உங்கள் வாழ்க்கையில் சத்தியத்தை எதிர்ப்பட உங்களுக்கு மனமுண்டா?
அதிகாரம் 10
உங்கள் வாழ்க்கையில் சத்தியத்தை எதிர்ப்பட உங்களுக்கு மனமுண்டா?
சத்தியத்தை அறிவது விலைமதிக்க முடியாதது. அதை ஞானமாய்ப் பயன்படுத்தினால், அது உங்களைத் தீங்கிலிருந்து அல்லது இழப்பிலிருந்து பாதுகாத்து உங்கள் மகிழ்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் உதவிசெய்யும். முக்கியமாய் இது, இந்தச் சந்ததி எதிர்ப்படவிருக்கும் காரியத்தைப் பற்றிய சத்தியத்தைக் குறித்து அவ்வாறிருக்கிறது.
2இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்ட செய்திகளின் துணைகொண்டு பார்க்கையில், உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் மனிதன் கொண்டுவர முடியாதென்று நீங்கள் ஒப்புக்கொள்ளலாம். மனிதவர்க்கத்துக்கு எதிரிலுள்ள பிரச்னைகளைக் கடவுள் மாத்திரமே, தம்முடைய ராஜ்யத்தைக் கொண்டு தீர்க்க முடியும் என்று பைபிளில் சொல்லியிருப்பது சத்தியமென நீங்கள் உணரலாம். அப்படியானால் சத்தியமென நீங்கள் இப்பொழுது அறிந்திருப்பதற்கு இணங்க உங்கள் வாழ்க்கைப் போக்கைச் சரிப்படுத்தி அமைப்பது ஞானமல்லவா? (யாக்கோபு 1:22) இது எதை உட்படுத்துகிறது?
3கடவுள் தம்முடைய நீதியுள்ள புதிய ஒழுங்கின் பாகமாக ஏற்கும் ஆட்கள் பூர்த்திசெய்ய வேண்டிய சில தராதரங்கள் பைபிளில் குறித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தராதரங்கள், அப்பொழுது வாழ விரும்புகிற ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இப்பொழுது மாற்றங்கள் செய்வதைத் தேவைப்படுத்துகின்றன. உண்மைதான், மனித நோக்குநிலையில், எல்லாருடைய தற்போதைய வாழ்க்கை முறையும் கெட்டதென கருதப்படுகிறதில்லை. எனினும், பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள தராதரங்களுக்கு மாற்றஞ் செய்வது ரோமர் 12:2 பின்வருமாறு சொல்லுகிறது: “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு [இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு, NW] ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”
வாழ்க்கையின்பேரில் முற்றிலும் புதிய மனப்பான்மையை உட்படுத்துகிறது. இதன் காரணமாக4இத்தகைய மாற்றம், சரி, தவறு இன்னதென்று நாம் தீர்மானிக்கும் முறையைப் பாதிக்கும். சென்ற காலத்தில் நாம் ஒருவேளை மற்றவர்களின் எண்ணங்களின்பேரில் நம்பி சார்ந்திருக்கலாம் அல்லது நம்முடைய சொந்தத் தராதரங்களை ஏற்படுத்தி வைத்திருக்கலாம். ஆனால் இப்பொழுதோ, இந்த மனப்பான்மையே, ஆதாமும் ஏவாளும் கடவுளைத் தங்கள் அரசராக வேண்டாமென மறுக்கும்படி செய்வித்து அழிவுக்குரிய விளைவுகளைக் கொண்டுவந்ததென்று நாம் உணருகிறோம். கடவுளுடைய அங்கீகாரம் நமக்கு வேண்டுமென்றால், எது சரி எது தவறு என்பதைப் பற்றிய உண்மையான தராதரங்களுக்காக நாம் அவரிடமே நோக்கவேண்டும். இந்தத் தராதரங்கள் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் உடனடியாகக் கிடைக்கின்றன. சங்கீதம் 119:151-ல் சொல்லியிருக்கிற பிரகாரம், ‘அவருடைய கட்டளைகளெல்லாம் சத்தியம்,’ (NW) ஆகையால், அவற்றிற்குக் கீழ்ப்படிவது ‘சத்தியத்தின் வழியில் நடப்பதைக்’ குறிக்கிறது. (சங்கீதம் 86:11) இதைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்களல்லவா?
அறிவுரையும் சிட்சையும் தேவை
5ஓர் ஆள் தன்னுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய, அவ்வாறு செய்வதற்குத் தேவை இருப்பதை அவன் காணவேண்டும். “பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே,” என்று பைபிளில் சொல்லியிருக்கிறது. (1 இராஜாக்கள் 8:46) எனினும் பலர் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மனமற்றிருக்கின்றனர். ஏன்? பெருமை தடையாக நிற்கிறது. மனத்தாழ்மையுடன் தங்கள் தவறை ஒப்புக்கொள்வதற்குப் பதில், அவர்கள் அடிக்கடி மற்றவர்கள்மீது பழியைச் சுமத்திவிடுகின்றனர். இது பிரச்னையை மேலும் மோசமாக்கவே செய்கிறது.
நீதிமொழிகள் 16:25) ஆகவே, நம்முடைய சொந்த மற்றும் நம்முடைய உடன் தோழரான மனிதரின் மிகச் சிறந்த அக்கறைகளுக்கேதுவாக நாம் நிலையாய் நடந்துகொள்ள, மனிதனைப் பார்க்கிலும் உயர்ந்த மூலகாரணத்திலிருந்து நமக்குச் சிட்சை தேவை. நீதிமொழிகள் 3:11 அந்த மூலகாரணரை அடையாளங் காட்டுகிறது: “மகனே, யெகோவா சிட்சையை அசட்டை செய்யாதே.”—தி.மொ.
6நாம் அபூரணராயும் சரியான போக்கைப் பகுத்துணர்ந்து தெரிந்துகொள்ள பெரும்பாலும் தவறுவதும் இதற்கொப்பான மற்றொரு பெரிய பிரச்னையாகும். தீங்குள்ள ஒரு போக்கை முற்றிலும் சரியானதென எண்ணிக்கொள்ளும்படியும் நாம் ஏமாற்றப்படலாம். (7யெகோவா எவ்வாறு சிட்சை கொடுக்கிறார்? தம்முடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளைக் கொண்டு சிட்சை கொடுக்கிறார். ஆகவே நாம் பைபிளை வாசிக்கையில் அல்லது உடன் விசுவாசி ஒருவர் அதன் அறிவுரையை நம்முடைய கவனத்துக்குக் கொண்டுவந்து, நாம் ஏதோ ஒரு வகையில் குறைவுபடுவதை உணரும்போது, நாம் கடவுளுடைய சிட்சையைப் பெறுகிறோம். அந்த சிட்சையைச் சரியென ஏற்று அதைக் குறித்து ஏதாவது செய்வதனால், நாம் சத்தியத்தை ஏற்பதை நிரூபிக்கிறோம். நமக்கு வழிநடத்துதலைக் கொடுப்பதற்குக் கடவுளுக்கிருக்கும் உரிமையை நாம் நன்றியோடு ஒப்புக்கொண்டு, அவர் தம்முடைய புதிய ஒழுங்கில் கொண்டிருக்க விரும்புகிற வகையான ஆட்களாக இருக்கிறோமெனக் காட்டுகிறோம். ஆம், தெய்வீக சிட்சைக்குச் செவி கொடுப்பதன்பேரில் நம்முடைய உயிர் சார்ந்திருக்கிறது!—நீதிமொழிகள் 4:13.
8நிச்சயமாகவே கடவுளுடைய சிட்சையிலிருந்து நாம் பயனடைய வேண்டுமெனில், நம்மை நேர்மைப்படி நடத்திக்கொள்ளவேண்டும். மற்றவர்கள் கவனிக்கையில் பாசாங்குசெய்துகொண்டு, அவர்களுடைய காட்சிக்குப் புறம்பாக இருக்கையில் நம்முடைய முந்தின வழிகளுக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருப்பது நமக்கு நன்மை பயக்காது. பாசாங்குக்காரரின் பாகத்தை நாம் நடிப்பது நம்முடைய மனச்சாட்சியை மந்தமாக்கிப் போடுவதையே செய்யும். நீதிமொழிகள் 15:3 பின்வருமாறு நமக்குச் சொல்லுகிறது: “யெகோவாவின் கண்கள் எல்லாவிடங்களிலும், நல்லோர் தீயோரையும் பார்த்திருக்கும்.” (தி.மொ.) யெகோவா தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறாரென அறிவது தவறு செய்வதிலிருந்து நம்மைத் தடுத்து வைக்க வேண்டும். அதே சமயத்தில், ‘நல்லோர்’ பேரில் அவர் தயவுடன் நோக்குகிறார் என்ற உறுதிவாக்கில் நாம் ஊக்கமூட்டுதலைக் கண்டடையலாம்.
மனிதர் ஒருவேளை நம்மைப் போற்றுதலுடன் நோக்கினாலும், சிருஷ்டிகரை நாம் ஏமாற்ற முடியாது.“ஒருவரோடொருவர் உண்மை பேசுங்கள்”
9பைபிளைக் கண்டிப்பாய்ப் பின்பற்றுவதாக உரிமை பாராட்டாதபோதிலும், இன்று பெரும்பான்மையர் தங்களை நேர்மையற்றவர்களாகக் கருதுகிறதில்லை. ஆனால் நிலையாய்த் தொடர்ந்து சத்தியத்தைப் பேசுகிறவர்கள் எத்தனைபேர்? பொதுவாய்ப் பலர் உண்மையை மறைக்கிறார்கள் அல்லது தங்கள் சொந்த நோக்கங்களை மேம்படுத்துமென்று நம்புவதை மாத்திரமே பேசுகிறார்கள். இவ்வுலகத்தில் இது சாதாரண வழக்கமெனக் கருதப்பட்டாலும் அது இதைச் சரியாக்குகிறதில்லை. கடவுளிடமிருந்து உறவு தொலைவாக்கப்பட்ட இந்த மனிதவர்க்க உலகம் “பொல்லாங்கனின் வல்லமைக்குள் கிடக்கிறது.” இந்தப் “பொல்லாங்கனாகிய” பிசாசான சாத்தான், “பொய்க்குப் பிதா”வாக இருக்கிறான். பொய்ச் சொல்லுதல் அவனிலிருந்து பிறந்தது. (1 யோவான் 5:19; யோவான் 8:44) ஆகவே ஒருவன் தான் ‘இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு ஒத்த வேஷந்தரிப்பதை விட்டுவிட’ உண்மை பேசுதலைப்பற்றிய காரியத்தில் தான் முற்றிலும் மாற்றஞ்செய்ய வேண்டியிருப்பதைக் காண்கையில் அது அவனுக்கு வியப்பை உண்டுபண்ண வேண்டியதில்லை.
10நேர்மையுடனிருப்பதற்கு நல்லக் காரணமிருக்கிறது. எல்லாச் சமயங்களிலும்—வீட்டிலும், வேலை அல்லது வியாபாரத்திலும், பொழுதுபோக்கிலும், சமூக உறவுகளிலும் நேர்மையாயிருக்கத் தவறுவது சமாதானத்தையும் பாதுகாப்பையும் அடியரித்து அழிப்பதுபோல் வேறு எதுவும் செய்வதில்லை. மக்கள் தாங்கள் சொன்ன
சொல்லைக் காப்பாற்றாமற் போகையில், ஏமாற்றுகையில் அல்லது வஞ்சிக்கையில் ஒருவரும் லாபம் அடைகிறதில்லை. வஞ்சிக்கப்பட்டவர்கள் அநேகமாய் மனக்கசப்பும் கோபமுமடைகின்றனர். உணர்ச்சிக்கும் மனதுக்குமடுத்த நெருக்கடிகள் ஒருபுறமிருக்க, உடல் சம்பந்தத் தீங்கையும் மரணத்தையுங்கூட நேர்மையில்லாமை உண்டுபண்ணக்கூடும். உதாரணமாக, மோசமான வேலைப்பாடு, கீழ்த்தரமான பொருட்கள், ஏமாற்றக்கூடிய உரிமைப் பாராட்டல்கள் ஆகியவை பயங்கர விபத்துகளுக்குக் காரணமாயிருந்திருக்கின்றன. தன்னுடைய நேர்மையற்ற வழிகளின்மூலம் தான் லாபமடைவதாக எண்ணுகிற ஒருவன் அதே சமயத்தில் மற்றவர்களின் நேர்மையற்ற வழிகளின்மூலம் இழந்துகொண்டிருக்கிறான். தொழிலாளிகளும் வாடிக்கைக்காரரும் திருடுவதனால், அவனுங்கூட வாணிகச் சரக்குகளுக்காகவும் சேவைகளுக்காகவும் மிக உயர்ந்த விலைகளைச் செலுத்துகிறான். இவ்வாறு நேர்மையில்லாமை ஒரு நச்சுச் சுழலை உண்டாக்குகிறது. அதிகமதிகமாக ஆட்கள் தங்கள் நலத்துக்காக மற்றவர்களை நேர்மையற்று நடத்தி வருகையில், ஏமாற்றங்கள், வன்முறைச் செயல்கள், தீங்கிழைக்கும் செயல்கள், மரணங்கள் ஆகியவை பெருகுகின்றன.11இத்தகைய கெட்ட கனிகளைக் கவனிக்கையில், “யெகோவா வெறுக்கின்றவை”களுக்குள் பொய்நாவு, பொய் உரைக்கும் கள்ளச் சாட்சி, மாறுபாடான நிறைகற்கள், கள்ளத் தராசுகள் ஆகியவை அடங்கியிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. (நீதிமொழிகள் 6:16-19; 20:23, தி.மொ.) தம்மை நேசிக்கிறவர்களுக்குக் கடவுள் சேமிப்பில் வைத்திருக்கிற ஆசீர்வாதங்களில், பழக்கமாய்ப் பொய்ச் சொல்லுகிறவர்களுக்கு எவ்விதப் பங்கும் இராது. (வெளிப்படுத்துதல் 21:8) நீதியுள்ள கடவுளிடத்திலிருந்து இதையே நாம் எதிர்பார்ப்போமல்லவா? ஏமாற்றி தங்கள் அயலானுடைய செலவில் தாங்கள் லாபமடைய விரும்புகிறவர்களை தொடர்ந்து கடவுள் கண்டிக்காமல் விட்டுக்கொண்டிருந்தால் அவருடைய புதிய ஒழுங்கில் பாதுகாப்புடன் எவரும் எவ்வாறு உணர முடியும்?
12ஆகையால் “ஒருவரோடொருவர் உண்மை பேசுங்கள்,” என்று பைபிளில் கட்டளையிட்டிருப்பதை முக்கியமற்றதென கருதக்கூடாது. (சகரியா 8:16; எபேசியர் 4:25, NW) வாக்குகள் அல்லது ஒப்பந்தங்களைக் குறித்தவற்றில் நம்முடைய “ஆம்” என்பது ஆம் என்றும், நம்முடைய “இல்லை” என்பது இல்லை என்றும் பொருள்கொள்ள வேண்டும். (யாக்கோபு 5:12, தி.மொ.) “சத்திய கடவுளாகிய யெகோவா”வைப் பிரதிநிதித்துவஞ் செய்ய நாம் விரும்பினால், சத்தியத்தைப் பேசுவதில் மாறாமல் நிலைத்திருக்கவேண்டும். (சங்கீதம் 31:5, NW) ஒருவன் உண்மையைச் சொல்லாவிடில், அவன் கடவுளுடைய அல்லது தன் அயலானுடைய மதிப்பைப் பெற முடியாது. மேலும் அவன் அவருடைய சாட்சிகளில் ஒருவனாக இருந்து கடவுளைப் பிரதிநிதித்துவஞ் செய்யவும் முடியாது. சங்கீதக்காரன் பின்வருமாறு சொன்னான்: “தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு, உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு கற்பனையைப் பிணைக்கிறது . . . என்று சொல்லுகிறார்.”—சங்கீதம் 50:16, 19.
13ஆனால் ஓர் ஆள் உண்மையுடனும் நேர்மையுடனுமிருந்து இந்த உலகத்தில் பிழைக்க முடியுமா? எல்லாரும் செய்துகொண்டிருப்பதைச் செய்யாமல் தொழிலை நடைமுறையில் தொடர்ந்து நடத்தக்கூடுமா? என்று சிலர் வியப்புடன் கேட்கலாம்.
சத்தியத்தை நடைமுறையில் பயன்படுத்துவோரைக் கடவுள் கவனித்துக் காக்கிறார்
14நேர்மையற்றிராமல் ஒருவன் வாழ்க்கை நடத்த முடியாது என்று சொல்வது, தம்மை நேசிக்கிறவர்களைப் பற்றிக் கடவுளுக்கு அக்கறையில்லை என்று சொல்வதாகும். ஆனால் இது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடவுளுடைய ஊழியரின் அனுபவத்துக்கு நேர்மாறாக இருக்கிறது. (எபிரெயர் 13:5, 6) சங்கீதக்காரனாகிய தாவீது பின்வருமாறு கூறினான்: “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன், ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.” (சங்கீதம் 37:25) இது, நீதிமான்கள் துன்பங்களையோ கடின காலங்களையோ அனுபவிப்பதில்லை என்று பொருள்கொள்ளுகிறதில்லை. தாவீதுதானேயும் சமுதாயத்திலிருந்து துரத்தப்பட்டவனைப்போல் ஒரு காலப்பகுதிக்கு வாழும்படி வற்புறுத்தப்பட்ட நிலையில் இருந்தான். எனினும் வாழ்க்கைக்குத் தேவைப்பட்டவை அவனுக்குக் கிடைத்தன.
15உண்மையான வணக்கத்தின் கவர்ச்சி, பொருள் சம்பந்தப்பட்ட ஆதாயம் அல்ல. எனினும், “அன்றன்று வேண்டிய ஆகாரத்தை அன்றன்று” அடைவதற்குத் தாங்கள் எடுக்கும் பிரயாசங்களை ஆசீர்வதிக்கும்படி கடவுளிடத்தில் ஜெபிப்பது சரியென இயேசு தம்மைப் பின்பற்றினோருக்குக் கற்பித்தார். (லூக்கா 11:2, 3, தி.மொ.) வாழ்க்கையின் இன்றியமையாதப் பொருட்கள் அவர்களுக்குத் தேவை என்பதை ஒப்புக்கொண்டு, அவர் தம்முடைய சீஷர்களுக்குப் பின்வருமாறு உறுதியளித்தார்: “இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரம பிதா அறிந்திருக்கிறார்.” ஆனால்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். [தொடர்ந்து தேடிக்கொண்டிருங்கள், NW] அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்,” என்று அவர்களை ஊக்கப்படுத்தினார். (மத்தேயு 6:25-34) நீங்கள் இதை நம்புகிறீர்களா? அப்படியானால், மற்ற ஆட்கள் அவ்வாறு செய்வதனால் நீங்களும் கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களை விட்டுவிடும்படி சோதனைக்கு இடங்கொடுக்க மாட்டீர்கள். அதற்குப் பதில் 1 தீமோத்தேயு 6:6-8-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிற இந்த ஞானத்தை நன்றியோடு மதித்துணருவீர்கள். அது சொல்வதாவது: ”போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.”
16இந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு இன்று இவ்வுலகத்தில் பொதுவாயுள்ள நோக்குநிலையிலிருந்த முற்றிலும் வேறுபட்ட நோக்குநிலை தேவை. அப்படியானால், ‘நம்முடைய மனதைப் புதிதாக்குவதும்’ இதில் உட்பட்டிருக்கிறது. வாழ்க்கையின் இன்றியமையாதத் தேவைகளுடன் திருப்தியாயிருப்பது பணத்தையும் பொருள் சம்பந்தமானவற்றையும் நாடித் தொடருவதை வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக்குவதிலிருந்தும், இவற்றை அடைய மற்றவர்களை நேர்மையற்ற முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தூண்டப்படுவதிலிருந்தும் நம்மைத் தடுத்து வைக்கிறது. (நீதிமொழிகள் 28:20; மத்தேயு: 6:24; 1 தீமோத்தேயு 6:9, 10) செல்வங்களைத் தங்கள் இலக்காக்கிக் கொள்கிறவர்கள் அதுவே பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் குறிப்பதாக நினைக்கலாம். ஆனால் அதற்கு மாறாக, “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப் பிரியன் செல்வப் பெருக்கினால் திருப்தியடைவதில்லை,” என்று பைபிள் சொல்வதே உண்மையாயிருக்கிறது. (பிரசங்கி 5:10) அதிகம் உடையவர்கள் இன்னும் அதிகம் வேண்டுமென்று விரும்புகின்றனர். அதை அடைவதற்கு அடிக்கடி அவர்கள் தங்கள் உடல்நலத்தையும் தங்கள் குடும்ப வாழ்க்கையையும் தியாகஞ் செய்கின்றனர். பாதுகாப்பாய் உணருவதற்கு மாறாகத் தங்களுக்கு இருப்பவற்றை இழந்துபோகும் பயத்தில் அவர்கள் வாழ்கின்றனர்.
17செல்வத்தை நாடித் தொடரும் ஒருவன், இயேசு சொன்ன பிரகாரம், “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும், அது அவனுக்கு ஜீவன் அல்ல,” என்ற உண்மையை உணருகிறதில்லை. (லூக்கா 12:15) தம்முடைய ஊழியருக்குத் தேவையானவற்றைக் கொடுக்கக் கடவுள் வல்லவராயிருப்பதில் விசுவாசம் வைப்பது இதைப் பார்க்கிலும் மிக அதிக நல்லது. கடவுள் தேவையானவற்றை அளிக்கிறார் என்பதற்கு, 200-க்கு மேற்பட்ட நாடுகளிலிருக்கும் லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளுக்குள் உயிருள்ள நிரூபணம் இருக்கிறது. எல்லா ஜாதிகளிலிருந்தும் எல்லா பண்பாடு அறிவு அனுபவங்களிலிருந்தும் வந்துள்ள சாட்சிகள், எல்லா அரசாங்க வகைகளின் கீழும் எல்லா வகையான சட்டப் பூர்வ வேலைகளிலும், தங்கள் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த முடிகிறது. நேர்மையாயிருப்பது அவர்களைத் தீங்குக்குள்ளாக்குவதாகத் தோன்றுகையிலும், கொடுக்க வல்லவராகிய கடவுளுடைய ஆற்றலில் அவர்களுக்கு இருக்கும் விசுவாசம் பயனளித்திருக்கிறது. உடன் உழைக்கும் மற்ற மனிதரின் மரியாதையை அவர்கள் அடைந்திருக்கின்றனர், அடிக்கடி வேலையாட்களாக விரும்பி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர், ஏனெனில், நம்பத்தகுந்தவர்களோடு கையாளவே மக்கள் இன்னும் விரும்புகின்றனர். ஆனால் மிக முக்கியமானது என்னவெனில், நேர்மையுள்ளவர்கள் தங்கள் நேர்மையின் காரணமாகச் சுத்தமான மனச்சாட்சியை அனுபவித்து மகிழ்கின்றனர்.
18யெகோவாவின் சாட்சிகளாவதற்கு முன்னால், அவர்கள் மிகுந்த அல்லது குறைவான அளவில் இவ்வுலகத்தின் மாதிரிக்குள் தங்களைப் பொருத்தி அமைத்திருந்தனர். ஆனால் பைபிளைப் படித்ததும் அதன் சத்தியத்தை ஏற்றுக்கொண்டதும் அவர்கள் அந்தக் கெட்ட பழக்கச் செயல்களை விட்டுவிட செய்தன. இப்பொழுது “சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்க”வும் “இவ்விதமாய் அவர்கள் நமது இரட்சகராகிய கடவுளின் உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்க”வும் கடினமாய் உழைக்கின்றனர். (தீத்து 2:10, தி.மொ.) சத்தியத்தை ஏற்று தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வது அவர்களுக்கு எப்பொழுதும் சுலபமாய் இருக்கவில்லை. ஆனால் சத்தியத்தின் பேரிலுள்ள அன்பு அதற்கு இணங்க செயல்படும்படி அவர்களுக்கு உதவி செய்தது.
19சத்தியத்தின்பேரில் உங்களுக்கு இதைப்போன்ற அன்பு இருக்கிறதா? இருக்கிறதென்றால், தம்முடைய புதிய ஒழுங்குக்குள் செல்ல உயிரோடு பாதுகாத்து வைக்கும்படி கடவுள் தேடும் வகையான ஆளாக நீங்கள் இருக்கிறீர்கள். கடவுள் ஏற்றுக்கொள்வதற்கு நீங்கள் “ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.” (யோவான் 4:24) இது உங்களைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து நீங்கள் வேறுபட்டவரென தனிப்படுத்திக் காட்டும். நீங்கள் யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டுமானால் இவ்வுலகத்திலிருந்து நீங்கள் வேறுபட்டிருக்க வேண்டிய மற்றத் துறைகளும் உண்டு. இவை யாவை?
[கேள்விகள்]
1, 2. (எ) சத்தியம் நமக்கு எவ்வாறு நன்மை பயக்கக்கூடும்? (பி) எந்த மெய்யான மூலகாரணம் உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருமென நீங்கள் நம்புகிறீர்கள்?
3. கடவுளுடைய புதிய ஒழுங்கில் வாழ ஒருவன் விரும்பினால் தன் வாழ்க்கையில் அவன் செய்யவேண்டிய மாற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை?
4. நாம் ‘சத்தியத்தின் வழியில் உண்மையில் நடக்கப்போகிறோமென்றால்’ எது சரி எது தவறு என்பதை எந்த ஆதாரத்தின்பேரில் தீர்மானிக்க வேண்டும்?
5. (எ) நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யப்போகிறோமென்றால், நம்மைப் பற்றி என்ன உண்மையை எதிர்ப்பட மனங்கொண்டிருக்க வேண்டும்? (பி) தன் தவறை ஒப்புக்கொள்வதிலிருந்து ஒருவனை பெரும்பாலும் தடுத்து வைப்பது எது? அதன் விளைவென்ன?
6. சிட்சை பெற எந்த மூலகாரணத்தை நாம் நோக்கவேண்டும்? ஏன்?
7. (எ) யெகோவாவிடமிருந்து வரும் சிட்சை நம்மை எட்டுவது எவ்வாறு? (பி) இத்தகைய சிட்சையை நாம் ஏற்று பயன்படுத்துவது நம்மைப்பற்றி என்ன காட்டுகிறது?
8. (எ) சிட்சையை ஏற்பதுபோல் பாசாங்கு செய்து, நம்முடைய வழிகளை உண்மையில் மாற்றவில்லையென்றால் ஏன் நமக்குநாமே உண்மையில் தீங்கு செய்துகொள்ளுகிறோம்? (பி) நாம் எங்கிருந்தாலும் யெகோவா நம்மைக் காண்கிறாரென அறிவது ஏன் ஆறுதலாயிருக்கிறது?
9. (எ) உண்மை பேசவேண்டியிருக்கையில், இவ்வுலகத்தில் எது சாதாரண வழக்கமாக ஏற்கப்படுகிறது? ஏன்? (பி) ஆகவே ஒருவன் “இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு ஒத்த வேஷந்தரிப்பதை விட்டுவிட”ப் போகிறானென்றால் என்ன மாற்றம் தேவைப்படுகிறது?
10. நேர்மையில்லாமையின் நச்சுச் சுழல், உண்மையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் எதிராக எவ்வாறு இயங்குகிறது?
11. நேர்மையில்லாமையையும் பொய்ச் சொல்லுதலையும் பற்றி யெகோவா எவ்வாறு உணருகிறார்?
12, 13. (எ) உண்மை பேசுவதைப் பற்றி பைபிளில்தானே என்ன சொல்லியிருக்கிறது? (பி) தம்முடைய சாட்சிகளாக யெகோவாவை நாம் சேவிக்கக்கூடுமா என்பதன்பேரில் நம்முடைய நேர்மை என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது?
14. நேர்மையற்றிராமல் வாழ்க்கை நடத்த முடியுமென்பதை மதித்துணர பைபிள் நமக்கு எவ்வாறு உதவி செய்கிறது?
15. உயிரைப் பராமரிப்பதற்குத் தேவையான பொருட்களை நாம் அடைவதில் கடவுளுக்கிருக்கும் அக்கறையைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?
16. இந்த வேதப்பூர்வ நியமங்களை நாம் பொருத்திப் பிரயோகிப்பது நம்மை எவ்வாறு பாதுகாக்கும்?
17. (எ) பொருள் சம்பந்த செல்வத்தைச் சம்பாதிப்பதில் ஒருவன் தன் இருதயத்தை ஊன்ற வைக்கையில், எந்தச் சத்தியத்தை புறக்கணிக்கிறான்? (பி) வாழ்க்கை நடத்துவதில் நேர்மைக்குரிய நியமங்களைப் பயன்படுத்துவது நடைமுறைக்குரியதென்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
18, 19. (எ) இவர்கள் ஏன் கடவுளுடைய தராதரங்களுக்கு ஒத்திருக்கத் தங்கள் வாழ்க்கையை மாற்றினர்? (பி) தம்முடைய புதிய ஒழுங்குக்குள் பாதுகாத்து வைப்பதற்கு என்ன வகையான ஆட்களுக்காகக் கடவுள் தேடிக்கொண்டிருக்கிறார்?
[பக்கம் 113-ன் படம்]
ஒருவர் உண்மையுடனும் நேர்மையுடனும் இருந்து அதேசமயத்தில் பணசம்பந்தமாய்ப் பிழைக்க முடியுமா?