்பதுதானே மிக உயர்ந்த புத்திக்கூர்மையுள்ளவரும் வல்லமைவாய்ந்தவருமான ஒரு படைப்பாளர் இவையனைத்தையும் உண்டாக்கியிருப்பதை நியாயமாகவே நிரூபிக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்களின் செயல்கள் அவர்களுடைய பண்புகளை வெளிப்படுத்துவதைப் போலவே யெகோவா தேவனின் செயல்களும் இருக்கின்றன. “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்,” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. மேலுமாக, சப்தமோ வார்த்தைகளோ இல்லாமல், “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது.”—ரோமர் 1:20; சங்கீதம் 19:1-4.
மக்கள் நோக்கம் எதுவுமின்றி மண் பானைகளை வார்ப்பதோ டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர்களை உண்டுபண்ணுவதோ இல்லை. பூமியும் அதனுடைய தாவர மற்றும் விலங்கு உயிர்களின் படைப்பும் அதைவிட அதிக அதிசயமானவை. கோடிக்கணக்கான செல்களோடுகூட மனித உடலின் அமைப்பு நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது—நாம் யோசிப்பதற்கு பயன்படும் மூளையும்கூட புத்திக்கெட்டாத அளவு ஆச்சரியமாயிருக்கிறது! ஒப்பிடுகையில் அற்பமான கண்டுபிடிப்புகளாயிருப்பவற்றை உருவாக்குவதில் மனிதர்களுக்கு ஒரு நோக்கமிருக்கிறதென்றால், நிச்சயமாகவே யெகோவா தேவன் தம்முடைய மலைப்பூட்டும் படைப்புகளுக்கு ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்தார்! அவருக்கு நோக்கமிருக்கிறது என்பதை நீதிமொழிகள் 16:4 (NW) சொல்கிறது: “யெகோவா சகலத்தையும் தம்முடைய நோக்கத்திற்கென்று படைத்தார்.”
யெகோவா முதல் மனித ஜோடியிடம் குறிப்பிட்டதுபோலவே, பூமியை ஒரு நோக்கத்துக்காக படைத்தார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, . . . சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்.” (ஆதியாகமம் 1:28) அவர்கள் கீழ்ப்படியாதவர்களான காரணத்தால், பூமியையும் அதனுடைய தாவரங்களையும் விலங்குகளையும் அன்புடன் பராமரிக்கக்கூடிய நீதியுள்ள குடும்பங்களால் பூமியை நிரப்புவதில் இந்தத் தம்பதி தோல்வியடைந்தனர். ஆனால் அவர்களுடைய தோல்வி யெகோவாவின் நோக்கத்தை தோல்வியுறச் செய்வதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிற்பாடு இவ்வாறு எழுதப்பட்டது: ‘பூமியை உருவேற்படுத்தின கடவுள் அதை வெறுமையாயிருக்கச் சிருஷ்டிக்கவில்லை.’ அவர் “அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்”தார். அது அழிக்கப்படுவதில்லை, “பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.” (ஏசாயா 45:18; பிரசங்கி 1:4) பூமிக்கான யெகோவாவுடைய நோக்கம் நிறைவேறும்: “என் ஆலோசனை நிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்.”—ஏசாயா 46:10.
ஆகவே, பூமி என்றைக்குமாக நிலைத்திருக்கும் என்றும் அழகுபடுத்தப்பட்ட, குடியேற்றப்பட்ட பூமிக்கான யெகோவாவின் நோக்கத்துக்குப் பொருந்துகிற, உயிரோடிருப்பவர்களும் மரித்தோருமாகிய அனைவருமே அதில் என்றுமாக வாழமுடியும் என்றும் யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். மனிதவர்க்கம் முழுவதும் ஆதாம் ஏவாளிலிருந்து அபூரணத்தை சுதந்தரித்துக்கொண்டிருப்பதால் பாவிகளாக இருக்கின்றனர். (ரோமர் 5:12) பைபிள் நமக்குச் சொல்கிறது: “பாவத்தின் சம்பளம் மரணம்.” “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (ரோமர் 6:23; பிரசங்கி 9:5; எசேக்கியேல் 18:4, 20) அப்படியென்றால் பூமிக்குரிய ஆசீர்வாதங்களில் பங்கெடுக்க அவர்கள் மறுபடியும் எவ்விதமாக வாழமுடியும்? கிறிஸ்து இயேசுவின் மீட்கும் பலியின் மூலமாக மாத்திரமே, ஏனென்றால் அவர் சொன்னார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.” “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்.”—யோவான் 11:25; 5:28, 29; மத்தேயு 20:28.
இது எவ்விதமாக நடைபெறும்? பூமியின் மீதிருக்கையில் இயேசு அறிவிக்க ஆரம்பித்த “ராஜ்யத்தினுடைய நற்செய்தி”யில் அது விளக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 4:17-23) ஆனால் இன்று யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியை மிகவும் விசேஷித்த வழியில் பிரசங்கிக்கிறார்கள்.
[பக்கம் 13-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன
நம்பிக்கை வேதப்பூர்வமான காரணம்
பைபிள் கடவுளுடைய வார்த்தையாகவும் 2 தீ. 3:16, 17;
சத்தியமாகவும் இருக்கிறது 2 பே. 1:20, 21; யோவா. 17:17
பாரம்பரியத்தைவிட பைபிள் மத். 15:3; கொலோ. 2:8
அதிக நம்பகமானது
கடவுளுடைய பெயர் யெகோவா சங்.83:17; ஏசா. 26:4; 42:8,
AS; யாத். 6:3
கிறிஸ்து கடவுளுடைய குமாரனாகவும் மத். 3:17; யோவா. 8:42; 14:28;
அவருக்குக் கீழானவராகவும் இருக்கிறார் யோ 20:17;1 கொ.11:3;15:28
கிறிஸ்து கடவுளுடைய படைப்புகளில் கொலோ. 1:15; வெளி. 3:14
முதலாவதானவராக இருந்தார்
கிறிஸ்து ஒரு கழுமரத்தில் மரித்தார், கலா. 3:13; அப். 5:30
சிலுவையில் அல்ல
கிறிஸ்துவின் மானிட உயிர் மத். 20:28; 1 தீ. 2:5, 6; தீத்.
கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்காக 2:14; 1 பே. 2:24
மீட்கும் பொருளாக செலுத்தப்பட்டது
கிறிஸ்துவின் ஒரே பலி ரோ. 6:10; எபி. 9:25-28
போதுமானதாய் இருந்தது
கிறிஸ்து மரித்தோரிலிருந்து 1 பே. 3:18; ரோ. 6:9; வெளி.
சாவாமையுள்ள ஆவி ஆளாக 1:17, 18
உயிர்ப்பிக்கப்பட்டார்
கிறிஸ்துவின் வந்திருத்தல் ஆவியில் யோவா. 14:19; மத். 24:3;
இருக்கிறது 2 கொ. 5:16; சங். 110:1, 2
கிறிஸ்துவின் கீழ் ராஜ்யம் பூமியை ஏசா. 9:6, 7; 11:1-5;தானி.7
நீதியிலும் சமாதானத்திலும் 13, 14; மத்6:10
ஆட்சிசெய்யும்:
இராஜ்யம் பூமிக்கு குறையில்லாத சங். 72:1-4; வெளி. 7:9, 10,
முழுநிறைவான வாழ்க்கை 13-17; 21:3, 4
நிலைமைகளைக் கொண்டுவருகிறது
பூமி ஒருபோதும் அழிக்கப்படவோ பிர. 1:4; ஏசா. 45:18; சங்.
குடியிருப்பில்லாமலோ இருக்காது 78:69
கடவுள் தற்போதைய வெளி. 16:14, 16; செப்.3:8;
ஒழுங்குமுறையை அர்மகெதோன் தானி. 2:44; ஏசா.34:2
யுத்தத்தில் அழித்திடுவார்
பொல்லாதவர்கள் நித்தியமாக மத். 25:41-46; 2 தெ.1:6-10
அழிக்கப்படுவர்
கடவுள் அங்கீகரிக்கும் ஆட்கள் யோவா. 3:16; 10:27, 28;
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வர் 17:3; மாற். 10:29, 30
ஜீவனுக்குப் போக ஒரே ஒரு வழி மத். 7:13, 14; எபே. 4:4, 5
மாத்திரமே இருக்கிறது
நாம் இப்பொழுது ‘கடைசி காலத்தில்’ மத். 24:3-14; 2 தீ. 3:1-5;
இருக்கிறோம் லூக். 17:26-30
ஆதாமின் பாவமே மனிதரின் ரோ. 5:12; 6:23
மரணத்துக்கு காரணம்
மனித ஆத்துமா மரணத்தின்போது எசே. 18:4; பிர. 9:10; சங். 6:5;
இல்லாமற்போகிறது 146:4; யோவா. 11:11-14
நரகம் மனிதவர்க்கத்தின் பொது யோபு 14:13, Dy; வெளி. 20:1
பிரேதக்குழி 3, 14, AV (ஓரக்குறிப்பு)
மரித்தவர்களுக்கு நம்பிக்கை 1 கொ. 15:20-22; யோவா. 5:
உயிர்த்தெழுதலாகும் 28, 29;11:25, 26
ஆதாமிய மரணம் இல்லாமற்போகும் 1 கொ. 15:26; வெளி. 21:4;
பரலோகத்துக்கு கிறிஸ்துவோடுகூட லூக். 12:32; வெளி. 14:1, 3;
ஆட்சிசெய்ய 1,44,000 பேர் அடங்கிய 1 கொ. 15:40-53; வெளி. 5:9, 10
ஒரு சிறு மந்தையே செல்கிறது
கடவுளுடைய ஆவிக்குரிய 1 பே. 1:23; யோவா. 3:3;
குமாரர்களாக 1,44,000 பேர் வெளி. 7:3, 4
மறுபடியும் பிறக்கிறார்கள்
புதிய உடன்படிக்கை ஆவிக்குரிய எரே. 31:31; எபி.8:10-13
இஸ்ரவேலோடு செய்யப்பட்டிருக்கிறது
கிறிஸ்துவின் சபை அவர்மீதே எபே. 2:20; ஏசா. 28:16; மத்.
கட்டப்பட்டிருக்கிறது 21:42
ஜெபங்கள் கிறிஸ்துவின் மூலமாக யோவா. 14:6, 13, 14; 1 தீ. 2:5
யெகோவாவிடம் மாத்திரமே
செய்யப்படவேண்டும்
வணக்கத்தில் சொரூபங்கள் யாத். 20:4, 5; லேவி. 26:1;
பயன்படுத்தப்படக்கூடாது 1 கொ. 10:14; சங். 115:4-8
ஆவியுலகத்தொடர்பு உபா. 18:10-12; கலா. 5:19-21;
தவிர்க்கப்படவேண்டும் லேவி. 19:31
சாத்தான் உலகின் காணக்கூடாத 1 யோ. 5:19; 2 கொ. 4:4;
அதிபதியாக இருக்கிறான் யோவா. 12:31
ஒரு கிறிஸ்தவன் கலப்புவிசுவாச 2 கொ. 6:14-17; 11:13-15;
இயக்கங்களில் எந்தப் பங்கையும் கலா. 5:9; உபா. 7:1-5
கொண்டிருக்கக்கூடாது
ஒரு கிறிஸ்தவன் உலகத்திலிருந்து யாக். 4:4; 1 யோ.2:15;
பிரிந்திருக்க வேண்டும் யோவா. 15:19; 17:16
கடவுளுடைய சட்டங்களுக்கு மத். 22:20, 21;
முரணாக இல்லாத எல்லா மனித 1 பே. 2:12; 4:15
சட்டங்களுக்கும் கீழ்ப்படியவேண்டும்
வாய்வழியாக அல்லது நாளங்களின் ஆதி. 9:3, 4; லேவி. 17:14;
வழியாக இரத்தத்தை உடலுக்குள் அப். 15:28, 29
எடுப்பது கடவுளுடைய சட்டங்களை
மீறுவதாக இருக்கிறது
ஒழுக்கம் சம்பந்தமான பைபிளின் 1 கொ. 6:9, 10; எபி. 13:4;
சட்டங்களுக்கு கீழ்ப்படியவேண்டும் 1 தீ. 3:2; நீதி. 5:1-23
ஓய்வுநாள் பற்றிய சட்டம் உபா. 5:15; யாத்.31:13;ரோ.
யூதர்களுக்கு மாத்திரமே 10:4; கலா. 4:9, 10; கொலோ.
கொடுக்கப்பட்டு மோசேயின் 2:16, 17
நியாயப்பிரமாணத்தோடு முடிவுக்கு
வந்துவிட்டது
குருமார் வர்க்கமும் விசேஷித்தப் மத். 23:8-12; 20:25-27; யோபு
பட்டப்பெயர்களும் 32:21, 22
தவறானவையாகும்
மனிதன் பரிணமிக்கவில்லை, ஆனால் ஏசா. 45:12; ஆதி. 1:27
படைக்கப்பட்டான்
கடவுளைச் சேவிப்பதில் பின்பற்றப்பட 1 பே. 2:21; எபி. 10:7;
வேண்டிய முன்மாதிரியை கிறிஸ்து யோவா. 4:34;6:38
வைத்தார்
முழுவதுமாக முழுக்குதல் மூலமாக மாற். 1:9, 10; யோவா.3:23;
முழுக்காட்டுதல் அப். 19:4, 5
ஒப்புக்கொடுத்தலுக்கு
அடையாளமாக இருக்கிறது
கிறிஸ்தவர்கள் வேதாகம ரோ. 10:10; எபி. 13:15; ஏசா.
சத்தியத்துக்கு வெளிப்படையாக 43:10-12
சாட்சிப்பகர வேண்டும்
[பக்கம் 12-ன் படம்]
யெகோவாவால் சிருஷ்டிக்கப்பட்டு . . . மனிதரால் பராமரிக்கப்படும் . . . பூமி என்றுமாக குடியிருக்கப்பட்டிருக்கும்
[படத்திற்கான நன்றி]
NASA Photo