உங்களை உட்படுத்துகிற ஒரு விவாதம்
அதிகாரம் 5
உங்களை உட்படுத்துகிற ஒரு விவாதம்
சமாதானமும் பாதுகாப்பும் இருக்கவேண்டுமென்ற பொதுவான ஆசைக்கு எதிர்மாறாக, மனிதனின் சரித்திரம் இரத்தஞ் சிந்துதலாலும் தீங்குகளாலும் கெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. கடவுள் இப்படிப்பட்ட காரியங்களை வெறுக்கிறார் என்று பைபிள் காட்டுவதனால் அவர் ஏன் இதற்கு முன்பாகவே இந்நிலைமைகளுக்கு ஒரு முடிவைக் கொண்டுவரவில்லை? அவருக்கு அக்கறையில்லை என்பதாக இது நிச்சயமாகவே இருக்கமுடியாது. பைபிளும் கடவுளுடைய பூமிக்குரிய கைவேலைப்பாட்டின் அழகும் மனிதவர்க்கத்தின் பேரில் அவர் கொண்டுள்ள அன்புக்கும் அக்கறைக்கும் மிகுதியாய்ச் சாட்சி பகருகின்றன. (1 யோவான் 4:8) இந்த நிலைமைகள் மக்கள் கடவுளை நிந்திக்கும்படி செய்திருப்பதனால், மிக முக்கியமாய்க் கடவுளுடைய சொந்தப் பெயரின் நன்மதிப்பு இதில் உட்பட்டிருக்கிறது. அப்படியானால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் அமைதிக் குலைவையும் வன்னடத்தையையும் அவர் பொறுத்து வந்திருப்பதற்கு என்ன காரணம் இருக்கக்கூடும்?
2இதற்குப் பதில் பைபிளின் முதல் புத்தகத்தில், ஆதாம் ஏவாளைப் பற்றிய விவரத்தில் காணப்படுகிறது. இந்த விவரம் வெறும் ஓர் உருவகக் கதை அல்ல. இது சரித்திரப் பூர்வமான உண்மை. பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டிலிருந்து பின்னாக முதல் மனிதர்கள் வரையிலும் செல்லும் பூர்த்தியான, மெய் எழுத்தாதார வம்ச பரம்பரை பதிவை பைபிள் அளிக்கிறது. (லூக்கா 3:23-38; ஆதியாகமம் 5:1-32; 11:10-32) நம்முடைய முதல் மூதாதையராக ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நம்மீது திட்டவட்டமான செல்வாக்கு இருந்தது. அவர்களைப்பற்றி பைபிள் நமக்குச் சொல்வது இன்று நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கிற இந்தச் சூழ்நிலைமைகளை விளங்கிக்கொள்ள நமக்கு உதவி செய்கிறது.
3அந்த முதல் மானிட தம்பதிகளுக்குச் செய்த கடவுளுடைய ஏற்பாடுகள் யாவும் மிக நல்லவையென பைபிள் வெளிப்படுத்துகிறது. மகிழ்ச்சியுள்ள வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாம்—ஏதேனில் பூங்காவைப் போன்ற ஒரு வீடு, பற்பல வகைப்பட்ட ஏராளமான உணவு, திருப்தியளிக்கும் வேலை, தங்களுடைய குடும்பம் பெருகி பூமியை நிரப்புவதைக் காணும் எதிர்பார்ப்பு, மேலும் தங்கள் சிருஷ்டிகரின் ஆசீர்வாதம்—அவர்களுக்கு இருந்தன. (ஆதியாகமம் 1:28, 29; 2:8, 9, 15) இதைப் பார்க்கிலும் அதிகத்தை யார் நியாயப்படி கேட்க முடியும்?
4மனிதர் பூமியில் ஒரு தனிச் சிறப்பான நிலையை வகித்திருந்தனரென ஆதியாகமத்திலுள்ள தேவாவியால் ஏவப்பட்ட பதிவு வெளிப்படுத்துகிறது. மிருகங்களுக்கு வேறுபட்டவர்களாய் அவர்களுக்கு நீதிநெறி உணர்ச்சி இருந்தது, மேலும் தெரிவு சுயாதீனம் அளிக்கப்பட்டிருந்தார்கள். இதனால், விவாதித்தாராய்வதற்கும், தீர்மானிப்பதற்குமுரிய திறமைகள் கொடுக்கப்பட்டார்கள். அவர்களை வழிநடத்த, கடவுள் மனிதனிலும் மனுஷியிலும் மனச்சாட்சியாகிய இந்தத் தனிநுட்பத் திறமையை நாட்டினார், இவ்வாறு, பரிபூரண மனிதராக அவர்களுடைய இயல்பான மனச்சார்பு நல்லதை நோக்கிச் சாயும். (ரோமர் 2:15) இந்த எல்லாவற்றையுந்தவிர, கடவுள், அவர்கள் ஏன் உயிரோடு இருந்தார்கள், அவர்கள் என்ன செய்யவேண்டும், அவர்களைச் சுற்றியிருந்த அந்த மிகச் சிறந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் அளித்தவர் யார் என்பவற்றை அவர்களுக்குச் சொன்னார். (ஆதியாகமம் 1:28-30) அப்படியானால், இப்பொழுது இத்தகைய கெட்ட நிலைமைகள் இருந்துவருவதன் காரணத்தை நாம் எவ்வாறு விளக்குவது?
5ஒரு விவாதம்—இன்று நம் ஒவ்வொருவரையும் உட்படுத்துகிற ஒன்று—எழும்பிற்றென்று வேதப் பூர்வ பதிவு காட்டுகிறது. அந்த முதல் மானிட ஜோடி சிருஷ்டிக்கப்பட்ட பின் சீக்கிரத்திலேயே ஏற்பட்ட சந்தர்ப்ப நிலைமைகளின் மூலம் இது உண்டாயிற்று. ஒரு கட்டளைக்குக் கீழ்ப்படிவதனால் தங்கள் சிருஷ்டிகருக்கு அன்புள்ள ஆதியாகமம் 2:16, 17) இந்தக் கட்டளை வாழ்க்கைக்கு அவசியமான எதையும் முதல் கணவனும் மனைவியும் இழக்கும்படி செய்யவில்லை. அந்தத் தோட்டத்திலிருந்த மற்ற எல்லா மரங்களிலிருந்தும் அவர்கள் சாப்பிடலாம். எனினும் எதிர்காலத்துக்கான அவர்களுடைய வாழ்க்கை எதிர்பார்ப்புகள் திட்டவட்டமாய் உட்பட்டிருந்தன, நேர்மையாகவே அப்படியிருந்தன. ஏன்? ஏனென்றால் கீழ்ப்படிதலைக் கேட்டவர் மனிதனுடைய உயிரின் மூலகாரணரும் அதைப் பராமரிப்பவருமானவர்.
நன்றிமதித்துணர்வை நிரூபித்துக் காட்டும்படியான வாய்ப்பைக் கடவுள் மனிதனுக்கும் மனுஷிக்கும் கொடுத்தார். இந்தக் கட்டளை, தடுத்து நிறுத்தப்படவேண்டிய இழிவான மனப்போக்குகள் அவர்களுக்கு இருந்ததென மறைமுகமாகக் குறிப்பிடும் எதுவாகவும் இல்லை. அதற்கு மாறாக, தன்னில்தானே இயல்பான மற்றும் சரியான ஒன்றை—உணவு உண்பதை—அது உட்படுத்திற்று. கடவுள் அந்த மனிதனுக்குச் சொன்னபிரகாரம்:“நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (6மனிதர் மரிக்கவேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமல்ல. கீழ்ப்படியாமைக்குத் தண்டனையாக மாத்திரமேயல்லாமல் ஆதாம் ஏவாளிடம் வேறு எவ்வகையிலும் மரணம் குறிப்பிடப்படவில்லை. நம்முடைய முதல் பெற்றோர் சமாதானமுள்ள, பூங்காவைப் போன்ற தங்கள் வீட்டில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பைத் தங்கள் முன் கொண்டிருந்தனர். இதை அடைய அவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்பட்டது? தாங்கள் வாழ்ந்துகொண்டிருந்த இந்தப் பூமி, அதை உண்டாக்கினவருக்குச் சொந்தமானது என்றும், சிருஷ்டிகராக, கடவுளுக்குத் தம்முடைய சிருஷ்டியின்மேல் நியாயமாகவே அதிகாரம் இருக்கிறதென்றும் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியதாகும். (சங்கீதம் 24:1, 10) மனிதனுக்குத் தேவையான எல்லாவற்றையும், உயிரையுங்கூட கொடுத்த இவர், அவர்களிடம் கேட்ட எதிலும் அவர்கள் கீழ்ப்படிதலுக்கு நிச்சயமாகவே தகுதியுள்ளவர். எனினும் கட்டாயப்படுத்திக் கீழ்ப்படிய வைப்பதை அவர் விரும்பவில்லை. அதைப் பார்க்கிலும், அது அன்பினால் தூண்டப்பட்டு, தானாக விரும்பி கொடுக்கும் இருதயத்திலிருந்து வரவேண்டும். (1 யோவான் 5:3) ஆனால் நம்முடைய முதல் மனித பெற்றோர் இத்தகைய அன்பைக் காட்டத் தவறினார்கள். இது எப்படி நேரிட்டது?
தெய்வீக ஆட்சிக்கு எதிர்ப்பு தொடங்கினது
7கடவுளுடைய ஆட்சிக்கு எதிர்ப்பு, பூமியில் அல்ல, மனிதக் கண்கள் காணமுடியாதப் பகுதியிலேயே ஆரம்பித்ததென்று பைபிள் காட்டுகிறது. இதை நாம் காணமுடியாததனால், பலர் செய்வதைப்போல், இத்தகைய பகுதி உண்டாவென நாம் சந்தேகிக்கவேண்டுமா? புவி ஈர்ப்பு விசையைக் காணமுடியாது, காற்றையுங்கூட காணமுடியாது. எனினும் அவற்றின் விளைபயன்களை மெய்யாய்க் கண்டுணர முடியும். அவ்வாறே இந்தக் காணக்கூடாதப் பகுதியின் விளைபயன்களையும் கண்டுணரலாம். “தேவன் ஆவியாயிருக்கிற”போதிலும் அவருடைய சிருஷ்டிப்பின் வேலைகளை நம்மைச் சுற்றி எங்கும் காண முடிகிறது. நாம் அவர் இருப்பதை நம்பினால் ஆவிப் பகுதி இருப்பதையும் நம்பக் கடமைப்பட்டிருக்கிறோம். (யோவான் 4:24; ரோமர் 1:20) ஆனால் வேறு எவராவது அந்தப் பகுதியில் வாசம் செய்கின்றனரா?
8 மனிதனுக்கு முன்னால் லட்சக்கணக்கான ஆவி ஆட்களாகிய தேவதூதர்கள் உண்டாக்கப்பட்டனரென்று பைபிளில் சொல்லியிருக்கிறது. (யோபு 38:4, 7; சங்கீதம் 103:20; தானியேல் 7:10) இவர்களெல்லாரும் பரிபூரணராய், தீய மனச் சார்புகள் இல்லாமல் சிருஷ்டிக்கப்பட்டனர். எனினும், கடவுளுடைய பிற்பட்ட சிருஷ்டிப்பாகிய மனிதனைப்போல், இவர்கள் தெரிவு சுயாதீனம் அளிக்கப்பட்டனர். ஆகவே இவர்கள் கடவுளிடம் உண்மையுடன் அல்லது உண்மையற்று நடக்கும் ஒரு போக்கைத் தெரிந்துகொள்ளக்கூடும்.
9 ஆனால் பலர் கேட்கும் கேள்வி என்னவென்றால்: பரிபூரண சிருஷ்டிகளாக, அவர்களில் எவராவது எப்படித் தவறு செய்ய மனச்சாய்வு கொள்ளவுங்கூடும்? என்பதே. எத்தனை தடவைகள் நம்முடைய சொந்த வாழ்க்கையில்—சில நல்லவையும் சில கெட்டவையுமான—பற்பல சாத்தியங்களை நமக்கு முன் வைக்கும் சூழ்நிலைமைகள் எழும்புகின்றன? கெட்ட சாத்தியங்களைப் பகுத்தறிவதற்குரிய புத்திக்கூர்மை நமக்கு இருப்பது தானாக நம்மைக் கெட்டவர்களாக்கி விடுகிறதில்லை, அல்லவா? உண்மையில் கேள்வி என்னவென்றால்: எந்தப் போக்கில் நாம் நம்முடைய மனதையும் இருதயத்தையும் ஊன்ற வைப்போம்? என்பதே. நாம் தீங்கான எண்ணங்களின்பேரில் மனதை ஊன்ற வைத்தால், நம்முடைய இருதயத்தில் யாக்கோபு 1:14, 15.
தவறான ஆசையை வளர்க்கும்படி இழுக்கப்படலாம். அத்தகைய ஆசை, முடிவில் தவறான செயல்களைச் செய்யும்படி நம்மைத் தூண்டி இயக்கும். இந்தச் சீரழிவான சுழற்சியை பைபிள் எழுத்தாளன் யாக்கோபு பின்வருமாறு விவரித்தான்: “அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்; பாவம் பூரணமாகும்போது மரணத்தைப் பிறப்பிக்கும்.”—10 இது கடவுளுடைய ஆவி குமாரரில் ஒருவனுக்கு நடந்ததென்று வேத எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. தன்னுடைய சொந்த ஆசைகளே அவனைக் கவர்ந்து சிக்கவைத்தன. கடவுளுடைய மனித சிருஷ்டிகளில் தான் சாதிக்கக்கூடிய நிலைகளை அவன் கண்டான். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தனக்குக் கீழ்ப்படிய வைக்கமுடியுமா? கடவுளுக்கு உரியதான வணக்கத்தில் குறைந்தபட்சம் ஒரு பங்கையாவது அடைய வேண்டுமென்ற அடங்கா ஆசைகொள்ள அவன் ஆரம்பித்தானெனத் தெரிகிறது. (லூக்கா 4:5-8) தன் ஆசையை நிறைவேற்றச் செயல்பட்டு அவன் கடவுளை எதிர்ப்பவனானான். இந்தக் காரணத்தினிமித்தம் அவன் சாத்தான் என்று பைபிளில் குறிப்பிடப்படுகிறான், இதன் பொருள் எதிரி என்பதாகும்.—யோபு 1:6.
11 சடக் கொள்கையைப் பின்பற்றும் இந்த இருபதாம் நூற்றாண்டில், சாத்தானைப் போன்ற இப்படிப்பட்ட ஓர் ஆவி ஆள் இருப்பதை நம்புவது மக்கள் சுவைக்கேற்ற ஒரு காரியமாயில்லை. ஆனால், மக்கள் சுவைக்கேற்றச் சிந்தனை சத்தியத்துக்கு நடத்தும் ஒரு நிச்சய வழிக்காட்டியாக எப்போதாவது இருந்திருக்கிறதா? கண்ணுக்குப் புலப்படாதக் கிருமிகள் நோய்க்கு ஒரு காரணமென நம்புவது ஒரு காலத்தில் நோயைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்குள் மதிக்கப்படவில்லை. ஆனால் இப்பொழுதோ அவற்றின் பாதிப்பு நன்றாய் அறியப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏதோவொன்றை பொதுமக்கள் மதியாததனால் அதைக் கவனியாமல் தள்ளிவிடலாமென்று நிச்சயமாகவே அர்த்தங்கொள்ளாது. இயேசுதாமே ஆவிக்குரிய பகுதியிலிருந்து வந்தார், ஆகவே அங்கேயுள்ள வாழ்க்கையைப் பற்றி அவர் அதிகாரத்துடன் பேச முடிந்தது. அவர் சாத்தானை ஒரு தீய ஆவி ஆளென திட்டவட்டமாய் அடையாளங்காட்டினார். (யோவான் 8:23; லூக்கா 13:16; 22:31) இந்த ஆவி எதிரி இருப்பதைக் கவனத்துக்குள் எடுத்துக்கொள்வதனால் மாத்திரமே, இந்தப் பூமியில் இத்தகைய கெட்ட நிலைமைகள் தொடங்கினது எவ்வாறென நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
12சாத்தான் தன் தவறான ஆசையைத் திருப்தி செய்ய தொடங்கின முறையை ஆதியாகமம் மூன்றாம் அதிகாரத்திலுள்ள தேவாவியால் ஏவப்பட்ட பதிவு விவரிக்கிறது. ஏதேன் தோட்டத்தில், தான் உண்மையில் யார் என்பதை மறைத்த ஒரு முறையில் அவன் அந்த மனுஷி ஏவாளை அணுகினான். அந்த மனித ஜோடி சாதாரணமாய்க் காணும் ஒரு மிருகத்தை—ஒரு சர்ப்பத்தை—அவன் பயன்படுத்தினான். குரலை மாற்றிப் பிறர்போல் பேசும் கலையைப் பயன்படுத்தி, தன்னுடைய வார்த்தைகளை இந்தப் பிராணியிலிருந்து வருவதுபோல், தோன்றச் செய்தானெனத் தெரிகிறது; சர்ப்பத்துக்கு இயல்பாயுள்ள எச்சரிக்கையான பாங்கு சாத்தான் உண்டாக்க விரும்பிய எண்ணப் பதிவுடன் நன்றாய்ப் பொருந்தியது.—ஆதியாகமம் 3:1; வெளிப்படுத்துதல் 12:9.
13தன்னையே அவளுடைய அரசனாக நோக்கும்படி மனுஷியை நேர்முகமாய்க் கேட்பதைப் பார்க்கிலும் பின்வருமாறு கேட்பதன் மூலம் அவளுடைய மனதில் சந்தேகத்தை நாட்ட சாத்தான் முதலாவது நாடினான்: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” உண்மையில் அவன்: ‘தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் நீங்கள் சாப்பிடக்கூடாதென்று கடவுள் சொன்னது மிக மோசமானது,’ என்று சொல்பவனாக இருந்தான். இவ்வாறு நல்ல ஏதோவொன்றைக் கடவுள் கொடாமல் வைத்திருக்கலாமென மறைமுகமாய்க் குறிப்பிட்டான். ஏவாள் கடவுளுடைய தடையுத்தரவை எடுத்துக் கூறி பதிலளித்தாள்; அது ஒரே ஒரு மரத்தையே உட்படுத்தியது, அதோடுகூட கீழ்ப்படியாமையின் தண்டனை மரணம் எனவும் கூறினாள். அப்பொழுது சாத்தான் கடவுளுடைய சட்டத்துக்கு அவள் கொண்டிருந்த மதிப்பை மறைவாய்க் கெடுத்துப்போட முயன்று, பின்வருமாறு கூறினான்: “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் [தேவனைப்போல், NW] இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.” (ஆதியாகமம் 3:1-5) இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்ப நிலைமையை நீங்கள் எதிர்ப்பட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
ஆதியாகமம் 3:6; 1 தீமோத்தேயு 2:14) இதன் விளைவென்ன?
14தன்னல ஆசையால் இழுத்துச் செல்லப்பட ஏவாள் தன்னை அனுமதித்தாள். கடவுள் தடையுத்தரவிட்டிருந்ததை அவள் சாப்பிட்டாள். பின்னால் அவளுடைய வற்புறுத்துதலின்பேரில், அவளுடைய கணவன் ஆதாமுங்கூட சாப்பிட்டான். இவ்வாறு, சிருஷ்டிகரோடு தன்னை வைத்துக்கொள்வதைப் பார்க்கிலும் அவளோடு ஒத்திருக்கும் நிலையில் பங்குகொள்வதையே தெரிந்துகொண்டான். (15மனிதக் குடும்பம் முழுவதும் பாவத்திலும் அபூரணத்திலும் ஆழ்த்தப்பட்டது. இப்பொழுது ஆதாமும் ஏவாளும் தங்களுக்கு ஒரு காலத்தில் இருந்த பரிபூரணத்தைத் தங்கள் சந்ததியாருக்குக் கடத்த முடியாது. குறைபாடுள்ள ஒரு மாதிரி அச்சுவிலிருந்து உண்டுபண்ணும் எல்லாப் பிரதிகளும் அதே குறைபாட்டை உடையனவாக இருப்பதுபோல் அவர்களுடைய சந்ததியார் யாவரும் சுதந்தரிக்கப்பட்ட தன்னலத்தை நோக்கிய ஒரு மனப்போக்குடன் பாவத்தில் பிறந்தனர். (ஆதியாகமம் 8:21) தடுத்து நிறுத்தாமல் விடப்பட்ட இந்த மனப்போக்கே, மனிதவர்க்கத்திலிருந்து சமாதானத்தையும் பாதுகாப்பையும் எடுத்துவிட்டிருக்கிற தீங்குகளுக்கு வழிநடத்தினது. பாவத்தைச் சுதந்தரித்த இதுவே நோயிலும் மரணத்திலும் விளைவுற்றது.—ரோமர் 5:12.
எழுப்பப்பட்ட விவாதங்கள்
16இந்த உண்மை நிகழ்ச்சிகளின் துணைகொண்டு பார்க்கையில், முன்னால் எழுப்பப்பட்ட அந்தக் கேள்விக்கு நம்முடைய மனம் செல்கிறது: கடவுள் ஏன் இந்த நிலைமையை, அது எட்டியிருக்கிற இவ்வளவு தூரமளவாக வளர அனுமதித்து, அதைச் சகித்து வந்திருக்கிறார்? வினைமையான ஒரு விவாதம் எழுப்பப்பட்டதாலும் சர்வலோகம் முழுவதையும் அது பாதிப்பதாலுமேயாகும். இது எப்படி?
17ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கடவுள் கொடுத்தச் சட்டம் அவர்களுக்கு நல்லதல்ல என்று விவாதித்தும் கீழ்ப்படியாமையின் விளைவு என்னவென்று கடவுள் சொன்னதை மறுத்துக் கூறியும் சாத்தான் கடவுளுடைய ஆட்சியின்பேரில் சந்தேகத்தை எழுப்பினான். கடவுள் அரசர் என்ற இந்த உண்மையின்பேரில் அவன் கேள்வி ஆதியாகமம் 3:4, 5) எனினும், அவர்கள் அவ்வாறு செய்வதனால் உண்மையில், கடவுளுடைய எதிரியின் வழிநடத்துதலையே பின்பற்றுவார்கள்.
எழுப்பவில்லை. அதைப் பார்க்கிலும், சாத்தான் எழுப்பின விவாதம் யெகோவாவின் ஆட்சியின், அவருடைய ஈடற்ற அரசாட்சியின் நேர்மையையும், அவருடைய வழிகளின் நீதியையும் தாக்கும் மையமாகக் கொண்டிருந்தது. மனிதர் கடவுளுடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் தங்கள் சொந்தத் தீர்மானங்களைச் செய்து, சுயாதீனமாய் நடப்பதன் மூலமே மேலும் நன்றாயிருப்பார்கள் என்று சாத்தான் வஞ்சகமாய் விவாதித்தான். (18மற்றொரு விவாதமும் உட்பட்டிருந்தது. அங்கே ஏதேனில் கடவுளுடைய இந்தச் சிருஷ்டிகள் அவருக்கு விரோதமாய்த் திரும்பினதனால், மற்றவர்கள் என்ன செய்வார்கள்? பின்னால், யோபு என்ற மனிதனின் நாட்களில், சாத்தான், யெகோவாவைச் சேவிப்பவர்கள் கடவுளையும் அவருடைய ஆட்சியையும் எவ்வகையிலும் நேசிப்பதனால் அல்ல, ஆனால் கடவுள் அவர்களுக்கு எல்லாவற்றையும் கொடுப்பதனால் தன்னலத்துடனேயே அவ்வாறு செய்கின்றனரென வெளிப்படையாய்க் குற்றஞ் சாட்டினான். நெருக்கடியின்கீழ் வைக்கப்படுகிற எவனும் யெகோவாவின் அரசாட்சியை உண்மைத்தவறா பற்றுடன் ஆதரிக்கமாட்டானென சாத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டான். ஆகவே பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும் அறிவுள்ள ஒவ்வொரு சிருஷ்டியின் இராஜபக்தியும் உத்தமமும் சவால் விடப்பட்டது. இவ்வாறு இந்த விவாதம் உங்களை உட்படுத்துகிறது.—யோபு 1:8-12; 2:4, 5.
19இத்தகைய ஒரு சவாலை எதிர்ப்பட்டிருக்கையில், யெகோவா என்ன செய்வார்? அவர் எளிதாகச் சாத்தானையும் ஆதாமையும் ஏவாளையும் அழித்திருக்கலாம். இது யெகோவாவின் ஈடற்ற அரசு வல்லமையை நிரூபித்துக் காட்டியிருக்கும். ஆனால் படிப்படியாய் நடந்தவற்றைக் கவனித்திருந்த கடவுளுடைய எல்லா சிருஷ்டிகளின் மனதிலும் இப்பொழுது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இது பதிலளித்திருக்குமா? இந்தச் சந்தேகங்கள் எல்லாக் காலத்துக்கும் ஒரே தடவையாக முழுமையாய்த் தீர்க்கப்படுவது சர்வலோகத்தின் நித்திய சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் தேவைப்பட்டது. இதுமட்டுமல்லாமல், கடவுளுடைய அறிவுள்ள எல்லா சிருஷ்டிகளின் உத்தமமும் உண்மைத் தவறாமையும் சவால் விடப்பட்டிருந்தது. அவர்கள்
அவரை நேசித்தால் அந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்குத் தாங்கள்தாமே பதிலளிக்க விரும்புவார்கள். இதைச் செய்யவே யெகோவா அவர்களுக்கு வாய்ப்பளித்தார். மேலும் ஆதாமும் ஏவாளும் சந்ததியைப் (அது அபூரணமாயிருந்தாலும்) பிறப்பிக்கும்படி அனுமதிப்பதன் மூலம், மனித குடும்பம்—இன்று வாழ்ந்துகொண்டிருக்கிற நம்மெல்லாரையும் உட்கொண்ட குடும்பம்—ஒழிந்துபோகாதபடி கடவுள் தடுத்து வைப்பார். இது இந்தச் சந்ததியார் தெய்வீக ஆட்சிக்குக் கீழ்ப்படிவதா இல்லையா என்பதைத் தாங்களே விரும்பித் தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பைக் கொடுக்கும். உங்களை இப்பொழுது எதிர்ப்படுவது இந்தத் தெரிந்துகொள்ளுதலே!ஆதியாகமம் 5:5; ஆதியாகமம் 2:17-ஐயும் 2 பேதுரு 3:8-ஐயும் ஒத்துப் பாருங்கள்.) சாத்தானுங்கூட தலை நசுக்கப்பட்ட ஒரு சர்ப்பத்தைப்போல் உரிய காலத்தில் அழிக்கப்படுவான்—ஆதியாகமம் 3:15; ரோமர் 16:20.
20ஆகவே, மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்றுவதற்குப் பதில் கலகஞ் செய்தவர்கள் ஓரளவான காலத்துக்கு நிலைத்திருக்கும்படி யெகோவா அனுமதித்தார். ஓர் ஆயிரம் ஆண்டுகள் கடப்பதற்குமுன் மரிக்கும்படி ஆதாமும் ஏவாளும் ஏதேனிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். (காலப்போக்கு எதை வெளிப்படுத்தியிருக்கிறது
21கடவுளுடைய ஆட்சியின் நேர்மையை எதிர்த்து சவால் விட்டதிலிருந்து உண்டான விளைவு என்ன? மனிதன், தானே தன் சொந்த விவகாரங்களை நடத்திக் கொள்ள முயன்றதில் தனக்கு நன்மை பயக்கும்படி செய்திருக்கிறானா? மனிதவர்க்கம் மனதில் கற்பனை செய்யக்கூடிய எல்லா வகை அரசாங்கத்தையும் உருவாக்கி முயற்சி செய்து பார்க்கும்படி அனுமதிக்கப்பட்டது. முழு விளைவுகளும் காணப்படுவதற்கு முன்பாக மனிதனின் முயற்சிகளை யெகோவா நிறுத்திப்போடவில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நிறுத்தியிருந்தாலுங்கூட அது வெகு சீக்கிரமாய் இருந்திருக்கும். அப்பொழுதுதான் மனிதன் “தொழில் நுட்ப விஞ்ஞான சகாப்தத்”துக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தான், தான் நிறைவேற்றப்போகிறதைப் பற்றிய பெரும் உரிமைப்பாராட்டல்களைச் செய்ய அப்பொழுதுதான் ஆரம்பித்துக் கொண்டிருந்தான்.
22 கடவுளைவிட்டு விலகிச் சென்ற மனிதனின் சுதந்திரப் போக்கின் விளைவு என்னவாயிருக்கும் என்பதைக் காண மற்றொரு நூற்றாண்டு தேவையாக இருக்கிறதா? இந்தப் பூமி அழிவுக்குரிய பெரும் அபாயத்தை எதிர்ப்படுகிறதென்று, அரசாங்க மற்றும் விஞ்ஞான துறைகளிலுள்ள பிரசித்திப் பெற்ற மனிதருங்கூட ஒப்புக்கொள்கின்றனர். மனிதனின் சுதந்திர ஆட்சியின் இந்த முழு தோல்வியை நிரூபிக்க பூரண அழிவைக் கடவுள் நிச்சயமாகவே அனுமதிக்க வேண்டியதில்லை. அரசாங்கம் கடவுளைப் புறக்கணிக்கையில் என்ன நடக்கிறதென்பதற்குச் சாட்சி பகர ஆறாயிரம் ஆண்டுகளின் சாட்சியம் இருக்கையில், மனித ஆட்சியைப் பூரணப்படுத்தப் போதிய காலம் இல்லையென ஒருபோதும் சொல்லமுடியாது. கடவுள்பேரில் சார்ந்திராத
எந்த அரசாங்கமும் உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் மனிதவர்க்கம் முழுவதற்கும் கொண்டுவர முடியாதென உண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.23பின்னால் நாம் காணப்போகிறபடி, யெகோவா தேவன், தம்முடைய தெய்வீக ஆட்சிக்கு விரோதமான எல்லாக் கலகத்தையும் நீக்கி சர்வலோகத்தைத் தாம் சுத்திகரிப்பதைக் காணப்போவதாக ஒரு தனிப்பட்ட சந்ததியைச் சரிநுட்பமான காலக் குறிப்புடன் வெகு காலத்துக்கு முன்னதாகவே குறித்து வைத்தார். பொல்லாத மனிதர் அழிக்கப்படுவது மட்டுமல்லாமல், சாத்தானும் அவனுடைய பேய்களுங்கூட, மனிதருடைய அல்லது தூதர்களுடைய விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடாதபடி பாதாளத்தில் அடைக்கப்படுவதுபோல் கட்டுப்படுத்தி வைக்கப்படுவர். இது, கடவுளுடைய குமாரனின் அரசாங்கம் பூமியை ஆளும் அந்த நீதியுள்ள ஆட்சிக்கு வழியைத் திறந்து வைப்பதற்காகும். ஓர் ஆயிர ஆண்டு காலப் பகுதியினூடே இந்த அரசாங்கம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனின் தன்னல ஆட்சி கொண்டுவந்த எல்லாத் தீங்கையும் முற்றிலும் ஒழித்துப்போடும். இந்தப் பூமியைப் பரதீஸிய அழகுக்குத் திரும்ப நிலைநாட்டி கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தை, ஏதேனில் அனுபவித்துக் களிக்கப்பட்ட பரிபூரணத்துக்குத் திரும்பக் கொண்டுவரும்.—வெளிப்படுத்துதல் 20:1, 2; 21:1-5; 1 கொரிந்தியர் 15:25, 26.
24அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவில், சாத்தானும் அவனுடைய பேய்களும் சிறிது காலம் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை செய்யப்படுவர் என்று பைபிள் சொல்லுகிறது. ஏன்? அப்பொழுது உயிர்வாழும் எல்லாரும் யெகோவாவின் ஈடற்ற அரசாட்சிக்கு உண்மைத் தவறாதவர்களாய்த் தங்களைக் காட்டுவதற்கு வாய்ப்பைக் கொண்டிருக்கும்படியாகும். சொல்லமுடியாத எண்ணிக்கையானவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு வெளிவந்திருப்பார்கள். சோதனையின்கீழ் கடவுளுக்குத் தங்கள் அன்பை நிரூபித்துக் காட்டுவதற்கு இதுவே அவர்களில் பலருக்கு முதல் வாய்ப்பாக இருக்கும். விவாதம், ஏதேனில் எழுப்பப்பட்டவற்றில் ஒன்றானதே இருக்கும்—உண்மையுடன் கீழ்ப்படிவதனால் யெகோவாவின் ஈடற்ற அரசாட்சியைத் தாங்கள் உறுதியாய்க் கடைப்பிடிப்பார்களா என்பதே. இத்தகைய உண்மைத் தவறாமையைத் தூண்டுவிக்கிற அன்பையுடைய ஆட்களை மாத்திரமே தம்முடைய குடிமக்களாகக் கொண்டிருக்க வெளிப்படுத்துதல் 20:7-10.
யெகோவா விரும்புகிறார். கடவுளுடைய சர்வலோகத்தின் சமாதானத்தை மறுபடியும் குலைப்பதற்குக் கடவுளுடைய எதிரியும் அவனுடைய பேய்களும் எடுக்கும் எந்த முயற்சிகளிலும் அவர்களைச் சேர்ந்து ஆதரிக்க விரும்புகிறவர்கள் அவ்வாறு செய்ய தெரிந்துகொள்ள சுயாதீனராயிருப்பர். ஆனால், கடவுள் ஆளும் அரசாங்கத்தை இவ்வாறு அவமதித்துத் தள்ளுவதனால் அவர்கள் அழிவுக்குத் தகுதியுடையவர்கள். இந்தச் சமயத்தில், வானத்திலிருந்து வரும் அக்கினி அழிப்பதைப் போல் அழிவு உடனடியாக வரும். ஆவிகளும், மனிதருமான எல்லாக் கலகக்காரரும் அப்பொழுது எல்லாக் காலத்துக்கும் அழிந்து போய்விட்டிருப்பர்.—25ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதவர்க்கம் மிகுந்தத் துன்பங்களை அனுபவித்து வந்திருப்பது மெய்யே. ஆனால் இது கடவுள் தெரிந்துகொண்டதனால் அல்ல, நம்முடைய முதல் பெற்றோர் தெரிந்துகொண்டதன் காரணமாகவே உண்டாயிற்று. இந்தக் காலமெல்லாம், கடவுள் நிந்தனையைச் சகித்துக் கொண்டும் தாம் அறவே வெறுக்கும் காரியங்களைப் பொறுத்துக் கொண்டும் வந்திருக்கிறார். தமக்கு ‘ஆயிரம் வருடங்கள் ஒரு நாளைப் போலிருக்கும்’ கடவுள் காரியங்களைக் குறித்து தூரப் பார்வை செலுத்துகிறார், இது அவருடைய சிருஷ்டிகளின் நன்மைக்கேதுவாக முடிவடைகிறது. தேவாவியால் ஏவப்பட்ட அப்போஸ்தலன் எழுதுவதுபோல்: “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் [யெகோவா] தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (2 பேதுரு 3:8, 9) கடவுள் பொறுமையும் நீடிய சகிப்புத்தன்மையும் உடையவராக இருந்திராவிடில் இன்று நம்மில் ஒருவருக்கும் இரட்சிப்புக்குரிய எந்த வாய்ப்பும் இராது.
26எனினும், கடந்த ஆறாயிரம் ஆண்டுகளினூடே கடவுளுடைய பங்கு வெறுமென செயலற்று சகித்துக் கொண்டிருந்ததேயென நாம் முடிவு செய்யக் கூடாது. இல்லை, அவர் தாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், அக்கிரமத்தை வெறுமென பொறுத்துக் கொண்டும், தம்முடைய நேரத்துக்காகக் காத்துக்கொண்டும் இல்லை. நாம் பார்க்கப்போகிற பிரகாரம் உண்மை நிகழ்ச்சிகள் அதற்கு முற்றிலும் எதிர்மாறானதைக் காட்டுகின்றன.
[கேள்விகள்]
1. கடவுள் மனிதவர்க்கத்துக்குள் தீமையை அனுமதித்திருப்பதன் காரணத்தை விளங்கிக் கொள்வது மக்களுக்குக் கடினமாயிருப்பதேன்?
2. (எ) கடவுள் இவ்வளவு நீடித்தக் காலம் தீய நிலைமைகளை அனுமதித்ததன் காரணத்தை நாம் பைபிளில் எங்கே காண்கிறோம்? (பி) ஆதாம் ஏவாளைப் பற்றிய பைபிள் விவரப் பதிவு சரித்திரப் பூர்வ உண்மை நிகழ்ச்சியென எது தெளிவாக்குகிறது?
3. தொடக்கத்தில் மனிதவர்க்கத்துக்குக் கடவுள் என்ன வகையான ஏற்பாடுகளைச் செய்தார்?
4. (எ) மனிதர்கள் தங்கள் சிருஷ்டிப்பின்போது பூமிக்குரிய மற்றச் சிருஷ்டிகளிலிருந்து எவ்வகைகளில் வேறுபட்டனர்? (பி) தேவைப்பட்ட வழிநடத்துதல் அவர்களுக்கு எவ்வகையில் அளிக்கப்பட்டது?
5. (எ) என்ன எளிதான கட்டளையைக் கடவுள் அந்த முதல் மனித ஜோடிக்குக் கொடுத்தார்? என்ன காரணத்துக்காக? (பி) அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை எதிர்பார்ப்புகள் ஏன் நேர்மையாகவே அதில் உட்பட்டிருந்தன?
6. (எ) ஆட்சி உட்பட்ட என்ன அடிப்படை சத்தியத்துக்குப் பொருந்த நடந்திருந்தால் நம் முதல் பெற்றோர் என்றென்றும் வாழ முடிந்திருக்கும்? (பி) கடவுளுக்குக் கீழ்ப்படியத் தூண்டும் உணர்ச்சி அவர்களுக்கு ஏன் இருந்திருக்கவேண்டும்?
7. (எ) கடவுளுடைய ஆட்சிக்கு எதிர்ப்பு எங்கே தொடங்கினதென பைபிள் காட்டுகிறது? (பி) ஆவிக்குரிய பகுதி இருப்பதை நம்புவது ஏன் நியாயமானது?
8. தேவதூதர்கள் என்ன வகையான ஆட்கள்?
9, 10. (எ) ஒரு பரிபூரண ஆவி சிருஷ்டி தவறு செய்ய மனச்சாய்வு கொள்வது ஏன் சாத்தியமானது? (பி) ஆகவே, தேவதூதர்களில் ஒருவன் எப்படிச் சாத்தான் ஆனான்?
11. சாத்தான் இருப்பதை நம்புவதற்கு என்ன நல்ல ஆதாரம் உண்டு?
12. மனுஷியான ஏவாளிடம் சாத்தான் எவ்வாறு பேச்சுத் தொடர்பு கொண்டான்? ஏன் அவ்வகையில் செய்தான்?
13. சாத்தான் ஏவாளிடம் என்ன சொன்னான்? என்ன உள்நோக்கத்துடன் அவ்வாறு சொன்னதாகத் தெரிகிறது?
14. (எ) ஏவாள் ஏன் சாத்தான் வலைக்குள் விழுந்தாள்? (பி) ஆதாம் என்ன செய்தான்?
15. அப்படியானால், மனித வாழ்க்கையைக் கெடுத்திருக்கும் குற்றச் செயலும் வன்முறையும் அவற்றோடுகூட நோயும் மரணமுமானவற்றிற்குக் காரணமென்ன?
16, 17. (எ) இந்நிலைமையை இவ்வளவு நீடித்தக் காலம் கடவுள் சகித்து வந்ததற்குக் காரணத்தை விளங்கிக்கொள்ள, எதை நாம் மதித்துணரவேண்டும்? (பி) எழுப்பப்பட்ட விவாதம் உண்மையில் என்ன?
18. (எ) வேறு என்ன விவாதமும் உட்பட்டது? இது பைபிளில் எங்கே காட்டப்பட்டிருக்கிறது? (பி) இந்த விவாதம் நம்மை எவ்வாறு உட்படுத்துகிறது?
19, 20. அந்தக் கலகக்காரரை உடனடியாக அழிக்காததனால், என்ன வாய்ப்பை யெகோவா தம்முடைய ஆவி மற்றும் மனித சிருஷ்டிகளுக்கு அளித்தார்?
21, 22. (எ) ஆட்சியைக் குறித்ததில், கடவுள் அனுமதித்தக் காலத்தின்போது சாத்தானும் மனிதவர்க்கமும் என்ன செய்துவந்திருக்கிறார்கள்? (பி) கடவுளைப் புறக்கணிக்க முயற்சி செய்யும் அரசாங்கத்தைக் குறித்து மனித சரித்திரம் என்ன காட்டுகிறது?
23. கடவுளுடைய குமாரன் பூமியை ஆளும் நீதியுள்ள ஆட்சிக்கு வழியுண்டாக்கும் எது சீக்கிரத்தில் நடைபெறவிருக்கிறது?
24. (எ) ஆயிர ஆண்டுகளின் முடிவின்போது சாத்தானும் அவனுடைய பேய்களும் ஏன் விடுவிக்கப்படவேண்டும்? (பி) இதன் விளைவு என்னவாயிருக்கும்?
25, 26. யெகோவா காரியங்களைக் கையாண்டது எவ்வாறு உண்மையில் நம் ஒவ்வொருவரின் நன்மைக்கே பலனளித்திருக்கிறது?
[பக்கம் 51-ன் படம்]
சோதனையின்கீழ் எல்லா மனிதரும் தங்கள் உத்தமத்தை மீறி கடவுளைவிட்டு விலகி சுதந்தரமாய் நடப்பார்கள் என்று சாத்தான் விவாதித்தான்