Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் ஆசிரியரோடு நான் ஒத்துப்போவது எவ்வாறு?

என் ஆசிரியரோடு நான் ஒத்துப்போவது எவ்வாறு?

அதிகாரம் 20

என் ஆசிரியரோடு நான் ஒத்துப்போவது எவ்வாறு?

“நியாயமற்ற ஓர் ஆசிரியரை நான் சகிக்க முடியாது,” என இளம் விக்கி சொல்கிறாள். சந்தேகமில்லாமல் நீயும் அவ்வாறே உணருகிறாய். எனினும், 1981-ல் 1,60,000 அமெரிக்க இளைஞர்களைக் கண்டாராய்ந்ததில், 76 சதவீதத்தினர் தங்கள் ஆசிரியர்களை ஏதோ வகையில் பட்சபாதம் காட்டினரெனக் குற்றப்படுத்தினர்!

இளைஞர், உயர்தர வேலையென தாங்கள் உணருவதற்குக் கீழ்த்தர மதிப்பெண்களைத் தாங்கள் பெறுகையில் மனச்சங்கடமடைகின்றனர். சிட்சை மட்டுக்குமீறியதென அல்லது தேவைப்படவில்லையென தோன்றுகையில் அல்லது ஜாதிபேத மனச்சாய்வால் தூண்டப்பட்டதென தோன்றுகையில் சரியல்லவென கோபங்கொள்கின்றனர். ஆசிரியரின் செல்ல மாணாக்கர் தனிப்பட்ட கவனம் அல்லது தனிச் சலுகை கொடுத்து நடத்தப்படுகையில் அவர்கள் கோபமடைகின்றனர்.

ஆசிரியர்கள் தவறாதவர்களல்லர் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டியதே. ஏய்ப்பு நடவடிக்கைகள், பிரச்னைகள், ஆம், முன்சாய்வான தப்பெண்ணங்கள் ஆகியவற்றில் அவர்களும் போதிய பங்குகொண்டிருக்கின்றனர். எனினும், பைபிள் பின்வருமாறு எச்சரிக்கிறது: “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே.” (பிரசங்கி 7) ஆசிரியர்களுங்கூட ‘அநேக விஷயங்களில் தவறுகிறார்கள்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினோலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்.’ (யாக்கோபு 3:2) ஆகையால் உன் ஆசிரியரைச் சந்தேகித்துக் குற்றப்படுத்தாமல் நீ இருக்கக்கூடுமா?

ஃபிரட்டி என்ற ஓர் இளைஞன் தன் ஆசிரியர் “எல்லாரிடமும் சிடுசிடுப்பாய்ப் பேசுவதைக்” கவனித்தான். ஃபிரட்டி சாதுரியமாய் ஆசிரியரை அணுகி, அந்த எரிந்துவிழுந்துகொண்டிருந்த நடத்தைக்குக் காரணத்தைக் கண்டுபிடித்தான். “இன்று காலையில் என் காரில் தொந்தரவு ஏற்பட்டது. பள்ளிக்கு வரும் வழியில் அது மட்டுக்குமீறி வெப்பமேறிவிட்டது. நான் பள்ளிக்குப் பிந்திவர வேண்டியதாயிற்று,” என்று ஆசிரியர் விளக்கினார்.

ஆசிரியர்களும் அவர்களுடைய செல்ல மாணாக்கர்களும்

ஆசிரியரின் செல்ல மாணாக்கர்கள் தனிச் சலுகைக் கொடுக்கப்படுவதைப் பற்றியதென்ன? ஓர் ஆசிரியர் தனிப்பட்ட தேவைகளையும் நெருக்கடிகளையும் எதிர்ப்படுகிறார் என்பதை மனதில் வை. “வளர் இளம்பருவத்தினராயிருப்பது” என்ற புத்தகம் ஆசிரியர்கள் “வினைமையான இடர்ப்பாட்டுநிலையை” எதிர்ப்படுவதாக விவரிக்கிறது, அந்நிலையில் அவர்கள் ஒரு தொகுதி இளைஞரின் கவனத்தைக் கட்டுப்படுத்திக் கையாள முயற்சிசெய்ய வேண்டும், “அந்த இளைஞர்களின் மனம் பொதுவாய் எங்கேயாவது இருக்கிறது . . . 15 நிமிடங்களுக்குமேல் எதிலும் மனதை ஊன்றவைப்பதற்குப் பெரும்பாலும் பழக்கப்பட்டிராத, மிக உயர்ந்த அளவில் உற்சாகமற்று, கவனம் சிதறிப்போகச் செய்யக்கூடிய நிலையிலுள்ள 13-19 வயதுக்குட்பட்ட இளைஞரின் ஒரு தொகுதியைத் தங்கள் முன் கொண்டிருக்கின்றனர்.”

அப்படியானால், கடும் முயற்சியெடுத்துப் படிக்கிற, கவனஞ்செலுத்துகிற, அல்லது தன்னிடம் மரியாதையுடன் நடக்கிற மாணாக்கனின்பேரில் ஓர் ஆசிரியர் அளவுமீறி கவனஞ்செலுத்துவதில் அதிசயமெதுவும் உண்டா? உண்மைதான், ஆசிரியரைப் பிரியப்படுத்த முயலுவோராகத் தோன்றுவோர் உனக்குக் கிடைப்பதைப் பார்க்கிலும் அதிகக் கவனத்தைப் பெறுகையில் அது உனக்கு மனவேதனையை உண்டாக்கலாம். ஆனால் உன்னுடைய கல்வித் தேவைகள் புறக்கணிக்கப்படாதிருக்கும் வரையில், ஊக்கமாய் உழைக்கும் ஒரு மாணாக்கன் ஆசிரியரின் தனிப் பற்றுக்குரியவனாயிருந்தால் ஏன் மனச்சங்கடமடையவேண்டும் அல்லது பொறாமைகொள்ளவேண்டும்? அல்லாமலும், நீதானேயும் இன்னும் சற்று அதிக ஊக்கமாய் உழைப்பது நல்ல யோசனையாகும்.

வகுப்பறையில் போர்

ஒரு மாணாக்கன் தன் ஆசிரியரைப்பற்றிப் பின்வருமாறு கூறினான்: “நாங்களெல்லாரும் அவர்மேல் போர்தொடுக்க அறிவிப்பு செய்துவிட்டோம் என்று அவர் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்து எங்களை முதல் தாக்கத் தீர்மானித்துவிட்டார். அவர் ஒரு சித்தப்பிரமைபிடித்த ஆள்.” எனினும் சிறிது “சித்தப்பிரமை”யுடன் இருக்கத் தங்களுக்கு உரிமை இருக்கிறதென ஆசிரியர்கள் பலர் உணருகின்றனர். பைபிள் முன்னறிவித்தபடி, இவை “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள்,” மேலும் மாணாக்கர்கள் அடிக்கடி “தன்னடக்கமில்லாமலும், மூர்க்கத்துடனும், நற்பண்பை நேசியாமலும்,” இருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:1-3, NW) ஐ. மா. செய்தியும் உலக அறிவிப்பும் என்ற ஆங்கில செய்தித்தாள் பின்வருமாறு கூறியது: “நகர் பள்ளி மாகாணங்கள் பலவற்றில் வாழும் ஆசிரியர்கள் வன்முறைத்தாக்குதல்களின் பயத்தில் வாழ்கின்றனர்.”

முன்னாள் ஆசிரியர் ரோலன்ட் பெட்ஸ் என்பவர், ஆசிரியர்களைப்பற்றிப் பின்வருமாறு சொல்கிறார்: “பிள்ளைகள் . . . (ஞானார்த்தமாய்) அவர்களைத் தள்ளுகின்றனர், அவர்களைக் குத்துகின்றனர், அவர்கள் முடிவில் சடக்கென உடைவதற்கு முன்பு அவர்கள் எவ்வளவுதூரம் வளைந்து கொடுக்கிறார்கள் அல்லது சகித்துக்கொள்கிறார்கள் என்று வெறுமென காண்கின்றனர். . . . புதிய ஆசிரியர் ஒருவரை அவருடைய முறியும் நிலை மயிரளவு இருக்கும் வரையில் அவர்கள் தள்ளிவிட்டனரென உணருகையில், இன்னும் கொஞ்சம் தள்ளுகின்றனர்.” நீயாவது உன் வகுப்புத் தோழர்களாவது ஆசிரியரைத் தொல்லைப்படுத்துவதில் பங்குகொண்டீர்களா? அப்படியானால் உன் ஆசிரியரின் பிரதிபலிப்பின்பேரில் ஆச்சரியமடையாதே.

“இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்,” என்று பைபிளில் சொல்லியிருக்கிறது. (பிரசங்கி 7:7) சில பள்ளிகளில் வியாபித்திருக்கும் பயம் மற்றும் அவமதிப்பு நிரம்பிய சூழ்நிலையில், சில ஆசிரியர்கள் மிகைப்பட செயல்பட்டு கடுங்கண்டிப்பான கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றனர். வளரிளம் பருவத்தினரைப் பற்றிய குடும்ப வழிகாட்டு நூல் குறிப்பிடுவதாவது: “தங்கள் நடத்தையால் ஆசிரியரின் நம்பிக்கைகளை மதிப்புக்குறைவாக்குவதுபோல் தோன்றும் மாணாக்கர்கள் பொதுவாய்த் தங்கள் முறையாக மதிப்புக் குறைவாக்கப்படுகிறார்கள்.” ஆம், எதிர்ப்புணர்ச்சியுள்ள ஆசிரியர் பெரும்பாலும் தன் மாணாக்கர்களால் உருபடுத்தப்படுகிறார்!

மேலும் கொடுமையான வகுப்பறை குறும்புகளின் விளைவுகளையும் கவனித்துப்பார். பதிலாளாக வரும் ஆசிரியர்களை இளைஞர்கள் உட்படுத்தும் “சித்திரவதை அல்லது கடுந்தொல்லை”யைப் பற்றி இளம் வாலரி பேசுகையில் அவள் மிகைப்பட எதுவும் கூறவில்லை. ரோலன்ட் பெட்ஸ் மேலும் கூறுவதாவது: “பதிலாட்களை அவர்களுடைய வகுப்புகள் இரக்கமற்றவண்ணம் விரட்டுகின்றனர், அவர்கள் உடல் மற்றும் மனம் முறிவுறும் நிலைவரையில் பெரும்பாலும் தாக்குகின்றனர். தாங்கள் தப்பிக்கொள்ளும் நிச்சயத்தில், மாணாக்கர்கள்—தங்கள் புத்தகங்களை அல்லது பென்சில்களை எல்லாரும் ஒன்றுபோல் கீழே போடுவதுபோன்ற—திடீர் ஏடாகோடமான தாக்குதல்களில் பெருமகிழ்ச்சிக்கொள்கின்றனர். அல்லது ‘ஊமை விளையாட்டு விளையாடி’ அவர் சொல்லும் ஒரு வார்த்தையுங்கூட தங்களுக்குப் புரியாததைப்போல் நடிப்பதனால் தங்கள் ஆசிரியரை மலைத்துத் திணறவைக்க முயற்சி செய்யலாம். “நாங்கள் விளையாட்டுக்காக இடைஞ்சல் விளைவிக்கிறோம்,” என்று இளம் பாபி விளக்குகிறான்.

இருப்பினும், நீ வகுப்பறை கொடுமையை விதைத்தால், கோபத்துடன் எதிர்த்துப் போராடும் ஆசிரியரை அறுவடை செய்வாயானால் ஆச்சரியங்கொள்ளாதே. (கலாத்தியர் 6:7-ஐ ஒத்துப்பார்.) பொன் விதியை நினைவுபடுத்திக்கொள்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) வகுப்பறை குறும்புகளில் சேர்ந்துகொள்ள மறுத்துவிடு. உன் ஆசிரியர் சொல்வதற்குக் கவனஞ்செலுத்து. ஒத்துழை. காலப்போக்கில்—உன்னிடமாவது—அவருடைய எதிர்ப்பு உணர்ச்சி குறையும்.

‘என் ஆசிரியர் என்னை விரும்புகிறதில்லை’

சில சமயங்களில் பண்பியல்புகள் அல்லது ஏதோ வகையில் தவறாகப் புரிந்துகொண்டது உன் ஆசிரியரை உனக்கு எதிர்ப்பில் இருக்கும்படி வைக்கிறது; அறியும் அவா மிகுந்திருப்பது கலகத்துடன் குழப்பப்படுகிறது அல்லது சற்றுத் திடீரென மாறும் போக்கு முட்டாள்தனத்துடன் குழப்பப்படுகிறது. மேலும் ஓர் ஆசிரியர் உன்னை விரும்பாவிடில், அவர் உனக்குத் தொல்லைக்கொடுக்கும் அல்லது தாழ்த்தும் போக்குடையோராயிருக்கலாம். ஒருவருக்கொருவர் பகைமை வளருகிறது.

பைபிளில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; . . . கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (ரோமர் 12:17, 18) உன் ஆசிரியரை எதிரியாக்கிக்கொள்ளாதே. தேவையற்ற எதிர்ப்புகளைத் தவிர். குறைகூறுவதற்கு நியாயமான எந்தக் காரணத்தையும் உன் ஆசிரியருக்குக் கொடாதே. உண்மையில், நட்புடனிருக்க முயற்சிசெய். ‘நட்புடனா? அவரிடமா?’ என நீ கேட்கிறாய். ஆம், வகுப்புக்குள் வருகையில் உன் ஆசிரியருக்கு மரியாதையுடன் வரவேற்று-வணக்கம் தெரிவிப்பதன்மூலம் நன்னடத்தைக் காட்டு. நீ விடாது மரியாதைமிகுந்தத் தன்மையுடனிருப்பது—அவ்வப்போது மென்சிரிப்பும் காட்டுவது—உன்னைப்பற்றிய அவருடைய எண்ணத்தை மாற்றலாம்.—ரோமர் 12:20, 21-ஐ ஒத்துப்பார்.

ஒரு சூழ்நிலைமையிலிருந்து எப்பொழுதும் நீ சிரித்து வெளிவர முடியாதென்பது உண்மையே. ஆனால் பிரசங்கி 10:4-ல் பின்வருமாறு அறிவுரை கொடுத்திருக்கிறது: “அதிகாரியின் [அல்லது அதிகாரப் பதவியில் இருக்கும் ஒருவரின்] சினம் உன்மேல் [கடிந்துகொள்வதன் மூலம்] எழும்பின், உன் ஸ்தானத்தில் அமர்ந்திரு, விலகேல்; சாந்தம் பெருங்குற்றங்களை அமர்த்தும்.” (தி.மொ.) மேலும், “சாந்தமான பதில் கோபத்தை அகற்றும்,” என்பதையும் நினைவுபடுத்திக்கொள்.—நீதிமொழிகள் 15:1, தி.மொ.

‘இதைப் பார்க்கிலும் மேலான மதிப்பெண் எனக்குக் கிடைக்கவேண்டியது’

இது பொதுவான முறையீடு. இந்தப் பிரச்னையை உன் ஆசிரியரிடம் கலந்துபேசு. அரசன் தாவீது செய்த வினைமையானக் குற்றத்தை அவனுக்கு வெளிப்படுத்தும் கடினமான வேலைபொறுப்பை நாத்தான் நிறைவேற்றின முறையைப்பற்றி பைபிளில் சொல்லியிருக்கிறது. நாத்தான் அரண்மனைக்குள் திடுமென நுழைந்து குற்றச்சாட்டுகளைக் கத்திக்கூறவில்லை, அவன் புத்தி சாதுரியத்துடன் தாவீதை அணுகினான்.—1 சாமுவேல் 12:1-7.

அவ்வாறே நீயும் மனத்தாழ்மையுடனும், சாந்தமாயும், உன் ஆசிரியரை அணுகலாம். புரூஸ் உவெப்பர் என்ற முன்னாள் பள்ளி ஆசிரியர் பின்வருமாறு நம்மை நினைப்பூட்டுகிறார்: “மாணாக்கன் எதிர்த்துக் கலகஞ்செய்வது ஆசிரியரில் விட்டுக்கொடாமையைத் தூண்டுகிறது. நீ கத்திக் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டஞ்செய்தாலும் அல்லது படுமோசமான அநியாயமென கூறி பழிவாங்கப்போவதாகச் சபதங்கூறினாலும் உனக்கு எந்தப் பயனுமில்லை.” இன்னும் முதிர்ந்த முறையில் அணுகுவதை முயன்று பார். ஒருவேளை உன் ஆசிரியர் மதிப்பெண்தரும் முறையை விளங்கிக்கொள்ள உனக்கு அவர் உதவிசெய்யும்படி கேட்டு நீ தொடங்கலாம். பின்பு உவெப்பர் சொல்வதாவது, “தப்பாகத் தீர்த்தாரென்று சொல்வதைப் பார்க்கிலும் தெரியாமல் தவறவிட்டதனால் அல்லது தவறாகக் கணக்கிட்டதனால் உனக்குக் குறைவேற்பட்டதென நிரூபிக்க முயன்று பார். உன் ஆசிரியரின் சொந்த மதிப்பிடும் முறையைப் பயன்படுத்து; உன் மதிப்பெண்ணில் நீ எங்கே பிழையைக் காண்கிறாய் என்பதை அவருக்குக் காட்டு.” உன் மதிப்பெண்ணை மாற்றாவிடினும், உன் முதிர்ச்சிநிலை உன் ஆசிரியர் மனதில் உடன்பாடான பதிவைப் பெரும்பாலும் உண்டுபண்ணும்.

உன் பெற்றோருக்குத் தெரியப்படுத்து

எனினும், சில சமயங்களில் வெறும் பேச்சு பயனற்றதாக நிரூபிக்கிறது. சூசனின் அனுபவத்தை எடுத்துக்கொள். தேர்ச்சியில் தனிச் சிறப்புப்பெறும் மாணவியான அவளுக்குத் தன் ஆசிரியரில் ஒருவர் தோல்வி மதிப்பெண்களைக் கொடுக்கத் தொடங்கினபோது அவள் திடுக்கிட்டாள். பிரச்னை என்ன? சூசன் யெகோவாவின் ஒரு சாட்சியாக இருந்தாள், இதனிமித்தம் அவள் ஆசிரியை அவளை விரும்பவில்லையென ஒப்புக்கொண்டாள். “இது உண்மையில் மனக் குழப்பமாயிருந்தது, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை,” என சூசன் சொல்கிறாள்.

சூசன் பின்வருமாறு நினைவுபடுத்திக் கூறுகிறாள்: “நான் தைரியத்துடன் துணிந்து என் ஆசிரியைப்பற்றி (ஒற்றைப் பெற்றோரான) என் தாயிடம் சொன்னேன். அவர்கள், ‘சரி, நான் உன் ஆசிரியையிடம் பேசிப் பார்க்கிறேன்,’ என்று சொன்னார்கள். பெற்றோர் வரவேற்கப்படும் நேரத்தில் அவர்கள் போய் என் ஆசிரியையிடம் பிரச்னை என்னவெனக் கேட்டார்கள். என் தாய் உண்மையில் கோபப்படுவார்களென எண்ணினேன், ஆனால் அவர்கள் கோபப்படவில்லை. அவர்கள் வெறுமென சாந்தமாய் அவர்களிடம் பேசினார்கள்.” அந்த ஆசிரியை சூசனுக்கு வேறு ஆசிரியை ஏற்பாடு செய்தாள்.

எல்லாச் சிக்கலான விவகாரங்களும் நேர்மையான முடிவுகளை அடைவதில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதே, சில சமயங்களில் நீ வெறுமென சகித்துக்கொள்ளவேண்டியிருக்கலாம். ஆனால் இந்தக் காலப்பகுதியில் நீ உன் ஆசிரியருடன் சமாதானமாய் உடனொத்து வாழ்ந்தால், அடுத்த ஆண்டு எப்பொழுதும் இருக்கிறது, அப்பொழுது நீ ஒரு புது தொடக்கத்தைக் கொண்டிருப்பாய், ஒருவேளை வேறு வகுப்புத் தோழர்களுமிருப்பர்—ஒத்துப்போகக் கற்றுக்கொள்வதற்கு ஒரு புதிய ஆசிரியரும் இருக்கலாம்.

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ உன்னை நியாயமற்ற முறையில் நடத்தும் ஆசிரியரை நீ எவ்வாறு கருதலாம்?

◻ ஆசிரியர்கள் ஏன் செல்ல மாணாக்கர் என்போரின்பேரில் அடிக்கடி மிகுதியான கவனத்தைச் செலுத்துகின்றனர்?

◻ சலிப்புத்தருபவராகத் தோன்றும் ஓர் ஆசிரியரிடமிருந்து நீ எவ்வாறு கற்கலாம்?

◻ ஆசிரியர்களில் சிலர் ஏன் தங்கள் மாணாக்கரிடம் எதிர்ப்புணர்ச்சியுடன் இருப்பதுபோல் தோன்றுகிறது?

◻ வகுப்பறையில் நீ எவ்வாறு பொன்விதியைப் பொருத்திப் பயன்படுத்தலாம்?

◻ நியாயமற்ற முறையில் உனக்கு மதிப்பெண் கொடுக்கப்படுகிறது அல்லது நடத்தப்படுகிறாயென உணர்ந்தால் நீ என்ன செய்யலாம்?

[பக்கம் 158-ன் சிறு குறிப்பு]

ஆசிரியரின் செல்ல மாணாக்கருக்குச் செலுத்தப்படும் கவனம் அடிக்கடி கோபத்தைத் தூண்டிவிடுகிறது

[பக்கம் 163-ன் சிறு குறிப்பு]

“நகர் பள்ளி மாகாணங்கள் பலவற்றில் வாழும் ஆசிரியர்கள் வன்முறைத்தாக்குதல்களின் பயத்தில் வாழ்கின்றனர்.”—ஐ. மா. செய்தியும் உலக அறிவிப்பும்

[பக்கம் 160, 161-ன் பெட்டி/படம்]

‘என் ஆசிரியர் சலிப்படையச் செய்கிறார்!’

வளரிளம் பருவத்தினரைப்பற்றிய குடும்ப வழிகாட்டு நூல் பின்வருமாறு சொல்கிறது: “வளரிளம் பருவத்திலுள்ள மாணாக்கர்களில் பெரும்பான்மையர் ஆசிரியர்களைக் குற்றங்காணும் மனநிலையில் இருக்கின்றனர், அவர்கள் சலிப்படையச் செய்கின்றனர் அல்லது நகைச்சுவையற்றவர்கள் எனக் குறைகூறுகின்றனர் என்று சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.” சீக்கரத்திலோ பிந்தியோ நீயும் உன்னைக் ‘கண்ணீர்விட செய்யுமளவுக்கு’ வெறுமென சலிப்படையச் செய்யும் ஓர் ஆசிரியரை அடையலாம். நீ என்ன செய்வாய்?

தொழிற்பயிற்சிக் கலைகள், உடற்பயிற்சிக் கல்வி, இசை போன்ற வகுப்புகளில் பருவ வயது இளைஞரின் கவன ஊன்றுவிப்பின் நிலை மிக உயர்வாயிருக்கிறதென சமீப ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தினது. எனினும், மொழி மற்றும் சரித்திரத்தைக் கற்பிக்கும் வகுப்புகளில் கவன ஊன்றுவிப்பின் நிலை வெகு மோசமாய்க் கீழிறங்கிவிடுகிறது.

உடற்பயிற்சிக்-கல்வி அல்லது இசைக் கற்பிப்போர், கல்வி அளவேயான பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களைவிட அதிகத் திறமையுடையோரா? பெரும்பாலும் அவ்வாறு இல்லை. கல்வியளவேயான பாடங்களுக்கு மாணாக்கர் பலர் வெறுமென எதிர்மறையான மனப்பான்மையைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஒரு பாடம் சலிப்புத் தருகிறதென மாணாக்கர் முன்னதாகவே தீர்மானித்துவிட்டால், சாக்ரட்டீஸின் திறமைகளைக் கொண்ட ஓர் ஆசிரியருங்கூட அவர்களுடைய கவனத்தைச் சிதறாதபடி பற்றிவைப்பது மிகக் கடினம்! அப்படியானால், சில பாடங்களிடம் உன் மனப்பான்மையைத் தக்கவாறு சரிப்படுத்தவேண்டியிருக்குமா? நீ கற்பவற்றில் மேலுமதிக அக்கறையெடுப்பது பள்ளியின்மீதுள்ள சலிப்பை எடுத்துப்போடலாம்.

கற்பதில் அக்கறையுள்ள மாணாக்கருங்கூட, தங்களுக்கு “மோசமான” ஆசிரியர்கள் இருப்பதாகச் சில சமயங்களில் முறையிடுகின்றனர். ஆனால் “நல்ல” ஆசிரியர் என்பதுதான் என்ன? “என் கணக்கு ஆசிரியை எனக்குப் பிரியம் ஏனெனில் அவர்கள் மிக நகைச் சுவையுடையவர்கள்,” என்று ஓர் இளம் பெண் சொன்னாள். ஒரு பையன் தன் ஆங்கில ஆசிரியர் ‘ஏராளமான வேடிக்கைப் பேச்சுகளைப்’ பேசுவதற்காக அவரைப் புகழ்ந்துபேசினான்.

விரும்பத்தக்கவராக அல்லது மகிழ்விப்பவராகவும் இருப்பது ஓர் ஆசிரியருக்குப் பயனுள்ள தன்மையாயிருக்கையில், “மற்றவர்களுக்குப் போதிப்பதற்குப் போதிய தகுதிபெற்ற”வராயிருப்பதற்கு அது மாற்றீடு அல்ல. (2 தீமோத்தேயு 2:2) இங்கே ஆவிக்குரிய தகுதிகளை பைபிள் குறிக்கிறபோதிலும், ஒரு நல்ல ஆசிரியர் தான் கற்பிக்கும் பாடத்தை அறிந்திருக்கவேண்டுமென்ற உண்மையை முக்கியப்படுத்திக் காட்டுகிறது.

விசனகரமாய், அறிவும் கவர்ச்சிகரமான பண்பியல்பும் எப்பொழுதும் ஒன்றுசேர்ந்து வருகிறதில்லை. உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல் கடவுளுடைய வார்த்தையின் போதகனாக மிக மேம்பட்ட முறையில் தகுதிபெற்றிருந்தான். எனினும், “நேரில் வந்தாலோ அவன் தோற்றம் பலவீனமும் வசனம் அற்பமுமாயிருக்கிறது,” என்று பவுலின் நாளில் சில கிறிஸ்தவர்கள் குற்றங்கூறினார்கள். அதற்குப் பவுல்: “நான் பேச்சில் சாமானியனாயிருந்தும் அறிவில் சாமானியனல்ல,” என்று பதிலளித்தான். (2 கொரிந்தியர் 10:10; 11:6NW) பவுல் சொல்லவிருந்ததைச் சிலர் கவனியாமல்விட்டு பேச்சாளனாக அவன்பேரில் சாட்டியுரைத்தக் குறைபாடுகளைமட்டுமே கண்டிருந்தால், பெரும் மதிப்புவாய்ந்த அறிவை அடைவதை இழந்துவிட்டிருப்பர். பள்ளியைக் குறித்தும் அதே தவறைச் செய்யாதே! ஓர் ஆசிரியர் “மோசமானவர்” என்று தள்ளுபடி செய்வதற்கு முன்னால், ‘அவர் தான் பேசுபவற்றைப்பற்றி அறிவுபெற்றிருக்கிறாரா? அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள முடியுமா?’ என்று உன்னை நீயே கேட்டுக்கொள்.

சலிப்புத்தரும் முறையில் பேசும் ஆசிரியருக்கு வழக்கமாய்க் கொடுக்கும் கவனத்தைப் பார்க்கிலும் அதிகக் கவனத்தை நீ கொடுக்கவேண்டியிருக்கலாம். அவர் சொல்வதற்கிருப்பதன்பேரில் உன் கவனத்தை ஒருமுகப்படுத்தி நிலைத்திருக்க வைப்பதற்கு குறிப்புகள் எடுக்க முயற்சிசெய். வகுப்பறையில் செய்யப்படும் எழுச்சியற்ற கலந்தாராய்ச்சிகளை வீட்டில் கூடுதலான தகவலைப் படிப்பதன்மூலம் நிறைவாக்கு.

தானும் ஆசிரியையான பர்பாரா மேயர், மேலும் சொல்வதாவது: “அதே பாடங்களைத் தாங்கள் நினைவுபடுத்த முடியாத தடவைகள் திரும்பத் திரும்பக் கற்பித்துள்ள ஆசிரியர்கள், ஒரே விதமாக நடத்தும் முறையில் செல்லும் போக்குடையோராகின்றனர்.” காரியங்களுக்குக் கிளர்ச்சியூட்ட நீ என்ன செய்யலாம்? “ஒரு மாற்றமாக உன் கையைத் தூக்கி மேலுமதிகத் தகவலைத் தரும்படி கேள் . . . தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் உனக்கு உண்மையில் சொல்லும்படி செய்.” இதன்பேரில் ஆசிரியர் கோபங்கொள்வாரா? நீ மரியாதையுடன் இதைச் செய்தால் கோபங்கொள்ளமாட்டார். (கொலோசெயர் 4:6, தி.மொ.) மேயர் சொல்வதாவது: “உன் ஆசிரியர் மேலும் சிறிது அதிகம் தயாரித்தும், வெறும் மேலீடான தகவலைப்பார்க்கிலும் அதிகத் தகவலுடனும் வகுப்புக்கு வருகிறாரென நீ கண்டுபிடிப்பாய்.”

ஆர்வம் தொற்றும் தன்மையுடையது, கற்க விரும்பும் உன் ஆவல் உன் ஆசிரியருக்குள் சிறிது உயிரை உட்புகுத்தலாம். நிச்சயமாகவே தீவிரமான மாற்றத்தை எதிர்பார்க்காதே. நீ வெறுமென சகித்துப்போகவேண்டியிருக்கும் சில வகுப்புகளும் இருக்கலாம். ஆனால் நீ நன்றாய்ச் செவிகொடுத்துக் கேட்பவனாயிருந்து, நடப்பவற்றில் உண்மையில் அக்கறைகொண்டிருந்தால்—சலிப்பூட்டும் ஆசிரியரிடமிருந்தும்கூட நீ கற்றுக்கொள்ளலாம்.

[பக்கம் 162-ன் படம்]

பள்ளி வன்முறைச் செயல்களின் பெருக்கம் ஆசிரியரின் வேலையைக் கடினமான ஒன்றாக்கிவிட்டது

[பக்கம் 164-ன் படம்]

ஏதோ அநியாயம் நடந்திருக்கிறதென நீ உணர்ந்தால், மரியாதையுடன் உன் ஆசிரியரை அணுகு