Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தற்புணர்ச்சிப் பழக்கம்—அதற்கான தூண்டுதலை நான் எப்படி எதிர்த்து நிற்கக்கூடும்?

தற்புணர்ச்சிப் பழக்கம்—அதற்கான தூண்டுதலை நான் எப்படி எதிர்த்து நிற்கக்கூடும்?

அதிகாரம் 26

தற்புணர்ச்சிப் பழக்கம்—அதற்கான தூண்டுதலை நான் எப்படி எதிர்த்து நிற்கக்கூடும்?

இது ஒரு பலமான அடிமைப்படுத்தும் துர்ப்பழக்கம்” என்பதாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக தற்புணர்ச்சிப் பழக்கத்தோடு போராடிய ஓர் இளைஞன் சொன்னான். “அது ஒரு போதை மருந்து அல்லது மதுபானம் பழக்கத்தைப் போன்ற ஒன்றாக இருக்கக்கூடும்.”

இருப்பினும், அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய இச்சைகள் ஒரு கொடிய எஜமான் போன்றிருக்க அனுமதிக்கவில்லை. மாறாக, அவன் எழுதினான்: “என் சரீரத்தை [மாம்ச இச்சைகள்] ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” (1 கொரிந்தியர் 9:27) அவன் தன்னை ஒடுக்கிக் கொண்டான்! இதே போன்ற முயற்சியானது தற்புணர்ச்சிப் பழக்கத்திலிருந்து விலகியிருக்க எவருக்கும் சாத்தியமளிக்கும்.

“உங்கள் மனங்களைச் செயலுக்கு ஆயத்தப்படுத்துங்கள்”

பெரும்பாலானோர் பதட்டத்தையும் தீவிர உணர்வையும் நீக்குவதற்காக தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள். என்றபோதிலும், தற்புணர்ச்சிப் பழக்கமானது பிரச்னைகளுக்கு எதிரான ஒரு பேதைமையான வழி. (ஒப்பிடுக 1 கொரிந்தியர் 13:11) “விவேகத்தை” வெளிக்காட்டி அந்தப் பிரச்னையை முறியடிப்பது மேம்பட்ட காரியம். (நீதிமொழிகள் 1:4) பிரச்னைகளும் ஏமாற்றங்களும் சமாளிக்க முடியாததுபோல் தோன்றும்போது, “உங்கள் கவலைகளையெல்லாம் அவர் [கடவுள்] மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:6, 7.

ஒருவேளை தற்செயலாக பாலுறவு சம்பந்தமாக தூண்டக்கூடிய ஒரு காரியத்தை நீ பார்த்தாலோ அல்லது கேட்டாலோ என்ன? பைபிள் ஆலோசனைச் சொல்கிறது: “உங்கள் மனங்களை செயலுக்கு ஆயத்தப்படுத்துங்கள்; இச்சையடக்கமுள்ளவர்களாக இருங்கள்.” (1 பேதுரு 1:13, நியு இன்டர்நேஷனல் வெர்ஷன்) உங்களுடைய மனதை மும்முரமாக ஈடுபடுத்தி, ஒழுக்கயீனமான எண்ணத்தை விலக்குங்கள். அந்தத் தூண்டுதலானது விரைவில் மறைந்துவிடும்.

என்றபோதிலும், இரவு நேரத்தில் ஒருவர் தனிமையாக இருக்கும்போது, கெட்ட எண்ணங்களைத் தவிர்ப்பது என்பது முக்கியமாக கடினமாக இருக்கிறது. ஓர் இளம் பெண் ஆலோசனைச் சொல்கிறாள்: “செய்ய வேண்டிய சிறந்த காரியமானது உடனடியாக படுக்கையிலிருந்து எழுந்து சில வகையான வேலைகளில் ஈடுபடுவதாகும், அல்லது சிறிதளவு சிற்றுண்டி அருந்தலாம். இவ்விதமாக உங்களுடைய மனம் வேறு காரியங்களினிடமாகத் திரும்பும்.” ஆம், ‘ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருக்க’ உங்களைப் பலவந்தமாக ஈடுபடுத்துங்கள்.—பிலிப்பியர் 4:8.

தூக்கம் வருவதில் உனக்குப் பிரச்னை இருக்கும்போது, உண்மையுள்ள ராஜாவாகிய தாவீதைப் பின்பற்ற முயற்சி செய். அவன் எழுதினான்: “என் படுக்கையின்மேல் நான் உம்மை [கடவுளை] நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.” (சங்கீதம் 63:6) கடவுள்மீதும் அவருடைய குணங்களின்மீதும் நிலைத்திருக்க உன்னுடைய மனதை ஈடுபடுத்துவதானது அநேக சமயங்களில் அந்தத் துர்ச்சிந்தனைகளை அகற்றும். இந்த அசுத்தமான பழக்கத்தைக் கடவுள் எவ்விதமாக கருதுகிறார் என்பதை நீ தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதும்கூட உதவும்.—சங்கீதம் 97:10.

தற்காப்பு நடவடிக்கைகளை எடு

“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்,” என்பதாக ஆவியினால் ஏவப்பட்ட ஞானி எழுதினான். (நீதிமொழிகள் 22:3) முன்யோசனையை உபயோகிப்பதன் மூலமாக நீ உன்னை விவேகமுள்ளவனாக காட்டக்கூடும். உதாரணமாக, சில விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுதல், இறுக்கமான உடைகளை உடுத்துதல், அல்லது சில வகையான உணவுப் பொருட்களை சாப்பிடுதலானது பாலுறவு சம்பந்தமாக தூண்டப்பட்டவனாக உன்னை மாற்றியிருக்கிறது என்பதை நீ காண்பாயானால், கட்டாயமாக அத்தகைய காரியங்களைத் தவிர்த்துவிடு. உதாரணமாக, மதுபானங்கள் ஒருவருடைய தற்காப்புச் சக்திகளைக் குறைத்து, இச்சையடக்கத்தோடிருப்பதைக் கடினப்படுத்திவிடக்கூடும். மேலுமாக, கொள்ளை நோய் போன்றிருக்கும் வாசிக்கும் காரியங்கள், டெலிவிஷன் நிகழ்ச்சிகள், அல்லது புலன்களைத் தூண்டிவிடும் கருத்துக்களையுடைய திரைப்படங்கள் போன்ற எந்த ஒரு காரியத்தையும் விலக்கு. “மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கும்” என்பதாக சங்கீதக்காரன் ஜெபித்தான்.—சங்கீதம் 119:37.

தற்காப்பு நடவடிக்கைகள் விசேஷமாக நீ பலவீனமுள்ளவனாக இருக்கும் சமயங்களுக்காகவும்கூட எடுக்கப்படக்கூடும். மாதத்தின் சில சமயங்களில் அவளுடைய பாலுறவு சம்பந்தமான ஆசைகள் அதிக தீவிரமாக இருப்பதை ஓர் இளம் பெண் காணலாம். அல்லது ஒருவர் உணர்ச்சி பிரகாரமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது சோர்வுற்றிருக்கலாம். “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்பதாக நீதிமொழிகள் 24:10 எச்சரிக்கிறது. ஆகவே நீண்ட நேரத்திற்குத் தனிமையாக இருப்பதைத் தவிர்த்துவிடு. உன்னுடைய மனதைத் திறமைகளை உட்படுத்தும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபடுத்த கட்டியெழுப்பும் நடவடிக்கைகளைத் திட்டமிடு. அப்பொழுது உன்னுடைய மனது ஒழுக்கயீனமான எண்ணங்களிடமாக ஈர்க்கப்படுவதற்கு குறைந்தளவு வாய்ப்பே இருக்கும்.

ஓர் ஆவிக்குரிய முன்சென்று தாக்கும் நடவடிக்கை?

தன்னுடைய 11-வது வயது முதற்கொண்டு இந்தப் பழக்கத்தோடு போராடிய 27 வயதான ஓர் ஆள் முடிவாக வெற்றிபெற முடிந்தது. அவன் விவரித்தான்: “இது முன்சென்று தாக்கும் ஒரு காரியமாக இருந்தது. நான் ஒவ்வொரு நாளும் தவறாமல் குறைந்தது இரண்டு அதிகாரங்களையாவது பைபிளிலிருந்து வாசித்தேன்.” அவன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தவறாமல் இதைச் செய்தான். இன்னுமொரு கிறிஸ்தவன் ஆலோசனைச் சொல்கிறான்: “படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு, ஆவிக்குரிய காரியங்கள் சம்பந்தப்பட்ட எதையாவது வாசியுங்கள். நாளின் கடைசி எண்ணம் ஆவிக்குரிய ஒன்றாக இருப்பது மிக முக்கியமான காரியமாகும். அந்தச் சமயத்தில் ஜெபிப்பதும்கூட அதிகளவான நன்மையளிப்பதாக இருக்கும்.”

“கர்த்தருடைய கிரியையிலே பெருகுகிறவர்களாய்,” மற்றவர்களுக்கு பைபிளைப் போதிப்பது போன்ற காரியங்களும்கூட உதவி செய்கின்றன. (1 கொரிந்தியர் 15:58) தற்புணர்ச்சிப் பழக்கத்தை மேற்கொண்ட ஒரு பெண் விவரித்தாள்: “ஒரு முழுநேர பிரசங்கியாக என்னுடைய மனதும் சக்தியும் மற்றவர்கள் கடவுளோடு ஓர் அங்கீகரிக்கப்பட்ட உறவை அடைவதற்கு உதவி செய்வதனிடமாக திரும்பியிருப்பதுதானே இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க இப்பொழுது எனக்கு உதவி செய்யும் ஒன்று.”

இருதயப் பூர்வமான ஜெபத்தின் மூலமாக, நீயும்கூட “அசாதாரணமான வல்லமைக்காக” கடவுளை வேண்டிக்கொள்ளலாம். (2 கொரிந்தியர் 4:7, NW) “அவர் [கடவுள்] சமூகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.” (சங்கீதம் 62:8) ஓர் இளம் பெண் சொல்கிறாள்: “ஜெபம் உடனடியாக பெலன்தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த ஆசை எழும்பும் சமயத்தில் ஜெபிப்பதானது நிச்சயமாகவே உதவி செய்யும்.” மேலுமாக, எழுந்திருக்கையிலும், அந்த நாள் முழுவதும், உன்னுடைய தீர்மானத்தைக் கடவுளுக்குத் தெரிவி; அவருடைய பெலப்படுத்தும் பரிசுத்த ஆவிக்காக வேண்டிக்கொள்.—லூக்கா 11:13.

மற்றவர்களிடமிருந்து உதவி

உன்னுடைய தனிப்பட்ட முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லையென்றால், உனக்கு உதவக்கூடிய உன்னுடைய பெற்றோர் அல்லது ஒரு கிறிஸ்தவ மூப்பர் போன்ற யாராவது ஒருவரோடு பேசு. இளம் பெண்கள் ஒரு முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ பெண்ணிடம் இருதயப்பூர்வமாகப் பேசுவது உதவியளிப்பதாக இருக்கலாம். (தீத்து 2:3-5) நம்பிக்கையிழக்கும் நிலைக்கும் சென்றுவிட்ட ஓர் இளைஞன் சொன்னான்: “ஒருநாள் மாலை அதைக் குறித்து என்னுடைய தகப்பனோடு நான் தனியாகப் பேசினேன். நான் எல்லாவற்றையும் அவருக்குச் சொல்லுவது எவ்வளவோ கடினமாக இருந்தது. அவரிடம் சொல்லும்போது நான் அழுதேன், மிகவும் வெட்கப்பட்டேன். ஆனால் அவர் சொன்ன காரியத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். புன்சிரிப்போடே அவர் சொன்னார்: ‘நான் உன்னைக் குறித்து பெருமையடைகிறேன்,’ காரியத்தைக் குறிப்பாகச் சொல்வதற்கு நான் எவ்வளவாக கஷ்டப்பட வேண்டியதாய் இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். என்னுடைய மனநிலையையும் உறுதியையும் வேறு எந்த வார்த்தைகளும் அவ்வளவு மேம்படுத்தியிருக்காது.”

அந்த வாலிபன் தொடர்ந்து சொன்னான்: “நான் ‘வெகு தூரத்திற்குச்’ சென்றுவிடவில்லை என்பதைக் காண எனக்கு உதவி செய்வதற்கு என்னுடைய தகப்பன் சில வேதவாக்கியங்களைக் காட்டினார். என்னுடைய தவறான போக்கின் வினைமையானத் தன்மையை நான் புரிந்திருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள மேலும் சில வேதவாக்கியங்களைக் காட்டினார். சிறிது காலம் அந்தப் பழக்கத்தில் ஈடுபடாதிருக்கும்படியும், பிறகு மறுபடியும் அதை நாம் சிந்திக்கலாம் என்பதாகவும் சொன்னார். நான் அந்தப் பழக்கத்தில் மறுபடியும் விழுந்துவிடுவேனேயானால் அது என்னை அழுத்திவிட அனுமதிக்காமல் பார்த்து, அடுத்த முறை இணங்கிவிடாதபடிக்கு அதிக நாள் வரையாக அந்தப் பழக்கத்தில் ஈடுபடாதிருக்கும்படியாக அவர் எனக்குச் சொன்னார்.” இந்தப் பிரச்னையை முழுமையாக மேற்கொண்ட பிறகு, அந்த இளைஞன் மேலுமாகச் சொன்னான்: “என்னுடைய பிரச்னையை அறிந்த ஒருவர் இருந்து எனக்கு உதவினது அதிக நன்மையாக இருந்தது.”

பழைய நிலைக்குத் திரும்பவும் தவறி விழுதலைக் கையாளுதல்

இந்தப் பழக்கத்தை மேற்கொள்ள கடினமாக உழைத்தப் பிறகு, ஓர் இளைஞன் மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்ப விழுந்துவிட்டான். அவன் ஒப்புக்கொண்டது: “அது என்மீது ஒரு பெரிய சுமையாக இருந்தது. நான் மிகவும் தகுதியற்றவனாக உணர்ந்தேன். பிறகு நான் இந்த முடிவுக்கு வந்தேன்: ‘நான் வெகு தூரம் சென்றுவிட்டேன். எவ்விதத்திலும் யெகோவாவுடைய தயவு எனக்கு இல்லை. ஆகவே என்னையே நான் ஏன் ஒடுக்கிக்கொள்ள வேண்டும்?” என்றபோதிலும், மறுபடியும் பழைய நிலைக்குத் திரும்ப தவறி விழுந்துவிடுவதுதானே ஒருவர் போராட்டத்தில் தோல்வியடைந்துவிட்டிருக்கிறார் என்பதை அர்த்தப்படுத்தாது. 19 வயதான ஒரு பெண் நினைவுபடுத்துகிறாள்: “ஆரம்பத்தில் அது ஒவ்வொரு இரவும் சம்பவித்தது. அப்பொழுது நான் அதிகமாக யெகோவாவைச் சார்ந்திருக்க ஆரம்பித்தேன். அவருடைய ஆவியின் உதவியோடே இப்பொழுது ஒரு வருடத்தில் ஆறு தடவைகள் மட்டுமே தவறினேன். அதற்குப் பிறகு நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன், ஆனால் நான் தவறும் ஒவ்வொரு தடவையும் அடுத்தச் சோதனையைச் சந்திக்க பலமுள்ளவளாகிறேன்.” ஆகவே படிப்படியாக அவள் தன்னுடைய போராட்டத்தை வென்றுக்கொண்டிருக்கிறாள்.

ஒரு தடவைத் தவறி விழும்போது, அதற்கு வழிநடத்தியது என்ன என்பதை ஆராய்ந்து பார். ஓர் இளைஞன் சொல்கிறான்: “நான் எதைக் குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன் அல்லது சிந்தித்துக்கொண்டிருந்தேன் என்பதை மறுபடியும் யோசித்துப் பார்ப்பேன். நான் தவறியதற்கான காரணத்தை எப்பொழுதும் நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடும். இவ்விதமாக நான் அதைச் செய்வதை நிறுத்திவிட்டு, அதைச் சரிப்படுத்திக்கொள்ள முடியும்.”

ஒரு நல்ல போராட்டத்தின் பலன்கள்

தற்புணர்ச்சிப் பழக்கத்தை மேற்கொண்ட ஓர் இளைஞன் சொன்னான்: “இந்தப் பிரச்னையை மேற்கொண்டதினால், யெகோவாவுக்கு முன்பாக ஒரு சுத்த மனச்சாட்சியை நான் கொண்டிருக்க முடிந்தது. அதை வேறு எந்தப் பொருளுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்!”

ஆம், ஒரு நல்ல மனச்சாட்சி, ஒரு மேம்பட்ட சுய மதிப்பின் உணர்வு, அதிகப்படியான ஒழுக்கநெறி சம்பந்தமான பெலன், மற்றும் கடவுளோடு ஒரு நெருங்கிய உறவு ஆகியவை தற்புணர்ச்சிப் பழக்கத்தை எதிர்த்த ஒரு நல்ல போராட்டத்திற்கான பலன்கள். முடிவாக தற்புணர்ச்சிப் பழக்கத்தை மேற்கொண்ட ஓர் இளம் பெண் சொல்கிறாள்: “என்னை நம்புங்கள். இந்தப் பழக்கத்தை வெற்றி கொள்வதானது எடுக்கப்பட்ட முயற்சிக்கேற்ற பலனாக இருக்கிறது.”?

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻பாலுறவு சம்பந்தமான எண்ணங்களில் ஆழ்ந்திருப்பது ஏன் ஆபத்தானது? ஓர் இளைஞன் தன்னுடைய மனதை வேறு காரியத்தினிடமாகச் செலுத்த என்ன செய்யக்கூடும்?

◻தற்புணர்ச்சிப் பழக்கத்தில் ஈடுபடுவதற்கான தூண்டுதலைக் குறைக்க ஓர் இளைஞன் என்ன தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்?

◻ஏன் ஆவிக்குரிய முன்சென்று தாக்குதல் உதவியளிப்பதாக இருக்கிறது?

◻இந்தப் பழக்கத்தை மேற்கொள்வதில் ஜெபம் என்ன பாகத்தை வகிக்கிறது?

◻இது சம்பந்தமாக ஏதாவது பிரச்னை இருக்குமேயானால், யாரிலாவது நம்பிக்கை வைத்து அவரோடு பேசுவது ஏன் நன்மைபயப்பதாக இருக்கிறது?

[பக்கம் 208, 209-ன் பெட்டி/படம்]

ஆபாசமான இலக்கியம்—அடிமைப்படுத்துவதும் ஆபத்தானதும்!

“ஆபாசமான இலக்கியம் எல்லா இடங்களிலுமிருக்கின்றன: தெருவில் நீ நடந்து செல்கிறாய்—அங்கே அது செய்தித்தாள் விற்பனை சாவடியில் வெளிப்படையாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது,” என்பதாக 19 வயது ரோனால்ட் கூறினான். “எங்கள் ஆசிரியர்களில் சிலர் அதைப் பள்ளிக்குக் கொண்டுவந்து அடுத்த வகுப்புக்காக காத்திருக்கையில் தங்கள் மேசையில் வைத்து வாசித்துக்கொண்டிருப்பார்கள்.” ஆம், பல்வேறு வயது, பின்னணி மற்றும் கல்வி நிலையிலுள்ள ஆட்கள் ஆபாசமான இலக்கியத்தின் ஆர்வமுள்ள வாசகர்களாக இருக்கின்றனர். மார்க் என்ற பெயர் கொண்ட வாலிபன் சொன்னதாவது: “நான் பெண்கள் பத்திரிகைகளை வாசித்துப் படங்களைப் பார்த்தபோது, அது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது! . . . இந்தப் பத்திரிகைகளின் புதிய பிரதிகளுக்காக நான் ஆவலாக காத்திருந்தேன், ஏனெனில் நான் ஏற்கெனவே பார்த்து முடித்தவற்றைப் பார்ப்பது, அதே கிளர்ச்சியின் எழுச்சியை எனக்குத் தரவில்லை. இந்தப் பழக்கத்திற்கு அது என்னை அடிமைப்படுத்திவிட்டது.” ஆனால் அது ஒரு நல்ல பழக்கமா?

ஆபாசமான இலக்கியம், உணர்ச்சியில் ஆழ்த்தும் செய்தியைக் கொண்டிருக்கிறது: ‘பாலுறவு பிரத்தியேகமாக சுயதிருப்திக்காக மட்டுமே.’ அவற்றில் பெரும் பகுதி கற்பழிப்பாலும், கொடுமையான காம வெறியாலும் நிறைந்திருக்கிறது. பார்வையாளர்களில் பலர், “சாந்தமான முறைமைகள்” (மென்மையானவை) இனிமேலும் உணர்ச்சிகளைத் தூண்டுவிப்பதாக இல்லாதிருப்பதைக் கண்டு, இன்னும் அதிக மோசமாக இருக்கும் படங்களை அல்லது திரைப்படங்களை அவர்கள் நாடிப் போகிறார்கள்! நியு யார்க் நகர பல்கலைக்கழகத் துணைப் பேராசிரியர் எர்னஸ்ட் வான் டென் ஹாக் சொன்னவிதமாகவே: “ஆபாசமான இலக்கியம், மற்றவர்களை வெறும் மாம்ச துண்டங்களாகவும், நம்முடைய சொந்த சிற்றின்ப உணர்ச்சிக்காக ஏமாற்றி பயன்படுத்திக் கொள்ளப்படும் பொருட்களாகவுமே காண நம்மை அழைக்கிறது.”

ஆபாசமான இலக்கியம், மேலுமாக பாலுறவைப் பற்றிய இயற்கைக்கு முரணான, மிதமிஞ்சிய ஒரு கருத்தை அளிப்பதால், இது அநேகமாக விவாகப் பிரச்னைகளுக்கு வழிநடத்துகிறது. ஓர் இளம் மனைவி சொல்கிறாள்: “ஆபாச இலக்கியங்களை வாசிப்பது, புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த இயற்கைக்கு மாறான காரியங்களை என் கணவனோடு செய்ய ஆசைக் கொள்ளும்படிச் செய்தது. இது இடையறாத மனமுறிவுக்கும் பாலுறவு சம்பந்தமான ஏமாற்றத்துக்கும் வழிநடத்தியது.” நூற்றுக்கணக்கான பெண்களை வைத்து அவர்களுடைய வாழ்க்கையில், இவற்றை வாசிக்கும் ஆண்களோடு கொண்டிருந்த தொடர்பின் மீது ஆபாச இலக்கியங்களின் பாதிப்பு பற்றிய ஒரு சுற்றாய்வு 1981-ல் நடத்தப்பட்டது. ஏறக்குறைய பாதி பேர் அது வினைமையானப் பிரச்னைகளை உண்டுபண்ணியதாக தெரிவித்தனர். அது உண்மையில் சில விவாகங்களை அல்லது விவாக ஒப்பந்தங்களை அழித்துப்போட்டது. மனைவி ஒருத்தி வருத்தமாக கூறியது: “ஆபாச இலக்கியத்தின் துணை கொண்டு தனது பால் உணர்ச்சிகளை திருப்திசெய்துகொள்ளும் [என் கணவனின்] தேவையிலிருந்தும் ஆசையிலிருந்தும் நான் அவரைத் திருப்தி செய்ய முடியாதவள் என்பதைத் தானே ஊகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. . . . அவரைத் திருப்தி செய்ய முடிந்தால் நன்றாய் இருக்குமே என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்வதுண்டு, ஆனால் அவர் ப்ளாஸ்டிக்கையும் காகிதத்தையுமே விரும்புகிறார், அவருக்கு இருக்கும் இந்தத் தேவை என்னில் ஒரு பகுதியை அழித்துவிட்டிருக்கிறது. . . . ஆபாச இலக்கியம் . . . அன்புக்கு எதிரானது . . . அது அசிங்கமானது, கொடுமையாகவும் அழிப்பதாகவும் இருக்கிறது.”

ஆகிலும் கிறிஸ்தவ இளைஞர்களுக்கு ஆபாச இலக்கியம், கடவுளுடைய பார்வையில் சுத்தமுள்ளவர்களாக இருக்க ஒருவர் எடுக்கும் முயற்சிக்கு எதிர்மாறாக நேரடியாகச் செயல்படுவதே பெரும் கவலைக்குரியதாய் இருப்பது. (2 கொரிந்தியர் 6:17–7:1) பூர்வ காலங்களில் சிலர், “தங்கள் இருதய கடினத்தினால்” “ஒழுக்க (NW) உணர்வில்லாதவர்களாய்”, “சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி தங்களை காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்” என்பதை பைபிள் காண்பிக்கிறது. (எபேசியர் 4:18, 19) இப்பேர்ப்பட்ட ஒழுக்கக்கேட்டை நீ அனுபவிக்க விரும்புகிறாயா? ஆபாசமான இலக்கியத்தை எப்போதாவது பார்த்து திருப்தி செய்துகொள்வதும்கூட, மனசாட்சியின் மீது, உணர்ச்சிகளை அற்றுப்போகச் செய்யும் பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை நினைவில் வை. இது சில இளம் கிறிஸ்தவர்களை, தற்புணர்ச்சியில் ஈடுபடவும் இன்னும் மோசமாக, பாலுறவு ஒழுக்கக் கேட்டுக்கும் வழிநடத்தியிருக்கிறது. அப்படியென்றால், ஆபாசமான இலக்கியத்திலிருந்து விலகியிருக்க கடினமாக உழைப்பதே ஞானமான காரியமாகும்.

“அநேக சமயங்களில் ஆபாசமான இலக்கியம் என் கண் முன்னே நேராக இருக்கிறது” என்று இளம் டேரில் சொல்கிறாள். ஆகவே “என் கண் பார்வையை அதன் மீது செலுத்த நான் வற்புறுத்தப்படுகிறேன்; ஆனால் இரண்டாவது முறை நான் அதைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.” ஆம், அது பகிரங்கமாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கையில் அதைப் பார்க்க மறுத்துவிடு. சக மாணவர்கள் அதைப் பார்க்கும்படியாக உன்னைத் தூண்ட நீ அனுமதியாதே. 18 வயது கேரன் நியாயமாக குறிப்பிட்டது போலவே: “அபூரணமான ஒரு நபராக கற்புள்ளதும் புகழ்ச்சிக்குத் தகுதியானதுமான காரியங்களின் மீது என் மனதை ஊன்ற வைக்க முயற்சிசெய்வதே போதிய அளவு கடினமாக இருக்கிறது. நான் வேண்டுமென்றே ஆபாசமான இலக்கியத்தை வாசித்தால், அது இன்னும் அதிக கடினமாக இருக்குமல்லவா?”

[பக்கம் 206-ன் படம்]

“ஜெபம் உடனடியாக பெலன் தரும் ஒன்றாக இருக்கிறது. அந்த ஆசை எழும்பும் சமயத்தில் ஜெபிப்பதானது நிச்சயமாகவே உதவி செய்யும்”