Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போதை மருந்துகளுக்கு ‘முடியாது’ என்று ஏன் சொல்ல வேண்டும்?

போதை மருந்துகளுக்கு ‘முடியாது’ என்று ஏன் சொல்ல வேண்டும்?

அதிகாரம் 34

போதை மருந்துகளுக்கு ‘முடியாது’ என்று ஏன் சொல்ல வேண்டும்?

“நான் உணர்ச்சி மிகுந்த குழந்தை” என்று 24 வயது இளம் மனிதன் மைக் சொல்லுகிறான். “சில சமயங்களில் நான் பயந்தும் என்னைப் போல் ஒத்த வயதினரால் பயமுறுத்தவும்படுகிறேன். நான் சோர்வினாலும், பாதுகாப்பின்மையினாலும் துன்பமடைந்து சில சமயங்களில் தற்கொலை செய்யவும் முற்பட்டுள்ளேன்.”

ஆன், 36 வயதினளாய் தன்னை “உணர்ச்சி விஷயத்தில் இளம் வயதினளாகவும், தன்னைப்பற்றி மதிப்புக் குறைவாக கருதுகிறவளாகவும்” விவரிக்கிறாள். மேலும் அவள் சொல்லுகிறாள்: “நான் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழக் கஷ்டப்படுகிறேன்.”

மைக்கும், ஆனும் அதிக இளைஞராயிருந்தபோது செய்த ஒரு தீர்மானத்தின் விளைவுகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். அதாவது போதை மருந்துகளைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற தீர்மானம். அநேக இலட்சக்கணக்கான வாலிபர் இன்றைக்கு அதைத்தான் செய்து வருகின்றனர், கொக்கேய்னிலிருந்து மரிஹுவானா வரைக்குமாக சரீரத்துக்குள் ஏற்றிக்கொண்டும், விழுங்கிக்கொண்டும், முகர்ந்துகொண்டும், புகைத்துக்கொண்டுமிருகின்றனர். சில வாலிபருக்கு ‘போதை மருந்துகளில் ஈடுபடுதல்’ பிரச்னைகளிலிருந்து தப்புவதற்கான ஒரு வழியாக இருக்கிறது. மற்றவர்கள் இது என்ன என்று பார்க்கும் ஆசையினால் மாட்டிக் கொள்ளுகிறார்கள். மற்றும் அநேகர், சதா ஒரே காரியங்களைச் செய்வதிலிருந்தும், சோர்விலிருந்தும் கொஞ்சம் விடுபட போதை மருந்துகளை உபயோகப்படுத்துகின்றனர். ஒருமுறை ஆரம்பித்து விட்டார்களென்றால், அதனுடைய வெறும் இன்பத்துக்காகத் தொடர்ந்து போதை மருந்துகளை உபயோகப்படுத்துகின்றனர். 17 வயதான கிரான்ட் சொல்லுகிறான்: “அதனுடைய விளைவுகளுக்காகவே நான் மரிஹுவானாவைப் புகைக்கிறேன். அமைதியான நிலைக்காகவோ அல்லது சமூகக் காரணங்களுக்காகவோ அல்ல. . . . சிநேகிதர்களுடைய அழுத்தத்தினாலும்கூட அல்ல, நான்தானே விரும்பியதற்காகவே புகைக்கிறேன்.”

எதுவாக இருந்தாலும், இப்பொழுதோ அல்லது பிற்பாடோ போதை மருந்துகளை நீங்கள் எதிர்ப்படுவீர்கள் அல்லது நேரடியாகவும் அளிக்கப்படுவீர்கள் என்ற வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஓர் இளைஞன் சொல்லுகிறான்: “எங்கள் பள்ளியில் உள்ள காவற்காரர்களும்கூட கஞ்சா (மரிஹுவானா) விற்கிறார்கள். போதைப் பொருட்கள் திறந்த விதமாய் விற்கப்படுகின்றன. அது அநேகரால் விரும்பப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டாலும், போதை மருந்துகளுக்கு ‘முடியாது’ என்று நீங்கள் சொல்லுவதற்கு நல்ல காரணம் இருக்கிறது. ஏன் அப்படி?

போதை மருந்துகள் வளர்ச்சியைத் தடுக்கிறது

மைக், ஆன் ஆகியோரைப்போலவே பிரச்னைகளைத் தவிர்க்க போதை மருந்துகளை உபயோகப்படுத்தும் இளைஞர்களை கவனியுங்கள். முந்திய அதிகாரத்தில் காட்டப்பட்டதுபோல் உணர்ச்சிசம்பந்தப்பட்ட வளர்ச்சி, வாழ்க்கையின் சவால்களை எதிர்ப்படுவதிலும், இவற்றைக் கையாளுவதிலும், தோல்வியடையும்போது நிலைத்திருப்பதிலும் வருகிறது. பிரச்னைகளைச் சமாளிப்பதில் இரசாயனப் பொருட்களிடம் அடைக்கலம் புகும்போது உணர்ச்சி சம்பந்த அபிவிருத்தி தடைபடுகிறது. பிரச்னைகளை மேற்கொள்வதற்காக வேண்டிய திறமைகளை விருத்தி செய்வதில் அவர்கள் தவறுகின்றனர்.

எந்தத் திறமையும் போலவே, காரியங்களை மேற்கொள்ளும் திறமை பழக்கத்தினால் வருகிறது. உதாரணமாக, கால்பந்து விளையாடுபவரை கவனித்திருக்கிறீர்களா? அவர் தன் தலையையும் கால்களையும், அதிசயமாக உபயோகப்படுத்தக் கூடியவராய் இருக்கிறார்! என்றபோதிலும் அந்த விளையாட்டுக்காரர் இந்தத் திறமையை எப்படி விருத்தி செய்தார்? அநேக வருடங்களாக பயிற்சி செய்ததன் காரணமாக. பந்தை உதைத்து, பந்தோடு சேர்ந்து ஓடி அநேக காரியங்களைச் செய்ய அந்த விளையாட்டில் திறமை மிக்கவராய் ஆகும் வரைக்கும் பயிற்சி செய்தார்.

மேற்கொள்ள தேவைப்படும் திறமைகளை விருத்தி செய்வதிலும் அப்படித்தான். பயிற்சியை உட்படுத்துகிறது—அனுபவம்! என்றாலும் நீதிமொழிகள் 1:22-ல் பைபிள் இவ்விதமாக சொல்லுகிறது: “பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும் . . . மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எது வரைக்கும் இருக்கும்.” போதை மருந்துவினால் உந்தப்பட்ட சூழ்நிலைக்குள் ஓர் இளைஞன் ஒளிந்துகொள்வது, “பேதைமையை விரும்பு”கிறான் என்று காட்டுகிறது. வாழ்க்கையை கையாளுவதற்கும் பிரச்னைகளை மேற்கொள்ளுவதற்கும் தேவையான அறிவையும் திறமைகளையும் விருத்தி செய்ய அவன் தவறுகிறான். உங்கள் பருவ வயதினரோடு பேசுதல் (Talking With Your Teenager) என்ற புத்தகம் போதை மருந்துகளை உபயோகப்படுத்துகிற இளவயதினரைப் பற்றி சொல்லுகிறது: “வாழ்க்கையின் துக்ககரமான சமயங்கள், இப்படிப்பட்ட மருந்துகள் இல்லாமலே சமாளிக்கப்படலாம் என்ற படிப்பினை ஒருபோதும் கற்றுக்கொள்ளப்படுவது இல்லை.”

தப்பிப்பதற்காகப் போதை மருந்துகளை உபயோகப்படுத்தின ஆன் இவ்விதம் அறிக்கை செய்கிறாள்: “14 வருடங்களாக நான் என் பிரச்னைகளைக் கையாளவில்லை.” மைக் அதேப்போன்ற எண்ணத்தை வெளிப்படுத்தி சொல்லுகிறான்: “என் 11-வது வயது முதற்கொண்டே போதை மருந்துகளை உபயோகித்திருக்கிறேன். நான் 22 வயதாயிருக்கையில் அதை நிறுத்தினபோது, ஒரு குழந்தையைப் போல உணரக்கூடியவனாக இருந்தேன். பாதுகாப்பைப் பெறுவதற்காக மற்றவர்களோடு ஒட்டிக்கொண்டேன். போதை மருந்துகளை உபயோகிக்க நான் ஆரம்பித்தபோது, என்னுடைய உணர்ச்சி சம்பந்தமான அபிவிருத்தி நின்றுவிட்டது என்பதை உணர்ந்துகொள்ள ஆரம்பித்தேன்.”

பதிமூன்று வயதிலிருந்து போதை மருந்துகளை தவறாக உபயோகித்த ஃப்ராங்க் “அபிவிருத்திக்கான அத்தனை வருஷங்களை நான் வீணாக்கிவிட்டேன். நான் அவற்றை நிறுத்திவிட்டபோது, வாழ்க்கையைக் கையாளுவதற்கு முற்றிலும் தகுதியற்றவனாக இருந்தேன் என்று என்னைக் காண்பதில் அது துக்ககரமான உணர்வாக இருந்தது. நான் அதே உணர்ச்சிக் குழப்பத்தில் இருக்கக்கூடியவனாக இருந்தேன்.”

போதை மருந்துகள் என் உடல்நலத்தை பாழாக்குமா?

இது சிந்தனைக்குரிய இன்னொரு அம்சம். கடுமையான போதை மருந்துகள் என்று சொல்லப்படுபவைகள் உங்களைக் கொல்லக்கூடும் என்று அநேக வாலிபர் உணருகின்றனர். ஆனால் மிருதுவான போதை மருந்துகள் என்று அழைக்கப்படுகிற மரிஹுவானாவைப் பற்றி என்ன? அவைகளைப் பற்றி சொல்லப்படுபவை அனைத்தும் வெறுமென பயப்படுத்தி விரட்டும் உபாயங்களா? இதற்கு விடையளிக்க, மரிஹுவானா என்ற மருந்தில் கவனம் செலுத்துவோமாக.

மரிஹுவானா (பாட், ரீபர், புல், கஞ்சா அல்லது களை என்றும் அழைக்கப்படுகிறது) நிபுணர்களுக்குள்ளே அதிக விவாதத்திற்குரிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. ஒத்துக்கொள்ளும் விதமாக, அநேகரால் விரும்பப்படுகிற இந்த மருந்தைப் பற்றி அதிகம் தெரிந்தில்லை. ஒரு விஷயம் என்னவென்றால் மரிஹுவானா வெகு சிக்கலானது; ஒரு மரிஹுவானா சிகரெட்டின் புகையில் 400-க்கும் அதிகமான இரசாயன சேர்க்கைகள் இருக்கின்றன. புகைத்தலின் காரணமாக புற்றுநோய் வருகிறது என்று மருத்துவர்கள் கண்டுபிடிக்க 60 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதே பிரகாரம் மரிஹுவானாவின் 400 சேர்க்கைகள் மனித உடலுக்கு என்ன செய்யும் என்று நிச்சயமாக சொல்ல அநேக பத்தாண்டுகள் எடுக்கக்கூடும்.

என்றபோதிலும் அநேக ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி உரைகளை படித்த பிற்பாடு, மதிப்புடைய அமெரிக்க ஐக்கிய மாகாண மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு நிபுணர் குழு இவ்விதமான முடிவுக்கு வந்தது: “இதுவரைக்குமாக பிரசுரிக்கப்பட்டுள்ள விஞ்ஞானத்தின் சாட்சியங்கள், மரிஹுவானா மன, திரேக விளைவுகளை ஒரு பரந்த அளவில் உண்டாக்கச் செய்து, அவைகளில் சில குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ் மனித சுகாதாரத்துக்கே கெடுதல்களை விளைவித்திருக்கின்றன.” இப்படிக் கெடுதலான விளைவுகளில் சில யாவை?

மரிஹுவானா—அது உங்கள் உடலுக்கு என்ன செய்கிறது?

உதாரணமாக, நுரையீரலைக் கவனியுங்கள். மரிஹுவானாவை வெகுவாக ஆதரிக்கிறவர்களும்கூட புகையை உட்கொள்ளுவது உங்களுக்கு நன்மையைத் தராது என்று ஒத்துக்கொள்ளுகின்றனர். மரிஹுவானாவின் புகை, புகையிலையின் புகையைப் போல், தார் போன்ற கெடுதலான மருந்துகளை உடையதாக இருக்கிறது.

டாக்டர் ஃபாரஸ்ட் S. டென்னண்ட் (சின்னவர்) மரிஹுவானாவை உபயோகித்து வந்த 492 அ.ஐ. மாகாண இராணுவ வீரர்களை பார்வையிட்டார். அவர்களில் 25 சதவீதத்தினர் “புகைத்தலினாலே தொண்டைப் புண்ணை உண்டாக்கிக் கொண்டும் சுமார் 6 சதவீதத்தினர் நுரையீரல் வியாதியினால் கஷ்டப்படுவதாகவும் அறிக்கை செய்தார்.” மற்றொரு கண்டுபிடிப்பிலே மரிஹுவானாவை உபயோகித்த 30 பேரில் 24 பேருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்டவையான “புற்றுநோயின் ஆரம்ப நிலைகளைக் குறிப்பிடுவதாக” இருந்தது.

உண்மையாகவே, இப்படிப்பட்டவர்களுக்குக் கண்டிப்பாக புற்றுநோய் வியாதி வரும் என்று ஒருவரும் சொல்லமுடியாது. ஆனால் அந்த ஆபத்தைக் கொண்டிருக்க உங்களுக்கு விருப்பமா? மேலும், பைபிள், கடவுள் “எல்லாருக்கும் ஜீவனையும் சுகத்தையும்” கொடுக்கிறார் என்பதாக சொல்லுகிறது. (அப்போஸ்தலர் 17:25) நுரையீரலையும், தொண்டையையும் கெடுக்கிற ஒன்றை வேண்டுமென்றே உட்கொள்ளுவீர்கள் என்றால் ஜீவனைக் கொடுப்பவருக்கு மரியாதை காட்டுகிறீர்கள் என்று அர்த்தமாகுமா?

பிரசங்கி 12:6-ல் மனித மூளையானது “பொற்கிண்ணி” என்று கவிதை நடையில் சொல்லப்பட்டுள்ளது. கைவிரல்கள் அடங்கிய கைமூட்டுவை விட சற்றே பெரியதாயும், மூன்று பவுண்டுகளே (1.4 கிலோ கிராம்) எடையுள்ளதாயும் உள்ள மூளை, ஞாபகங்களை சேமித்து வைக்கும் இடமாக மட்டும் அல்லாமல் உங்களுடைய முழு நரம்பு மண்டலத்தையும் வழிநடத்துகிற மையமாகவும் இருக்கிறது. அதை மனதில் கொண்டவர்களாய், அ.ஐ.மா. மருத்துவ நிறுவனம் கொடுக்கிற எச்சரிக்கையைக் கவனியுங்கள்: “மரிஹுவானா மூளையின் மீது இரசாயன மற்றும் மின்சார சம்பந்தமான மாற்றங்களையும் நுண்ணிய விதமாக உண்டுபண்ணுகிறது என்று நம்பிக்கையோடு சொல்லக்கூடும்.” மரிஹுவானா நிரந்தரமாக மூளையைப் பாழ்செய்கிறது என்று சொல்லக்கூடும்படி தற்பொழுது முடிவான நிரூபணம் இல்லை. என்றபோதிலும் மரிஹுவானா “பொற்கிண்ணி”க்கு எந்த விதத்திலாவது கெடுதலை விளைவிக்கக்கூடும் என்ற சாத்தியத்தை நாம் உதாசினமாகத் தள்ளிப்போட முடியாது.

நீங்கள் ஒருநாள் விவாகம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெறும் அந்த எதிர்பார்ப்பைப் பற்றி என்ன? “சோதனைக்காக உபயோகப்படுத்தப்படும் மிருகங்களுக்கு அதிக அளவாகக் கொடுக்கப்படும்போது, பிறப்பில் குறைகளை உண்டுபண்ணுகிறது” என்று மரிஹுவானாவைப்பற்றி அ.ஐ.மா. மருத்துவ நிறுவனம் அறிக்கை செய்திருக்கிறது. ஆனால் அதே விளைவை மனிதர்கள் மீது உண்டுபண்ணுகிறது என்று இதுவரைக்கும் நிரூபிக்கப்படவில்லை. என்றாலும் பிறப்பின் குறைகள் (ஹார்மோன் DES-னால் உண்டுபண்ணப்படுவது போன்று) வெளிக்காட்டப்படுவதற்கு பல வருடங்கள் எடுக்கின்றன. ஆகவே மரிஹுவானாவைப் புகைப்பவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு எதிர்காலம் எதை வைத்திருக்கிறது என்பதை இனிமேல்தான் பார்க்க முடியும். டாக்டர் கேபிரியேல் நாகாஸ் மரிஹுவானாவைப் புகைத்தல் “ஜீவ அணுக்களைப் புரட்டி விடுவதாக” இருக்கிறது என்று சொல்லுகிறார். “பிள்ளைகள் யெகோவாவால் வரும் சுதந்தரம்” என்று எண்ணுபவர்கள் இப்படிப்பட்ட ஆபத்தை எடுக்கலாமா?—சங்கீதம் 127:3, NW.

போதை மருந்துகள்—பைபிளின் நோக்குநிலை

சந்தேகமில்லாமல், மரிஹுவானா பலரால் உபயோகப்படுத்துகிற மருந்துகளில் ஒன்று. இன்பத்துக்காக மனதை மாற்றும் மருந்துகளை உபயோகிக்காமல் இருப்பதற்குப் போதிய காரணம் இருக்கிறது என்பதைச் சித்தரித்து காட்டுகிறது. பைபிள் இவ்விதமாக சொல்லுகிறது: “வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்.” (நீதிமொழிகள் 20:29) இள வயதினராக நீங்கள் நல்ல ஆரோக்கியத்தைச் சந்தேகமில்லாமல் அனுபவிப்பீர்கள். அதை வேண்டாமென்று உதறித்தள்ளும் ஆபத்தான நிலைக்கு நம்மை ஏன் உட்படுத்த வேண்டும்?

என்றாலும், அதி முக்கியமாக இவ்விஷயத்தில் பைபிளின் நோக்குநிலை நமக்கு உள்ளது. “நல்லாலோசனையையும் காத்துக்கொள்” என்று பைபிள் சொல்லுகிறது. அதைத் தகாத விதமாய் இரசாயனத்தை உபயோகித்து பாழ்செய்துவிட வேண்டியதில்லை. (நீதிமொழிகள் 3:21) மேலும் பைபிள் நமக்குக் கொடுக்கிற புத்திமதி: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” உண்மையாகவே, போதை மருந்துகளை துர்ப்பிரயோகித்தல் போன்ற காரியங்களைத் தவிர்த்து ‘எல்லா அசுசியிலிருந்தும் தங்களைச் சுத்திகரித்துக் கொண்டவர்’களிடத்தில்தான் “நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்” என்று கடவுள் வாக்குப்பண்ணக்கூடியவராய் இருக்கிறார்.—2 கொரிந்தியர் 6:17–7:1.

என்றபோதிலும் போதை மருந்துகளை வேண்டாமென்று சொல்லுவது எளிதல்ல.

சகாக்களும் அவர்களுடைய அழுத்தங்களும்

குளிர்ந்த கோடைகால சாயங்காலம் ஒருநாள் ஒன்றுவிட்ட சகோதரர்களும் நெருங்கிய நண்பர்களுமாகிய ஜோவும் ஃப்ராங்கும், இருவரும், ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டனர். அந்த இருவரில் சிறியவனான ஜோ, “மற்றவர்கள் எதைச் செய்தாலும் சரி, நாம் போதை மருந்துகளிடமாக ஒருபோதும் விளையாட வேண்டாம்,” என்று யோசனை கூறினான். இக்காரியத்தின் பேரில் இருவரும் ஒத்துக்கொண்டு கைகுலுக்கினர். ஆனால் ஐந்தே வருஷங்களுக்குப் பிறகு போதை மருந்து சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு விபத்தில் ஜோ தன் காரில் மரித்தவனாகக் காணப்பட்டான்.” ஃப்ராங்க் பலத்த விதமாக போதை மருந்துகளுக்கு அடிமையாகிவிட்டான்.

என்ன தவறு நடந்தது? பைபிளில் கூறப்பட்டுள்ள அவசரமான எச்சரிக்கையில்தான் பதில் பதிந்துள்ளது: “மோசம் போகாதிருங்கள். ஆகாத கூட்டுறவு நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, NW) ஜோவும் ஃப்ராங்கும் தவறான கூட்டத்திற்குள் புகுந்தனர். போதை மருந்துகளை உபயோகிப்பவர்களோடு அதிகம் அதிகமாக சேர, அவர்கள்தாமே போதை மருந்துகளை விளையாட்டுக்காக உபயோகித்துப் பார்க்க ஆரம்பித்தனர்.

பிள்ளைகளிலும் வளரிளமைப் பருவத்தினரிலும் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் நடத்தை (Self-Destructive Behaviour in Children and Adolescents) என்ற புத்தகம் இவ்வாறு சொல்லுகிறது: “இளைஞர் பெரும்பாலும் வெகு நெருங்கிய ஒரு நண்பனால் பலவித போதை மருந்துகளிடத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறான் அல்லது சிக்க வைக்கப்படுகிறான் . . . (அவனுடைய) நோக்கங்கள் எல்லாம் தூண்டி எழுப்பும் அல்லது இன்பகரமான அனுபவத்தில் பங்குகொள்ளுவதற்காக.” முன்னாலே அறிமுகப்படுத்தப்பட்ட மைக் இதை உறுதிப்படுத்தி சொல்லுகிறான்: “கையாளுவதற்குக் கடினமான காரியங்களில் ஒன்றாக எனக்கு இருந்தது என் சகாக்களின் அழுத்தம்தான். . . . முதல்தடவையாக நான் மரிஹுவானாவைப் புகைத்தது என்னோடிருந்த எல்லாரும் புகைத்ததினால்தான், அவர்களில் ஒருவராக நான் இருக்க விரும்பினேன்.”

வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், உங்களுடைய நண்பர்கள் போதை மருந்துகளை உபயோகிக்க ஆரம்பிப்பார்கள் என்றால் நீங்களும் இணங்கிச்செல்ல நண்பர்களின் பலமான அழுத்தத்துக்குள் வருகிறீர்கள். உங்களுடைய நண்பர்கள் வட்டத்தை மாற்றிக்கொள்ளவில்லையென்றால், அநேகமாக நீங்கள் கடைசியில் போதை மருந்துகளை உபயோகிக்கும் ஒருவராக ஆகிவிடுவீர்கள்.

‘ஞானிகளோடு நடந்து செல்லுதல்’

“ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான். மூடருக்குத் தோழனோ நாசமடைவான்,” என்று நீதிமொழிகள் 13:20 சொல்லுகிறது. இதை விவரித்துக்காட்ட, சளி பிடிக்காமல் தவிர்க்க முயன்று கொண்டிருக்கிறீர்கள் என்றால், அவ்விதமாக சளி பிடித்தவர்களோடு நெருங்கி இருப்பதைத் தவிர்ப்பீர்கள் அல்லவா? “இதே விதமாகத்தான்” என்று வளரிளமைப் பருவ சகாக்களின் அழுத்தம் என்ற புத்தகம் “போதை மருந்துகளைத் . . . தகாதவிதமாய் உபயோகிக்காமல் இருக்க ஆரோக்கியமான சமநிலையான நிலைமைகளைக் காத்துக்கொள்வதும் கெடுதலான பாதிப்புகளுக்கு நம்மை இரையாக்காமல் குறைத்துக்கொள்வதும் அவசியமாக உள்ளது” என்று குறிப்பிடுகிறது.

ஆகவே போதை மருந்துகளுக்கு ‘முடியாது’ என்று சொல்ல விரும்புகிறீர்களா? அப்படியானால் யாரோடு கூட்டுறவு கொள்ளுகிறீர்கள் என்பதில் கவனமாயிருங்கள். கடவுள் பயம் உள்ள கிறிஸ்தவர்களின் நட்பைத் தேடுங்கள். நீங்கள் போதை மருந்துகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற உங்கள் தீர்மானத்தை அவர்கள் ஆதரிப்பார்கள். (1 சாமுவேல் 23:15, 16-ஐ ஒத்துப்பாருங்கள்.) யாத்திராகமம் 23:2-ல் உள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள். சத்தியம் செய்து சாட்சி சொல்பவர்களுக்கு இது சொல்லப்பட்டாலும் அவை இளைஞர்களுக்கும்கூட நல்ல புத்திமதியாக இருக்கிறது: “தீமை செய்ய திரளான பேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக.”

கேள்வி கேட்காமல் தன் சகாக்களைப் பின்பற்றும் ஒருவன் அடிமையைப் பார்க்கிலும் மேம்பட்டவன் அல்ல. ரோமர் 6:16-ல் (நியு இண்டர் நேஷனல் மொழிபெயர்ப்பு) “நீங்கள் ஒருவருக்கு அடிமைகளாகக் கீழ்ப்படிவதற்கு ஒருவரிடம் உங்களை அளிக்கும்போது கீழ்ப்படிகிற நீங்கள் அவருக்கு அடிமைகள் என்று உங்களுக்குத் தெரியாதா?” ஆகையினால்தானே இளைஞர் “நல்யோசனையை” அபிவிருத்தி செய்யும்படி பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (நீதிமொழிகள் 2:10-12) நீங்களாக யோசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது வழிதப்பித் திரிகிற இளைஞர்களைப் பின்பற்ற உங்களுக்குப் பிரியம் இருக்காது.

உண்மைதான், போதை மருந்துகள், அதனுடைய விளைவுகள், இவற்றைப்பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் உற்சாகமாக இருக்கலாம். அதற்காக போதை மருந்துகள் ஆட்களுக்கு என்ன செய்யும் என்று தெரிந்துகொள்ள உங்கள் சொந்த மனதையும் உடம்பையும் கறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வயதிலே போதை மருந்துகளை உபயோகிக்கிறவர்களைக் கவனித்தால் போதும்—விசேஷமாக அதிக காலத்துக்கு உபயோகித்திருந்தவர்களை கவனியுங்கள். அவர்கள் விழிப்புள்ளவர்களாகக் கூர்மையான புத்தியை உடையவர்களாக தென்படுகிறார்களா? படிப்பிலே நல்ல மார்க்குகளை வாங்குகிறார்களா? அல்லது மந்த புத்தியுடன் கவனமற்றவர்களாக, சில சமயங்களில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதையும்கூட தெரியாமல் இருக்கின்றனரா? போதை மருந்துகளை உபயோகிக்கிறவர்கள் தாமே இப்படிப்பட்டவர்களை விவரிக்க ஒரு பதத்தைக் கண்டுபிடித்தனர்: “எரிந்து போனவை.” (Burn-outs) ஆம், “எரிந்து போனவர்கள்” என்ன என்பதைத் தெரிந்துகொள்ள போதை மருந்துகளை உபயோகிக்க ஆரம்பித்தனர். ஆகவேதான் பைபிள், காரியங்களைக் கூர்ந்து அறியவேண்டும் என்ற ஆரோக்கியமற்ற ஆர்வத்தை அடக்கவேண்டும் என்றும் “துர்க்குணத்திலே குழந்தைகளாய்” இருங்கள் என்றும் உற்சாகப்படுத்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.—1 கொரிந்தியர் 14:20.

முடியாது என்று நீங்கள் சொல்லலாம்!

போதை மருந்துகளைத் தவறாக உபயோகிப்பதன் பேரில் ஐ.மா. தேசிய நிறுவனம் பிரசுரித்த ஒரு சிறு புத்தகத்தில் நமக்கு ஞாபகப்படுத்துவது என்னவென்றால்: “ஒரு போதை மருந்தை உபயோகிக்கும் வாய்ப்பை வேண்டாமென்று மறுத்துவிடுவது உங்களுக்கு இருக்கும் உரிமை. உங்கள் தீர்மானத்தை வளையும்படி செய்யும் எந்த நண்பர்களும், ஒரு சுயதீர்மானமுள்ள தனிப்பட்ட நபராக உங்களுக்கு இருக்கும் உரிமையை செதுக்கி எடுக்கின்றனர்.” போதை மருந்தை ஒருவர் அளிக்கும்போது நீங்கள் என்ன செய்யலாம்? ‘முடியாது’ என்று சொல்ல தைரியமுடையவர்களாக இருங்கள்! போதை மருந்துகளை தவறாக உபயோகித்தலின் தீமைகளைப்பற்றி ஒரு பிரசங்கம் கொடுப்பதை இது கண்டிப்பாக அர்த்தம் கொள்ளாது. அதே புத்தகம், “வேண்டாம், நன்றி, எனக்குப் புகைக்க விருப்பமில்லை” என்றோ அல்லது “இல்லை, அந்த வம்வு வேண்டாம்,” அல்லது “என் உடம்பை கறைப்படுத்த போவதில்லை” என்றோ சாதாரணமாக சொல்ல யோசனை கொடுத்தது. தாங்கள் அளிப்பதில் வற்புறுத்துவார்கள் என்றால் ‘முடியாது’ என்று திட நம்பிக்கையோடு நீங்கள் சொல்ல வேண்டியிருக்கும்! நீங்கள் ஒரு கிறிஸ்தவன் என்று மற்றவர்கள் அறியும்படி செய்வதுங்கூட ஒரு பாதுகாப்பாக நிரூபிக்கும்.

வளர்ந்துகொண்டு போவது சுலபமல்ல. ஆனால் வளரும் வேதனைகளைப் போதை மருந்துகளை உபயோகிப்பதனால் வரும் இக்கட்டுகளினால் வளர தடைசெய்ய முயற்சி செய்வீர்களானால், ஓர் உத்தரவாதமுள்ள, முதிர்ந்த வாலிபனாக ஆவதற்குரிய உங்கள் வாய்ப்புகளைக் கடினமாகத் தடுப்பவர்களாவீர்கள். நேருக்கு நேர் பிரச்னைகளை எதிர்ப்பட கற்றுக்கொள்ளுங்கள். மேற்கொள்ள முடியாதபடியான அழுத்தங்கள் இருக்குமானால் இரசாயன முறையில் தப்பிக்கும் வழியைத் தேடாதீர்கள். காரியங்களைப் பெற்றோர் ஒருவரிடமோ அல்லது காரியங்களைச் சீர்தூக்கிப் பார்க்க உதவிசெய்யும் உத்தரவாதமான ஒரு வயதானவரிடமோ பேசுங்கள். பைபிளின் புத்திமதியையும் ஞாபகத்தில் வையுங்கள்: “நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.

ஆம், ‘முடியாது’ என்று சொல்லுவதற்குரிய மன வலிமையை யெகோவா தேவன் உங்களுக்குக் கொடுப்பார்! உங்களுடைய தீர்மானத்தைப் பலவீனப்படுத்த மற்றவர்கள் உங்களை அழுத்திவிட இடமளிக்க வேண்டாம். மைக் சொல்லுகிறபடி, “போதை மருந்துகளைச் சோதித்துப் பார்க்க வேண்டாம். எஞ்சிய உங்கள் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவீர்கள்!”

கலந்துபேசுவதற்கான கேள்விகள்

◻ ஏன் இத்தனை அநேக இளைஞர் தங்களைப் போதை மருந்துகளில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்?

◻ போதை மருந்துகளை உபயோகித்தல் எப்படி உணர்ச்சி சம்பந்தமாக உங்கள் வளர்ச்சியைத் தடை செய்யும்?

◻ மரிஹுவானா உடம்பை எப்படிப் பாதிக்கிறது என்பதைப்பற்றி என்ன தெரிய வந்திருக்கிறது?

◻ இன்பத்துக்காக போதை மருந்துகளை உபயோகித்தலின் விஷயத்தில் பைபிளின் கருத்து என்ன?

◻ போதை மருந்துகளில் இருந்து விலகி இருப்பதற்கு உங்கள் கூட்டுறவை கவனிப்பது ஏன் முக்கியம்?

◻ போதை மருந்துகள் வேண்டாம் என்று சொல்வதற்கு சில வழிகள் என்ன?

[பக்கம் 274-ன் சிறு குறிப்பு]

ஓர் இளைஞன் சொல்லுகிறான்: “எங்கள் பள்ளியில் உள்ள காவற்காரர்களும்கூட கஞ்சாவை (மரிஹுவானா) விற்கிறார்கள்”

[பக்கம் 279-ன் சிறு குறிப்பு]

“போதை மருந்துகளை உபயோகிக்க நான் ஆரம்பித்தபோது, என்னுடைய உணர்ச்சி சம்பந்தமான அபிவிருத்தி நின்றுவிட்டது என்பதை உணர்ந்துகொள்ள ஆரம்பித்தேன்.”—மைக், போதை மருந்துகளை முன்பு உபயோகித்தவன்

[பக்கம் 278-ன் பெட்டி]

மரிஹுவானா—ஓர் ஆச்சரியமான மருந்தா?

கிளாகோமா, ஆஸ்துமா, மற்றும் புற்றுநோய் நோயாளிகள் இரசாயன முறை சிகிச்சை மூலம் (Chemo therapy) வாந்தி எடுக்கும்படியான ஒரு நிலையைக் குறைப்பதற்கு மரிஹுவானாவுக்கு ஆரோக்கியமாக்கும் தன்மை இருக்கக்கூடும் என்ற உரிமையைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. அ.ஐ.மா. மருத்துவ நிறுவனத்தின் ஓர் அறிக்கை இந்த உரிமைகளில் ஓரளவு உண்மை இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளுகிறது. இதனால் அண்மை எதிர்காலத்திலே மருத்துவர்கள் மரிஹுவானா சிகரெட் புகைப்பதற்கு சீட்டு எழுதிக்கொடுப்பார்கள் என்று அர்த்தம் கொள்ளுகிறதா?

அப்படி இருப்பதற்கு இல்லை, ஏனென்றால் மரிஹுவானாவின் 400-க்கு அதிகமான இரசாயன சேர்க்கைகள் உபயோகமுள்ளதாக நிரூபிக்கப்பட்டாலும், இப்படிப்பட்ட மருந்துகளை எடுப்பதற்கு மரிஹுவானாவைப் புகைத்தல் ஒருபோதும் நியாயமான விதமாக இருக்காது. பெயர்பெற்ற நிபுணராக டாக்டர் கார்ல்டன் டர்னர் இவ்விதமாக சொல்லுகிறார்: “மரிஹுவானாவை உபயோகப்படுத்துதல் பெனிசிலினைப் பெற அச்சில் ஊற்றப்பட்ட ரொட்டியைச் சாப்பிட மக்களுக்குக் கொடுப்பது போன்று இருக்கிறது.” ஆகவே மரிஹுவானாவின் சேர்க்கைகள் எப்போதாவது உண்மையாகவே மருந்துகளாக வரும் பட்சத்தில், அவை மரிஹுவானாவிலிருந்து பிரிக்கப்பட்ட இரசாயன சேர்க்கைகளுக்கு ஒத்ததான மருந்துகளையே டாக்டர்கள் எழுதிக் கொடுப்பார்கள். அதனால்தான் ஐக்கிய மாகாணத்தின் மனித சேவைக்கும், சுகாதாரத்துக்கும் காரியதரிசியானவர் இவ்விதமாக எழுதினதில் ஆச்சரியமில்லை. “ஒருவேளை கிடைக்கக்கூடிய மருத்துவ பலன்கள் எந்த விதத்திலும் மரிஹுவானாவின் எதிர்மறையான சுகாதார விளைவுகளை மாற்றிவிட முடியாது என்பதை அழுத்திக்காட்ட வேண்டும்.”

[பக்கம் 275-ன் படம்]

போதை மருந்துகளுக்கு ‘முடியாது’ என்று சொல்ல தைரியமுடையவர்களாக இருங்கள்!

[பக்கம் 276, 277-ன் படங்கள்]

போதை மருந்துகளின் மூலமாக உங்கள் பிரச்னைகளை இப்பொழுது விட்டோடுங்கள் . . . ஆனால் வயது வந்தவர்களாக நீங்கள் பிரச்னைகளை எதிர்ப்படுவது கடினமாக இருப்பதைக் காண்பீர்கள்