Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?

நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?

அதிகாரம் 8

நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?

“நான் எட்டு ஆண்டுகளாக இந்த மாகாணத்தில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன், ஆனால் அந்தக் காலமெல்லாம் நான் ஒரு நண்பனையுங்கூட அடைய முடியவில்லை, ஒருவரையுங்கூட!” இவ்வாறு ரோனி என்ற இளைஞன் புலம்பினான். ஒருவேளை நீயும் சிலசமயங்களில் இவ்வாறு நட்பில் தோல்வியுற்றதுபோல் உணர்ந்திருக்கலாம். ஆனால் உண்மையான நண்பர்கள் யாவர்? அவர்களைக் கொண்டிருப்பதன் இரகசியம் என்ன?

நீதிமொழி ஒன்று சொல்வதாவது: “ஒரு நண்பன் எல்லாக் காலங்களிலும் நேசிக்கிறான் இக்கட்டான காலங்களில் ஒரு சகோதரனாகிறான்.” (நீதிமொழிகள் 17:17, The Bible in Basic English) ஆனால் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஒருவராயிருப்பதைப் பார்க்கிலும் நட்புக்கு அதிகம் இருக்கிறது. மார்வியா என்ற ஓர் இளம்பெண் பின்வருமாறு சொல்கிறாள்: “நண்பர் எனப்படுபவள் சில சமயங்களில் நீ தொந்தரவுக்குள் சிக்கிக்கொள்வதைக் காண்பாள், அதன்பின்பு இவ்வாறு சொல்வாள்: ‘நீ அந்தத் திசையில் போய்க்கொண்டிருந்ததை நான் கண்டேன், ஆனால் அதை உனக்குச் சொல்லப் பயந்தேன்.’ ஆகிலும் ஓர் உண்மையான சிநேகிதி, நீ தவறான வழியில் செல்வதைக் காண்கையில், பயனில்லாமல் பிந்திவிடுவதற்கு முன்னால் உன்னை எச்சரிக்க முயற்சிசெய்வாள்—தான் சொல்வது உனக்கு ஒருவேளை விருப்பமிராதென அவள் தெரிந்திருந்தாலுங்கூட அவ்வாறு எச்சரிப்பாள்.”

உண்மையை உனக்குச் சொல்வதற்கு உன்னைப்பற்றி அவ்வளவு கவலை எடுத்துக்கொண்ட ஒருவரைத் தள்ளிப்போட உன் புண்படுத்தப்பட்ட தற்பெருமை உன்னைச் செய்விக்கும்படி விடுவாயா? நீதிமொழிகள் 27:6 பின்வருமாறு சொல்கிறது: “பகைக்கிற ஒருவரின் மிதமீறிய முத்தங்களைப் பார்க்கிலும் நேசிக்கிற ஒருவர் படுத்தின காயங்களில் அதிக நம்பிக்கை வைக்கவேண்டும்.” (பையிங்டன்) ஆகவே, தயக்கமில்லாமல் நேர்மையாய்ச் சிந்தித்து நேர்மையாய்ப் பேசும் வகையான ஒருவரையே நீ நண்பராகக் கொண்டிருக்க விரும்பவேண்டும்.

போலி நண்பர்களுக்கு எதிராக உண்மையான நண்பர்கள்

“எல்லா ‘நண்பர்களும்’ உன்னிலுள்ள மிகச் சிறந்தத் தன்மையை வெளிப்படச் செய்வதில்லை என்பதற்கு என் வாழ்க்கை நிரூபணமாயிருக்கிறது.,” என்று 23 வயது பெகி கூறுகிறாள். பருவ வயதிலிருக்கையில், பெகி வீட்டைவிட்டுச் செல்லும்படி வற்புறுத்தப்பட்டாள். எனினும், யெகோவாவின் சாட்சிகளான இருவர், பில்லும் அவருடைய மனைவி லாயும் அவளுக்கு நட்பு காட்டினார்கள். அவர்கள் பெகியுடன் ஒரு பைபிள் படிப்பைத் தொடங்கினார்கள். “அவர்களோடு நான் செலவிட்ட மாதங்கள் உண்மையான மகிழ்ச்சியாலும், மனத்திருப்தியாலும் சமாதானத்தாலும் நிறைந்திருந்தன,” என்று பெகி சொன்னாள். எனினும், அவள் தான் சந்தித்தச் சில இளைஞருடன் இருக்கும்படி தெரிந்துகொண்டாள்—பில்லையும் லாயுவையும் விட்டுச் சென்றுவிட்டாள்.

பெகி மேலும் கூறுவதாவது: “என் புதிய ‘நண்பர்களிடமிருந்து’ நான்—ஸ்டீரியோக்களைத் திருடுதல், தவறான காசோலைகளைப் பணமாக மாற்றுதல், மரிஹுவானா புகைக் குடித்தல், மற்றும், கடைசியாக, ஒரு நாளைக்கு ரூ3,000 வீதம் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கத்தை எவ்வாறு ஆதரித்தல் ஆகிய—பல காரியங்களைக் கற்றேன்.” 18 வயதில் ரே என்ற ஒரு வாலிபனைச் சந்தித்தாள். அவன், அவள் பயன்படுத்தக்கூடிய போதை மருந்து அனைத்தையும் அவளுக்கு இலவசமாய்த் தருவதற்கு முன்வந்தான். “என் தொல்லைகளெல்லாம் தீர்ந்துவிட்டனவென நான் எண்ணினேன். நான் மறுபடியும் ஒருபோதும் திருடவும் மோசடிசெய்யவும் வேண்டியதில்லை,” என்று பெகி எண்ணினாள். எனினும், ரே, அவளை வேசித்தனத்துக்கு அறிமுகப்படுத்தினான். கடைசியாய்ப் பெகி அந்த நகரத்தையும் அவளுடைய மோசடிக்கார “நண்பர்களையும்” விட்டு தப்பியோடிவிட்டாள்.

அவளுடைய புதிய இருப்பிடத்தில், ஒரு நாள் யெகோவாவின் சாட்சிகள் இருவர் பெகியைச் சந்தித்தனர். “திடுக்கிட்ட அந்த இரண்டு பெண்களை நான் கட்டித்தழுவினபோது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்கள் பெருகியோடின,” என்று பெகி கூறினாள். “என் முந்திய ‘நண்பர்களின்’ பாசாங்குத்தனத்தை கடுமையாய் வெறுக்க முன்னேறியிருந்தேன், ஆனால் இங்கே உண்மையானவற்றிற்கு நிலைநிற்கும் ஆட்கள் இருந்தனர்.” பெகி தான் பைபிள் படிப்பதற்குத் திரும்பத் தொடங்கினாள்.

எனினும் அவள் தன் வாழ்க்கையைக் கடவுளுடைய வழிகளுக்கு ஒத்திருக்கச் சரிசெய்வது எளிதாயில்லை. புகைக் குடிப்பதை விட்டுவிடுவது முக்கியமாய்க் கடினமாயிருந்தது. ஆயினும், யெகோவாவின் சாட்சியான ஒரு நண்பர் பின்வருமாறு அறிவுரை கூறினார்: “நீ தவறிய பின்பு ஜெபித்து மன்னிப்புக் கேட்பதற்குப் பதில், முன்னதாகவே, புகைக் குடிக்கவேண்டுமென்ற தூண்டுதலை நீ உணருகையில் ஜெபித்து பலத்துக்காகக் கேட்கலாமல்லவா?” பெகி சொல்வதாவது: “இந்தக் கனிவான நடைமுறைக்குரிய ஆலோசனை அதை மேற்கொள்ள செய்தது. . . . பல ஆண்டுகளுக்கப்பால் முதல்தடவையாக, எனக்குள் சுத்த உணர்ச்சியை நான் உணர்ந்தேன் மேலும் சுயமரியாதையைக் கொண்டிருப்பது எதைக் குறிக்கிறதென்பதையும் அறிந்தேன்.”

பெகியின் அனுபவம் பைபிளில் நீதிமொழிகள் 13:20-ல் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளின் உண்மையை விளக்கமாய்த் தெரியச் செய்கிறது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” பெகி சொல்வதாவது: “கடவுளை நேசித்த அந்த ஆட்களோடு மாத்திரமே என் நட்பை நான் தொடர்ந்து காத்துவந்திருந்தால், இப்பொழுது அருவருப்பான நினைவாயிருக்கும் அந்த எல்லாக் காரியங்களையும் தவிர்த்திருப்பேன்.”

நண்பர்களைக் கண்டடைதல்

கடவுளை நேசிக்கும் நண்பர்களை நீ எங்கே கண்டடையலாம்? கிறிஸ்தவ சபைக்குள் கண்டடையலாம். தங்களை விசுவாசிகளென வாயினால் சொல்லிக்கொள்வதுமட்டுமல்லாமல் தங்கள் விசுவாசத்தையும் கடவுள் பக்தியையும் ஆதரிக்கச் செயல்களையும் உடையவர்களாயிருக்கும் இளைஞரைத் தேடிக் கண்டுபிடி. (யாக்கோபு 2:26-ஐ ஒத்துப்பார்.) அத்தகைய இளைஞரைக் கண்டுபிடிப்பது கடினமாயிருந்தால், உன்னைவிட முதிர்ந்த கிறிஸ்தவர்கள் சிலருடன் பழகு. வயது நட்புக்குத் தடையாக இருக்க வேண்டியதில்லை. தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இருந்த முன்மாதிரியான நட்பைப்பற்றி பைபிளில் சொல்லியிருக்கிறது—யோனத்தான் தாவீதின் தகப்பனாயிருக்கக்கூடிய அளவுக்கு முதிர்வயதானவனாயிருந்தான்!—1 சாமுவேல் 18:1.

எனினும், நட்பைத் தொடங்குவது எவ்வாறு?

மற்றவர்களில் செயல்முறையில் காட்டப்படும் அக்கறை

இயேசு கிறிஸ்து வளர்த்த நட்பு அவ்வளவு உறுதியாயிருந்ததால், அவருடைய நண்பர்கள் அவருக்காக மரிக்கவும் மனமுள்ளோராயிருந்தனர். ஏன்? ஒரு காரணம், இயேசு ஆட்களின்பேரில் அக்கறைகொண்டார். அவர் மற்றவர்களிடம் நெருங்கி அவர்களுக்கு உதவிசெய்தார். தம்மை ஈடுபடுத்திக்கொள்ள அவர் ‘சித்தங்கொண்டார்.’ (மத்தேயு 8:3) மெய்யாகவே, மற்றவர்களில் அக்கறைகொண்டிருப்பது நண்பர்களை அடைவதற்கு முதற்படியாகும்.

உதாரணமாக, “ஆட்களிடம் உண்மையான அன்பு கொண்டிருந்து மற்றவர்களில் செயலில் வெளிகாட்டப்படும் அக்கறை எடுத்த”தால் நண்பர்களை அடைவதில் தான் வெற்றி பெற்றதாக டேவிட் என்ற ஓர் இளைஞன் கூறுகிறான். அவன் மேலும் தொடர்ந்து சொல்வதாவது: “மிக முக்கிய காரியங்களில் ஒன்று அந்த ஆளின் பெயரை அறிவதாகும். அவர்களுடைய பெயரை மறவாதிருப்பதற்கு நீ போதிய அளவு அக்கறைகொண்டாயென மற்றவர்கள் பெரும்பாலும் உள்ளங்கனிவடைகிறார்கள். இதனிமித்தம் அவர்கள் உன்னுடன் ஏதோ அனுபவத்தை அல்லது பிரச்னையைப் பகிர்ந்துகொள்ளலாம், நட்பு வளரத் தொடங்குகிறது.”

இது நீ வெளியுலக ஈடுபாட்டாளனாகப் பகட்டுப்பண்ணிக்கொண்டிருக்க வேண்டுமென பொருள்கொள்கிறதில்லை. இயேசு “மனத்தாழ்மையாய்” இருந்தார், வீண் ஆரவாரத்துடனோ பகட்டிக்கொண்டோ இல்லை. (மத்தேயு 11:28, 29) மற்றவர்களில் உள்ளப்பூர்வமான அக்கறையே அவர்களைக் கவருகிறது. சாப்பாட்டை ஒன்றுசேர்ந்து பகிர்ந்துகொள்வது அல்லது ஒரு வேலையில் ஒருவருக்கு உதவிசெய்வது போன்ற மிக எளிய காரியங்கள், பெரும்பாலும் நட்பை ஆழமாக்கச் செய்யலாம்.

“நீங்கள் கேட்கிற விதம்”

“நீங்கள் [செவிகொடுத்துக்] கேட்கிற விதத்தைக்குறித்தும் கவனியுங்கள்,” என்று இயேசு ஆலோசனை கூறினார். (லூக்கா 8:18) கடவுளுடைய வசனிப்புகளுக்குச் செவிகொடுத்துக்கேட்பதன் மதிப்பை அவர் மனதில் கொண்டிருந்தபோதிலும், இதன் நியமம் நட்புறவை வளர்ப்பதற்கும் நன்றாய்ப் பொருந்துகிறது. நன்றாய்ச் செவிகொடுத்துக் கேட்பவராய் இருப்பது நட்பைக் கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாதது.

மற்றவர்கள் சொல்வதில் நாம் உண்மையாய் அக்கறைகொண்டிருந்தால், அவர்கள் பொதுவாய் நம்மிடமாக இழுக்கப்படுகின்றனர். ஆனால் இது “தனிப்பட்ட அக்கறையுடன் உன் சொந்தக் காரியங்களின்பேரில் மாத்திரமேயல்ல (நீ சொல்ல விரும்புவதில் மாத்திரமேயல்ல), தனிப்பட்ட அக்கறையுடன் மற்றவர்களின் காரியங்களின்பேரிலும் கவனம்வைத்து” வருதலைத் தேவைப்படுத்துகிறது.—பிலிப்பியர் 2:4, NW.

பற்று மாறாதிரு

இயேசு தம்முடைய நண்பர்களுடன் பற்றுறுதியுடன் இருந்தார். அவர் “முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.” (யோவான் 13:1) கோர்டன் என்ற ஓர் இளைஞன் தன் நண்பர்களை அவ்வாறு நடத்துகிறான்: “ஒரு நண்பனின் முக்கிய பண்பு அவனுடைய பற்று மாறாமையே. காலங்கள் கடினமாகையில் அவன் உன்னுடன் உண்மையில் பற்றுறுதியுடன் நிலைத்திருப்பானா? மற்றவர்கள் சிறுமைப்படுத்தும் குறிப்புகளைச் சொன்னால் என் நண்பனும் நானும் ஒருவரையொருவர் ஆதரித்து நிற்போம். நாங்கள் உண்மையில் ஒருவருக்காக ஒருவர் போராடி விடாது ஒன்றுபட்டிருந்தோம்.—ஆனால் நாங்கள் நேர்மையில் இருந்தால் மாத்திரமே அவ்வாறு செய்தோம்.”

போலி நண்பர்களோவெனில், பாசாங்குத்தனமாய் ஒருவரையொருவர் மறைவில் பழித்து அவதூறுசெய்வதைத் தவறாகவும் கருதுகிறதில்லை. “ஒருவரையொருவர் நொறுக்கும் மனநிலையுள்ள தோழர்களும் உண்டு,” என்று நீதிமொழிகள் 18:24-ல் (NW) சொல்லியிருக்கிறது. வஞ்சகமான வீண்பேச்சில் சேர்ந்துகொள்வதனால் ஒரு நண்பனின் நற்பெயரை “நொறுக்கிப்” போடுவாயா, அல்லது பற்றுமாறாமல் அவன்சார்பில் போராடி நிற்பாயா?

உன் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்

மேலும் இயேசு தம்முடைய மிக ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதனால் தம்மை மற்றவர்களுடைய பேரன்புக்குரியவராக்கினார். சில சமயங்களில் தாம் “மனதுருகின”தை, “அன்பு உணர்ந்த”தை, அல்லது “பெருந் துக்கங்கொண்டிருந்த”தை அவர் தெரியப்படுத்தினார். குறைந்தது ஒரு சந்தர்ப்பத்திலாவது அவர் “கண்ணீர் விட்டார்.” இயேசு, தாம் நம்பினவர்களிடம் மனம்விட்டுப் பேச தயங்கவில்லை.—மத்தேயு 9:36; 26:38, தி.மொ.; மாற்கு 10:21, NW; யோவான் 11:35.

நிச்சயமாகவே, இது, நீ சந்திக்கும் எல்லாரிடமும் உன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ஊற்றவேண்டுமென பொருள்கொள்கிறதில்லை! ஆனால் நீ எல்லாருடனும் நேர்மையாய் இருக்க முடியும். எவருடனாவது பழகி அவர்மீது நம்பிக்கைகொள்கையில், படிப்படியாய் நீ உன் மிக ஆழ்ந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். அதே சமயத்தில், உன்னை மற்றவர் நிலையில் வைத்துக்காணவும் மற்றவருக்கு “அனுதாபத்”தைக் காட்டவும் கற்றுக்கொள்வது உள்ளார்ந்த நலமுடைய நட்புக்கு இன்றியமையாதது.—1 பேதுரு 3:8, தி.மொ.

பரிபூரணத்தை எதிர்பார்க்காதே

நட்பு நன்றாய்த் தொடங்கி முன்னேறுகையிலும், பரிபூரணத்தை எதிர்பார்க்காதே. “நாம் எல்லாரும் எல்லா வழிவகைகளிலும் தவறுகளைச் செய்கிறோம், ஆனால் தான் பிழையான காரியத்தை ஒருபோதும் சொல்கிறதில்லையென உரிமைபாராட்டக்கூடிய மனிதனே தன்னைப் பரிபூரணனாகக் கருத முடியும்.” (யாக்கோபு 3:2, ஃபிலிப்ஸ்) இன்னும், நட்புக்கு—நேரமும் உணர்ச்சிக்கிளர்ச்சியும் செலவிடவேண்டும். “நீ கொடுப்பதற்கு மனமுள்ளவனாயிருக்கவேண்டும்,” என்று இளைஞன் பிரெஸ்லி சொல்கிறான். “அது நட்பின் பெரும்பாகம். காரியங்களின்பேரில் உனக்கு உன் சொந்த உணர்ச்சிகள் இருக்கின்றன ஆனால் உன் நண்பனின் உணர்ச்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் இடமளிக்க நீ விட்டுக்கொடுக்க மனமுள்ளவனாயிருக்கிறாய்.”

எனினும், நட்பின் விலை, நேசியாதிருப்பதன் விலையோடு—வெறுமையான தனிமை வாழ்க்கையோடு—ஒப்பிட ஒன்றுமேயில்லை. ஆகையால் உனக்கு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள். (லூக்கா 16:9-ஐ ஒத்துப்பார்.) உனக்குள்ளதைக் கொடு, செவிகொடுத்துக்கேள், மற்றவர்களில் உண்மையான அக்கறை காட்டு. அப்பொழுது, இயேசுவைப்போல், “நீங்கள் என் நண்பர்கள்,” என்று சொல்வதற்கு உனக்கு மிகுதியானவர்கள் இருப்பார்கள்.—யோவான் 15:14, NW.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ உண்மையான நண்பர்களை நீ எவ்வாறு அடையாளங்கண்டுகொள்ள முடியும்? என்ன வகையான நண்பர்கள் போலிநடிப்புக்காரர்?

◻ நண்பர்களுக்காக நீ எங்கே தேடலாம்? அவர்கள் எப்பொழுதும் உன் வயதில் இருக்கவேண்டுமா?

◻ ஒரு நண்பன் வினைமையான தொந்தரவில் இருந்தால் நீ என்ன செய்யவேண்டும்?

◻ நண்பர்களை அடைவதற்குரிய நான்கு வழிகள் யாவை?

[பக்கம் 66-ன் சிறு குறிப்பு]

“என் புதிய ‘நண்பர்களிடமிருந்து’ நான்—ஸ்டீரியோக்களைத் திருடுதல், தவறான காசோலைகளைப் பணமாக மாற்றுதல், மரிஹுவானா புகைக் குடித்தல், மற்றும், கடைசியாக, ஒரு நாளைக்கு ரூ3,000 வீதம் போதை மருந்து உட்கொள்ளும் பழக்கத்தை எவ்வாறு ஆதரித்தல் ஆகிய—பல காரியங்களைக் கற்றேன்”

[பக்கம் 68, 69-ன் பெட்டி]

ன் நண்பனின் தவறை நான் மற்றவரிடம் சொல்லவேண்டுமா?

ஒரு நண்பன் போதைமருந்துகளைக் கையாழுவதில் உட்பட்டிருந்தால், பால்சம்பந்தக் காரியங்களில் ஈடுபட்டிருந்தால், மோசடிசெய்துகொண்டும், அல்லது திருடிக்கொண்டும் இருந்தால்—பொறுப்புள்ள ஒருவரிடம் அதைப்பற்றிச் சொல்வாயா? இளைஞருக்குள் வழங்கிவரும் தனியியல்பான மெளன சாதிப்பைக் கடைப்பிடித்து பெரும்பான்மையர் அவ்வாறு சொல்லமாட்டார்கள்.

“கோள்குத்தி” என்று பெயரிடப்படுவதைக் குறித்துச் சிலர் பயப்படுகின்றனர். மற்றவர்கள் ஒருவகையான பற்றுமாறாமை என்ற உணர்ச்சியால் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். சிட்சையைத் தீங்குள்ளதென கருதுவதால், தங்கள் நண்பனின் பிரச்னைகளை மறைத்து வைப்பதில் தாங்கள் அவனுக்குத் தயை செய்வதாகக் கற்பனை செய்துகொள்கின்றனர். அவ்வாறு மெளனமாக இருக்கும் சட்டத்தை மீறினால், ஒருவன் சகாக்களின் ஏளன பேச்சுக்கு ஆளாகி, ஒருவேளை அவர்களுடைய நட்பை இழக்கும் நிலையையும் எதிர்ப்படக்கூடும்.

இருப்பினும், லீ என்ற ஓர் இளைஞன் தன்னுடைய மிக நெருங்கிய நண்பன், கிறிஸ், புகைக் குடித்தபோது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தான். லீ சொல்வதாவது: “என் மனச்சாட்சி என்னை மிகவும் அலைக்கழித்தது ஏனெனில் நான் யாரிடமாவது சொல்லவேண்டுமென அறிந்திருந்தேன்!” பைபிள் காலங்களில் ஓர் இளைஞன் இதைப்போன்ற நிலைமையை எதிர்ப்பட்டான். “யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; . . . அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.” (ஆதியாகமம் 37:2) தான் சொல்லாவிடில் தன் சகோதரரின் ஆவிக்குரிய சுகநலம் அபாயத்துக்குட்படுமென யோசேப்பு அறிந்திருந்தான்.

பாவம் சீர்கேடுறச் செய்யும் கெடுக்கும் சக்தி. தவறுசெய்யும் நண்பன்—ஒருவேளை வேதப்பூர்வமான முறைப்படி கண்டிப்பான சிட்சையின் மூலம்—உதவியைப் பெற்றால்தவிர அவளோ அவனோ பொல்லாப்புக்குள் இன்னும் ஆழமாய் வீழ்ந்துபோகலாம். (பிரசங்கி 8:11) இதனால், நண்பனின் தவறை மூடிமறைத்து வைப்பது எந்த நன்மையும் செய்வதில்லை, ஆனால் சரிப்படுத்தமுடியாதத் தீங்கைச் செய்யலாம்.

ஆகையால் பைபிள் பின்வருமாறு அறிவுரை கூறுகிறது: “சகோதரரே, ஒருவன் [தான் அறிவதற்கு முன்னால், NW] யாதொரு குற்றத்தில் அகப்பட்டபோதிலுங்கூட ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்.” (கலாத்தியர் 6:1, தி.மொ.) தவறுசெய்யும் நண்பனைச் சீர்பொருந்தப்பண்ண உனக்கு ஆவிக்குரிய தகுதிகள் இருப்பதாக நீ ஒருவேளை உணரமாட்டாய். ஆனால் உதவிசெய்ய தகுதிபெற்றுள்ள ஒருவரிடம் அந்தக் காரியம் அறிவிக்கப்படும்படி பார்த்துக்கொள்வது அறிவுள்ள காரியமல்லவா?

இவ்வாறு நீ உன் நண்பனை அணுகி, அவனுடைய குற்றத்தை அவனுக்கு உணர்த்திக் காட்டவேண்டுமென்பது கட்டளையாயிருக்கிறது. (மத்தேயு 18:15-ஐ ஒத்துப்பார்க்கவும்.) இவ்வாறு செய்ய உனக்கு மன உரமும் தைரியமும் வேண்டும். நீ உறுதியாயிருந்து, அவன் தன் பாவத்தைத் தானே ஏற்கச் செய்ய வைக்கும் அத்தாட்சியைக் கொடு, முக்கியமாய் உனக்கு என்ன தெரியும் அது எவ்வாறு தெரியவந்து என்பவற்றைக் கூறு. (யோவான் 16:8-ஐ ஒத்துப்பார்.) நீ ஒருவருக்கும் சொல்லமாட்டாயென வாக்குக் கொடுக்காதே, ஏனெனில் அத்தகைய வாக்கு கடவுளுடைய பார்வையில் சட்டப்படி செல்லாததாயிருக்கும், குற்றத்தை மறைப்பதை அவர் கண்டனம் செய்கிறார்.—நீதிமொழிகள் 28:13.

ஒருவேளை தவறாகப் புரிந்துகொண்ட ஏதாவது நடந்திருக்கலாம். (நீதிமொழிகள் 18:13) அவ்வாறிராமல், அந்தக் குற்றத்தில் அவன் உண்மையில் உட்பட்டிருந்தால், ஒருவேளை உன் நண்பன் தன் பிரச்னையை வெளிப்படுத்திக் கூறுவதில் மனத்தளர்வடையலாம். நன்றாய்ச் செவிகொடுத்துக் கேட்பவனாயிரு. (யாக்கோபு 1:19) “நீ செய்திருக்கக்கூடாது!” என்பதைப்போன்ற கண்டன சொற்களை அல்லது “நீ அவ்வாறு எப்படிச் செய்யலாம்!” என்பதைப்போன்ற திடுக்கிடும் சொற்களைப் பயன்படுத்துவதன்மூலம் அவன் தன் உணர்ச்சிகளை மனம்விட்டு வெளிப்படுத்திக்கூறுவதை அடக்கிவைக்கச் செய்துவிடாதே. அவன் நிலையில் உன்னை வைத்து உன் நண்பன் உணருவதை நீ உணர்ந்து அனுதாபம் காட்டு.—1 பேதுரு 3:8.

பெரும்பாலும் நீ கொடுக்கக்கூடிய நிலையில் இராத மிகைப்பட்ட உதவியைக் தேவைப்படுத்தும் சூழ்நிலையாக அது இருக்கலாம். அப்படியானால், உன் நண்பன் அந்தத் தவறைத் தன் பெற்றோரிடம் அல்லது மற்றப் பொறுப்புள்ள முதியோரிடம் வெளிப்படுத்திக் கூறும்படி வற்புறுத்து. உன் நண்பன் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டால் என்ன செய்வது? போதியளவான ஒரு காலப்பகுதிக்குள் அவன் அந்தக் காரியத்தைச் செய்யாவிடில், நீ, அவனுடைய உண்மையான நண்பனாக, அவன்பொருட்டு யாரிடமாவது சொல்லக் கடமைப்பட்டிருப்பாய் என அவனுக்குத் தெரியப்படுத்து.—நீதிமொழிகள் 17:17.

முதன்முதலில் உன் நண்பன் நீ அத்தகைய நடவடிக்கை எடுத்ததன் காரணத்தை ஒருவேளை விளங்கிக்கொள்ளமாட்டான். அவன் ஒருவேளை கோபமடைந்து பதற்றமாய் உன் நட்பை துண்டித்துவிடலாம். ஆனால் லீ சொல்வதாவது: “ஒருவரிடம் சொன்னதில் நான் சரியான காரியத்தைச் செய்தேனென அறிந்திருந்தேன். என் மனச்சாட்சி அவ்வளவு அதிகம் அமர்ந்திருப்பதை உணர்ந்தேன். ஏனெனில் கிறிஸ் அவனுக்குத் தேவைப்பட்ட உதவியைப் பெற்றுக்கொண்டிருந்தான். பின்னால் அவன் என்னிடம் வந்து நான் அதைச் செய்ததற்காக என்னுடன் கோபமாயில்லை என்று சொன்னான், அது எனக்கு மன அமைதியைத் தந்தது.”

உனக்கு அறிமுகமானவன் நீ தைரியமாய் எடுத்த நடவடிக்கைளைக் குற்றமாகக்கொண்டு தொடர்ந்து சீற்றங்காட்டினால், அவன் அல்லது அவள் முதலிடத்தில் உண்மையான நண்பனாக ஒருபோதும் இல்லை என்பது வெளிப்படையாயிருக்கிறது. ஆனால் நீ கடவுளுக்கு உன் உண்மைத்தவறாமையை நிரூபித்ததையும் உன்னை உண்மையான நண்பனாய்க் காட்டினதையும் அறியும் மனத்திருப்தியைக் கொண்டிருப்பாய்.

[பக்கம் 67-ன் படம்]

நண்பர்களை அடைவதில் உனக்குத் தொந்தரவு இருக்கிறதா?

[பக்கம் 70-ன் படம்]

மற்றவர்களில் அக்கறை எடுப்பது நட்பைத் தொடங்குவதற்கு அடிப்படை அம்சம்