உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் அருகிலுள்ளன!
அதிகாரம் 1
உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் அருகிலுள்ளன!
நிச்சயமாகவே நீங்கள் பெரும்பான்மையரைப்போல் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஆவலுடன் நாடுகிறீர்கள். எங்கும் மக்கள், குற்றச் செயல்கள், வன்முறை, போர், மனக்கிலியூட்டும் அணுசக்தி போர் பயமுறுத்தல் ஆகியவற்றால் சலித்துச் சோர்வுற்றிருக்கின்றனர். மேலும், தகுதியான வேலைகள், வீட்டு வசதி, அல்லது போதிய உணவு பலருக்கு இல்லை. இத்தகைய பிரச்னைகள் தீர்க்கப்பட்டு இந்தப் பூமி அதன் குடிமக்களுக்கு இன்பமான, பாதுகாப்புள்ள வீடாகக் கூடுமானால் எவ்வளவு மகிழ்ச்சி நிலவியிருக்கும்!
2வியப்பூட்டுவதாய், ஆவலோடு நாடும் இந்த விடுதலை அருகிலிருக்கிறதெனவும், பூமியெங்கும் சமாதானமும் பாதுகாப்பும் உண்மையிலிருக்கப்போவது நெருங்கிவிட்டதெனவும் நம்புவதற்கு நல்ல காரணம் உண்டு! ஆனால் இதை யார் கொண்டுவருவார்? இதை நிறைவேற்றுவதற்காக இவ்வுலக நாடுகள் தங்கள் வேறுபாட்டு சச்சரவுகளை ஒதுக்கி வைத்து விடுவார்களா?
3உலக அதிபதிகள், “சமாதானமும் பாதுகாப்பும்!” a என்று உண்மையில் அறிவிப்பு செய்யப்போகும் காலம் வருமென்று, கவனத்தைக் கவரும் பைபிள் தீர்க்கதரிசனம் ஒன்று அறிவித்தது. உண்மையில், ஐக்கிய நாட்டுச் சங்கம் 1986-ஐ “சர்வதேச சமாதான ஆண்டு” என்றறிவித்தபோது, “சமாதானமும், சர்வதேச பாதுகாப்பும் ஒத்துழைப்பும்” ஆகிய இந்த இலக்கை இந்த ஆண்டு முதற்கொண்டு முன்னேற்றுவிக்கத் தனிப்பட்ட முயற்சி செய்யும்படி எங்குமுள்ள அமைப்புகளை அது கேட்டுக்கொண்டது.
4ஆனால் இது உண்மையான “சமாதானமும் பாதுகாப்புமாக” இருக்குமா? இது உங்கள் சுற்றுப்புறத்துக்குள்ளும் உங்கள் வீட்டுக்குள்ளும் எட்டி தனிப்பட்ட வகையில் உங்களைப் பாதிக்கும் பிரச்னைகளைக் கையாளுமா? பெருகிக்கொண்டிருக்கும் குற்றச் செயல்கள் ஓயாக் குடிப்பழக்கம், உணவு விலைவாசி உயர்வு, கனத்த வரி சுமத்தல், தூய்மைக்கேடு பரவுதல், குடும்ப உறவுகள் விடாமல் சிதைந்துகொண்டுபோதல் ஆகிய இப்பிரச்னைகளை அது தீர்க்குமா? இந்த நிலைமைகளில் எதுவும் தொடர்ந்திருக்கும்வரையில் அவை உங்கள் தனிப்பட்ட சமாதானத்தையும் பாதுகாப்பையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும்.
5இந்தத் தொந்தரவுகளைத் தாங்கள் அடக்கியாளக் கூடுமென மனிதர் நம்புவது உண்மைதான். போரின் நொறுக்கும் பணசம்பந்தமான பாரங்களிலிருந்து தாங்கள் விடுவிக்கப்பட்டபின், எல்லாச் செல்வத்தையும், ஆராய்ச்சியையும், மனித சக்தியையும் இத்தகைய பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தாங்கள் திரும்பவும் செலுத்தக் கூடுமென்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
6நீங்கள் அதை உண்மையில் நம்புகிறீர்களா? மனிதர் நிலையான பரிகாரங்களை என்றாவது கொண்டுவரக் கூடுமென்று காட்டுவதற்கு உறுதியான அத்தாட்சி ஏதாவது உண்டா? சரித்திரம் என்ன காட்டுகிறது? நிச்சயமாகவே, வாழ்க்கையில உங்கள் சொந்த அனுபவம் உங்களுக்கு என்ன தெரிவிக்கிறது?
7‘ஆனால், தீர்க்கும் பரிகாரங்கள் மனிதரிடம் இல்லையென்றால், வேறு என்ன இருக்கிறது?’ என்று நீங்கள் கேட்கலாம். பூமியும் அதிலிருக்கும் உயிருள்ளவையும் அறிவுக் கூர்மையான திட்ட அமைப்பைப் பிரதிபலிக்கின்றன என்பதற்கு மறுக்கமுடியாத அத்தாட்சி இருக்கிறது. (எபிரெயர் 3:4) இந்தத் திட்ட அமைப்புக்குக் காரணர் காட்சியில் ஈடுபடக்கூடுமா? மனித விவகாரங்களில் அவர் தலையிடுவாரா? இந்தக் கேள்விகளுக்கு பைபிளில் மாத்திரமே பதில்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
8ஆபத்திலிருப்பதைக் கருதுகையில், இந்தக் காரியத்தின்பேரில்
பைபிளில் சொல்லப்பட்டிருப்பதை ஆழ்ந்து கவனிப்பது தகுந்ததல்லவா? பைபிள், பூமியில் வெகு விரிவாக மொழிபெயர்க்கப்பட்ட மற்றும் எங்கும் பரவச் செய்யப்பட்ட புத்தகம் என்று நீங்கள் தெரிந்திருப்பீர்கள். அது முழுமையாகவும் பகுதியாகவும் கோடிக்கணக்கான பிரதிகள் 1,800-க்கு2மேற்பட்ட மொழிகளில் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த மிகப் பூர்வ புத்தகம் இந்த 20-ம் நூற்றாண்டில் நமக்கு மிகப் பெரும் அக்கறைக்குரிய காரியங்களை முழுமையாய் விளங்கிக்கொள்ள நமக்கு உதவிசெய்கிறதென உங்களுக்குத் தெரியுமா?9பைபிளில் ‘உலகத்தின் முடிவைப்’ பற்றி முன்னறிவிக்கப்பட்டிருக்கிறதென்று பலர் அறிந்திருக்கின்றனர். ஆனால் அது எப்பொழுது வரும், அல்லது அதற்குப் பின் பூமியில் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி அதில் சொல்லியிருப்பதை வெகு சிலரே அறிவர். (மத்தேயு 24:21, 22; 2 பேதுரு 3:11-13) அவர்கள் கர்த்தருடைய ஜெபத்தையும் ஜெபிக்கலாம், அதில் ‘கடவுளுடைய ராஜ்யம் வரும்படி’ அவர்கள் கேட்கிறார்கள். (மத்தேயு 6:9, 10) ஆனால் கடவுளுடைய ராஜ்யம், தற்போதைய அரசியல் ஒழுங்குமுறைகள் எல்லாவற்றையும் அகற்றி அவற்றினிடத்தை ஏற்கப்போகிற உண்மையான ஓர் அரசாங்கம் என்பதை ஒரு சிலரே தெளிவாக உணருவார்கள். தீர்க்கதரிசி தானியேல் சொன்ன பிரகாரம்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
10கவனத்தைத் தூண்டுவதாய், முன் குறிப்பிட்ட “சமாதானமும் பாதுகாப்பும்” பற்றிய பைபிள் தீர்க்கதரிசனத்தில் இந்த அம்சங்கள் அடங்கியிருக்கின்றன: “சமாதானமும் சவுக்கியமும் [பாதுகாப்பும், NW] உண்டென்று அவர்கள் சொல்லும்போது; . . . அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்.” (1 தெசலோனிக்கேயர் 5:3) ஆகவே மனிதத் தலைவர்கள் அறிவிப்பு செய்யும் சமாதானமும் பாதுகாப்பும் என்னவாயினும் வெகு குறுகிய காலமே இருக்குமென்பது தெளிவாயிருக்கிறது. ஏனெனில் அதை உடனடியாகப் பின்தொடர்ந்து மனித ஆட்சிகள் யாவும் நொறுக்கி இல்லாமற்போகச் செய்யப்பட்டு, அவற்றினிடத்தை, பூமி முழுவதற்கும் ஒரே அரசாங்கமான —கடவுளுடைய ராஜ்யம்—ஏற்குமென்று தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.
11மேலும், கடவுளுடைய ராஜ்யம் கொண்டுவரப்போகிற சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் மனிதத் தலைவர்கள் வாக்குக் கொடுப்பதற்கும் பல வேறுபாடுகள் இருப்பதை பைபிள் வெளிப்படுத்துகிறது. இன்று மனிதர், உடன்படிக்கைகளினால் போர்த்தளவாடங்களைக் குறைக்கும் ரீதியில் பேசுகின்றனர். அதற்கு வேறுபட, கடவுள் எல்லாப் போர்த்தளவாடங்களுக்கும் முழுமையான முடிவைச் சீக்கிரத்தில் கொண்டுவந்து போரின் அடிப்படைக் காரணங்களை நீக்கிப் போடுவாரென்று பைபிளில் அறிவித்திருக்கிறது. (சங்கீதம் 46:9; ஏசாயா 2:2-4) மேலும் கடவுள் வாக்களிக்கும் பாதுகாப்பு தேசங்களுக்கிடையில் நடக்கும் போரிலிருந்து மாத்திரமல்ல. பகலிலாயினும் இரவிலாயினும்—ஒருவரும் இனி ஒருபோதும் பயத்தில் இராதபடி, எல்லா வகையான எதிரிகளிலிருந்தும் பாதுகாப்பாகும். (மீகா 4:3, 4) மேலும், குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் மனிதர் இப்பொழுது அக்கறையுள்ளோராய் இருக்கிறார்கள், ஆனால் கடவுள் அறிவித்துள்ள நோக்கம், குற்றச் செயலுக்கு வழிநடத்தும் மனப்பான்மைகளையும் நிலைமைகளையுங்கூட வேரோடு அழிப்பதாகும்.—சங்கீதம் 37:8-11; கலாத்தியர் 5:19-21.
12தேசங்கள், மருத்துவ ஆராய்ச்சி முன்னேற்றத்திலும் நோயுற்றோரையும் வயோதிபரையும் கவனிப்பதில் அபிவிருத்தியிலும் பெருமை பாராட்டிக் கொள்கின்றனர். ஆனால் பைபிளில், கடவுளுடைய ராஜ்யம், முதுமைப்படுதலையும் மரணத்தையும் வென்று நிலையான பூரண சுகத்தைக் கொண்டுவரப்போவதைப் பற்றி விளக்கியிருக்கிறது! (வெளிப்படுத்துதல் 21:3, 4) கூடுதலாக, கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் ஒருவரின் வேலை உண்மையில் அர்த்தமுள்ளதாயும், மெய்யான திருப்தியைக் கொண்டுவருவதாயும் இருக்கும். உங்கள் வேலை ஏமாற்றத்தை உண்டுபண்ணினால் அல்லது உண்மையான நிறைவேற்ற உணர்ச்சியைக் கொண்டுவராவிடில் நீங்கள் எப்படி மகிழ்ச்சியாயிருக்க முடியும்?—ஏசாயா 65:21-23; ரோமர் 8:19-21.
13உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் முன்னேற்றுவிக்கும் வகையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் எது அளிக்கிறதென நீங்கள் நம்புகிறீர்கள்—மனிதரின் வாக்குகளா, அல்லது தம்முடைய ராஜ்ய அரசாங்கத்தைக் கொண்டு நிறைவேற்றப்போகிற
கடவுளுடைய வாக்குகளா? பொதுவில் இந்த உலகம் அளிக்கிறதோடு செல்வதனால் வாழ்க்கையில் நீங்கள் உண்மையில் விரும்புகிறதைக் கண்டடைந்திருக்கிறீர்களா? தற்போது பொதுமக்கள் பாராட்டுகிறதோடு கவர்ந்திழுக்கப்பட்டுச் செல்ல நீங்கள் உங்களை அனுமதித்து, பின்பு தவறான தூண்டுதலளிக்கும் வாக்குகளால் நீங்கள் மோசம்போக்கப்பட்டதை உணர்ந்து, உண்மையான சமாதானமும் பாதுகாப்புமில்லாமல் விடப்பட்டால் எப்படியிருக்கும்? மறுபட்சத்தில், பைபிளில் வாக்குக் கொடுத்திருப்பது நம்பத்தக்கது, நடைமுறையானது, உண்மைப்படியுள்ளது என்று நீங்கள் நம்பிக்கையோடிருக்கக் கூடுமா? நிச்சயமாகவே, இத்தகைய கேள்விகளுக்குப் பதில்கள் ஆழ்ந்து சிந்தித்து ஆராயத் தகுந்தவை.[அடிக்குறிப்புகள்]
[கேள்விகள்]
1. என்ன நிலைமைகள், உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் அவ்வளவு மிக விரும்பத்தக்கதாக்குகின்றன?
2, 3. (எ) உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் உண்மையில் அவ்வளவு அருகில் இருந்தால், என்ன கேள்விகளைக் கேட்பது அவசியம்? (பி) ஐக்கிய நாட்டுச் சங்கம் எடுத்த நடவடிக்கை எப்படி சமாதானத்தையும் பாதுகாப்பையும் விரும்புவதோடு பொருந்துவதாகத் தோன்றுகிறது?
4. சமாதானத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் செய்யப்படும் ஏதாவது ஏற்பாடு உங்களுக்கு நன்மைபயக்க வேண்டுமானால், என்ன பிரச்னைகளை அது தீர்க்க வேண்டும்?
5, 6. மனிதர் இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கப்போகின்றனரென்று, வாழ்க்கையில் உங்கள் சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் நம்புகிறீர்களா?
7, 8. (எ) தீர்க்கும் பரிகாரத்துக்காக வேறு எங்கே நாம் நோக்கலாம்? (பி) பைபிள் எவ்வளவு முதன்மைவாய்ந்த புத்தகம்?
9, 10. (எ) எதிர்காலத்தைப் பற்றியும், மேலும் மனித அரசாங்கங்களைப் பற்றியும் பைபிளில் என்ன சொல்லியிருக்கிறது? (பி) கடவுளுடைய ராஜ்யம் என்ன, தற்போதைய எல்லா அரசாங்கங்களிலிருந்தும் ஆட்சி அதிகாரத்தை அது எப்பொழுது எடுத்துக் கொள்ளும்?
11, 12. கடவுளுடைய ராஜ்யம் செய்யுமென பைபிளில் சொல்லியிருக்கிறவற்றிற்கும் மனிதத் தலைவர்கள் செய்ய முயற்சி செய்பவற்றிற்குமுள்ள சில வேறுபாடுகள் யாவை?
13. எந்தக் கேள்விகளை ஆராய்வது நமக்கு நன்மை பயக்கும்?
[பக்கம் 4-ன் முழுபடம்]
[பக்கம் 9-ன் படம்]
ஒருவரும் இனி ஒருபோதும் பயத்தில் இரார்—பகலிலாயினும் இரவிலாயினும்