பகுதி 1—வீட்டில்: குடும்ப அங்கத்தினரோடு நடைமுறைத் தொடர்பு
பகுதி 1—வீட்டில்: குடும்ப அங்கத்தினரோடு நடைமுறைத் தொடர்பு
“வீடு இன்ப வீடு.” நன்கு தெரிந்துள்ள இந்தக் கூற்று, இந்நாட்களில் மிக மோசமாய்ப் பயனற்றுப் பழமைப்பட்டுவிட்டதெனத் தோன்றும் உணர்ச்சிக்கனிவை வெளிப்படுத்துகிறது. மனமிரங்காதக் குடும்பச் சண்டைகள் பல வீடுகளை அசல் போர்க்களமாக மாற்றுகின்றன. மேலும் ஆழ்ந்தகன்ற பேச்சுத்தொடர்பு பிளவு, போர்-நிறுத்த உடன்பாட்டு முயற்சிகள் எவற்றையும் பெரும்பாலும் இடையிட்டுத் தடுக்கிறது.
உன் வீடு போர் வளர்ச்சிக்குகந்த இடமாயிருப்பதற்குப் பதில் சமாதான புகலிடமாக இருக்க நீ விரும்புகிறாயா? உண்மைதான், குடும்ப அங்கத்தினரான மற்றவர்களும் தங்கள் பங்கைச் செய்யவேண்டும். ஆனால் பைபிள் நியமங்கள் ஒருசிலவற்றை நன்றாய் அறிந்துகொள்வதனால், உன் வீட்டின் சமாதானத்துக்குப் பங்களித்து உதவ நீ அதிகம் செய்யலாம்.