Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் சகோதரனுடனும் சகோதரியுடனும் ஒத்திணங்கிப்போவது ஏன் அவ்வளவு கடினம்?

என் சகோதரனுடனும் சகோதரியுடனும் ஒத்திணங்கிப்போவது ஏன் அவ்வளவு கடினம்?

அதிகாரம் 6

என் சகோதரனுடனும் சகோதரியுடனும் ஒத்திணங்கிப்போவது ஏன் அவ்வளவு கடினம்?

உடன்பிறந்தோர் போட்டிகாயீன் ஆபேல் முதற்கொண்டே இருந்துவரும் அவ்வளவு பூர்வமானது. நீ உன் உடன்பிறந்தவரைப் (சகோதரனை அல்லது சகோதரியை) பகைக்கிறாய் என்பதல்ல. ஓர் இளைஞன் பின்வருமாறு ஒப்புக்கொண்டான்: “என் இருதயத்தின் ஆழத்தில், இப்பொழுது நான் உணரமுடியாத இடத்தில், என் சகோதரனை நேசிக்கிறேனென்று நினைக்கிறேன். நான் நிச்சயமாகவே ஒருவாறு நேசிக்கிறேன்.”

உடன்பிறந்தவர் உறவுகளின் மேற்பரப்பின்கீழ் ஏன் பகைமை அவ்வளவு அடிக்கடி மறைந்திருக்கிறது? நோய்நீக்கற் கலைஞர் கிளாடியா ஸ்க்வீட்ஸர் பின்வருமாறு சொல்வதாக எழுத்தாளர் ஹாரியட் உவெப்ஸ்டர் எடுத்துக் கூறுகிறார்: “ஒவ்வொரு குடும்பமும் ஓரளவான வள ஆதார வழிவகைகளைக் கொண்டிருக்கின்றன. சில உணர்ச்சி சம்பந்தமானவை மற்றும் சில பொருள் சம்பந்தப்பட்டவை.” உவெப்ஸ்டர் மேலும் சொல்வதாவது: “உடன்பிறந்தோர் சண்டைபோடுகையில், அவர்கள் பொதுவாய் இந்த வள ஆதாரங்களுக்காகப் போட்டியிடுகின்றனர். அவை பெற்றோரின் அன்பு முதற்கொண்டு பணம் மற்றும் உடைகள் வரையில் எல்லாவற்றையும் உட்கொள்கின்றன.” உதாரணமாக, கமில்லும் அவளுடைய ஐந்து சகோதரர் சகோதரிகளும் மூன்று படுக்கை அறைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். “சில சமயங்களில் நான் தனிமையில் இருக்க விரும்புகிறேன்,” என்று கமில் சொல்கிறாள், “நான் அவர்களை வெளியில்விட்டு கதவை மூட விரும்புவேன், ஆனால் அவர்கள் எப்பொழுதும் அங்கேதான் இருக்கிறார்கள்.”

சிலாக்கியங்களையும் குடும்ப அமைப்பு பொறுப்புகளையும் பகிர்ந்துகொள்வதன்பேரிலும் சண்டைக்கு நிற்கலாம். மூத்த இளைஞர் அன்றாடக வீட்டுவேலைகளின் மிகப் பெரும் பங்கைச் செய்யும்படி எதிர்பார்ப்பதை விரும்பாமல் எதிர்க்கலாம். இளைய பிள்ளைகள் மூத்தப் பிள்ளைகளால் அடக்கி அதிகாரம் செலுத்தப்படுவதை விரும்பாமல் பின்வாங்கலாம். அல்லது மிக விரும்பும் சிலாக்கியங்களை மூத்த சகோதரர் பெறுகையில் பொறாமைகொள்ளலாம். ‘என் சகோதரி கார் ஓட்டுவதற்குப் படிக்கிறாள் நான் அதைச் செய்யக்கூடாது,’ என்று இங்கிலாந்தில் பருவ வயதான ஒரு பெண் புலம்புகிறாள். ‘நான் கோபங்கொண்டு காரியங்களை அவளுக்குக் கடினமாக்க முயலுகிறேன்.’

சில சமயங்களில் உடன்பிறந்தவர்களின் சண்டை வெறுமென பண்பியல்பு முரண்படுவதன் விளைவாயிருக்கிறது. பதினேழு வயது டயேன் தன் உடன்பிறந்தோரைப்பற்றிப் பின்வருமாறு சொல்கிறாள்: “ஒவ்வொருநாளும் விடாமல் பகல் விடிந்தது தொடங்கி மறையும்வரையில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டேயிருந்தால் . . . அதே ஒருவர் உன்னை நச்சரிக்கும் அதே காரியத்தை ஒவ்வொருநாளும் செய்வதை நீ கவனித்துக்கொண்டேயிருந்தால்—அது உனக்கு எரிச்சலையுண்டாக்கும்.” இளம் ஆன்ட்ரி மேலும் சொல்வதாவது: “வீட்டிலிருக்கையில் . . . , நீ உண்மையில் இருக்கிறபிரகாரம் நடக்கிறாய்.” விசனகரமாய், ‘நீ உண்மையில் இருக்கிறபடி நடப்பது’ பெரும்பாலும், மரியாதை, தயவு, சாதுரியம் இல்லாமல் நடப்பதைக் குறிக்கிறது.

பெற்றோரின் விருப்பச் சார்புகள் (‘அம்மா உன்னையே மிக அதிகம் நேசிக்கிறார்கள்!’) உடன்பிறந்தோருக்கிடையில் சண்டைக்கு மற்றொரு காரணம். உளநூல் பேராசிரியர் லீ சால்க் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறார்: “பெற்றோர் ஒருவர் தன் எல்லாப் பிள்ளைகளையும் சரிசமமான ஒரே முறையில் நேசிக்க முடிவதற்கு ஒரு வழியும் இல்லை, ஏனெனில் அவர்கள் வெவ்வேறுபட்ட மனிதராயிருக்கின்றனர் மேலும் தவிர்க்கமுடியாவண்ணம் நம்மிடமிருந்து (பெற்றோரிடமிருந்து) வெவ்வேறுபட்ட பிரதிபலிப்புகளை வருவிக்கின்றனர்.” பைபிள் காலங்களிலும் இவ்வாறே இருந்தது. கோத்திரத்தகப்பனாகிய யாக்கோபு (இஸ்ரவேல்) “தன் குமாரர் எல்லாரிலும் அவனை [யோசேப்பை] அதிகமாய் நேசித்”தான். (ஆதியாகமம் 37:3) யோசேப்பின் சகோதரர் அவன்பேரில் மிகக் கடுமையாய்ப் பொறாமை கொள்ளலானார்கள்.

தீயை அணைப்பது

“விறகில்லாவிடில் நெருப்பு அவிந்திடும்.” நீதிமொழிகள் 26:20 இவ்வாறு சொல்கிறது. காட்டில் தீ பரவுவதைத் தீ-தடுப்புகள் வெட்டுவதன்மூலம், அதாவது குறிப்பிட்ட நிலபாகங்களில் மரங்கள் யாவற்றையும் வெட்டி வெறுமையாக விட்டுவைப்பதன்மூலம் பெரும்பாலும் தடுக்கின்றனர். உண்மையில் தீ பற்றத் தொடங்கினால், அந்த முனை வரையில் மாத்திரமே பொதுவாய்ப் பரவுகிறது, பின்பு அவிந்துவிடுகிறது. இவ்வாறே, சண்டைகளைத் தடுப்பதற்கு—அல்லது மட்டுப்படுத்துவதற்காவது—வழிகள் இருக்கின்றன. ஒரு சொற்போர் தீவிரமாய் எழும்புவதற்கு முன்னால் ஒருவரோடொருவர் பேசி சமரச விட்டுக்கொடுப்புடன் ஓர் உடன்பாட்டுக்கு வருவது ஒரு வழியாகும்.

உதாரணமாக, தனி ஒதுக்கிடம் இல்லாததே அந்தப் பிரச்னையா? அப்படியானால், இதன்பேரில் சண்டையிட்டுக்கொண்டிராதச் சமயத்தில், ஒன்றாய் உட்கார்ந்து உண்மையில் ஒரு திட்டத்தைப் போட முயற்சி செய்யுங்கள். (‘இந்த நாட்கள்/மணிநேரங்களில் அறை எனக்கு மாத்திரமே என வைத்துக்கொள்கிறேன், நீ அந்த நாட்களில் வைத்துக்கொள்.’) பின்பு அந்த ஒப்பந்தத்தை மதித்து, ‘உங்கள் ஆம் என்பது ஆம் எனவும் இல்லை என்பது இல்லை எனவும்’ இருக்கட்டும். (மத்தேயு 5:37, தி.மொ.) சிறிது மாற்றம் தேவைப்படுவதற்கு ஏதாவது ஏற்பட்டால், அந்த மற்றவருக்குச் சொல்லாமல் அந்த மாற்றத்தை திடுமென அவன்மீது அல்லது அவள்மீது வற்புறுத்துவதற்குப் பதில் முன்பே தெரியப்படுத்துங்கள்.

பொருளுரிமைகளின்பேரில் போரிட்டுக்கொண்டிருக்கிறாயா? ஓர் இளம் பெண் பின்வருமாறு முறையிட்டாள்: “என் ஒன்றுவிட்ட சகோதரி என்னைக் கேட்காமலே என் பொருட்களை எப்பொழுதும் பயன்படுத்துகிறாள். என் சிங்காரிப்புப் பொருட்களையுங்கூட எடுத்துப் பயன்படுத்திவிட்டாள், பின்பு நான் சரியான வகையை வாங்கவில்லை என்று என்னிடம் சொல்வதற்கும் அவளுக்கு அவ்வளவு துணிச்சல் இருந்தது!” முடிவில் உங்கள் இருவருக்கும் நடுவே தீர்ப்புச் செய்ய நீ உன் பெற்றோரை அழைக்கலாம். ஆனால் அதற்கும் மேலாக, சாந்த நிலையில் இருக்கையில் உன் சகோதரன் அல்லது சகோதரியுடன் உட்கார்ந்து பேசு. தனிப்பட்ட “உரிமைகளின்பேரில்” சொற்களைப் புரட்டி விவாதித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிலும் “பகிர்ந்துகொள்வதற்கு ஆயத்தமா”யிரு. (1 தீமோத்தேயு 6:18, NW) சில விதிகளை வைத்து அதன்பேரில் இரவல் வாங்குவதற்கு ஒத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள், அவற்றில் ஒன்று எடுப்பதற்கு முன் எப்பொழுதும் கேட்கவேண்டும் என்பதாக இருக்கலாம். தேவையானால் இருபுறமும் விட்டுக்கொடுக்கும் உடன்பாடுகள் செய். இம்முறையில் பற்றுவதற்கு முன்னால் ‘தீ அணைந்துபோவதை’ நீ காண்பாய்!

ஆனால் உடன்பிறந்தோர் ஒருவரின் பண்பியல்பு உனக்கு எரிச்சலுண்டாக்குகிறதென்றால் என்ன செய்வது? உண்மையில், அந்த ஒருவனை மாற்ற நீ அதிகம் ஒன்றும் செய்யமுடியாது. ஆகையால் ‘அன்பில் ஒருவருக்கொருவர் பொறுத்துப்போகக்’ கற்றுக்கொள். (எபேசியர் 4:2, NW) உடன் பிறந்தவரின் குற்றங்குறைகளைப் பெரிதாக்கிக் காட்டுவதற்குப் பதில், கிறிஸ்தவ அன்பைப் பொருத்திப் பயன்படுத்து, அது “திரளான பாவங்களை மூடும்.” (1 பேதுரு 4:8) எரிச்சலுடனோ கடுகடுப்பாயோ இருப்பதற்குப் பதில், “கோபம், மூர்க்கம், துர்க்குணம், தூஷணம்,” ஆகியவற்றை விட்டுவிட்டு, ‘உன் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாய் இருப்பதாக.’—கொலோசெயர் 3:8, தி.மொ.; 4:6.

‘அது நியாயமல்ல!’

“என் சகோதரிக்குத் தனக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கிறது, எனக்கு வருகையில், நான் முற்றிலும் விட்டுவிடப்படுகிறேன்,” என்று ஓர் இளைஞன் புலம்புகிறான். இது கேட்டுப் பழக்கப்பட்டதாய்க் தொனிக்கிறதா? ஆனால் “எல்லாம்,” “முற்றிலும்,” என்ற அந்த இரண்டு முழுமைகளைக் கவனி. நிலைமை உண்மையில் அவ்வளவு கொடியதாயிருக்கிறதா? பெரும்பாலும் அவ்வாறு இராது. அவ்வாறு இருந்தாலுங்கூட, தனித்தனிப் பண்புவாய்ந்த வேறுபட்ட இரண்டு ஆட்கள் முற்றிலும் சரிசமமாய் நடத்தப்படும்படி எதிர்பார்ப்பது நடைமுறை மெய்ம்மையாயிருக்கிறதா? நிச்சயமாக இல்லை! உன் பெற்றோர் வெறுமென உன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்கும் இயல்பான உடல்உள நிலைகளுக்கும் ஏதுவாகக் காரியங்களை நிறைவுசெய்துவரலாம்.

ஆனால் பெற்றோர் ஒரு குறிப்பிட்ட பிள்ளைக்குத் தயவு காட்டுவது நியாயமல்ல அல்லவா? அவ்வாறே கட்டாயமாய் இருக்கிறதென்பதல்ல. யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குத் தயவு காட்டினதை நினைவுபடுத்திப் பார். காரணம்? யோசேப்பு யாக்கோபின் இறந்துபோன மிக நேசமான மனைவி ராகேலின் மகன். யாக்கோபு இந்தக் குமாரனோடு முக்கியமாய் நெருங்கிய உணர்ச்சிக் கொண்டிருந்தது முற்றிலும் விளங்கத்தக்கதாயில்லையா? எனினும், யோசேப்பிடம் யாக்கோபு கொண்டிருந்த அன்பு, அவனுடைய மற்றக் குமாரரைப் புறம்பே தள்ளிவைக்கவில்லை, அவர்களுடைய சுகநலத்துக்கும் அவன் உண்மையான அக்கறையை வெளிப்படுத்தினானே. (ஆதியாகமம் 37:13, 14) இவ்வாறு அவர்கள் யோசேப்பின்மீது பொறாமைகொண்டது ஆதாரமற்றது!

அவ்வாறே, பகிர்ந்துகொள்ளப்படும் அக்கறைகள், ஒத்தப் பண்பியல்பு, அல்லது மற்றக் காரணங்களினிமித்தம் உன் பெற்றோர் ஒருவேளை உன் சகோதரன் அல்லது சகோதரியினிடம் நெருங்க இழுக்கப்படலாம். இது அவர்கள் உன்னை நேசிப்பதில்லையென பொருள்படுகிறதில்லை. நீ மனக்கசப்பை அல்லது பொறாமையை உணர்ந்தால், உன் அபூரண இருதயமே உன்னை மேற்கொண்டதென தெரிந்துகொள். அத்தகைய உணர்ச்சிகளை மேற்கொள்ள பிரயாசப்படு. உன்னுடைய தேவைகள் நிறைவாக்கப்பட்டுவரும்வரையில், உடன்பிறந்தோருக்குக் கூடுதலான கவனம் செலுத்தப்படுவதுபோல் தோன்றுவதைக்குறித்து ஏன் மனச்சங்கடப்படவேண்டும்?

சகோதரரும் சகோதரிகளும்—ஓர் ஆசீர்வாதம்

சில சமயங்களில் இதை நம்புவது கடினமாய்த் தோன்றலாம்—முக்கியமாய் அவர்கள் உனக்குத் தொந்தரவுகொடுக்கையில் அவ்வாறிருக்கலாம். ஆனால் இளம் டயேன் பின்வருமாறு நமக்கு நினைப்பூட்டுகிறாள்: “சகோதரரையும் சகோதரிகளையும் கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சிக்குரியது.” அவளுக்கு ஏழு பேர் இருக்கிறார்கள். “பேசுவதற்கும் உன் அக்கறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் உனக்கு எவராவது இருக்கிறார்கள்.”

அனி மரியும் அவளுடைய சகோதரன் ஆன்ட்ரியும் பின்வருமாறு மேலும் சொல்கிறார்கள்: “உன் நண்பர்களுடன் நீ பல இடங்களைப் பார்க்கச் செல்லலாமெனினும், உன் சகோதரரும் சகோதரிகளும் உனக்கு எப்பொழுதும் இருக்கிறார்கள். விளையாட, அல்லது விளையாட்டுப் பந்தயத்தில் ஈடுபட அல்லது பூங்காவுக்குச் செல்ல நீ விரும்புகையில் அவர்கள் அங்கே எப்பொழுதும் இருக்கிறார்கள்.” டோனா மற்றொரு நடைமுறையான நன்மையைக் காண்கிறாள்: “அன்றாடக வீட்டுவேலையில் பகிர்ந்துகொள்ள உனக்கு எவராவது இருக்கின்றனர்.” மற்றவர்கள் தங்கள் சகோதரன் அல்லது சகோதரியைத் “தனிமுறையான ஆலோசனைகூறுபவராகவும் செவிகொடுத்துக் கேட்பவராகவும்” “புரிந்துகொள்ளும்” ஒருவராகவும் விவரித்திருக்கின்றனர்.

இப்பொழுது உன் சகோதரனுடன் அல்லது சகோதரியுடன் உனக்கு இருக்கும் அதே பிரச்னைகளில் சிலவற்றைப் பின்னால் வாழ்க்கையில் நீ மற்றவர்களுடன் அனுபவிப்பாய். பொறாமை, பொருளுரிமைகள், வேறுபாடான முறையில் நடத்தப்படுதல், தனிமை இடமில்லாமை, தன்னலம், பண்பியல்பு வேறுபாடுகள் ஆகிய—இத்தகைய பிரச்னைகள் வாழ்க்கையின் பாகமானவை. உன் சகோதரர் சகோதரிகளுடன் சமாதானத்துடன் ஒத்துவாழ்வதற்குக் கற்றுக்கொள்வது மனித உறவுகளுக்குரிய துறையில் நல்ல பயிற்றுவிப்பாகும்.

17 வயதான ஆன்ட்ரி பின்வருமாறு சொல்கையில் பைபிளில் 1 யோவான் 4:20-ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளையே திரும்பக் கூறுகிறான்: “நீ காணும் ஆட்களோடு ஒத்துப்போக முடியவில்லையென்றால், நீ காணமுடியாத யெகோவாவுடன் எவ்வாறு ஒத்துப்போகமுடியும்?” உன் சகோதரர் சகோதரிகளுடன் நீ பொருந்திபோகாத சில சமயங்கள் அவ்வப்போது ஏற்படும். ஆனால் பகிர்ந்துகொள்ள, பேச்சுத்தொடர்புகொள்ள, விட்டுக்கொடுத்து ஒத்துப்போக நீ கற்றுக்கொள்ள முடியும். இத்தகைய முயற்சியின் பலன் என்ன? ஒரு சகோதரன் அல்லது சகோதரியைக் கொண்டிருப்பது அவ்வளவு கெட்டது ஒன்றுமல்ல என்று நீ நன்றாய்த் தீர்மானிப்பாய்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ சகோதரரும் சகோதரிகளும் ஏன் அடிக்கடி சண்டைபோடுகின்றனர்?

◻ தனிமையிலிருக்க இடம், பொருளுரிமைகள் ஆகியவற்றின்பேரில் சண்டைசெய்வதை நீ எவ்வாறு தவிர்க்கலாம்?

◻ பெற்றோர் ஏன் சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு பிள்ளைக்குத் தயவு காட்டுகின்றனர்? அது கட்டாயமாய் அநியாயமென நீ உணருகிறாயா?

◻ ஒரே பிள்ளை அனுகூலமற்ற நிலையில் இருக்கிறானா?

◻ சகோதரர் சகோதரிகளைக் கொண்டிருப்பதன் சில நன்மைகள் யாவை?

[பக்கம் 52-ன் சிறு குறிப்பு]

“பெற்றோர் ஒருவர் தன் எல்லாப் பிள்ளைகளையும் சரிசமமான ஒரே முறையில் நேசிக்க முடிவதற்கு ஒரு வழியும் இல்லை, ஏனெனில் அவர்கள் வெவ்வேறுபட்ட மனிதராயிருக்கின்றனர்.”—உளநூல் பேராசிரியர் லீ சால்க்

[பக்கம் 54-ன் பெட்டி]

நான் ஒரே பிள்ளை’

இது உன்னுடைய சூழ்நிலைமை என்றால். நீ அனுகூலமற்றச் சூழ்நிலையில்தான் இருக்கிறாய் என்று சொல்வதிற்கில்லை. ஒரு காரியம் என்னவெனில், மற்ற இழைஞர்கள் ஒருவேளை தங்கள் உடன்பிறந்தோருடன் ஒத்துவாழ்வதில் சங்கடமனுபவித்துக்கொண்டிருக்கையில், நீ (உன் பெற்றோறின் அனுமதியுடன்) உன் நெருங்கிய தோழர்களை தெரிந்தெடுத்துக்கொள்ளலாம் படிப்பதற்கு தியானிப்பதற்கு உனக்கு அதிக நேரமுங்கூட இருக்கலாம்.-தனிமையின்பேரில் அதிகாரம் 14-ஐப் பார்.

இளைஞன் தாமஸ் பின்வருமாறு சொல்கையில் மற்றொரு அனுகூலத்தைக் குறிப்பிடுகிறான். “ஒரே பிள்ளையாக நான் என் பெற்றோரின் முழு கவனத்தையும் பெற்றேன்.” உண்மைதான், பெற்றோறின் மட்டுக்குமீறிய கவனமும் ஓர் இளைஞனைத் தன்னலமே கருதும் தன்மைவாய்ந்தவனாக்கலாம். ஆனால் பெற்றோர் அதைச் செலுத்துவதில் சமநிலையைக் காட்டினால், பெற்றோரின் கவனிப்பு நீ அதிக விரைவில் முதிர்ச்சியடையவும் முதியோர் சூழ்நிலையில் தளர்ந்த அமைதியான உள்ளுணர்ச்சியுடனிருக்கவும் உனக்கு உதவிசெய்யும்.

எனினும், பொருட்களைப் பகிர்ந்துகொள்ள உனக்குச் சகோதரரோ சகோதரிகளோ இல்லாததனால், தன்னலமுள்ளவனாய்யிருக்கும் அபாயமும் அங்கிருக்கிறது, “கொடுங்கள்” என்று இயேசு அறிவுரை கூறினார். (லூக்கா 6:38) நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பொருட்தளைப் பகிர்ந்துகொள்ள முயற்சி செய். மற்றவர்களின் தேவைகளைக் கவனிக்கும் தன்மையை முன்னேற்றுவி, கூடியபோது முன்வந்து உதவிசெய். அத்தகைய தயாளகுணத்துக்கு ஆட்கள் சாதகமாய்ப் பிரதிபலிப்பார்கள். மேலும் நீ ஒரே பிள்ளையாயிருந்தபோதிலும் உன்னைத் தனிமையிலிருப்பவனாய்க் காணமாட்டாய்.

[பக்கம் 53-ன் படம்]

ஒரு சகோதரி இல்லாக்குறையை நான் அடிக்கடி உணருகிறேன்; எனினும் எனக்குச் சில அனுகூலங்களும் இருக்கின்றன