Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சமாதான வாழ்க்கை நடத்துவதற்கு அதிகாரத்தை மதிப்பது இன்றியமையாதது

சமாதான வாழ்க்கை நடத்துவதற்கு அதிகாரத்தை மதிப்பது இன்றியமையாதது

அதிகாரம் 12

சமாதான வாழ்க்கை நடத்துவதற்கு அதிகாரத்தை மதிப்பது இன்றியமையாதது

இன்றைய உலகத்தில் சுயாதீன ஆவி எங்கும் பரவியிருக்கிறது. அதிகாரத்தைக் குறித்து பொதுவான அவநம்பிக்கை தோன்றி வளர்ந்திருக்கிறது, முக்கியமாய் இரண்டாம் உலகப் போர் முதற்கொண்டு பிறந்தவர்களுக்குள் அவ்வாறு இருக்கிறது. ஏன்? ஒரு காரணம், அவர்கள் பெற்றோர் முன்னொருபோதும் நடந்திராத அளவில் கடும் ஒடுக்குதலையும் அதோடுகூட அதிகாரத்திலிருப்போர் பயன்படுத்தும் சீரழிந்த வன்முறை தந்திர சூழ்ச்சிமுறைகளையும் கண்டிருந்தனர். அதிகாரத்தைப் பற்றிக் கிளர்ச்சியற்றச் சோர்ந்த நோக்கை அவர்கள் வளர்த்தனர். இதன் விளைவாக, இவர்களில் பலர், பெற்றோராகையில், அதிகாரத்தை மதிப்பதைத் தங்கள் பிள்ளைகளில் அறிவுறுத்தவில்லை. பிள்ளைகள் கண்ட அதிகாரப்பூர்வ அநியாயங்களும் இந்நிலைமையைச் சீர்திருத்த உதவி செய்யவில்லை. இதன் விளைவாக அதிகாரத்தை அவமதிப்பது சாதாரணமாய்விட்டது.

2இந்த அவமரியாதை பற்பல வழிகளில் வெளிப்படுத்திக் காட்டப்படுகிறது. சில சமயங்களில், ஏற்கப்பட்ட தராதரங்களை வேண்டாமெனத் தள்ளுவதைச் சுட்டிக் காட்டும் ஒருவகையான உடையை அல்லது நாகரிகப் பாங்கை மேற்கொள்வதன்மூலம் அது காட்டப்படுகிறது. இது ஒருவேளை வெளிப்படையாய்க் காவல்துறையாட்களுக்குப் பணிய மறுத்தலை, அல்லது வன்முறைச் செயல்களையும் இரத்தஞ் சிந்துதலையுங்கூட உட்படுத்தலாம். ஆனால் இது இத்துடன் நின்று விடுவதில்லை. இந்த மிக வெளிப்படையான வழிகளில் தங்களை வெளிப்படுத்தாத ஆட்களுக்குள்ளும் பலர், ஏதோ சட்டங்கள் தங்களுக்குப் பிடித்தமில்லையென்றால் அல்லது அவை தங்களுக்கு வசதிக்குறைவை உண்டுபண்ணுவதைக் கண்டால் அவற்றைப் புறக்கணிக்கின்றனர் அல்லது தட்டிக் கழித்துவிடுகின்றனர்.

3இந்நிலைமை வீடுகளிலும், பள்ளிகளிலும், வேலைசெய்யுமிடங்களிலும், அரசாங்க அதிகாரிகளோடு கொள்ளும் தொடர்புகளிலும் இருந்துவரும் சூழ்நிலையை ஆழமாய்ப் பாதித்திருக்கிறது. மேலும் மேலும் மக்கள், தாங்கள் செய்யவேண்டியதை வேறு எவராவது தங்களுக்குச் சொல்வதை விரும்புகிறதில்லை. இன்னும் பெரும் சுயாதீனமென தாங்கள் நம்புவதைப் பற்றிக்கொள்ள நாடித் தொடருகின்றனர். இந்த நிலைமையை எதிர்ப்படுகிற நீங்கள் என்ன செய்வீர்கள்?

4யெகோவாவின் சர்வலோக ஈடற்ற அரசாட்சியைப் பற்றிய விவாதத்தில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை உங்கள் நடத்தைப்போக்கு காண்பிக்கும். உண்மையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் மூலகாரணராக யெகோவாவை நீங்கள் உண்மையில் உயர்வாய் மதிக்கிறீர்களா? அவருடைய வார்த்தை கட்டளையிடுவதை நீங்கள் நாடித் தேடி உங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்துவீர்களா? அல்லது எது நன்மை எது தீமை என்பதைக் குறித்து சுயாதீனமாய்த் தங்கள் சொந்தத் தீர்மானங்களைச் செய்கிறவர்களோடுகூட செல்வீர்களா?—ஆதியாகமம் 3:1-5; வெளிப்படுத்துதல் 12:9.

5பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவு, ‘தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணும்’ ஆட்களால் மோசம்போக்கப்படுவதிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இத்தகைய ஆட்களின் வழிநடத்துதலைப் பின்பற்றுவது உங்களை அதே அடிமைத்தன நிலைமைக்குள் வைக்கும். (2 பேதுரு 2:18, 19) கடவுளுடைய சித்தத்தைக் கற்று செய்துவருவதனால் மாத்திரமே உண்மையான சுயாதீனத்தை அடைய முடியும். அவருடைய தெய்வீகச் சட்டமே “சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப் பிரமாணம்.” (யாக்கோபு 1:25) இவ்வாறு சொல்ல முடியும், ஏனென்றால், பயனுள்ள நோக்கத்தைச் சேவிக்காத சட்டங்களைக் கொண்டு யெகோவா நம்மை அவசியமில்லாமல் தடைசெய்து கட்டுப்படுத்தி வைப்பதில்லை. ஆனால் கடவுளுடனும் நம்முடைய உடன் மனிதனுடனும் சரியான உறவைக் கொண்டிருப்பதில் ஆதாரங்கொண்ட சுதந்திரத்தையும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருகிற வகையான வழிநடத்துதலை அவருடைய சட்டம் நிச்சயமாகவே அளிக்கிறது.

6மனிதனின் சீரழிவும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் எந்த அளவுக்குச் சென்றிருக்கிறதென்பதை வேறு எவரைப் பார்க்கிலும் மிக நன்றாய்க் கடவுள் அறிந்திருக்கிறார். ஒடுக்குதலுக்குக் காரணர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் பொருட்படுத்தாமல் தாம் அவர்களைக் கணக்கு ஒப்புவிக்கச் செய்வாரென அவர் தம் உறுதிமொழி தந்திருக்கிறார். (ரோமர் 14:12) கடவுளுடைய குறிக்கப்பட்ட காலத்தில், “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள் [அதினின்று பிடுங்கப்படுவர், தி.மொ.].” (நீதிமொழிகள் 2:22) ஆனால் நாம் பொறுமையிழந்து, நமக்குச் செய்யப்பட்ட தீங்குக்கு நாமே வன்முறையால் பழிவாங்க முற்பட்டால், அது நமக்கு முடிவில் எவ்வித நிலையான நன்மையும் பயக்காது.—ரோமர் 12:17-19.

7இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அந்த இரவில் இதைத் தம்முடைய அப்போஸ்தலருக்கு அறிவுறுத்தினார். காட்டு மிருகங்கள் இருந்தது உட்பட தேசத்திலிருந்த நிலைமைகளின் காரணமாய் ஆட்கள் அடிக்கடி ஆயுதங்களைத் தங்களோடு கொண்டு சென்றனர். ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் இயேசுவின் அப்போஸ்தலரிடம் இரண்டு பட்டயங்கள் இருந்தன. (லூக்கா 22:38) என்ன நடந்தது? காரணமில்லாமல இயேசுவைக் கைதுசெய்தபோது படுமோசமாய் நீதி குலைக்கப்படுவதை அவர்கள் கண்டார்கள். ஆகவே, அப்போஸ்தலன் பேதுரு திடீர் உணர்ச்சிக்கு ஆட்பட்டு தன் பட்டயத்தை உருவி அந்த மனிதரில் ஒருவனுடைய காதை வெட்டிவிட்டான். ஆனால் இயேசு வெட்டப்பட்ட அந்தக் காதைத் திரும்ப வைத்துச் சுகப்படுத்தி, பேதுருவை நோக்கி: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு: பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்,” என்று எச்சரித்து அறிவுறுத்தினார். (மத்தேயு 26:52) நம்முடைய நாளிலும், இந்த அறிவுரையைப் பின்பற்றியிருந்தால் பல ஆட்களை அகால மரணத்திலிருந்து காப்பாற்றியிருக்க முடியும்.—நீதிமொழிகள் 24:21, 22.

இவ்வுலக அதிகாரத்துவத்தைச் சரியானமுறையில் கருதுதல்

8ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், உலக அதிகாரங்கள் சம்பந்தமாகத் தங்களை நடத்திக்கொள்ளவேண்டிய முறையை விவாதிக்கும்படி கடவுள் அப்போஸ்தலனாகிய பவுலை ஏவினார். அவன் எழுதினதாவது: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு அடங்கி நடக்கக்கடவன்; கடவுளாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் கடவுளாலேயே ஏற்பட்டிருக்கின்றன [அவற்றின் சம்பந்தப்பட்ட ஸ்தானங்களில் கடவுளால் வைக்கப்பட்டு நிற்கின்றன, NW], ஆதலால், அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் கடவுளின் ஏற்பாட்டிற்கே எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்வார்கள்.” (ரோமர் 13:1, 2, தி.மொ.) இது, இவ்வுலக அதிபதிகளைக் கடவுளே அதிகாரத்தில் வைத்தார் என்று பொருள்கொள்ளுகிறதா? இல்லை! என பைபிள் திட்டவட்டமாய்ப் பதிலளிக்கிறது. (லூக்கா 4:5, 6; வெளிப்படுத்துதல் 13:1, 2) அவருடைய அனுமதியின்பேரில் அவை இருந்துவருகின்றன. சரித்திரப் போக்கில் அவை வகித்திருக்கிற அந்த ‘சம்பந்தப்பட்ட ஸ்தானம்’ கடவுளால் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஸ்தானம் என்ன?

9சற்று முன்பு மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்ட வேத வசனம் அது “மேலான” ஒன்றென கூறுகிறது. ஆகவே அரசாங்க அதிகாரிகளை அவமரியாதையுடன் நடத்தக்கூடாது. அவர்கள் செல்லத்தக்கதாக்கின சட்டங்களை அசட்டை செய்யக்கூடாது. இது, தனித்த ஆட்களை நீங்கள் வியந்து போற்றுவதையோ, அவர்கள் ஒருவேளை ஈடுபடும் எந்த ஊழலையாவது சம்மதிப்பதையோ குறிக்கிறதில்லை. ஆனால் அவர்கள் வகிக்கும் அதிகாரப் பதவியின் காரணமாக சரியாகவே மரியாதை காட்டப்படுகிறது.—தீத்து 3:1, 2.

10பேரளவில் நன்மைக்கே உலகப்பிரகாரமான சட்டங்கள் இயங்குகின்றன. இவை ஒழுங்கைக் காத்துவர உதவிசெய்து, மக்களுக்கும் அவர்களுடைய உடைமைக்கும் ஓரளவு பாதுகாப்பை உறுதியளிக்கின்றன. (ரோமர் 13:3, 4) மேலும், மக்களுக்கு நன்மைதரும் பெருஞ்சாலைகள், சுகாதார சம்பந்தப்பட்ட சேவைகள், தீ பாதுகாப்பு, கல்வி, இன்னும் மற்றச் சேவைகளை அரசாங்கங்கள் பொதுவாய் அளிக்கின்றன. இந்தச் சேவைகளுக்காக அவர்களுக்குப் பணம் செலுத்தப்பட வேண்டுமா? நாம் வரிகளைச் செலுத்த வேண்டுமா? வரி விகித உயர்வின் காரணமாகவும் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கும் வரி பண நிதிகள் அடிக்கடி தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாலும், இந்தக் கேள்வி சில சமயங்களில் தீவிர உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. இயேசுவின் காலத்திலுங்கூட இந்தக் கேள்வி அரசியல் சம்பந்தப்பட்ட பற்பல எதிர்ப்பு உணர்ச்சிகளைக் கொண்டிருந்தது. ஆனால் அப்போதிருந்த நிலைமை, வரி செலுத்துவதை மறுப்பதற்குப் போதிய ஆதாரமென்ற நிலையை இயேசு மேற்கொள்ளவில்லை. ரோம இராயனால் முத்திரையிடப்பட்டிருந்த பணத்தைச் சுட்டிக்காட்டி, அவர்: “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்,” என்று சொன்னார். (மத்தேயு 22:17-21; ரோமர் 13:6, 7) இல்லை, அவனவன் தன்தன் மனப்போக்கில் செல்லும் அபிப்பிராயத்தை இயேசு ஆதரித்துப் பேசவில்லை.

11எனினும், “இராயன்,” அதாவது, உலக அரசாங்கமே கருதப்படவேண்டிய ஒரே அதிகாரமல்லவென இயேசு காட்டினார். இந்த “மேலான அதிகாரங்கள்” கடவுளுக்கு மேலாக உயர்ந்தவை அல்ல, அவருக்குச் சமமாகவும் இல்லை. இதற்கு மாறாக, அவை அவருக்கு மிகக் கீழானவை. ஆகவே அவற்றின் அதிகாரம், வரம்பற்றதல்ல, வரம்புக்குட்பட்டது. இதனால், கிறிஸ்தவர்கள் நெருக்கடியான தீர்மானத்தை அடிக்கடி எதிர்ப்பட்டிருக்கின்றனர். இது, நீங்களும் எதிர்ப்பட வேண்டிய தீர்மானம். அதிகாரத்திலிருக்கும் மனிதர், கடவுளுக்குரியதைத் தங்களுக்குக் கொடுக்கும்படி வற்புறுத்திக் கேட்கையில், நீங்கள் என்ன செய்வீர்கள்? கடவுள் கட்டளையிடுவதைச் செய்யக்கூடாதென்று தடையுத்தரவு போடுகையில் நீங்கள் யாருக்குக் கீழ்ப்படிவீர்கள்?

12இயேசுவின் அப்போஸ்தலர்கள், எருசலேமிலிருந்த உயர்நீதி மன்ற உறுப்பினரிடம் தங்கள் நிலைநிற்கையை மரியாதையுடன் ஆனால் உறுதியாய்ப் பின்வருமாறு கூறினார்கள்: நாங்கள் “ கண்டவைகளையுங் கேட்டவைகளையும் பேசாமலிருக்க எங்களால் முடியாது. . . . மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் [அரசராக] கடவுளுக்கே [நாங்கள்] கீழ்ப்படியவேண்டும்.” (அப்போஸ்தலர் 4:19, 20; 5:29, தி.மொ.) திடீர் நெருக்கடி நிலைகளில் அரசாங்கங்கள் சில சமயங்களில் தடை உத்தரவுகளைப் போடலாம், இது விளங்கத்தக்கதே. ஆனால் சில சமயங்களில் அரசாங்கத் தடை உத்தரவுகள் நம்முடைய கடவுளின் வணக்கத்தில் இடையிட்டுத் தடுப்பதற்கும் கடவுளால் கொடுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற முடியாமற்போகச் செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கலாம். அப்பொழுது என்ன செய்வது? “மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் அரசராகக் கடவுளுக்கே கீழ்ப்படியவேண்டும்,” (NW) என்று கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை பதிலளிக்கிறது.

13கடவுளுக்குச் செலுத்தவேண்டிய இந்தக் கடமைகளை நிறைவேற்றுவது “இராயன்” கட்டளையிடுவதுடன் ஒருவேளை முரண்பட்டாலும், இது, நமக்குப் பிடித்தமாயிராதச் சட்டங்களைச் சுயாதீனமாய் மீறுவதிலிருந்து வெகுவாய் வேறுபடுகிறது. உண்மைதான், தனிப்பட்டவர் நோக்குநிலையிலிருந்து பார்க்க, சில சட்டங்கள் தேவையற்றவை அல்லது மிதமீறி கட்டுப்படுத்துபவை எனத் தோன்றலாம். ஆனால் இது, கடவுளுடைய சட்டங்களுடன் முரண்படாத சட்டங்களைப் புறக்கணிப்பதைச் சரியென நிரூபிக்கிறதில்லை. எல்லா மக்களும் தங்களுக்கு நன்மை பயக்குவதாகத் தாங்கள் கருதும் சட்டங்களுக்கு மாத்திரமே கீழ்ப்படிந்தால் என்ன ஆகும்? ஆட்சியில்லாக் குழப்பநிலைக்கே அது வழிநடத்தும்.

14ஒருவன் தான் அகப்பட்டு தண்டிக்கப்படப் போவதில்லை என்ற காரணத்தால் அதிகாரத்தைப் புறக்கணித்து தனக்குப் பிரியமானதைச் செய்யலாமென சில சமயங்களில் உணரலாம். ஆனால் இதில் பெரும் அபாயமிருக்கிறது. முதன்முதல் சிறு காரியங்களிலேயே சட்டங்களை மதியாதிருக்கலாமெனினும், தான் தண்டிக்கப்படாமற்போவது பெரும்படியான சட்ட மீறுதலில் உட்பட அவனைத் துணிவுகொள்ள செய்யும். பிரசங்கி 8:11 சொல்லுகிறபடி: “துர்க்கிரியைக்குத் தக்கத் தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால் மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங் கொண்டிருக்கிறது.” ஆனால், கீழ்ப்படியாவிடில் தண்டனை கிடைக்குமென்ற வெறும் பயமே சட்டத்துக்குக் கீழ்ப்படிவதற்கு மெய்யான காரணமா? கிறிஸ்தவனுக்கு, இதைப் பார்க்கிலும் மிகப் பலத்தத் தூண்டுதல் இருக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் அதை “கட்டாயப்படுத்தும் காரணம்”—சுத்தமான மனச்சாட்சியைக் கொண்டிருக்க வேண்டுமென்ற ஆவல்—என்றுரைத்தான். (ரோமர் 13:5NW) சட்டமீறுதலான போக்கைப் பின்பற்றுவது, “கடவுளின் ஏற்பாட்டிற்கே எதிர்த்து” நிலைநிற்கை கொள்வதென, தன் மனச்சாட்சி வேத நியமங்களால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் ஒருவன் அறிந்திருக்கிறான். நாம் செய்வதை மற்ற மனிதர் அறிந்தாலும் அறியாவிடினும் கவலையில்லை, கடவுள் அறிகிறார், நம்முடைய எதிர்கால வாழ்க்கைக்குரிய எதிர்பார்ப்புகள் அவர்மீதே சார்ந்திருக்கின்றன.—1 பேதுரு 2:12-17.

15தன் பள்ளி ஆசிரியரிடம் ஓர் இளைஞனின் மனப்பான்மையும், உலகப் பிரகாரமான தன் எஜமானரிடம் ஒரு முதியவரின் மனப்பான்மையும் அவ்வாறே இருக்கவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள ஆட்கள் பலர் தவறான காரியங்களைச் செய்யும் இந்த உண்மை தீர்மானிக்கும் காரணமாக இருக்கக்கூடாது. நாம் செய்வதை ஆசிரியர் அல்லது எஜமானர் தெரிந்திருக்கிறாரோ இல்லையோ, அது எத்தகைய வேறுபாட்டையும் உண்டுபண்ணக்கூடாது. எது சரி? எது கடவுளுக்குப் பிரியமானது? என்பதே முக்கியம். மேலும் நாம் செய்யும்படி கேட்கப்படுவது கடவுளுடைய சட்டத்துக்கு அல்லது நீதியுள்ள நியமங்களுக்கு முரணாக இல்லையென்றால், நாம் ஒத்துழைக்கிறோம். பொதுவாய்ப் பள்ளி ஆசிரியர்கள் உலகப்பிரகார அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றனர், ஆகவே “மேலான அதிகாரங்களின்” செயலாற்றுவோராக இருக்கின்றனர், ஆதலால் மரியாதை கொடுக்கப்பட தகுதியுள்ளவர்கள். தீத்து 2:9, 10-ல் பவுல் வேறுவகை உறவைப் பற்றி, அடிமைகள் தங்கள் உடைமையாளரிடம் நடந்துகொள்ள வேண்டிய முறையைப்பற்றி எழுதினபோதிலும், இந்தப் பைபிள் நியமத்தை உலகப்பிரகாரமான எஜமானரிடம் நடந்துகொள்ளும் முறைக்கும் பயன்படுத்தலாம். பவுல் சொன்னதாவது: “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, . . . எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், சகல விதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும்” வேண்டும். (தீத்து 2:9, 10) இவ்வாறு நாம் சாத்தானின் செல்வாக்கைத் தவிர்க்கிறோம். அவனுடைய ஆவியே “கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் . . . கிரியை செய்கிற”து. மேலும் நம்முடைய உடன்தோழரான மனிதருடன் சமாதான உறவுகளைக் கட்டியெழுப்புகிறோம்.—எபேசியர் 2:2, 3.

குடும்பத்துக்குள் அதிகாரம்

16அதிகாரத்தை மதிப்பது சமாதான உறவுகளைக் கொண்டுவரும் மற்றொரு பகுதி, குடும்ப வட்டாரமாகும். இத்தகைய ஆரோக்கியமான உறவு மிக அடிக்கடி குறைவுபடுகிறது, இது குடும்ப உறவுகளில் முறிவு உண்டாவதிலும் குடும்பத்தார் பிரிந்து செல்லுதலிலும் அடிக்கடி விளைவடைகிறது. இந்நிலைமையைத் திருத்த என்ன செய்யலாம்? 1 கொரிந்தியர் 11:3-ல் குறித்து வைக்கப்பட்டுள்ள தலைமை வகிப்பு நியமம் பதிலைக் கொண்டிருக்கிறது: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்துவே தலை, ஸ்திரீக்கும் புருஷனே தலை, கிறிஸ்துவுக்குக் கடவுளே தலை.”—தி.மொ.

17யெகோவாவின் ஏற்பாட்டைப் பற்றிய இந்தக் கூற்று மனிதனுடைய தலைமை வகிப்பை முதல் குறிக்காததைக் கவனியுங்கள். அதைப் பார்க்கிலும், வழிநடத்துதலுக்காக மனிதன் நோக்கவேண்டிய ஒருவர் இருக்கிறார், அவருடைய முன்மாதிரியை அவன் பின்பற்றிக் கொண்டிருக்க வேண்டுமென்ற உண்மைக்கு அது கவனத்தை இழுக்கிறது. அந்த ஒருவர் கிறிஸ்துவே. அவரே மனிதனின் தலை. மணவாட்டிக்கு ஒப்பிட்டிருக்கிற தம்முடைய சபையுடன் கையாளும் அவருடைய தொடர்புகளில், கணவனுக்குரிய தலைமை வகிப்பை வெற்றிகரமாய்ச் செலுத்தும் முறையைக் கிறிஸ்து நடப்பித்துக் காட்டினார். அவருடைய மிகச் சிறந்த முன்மாதிரி அவரைப் பின்பற்றினவர்களில் மனப்பூர்வமான பிரதிபலிப்பைத் தூண்டினது. அவர் தலைமை வகித்தபோது, அவர்களிடத்தில் அதிகாரத் தோரணையுடனும், கடுகடுத்தவராயும், வற்புறுத்திக் கேட்பவராயும் இருப்பதற்குப் பதிலாக, இயேசு “சாந்தமும் மனத்தாழ்மையுமாய்” இருந்தார், ஆகவே அவர்கள் தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக் கண்டடைந்தார்கள். (மத்தேயு 11:28-30) அவர்களுடைய குற்றம் குறைபாடுகளினிமித்தம் அவர் அவர்களைச் சிறுமைப்படுத்தினாரா? இதற்கு எதிர்மாறாக, அவர் அன்புடன் அவர்களுக்கு அறிவுரை கொடுத்தார், பாவங்களிலிருந்து அவர்களைச் சுத்திகரிக்கத் தம் உயிரையுங் கொடுத்தார். (எபேசியர் 5:25-30) இந்த முன்மாதிரியைப் பின்பற்ற உண்மையுள்ள மனதுடன் பிரயாசப்படுகிற ஒரு மனிதனைக் கொண்டிருப்பது எந்தக் குடும்பத்தினருக்கும் எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாகும்!

18வீட்டில் இத்தகைய தலைமை வகிப்பு இருக்கையில், தன் கணவனுக்குக் கீழ்ப்பட்டிருப்பது, மனைவிக்குக் கடினமாக இருப்பதில்லை. பிள்ளைகளிடமிருந்து கீழ்ப்படிதல் மனமார வருகிறது. ஆனால் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு மனைவியும் பிள்ளைகளுங்கூட தங்கள் பங்கில் செய்யக்கூடிய அதிகம் இருக்கிறது. குடும்பத்தினரைக் கவனிப்பதில் தளரா ஊக்கத்துடன் இருப்பதன்மூலமும் தன்னுடைய ஒத்துழைக்கும் ஆவியாலும் மனைவி, தன் கணவனிடத்தில் தனக்கு “ஆழ்ந்த மரியாதை” இருக்கிறதென்று காட்டுகிறாள். உங்களுடைய குடும்பத்தில் இவ்வாறு இருக்கிறதா? (எபேசியர் 5:33, NW; நீதிமொழிகள் 31:10-15, 27, 28) பிள்ளைகளைக் குறித்ததில், தகப்பனுக்கும் தாய்க்கும் அவர்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிவது, கடவுள் கட்டளையிடுகிறபடி, அவர்கள் தங்கள் பெற்றோரைக் கனம்பண்ணுகிறார்களெனக் காட்டுகிறது. (எபேசியர் 6:1-3) இத்தகைய குடும்பத்தில், அதிகாரத்துக்கு மதிப்பில்லாத ஒரு குடும்பத்தில் இருப்பதைப் பார்க்கிலும், மிக அதிகப்படியான சமாதானமும் தனிப்பட்ட பாதுகாப்புக்குரிய மிக மேம்பட்ட உணர்ச்சியும் இருக்கும் அல்லவா?

19உங்கள் வீட்டை அத்தகைய ஓர் இடமாக்குவதற்கு நீங்கள் உதவி செய்யலாம். குடும்பத்தின் மற்ற உறுப்பினர் யெகோவாவின் வழிகளைக் கடைப்பிடிக்கத் தெரிந்துகொண்டாலும் கொள்ளாவிடினும், நீங்கள் அவற்றை உறுதியாய்க் கடைப்பிடிக்கலாம். குடும்பத்திலுள்ள மற்றவர்கள் உங்கள் சிறந்த முன்மாதிரிக்கு ஆதரவாய்ப் பிரதிபலிக்கக்கூடும். (1 கொரிந்தியர் 7:16; தீத்து 2:6-8) அவர்கள் அவ்வாறு செய்யாவிடினும் நீங்கள் செய்வது கடவுளின் வழிகளே சரியானவை என்பதற்குச் சாட்சியாக நிற்கும், அது மதிப்பு மிகுந்தது.—1 பேதுரு 3:16, 17.

20குடும்ப அதிகாரத்தின் முழு அமைப்பும் கடவுளில் தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதை மனதில் வையுங்கள். இவ்வாறு ஆண்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருக்கவேண்டும், மனைவிகள் “கர்த்தருக்கேற்கும்படி” தங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் “இது கர்த்தருக்குப் பிரியமானது.” (கொலோசெயர் 3:18, 20; 1 கொரிந்தியர் 11:3) ஆகவே கடவுளைப் புறக்கணிக்க முடியாதல்லவா? தன்னுடைய மனைவியின்மீது கணவனுடைய அதிகாரமும், தங்கள் பிள்ளைகளின்மீது பெற்றோரின் அதிகாரமும், சம்பந்தப்பட்ட அதிகாரமே என்று இது பொருள்கொள்ளுகிறது. அதாவது, கிறிஸ்தவ மணத்துணைவியும் பிள்ளைகளும் முதலாவது கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் கீழ்ப்பட்டு, அவர்களுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். அவிசுவாசிகளான மணத்துணைவர் அல்லது பெற்றோர் சிலருக்கு இந்த எண்ணம் முதலில் கோபமூட்டலாம். ஆனால் உண்மையில் இது அவர்கள் நன்மைக்காகவே செயலாற்றுகிறது. எப்படியெனில் இது, விசுவாசியான மணத்துணைவியையும் பிள்ளைகளையும் மேலுமதிக நம்பத்தக்க மற்றும் மரியாதையுள்ளவராகச் செய்ய உதவிசெய்யும்.

21எனினும், கணவன் தன் மனைவி, “கர்த்தருக்கேற்கும்படி” இராத ஏதோவொன்றைச் செய்ய வற்புறுத்திக் கேட்டால் என்ன செய்வது? தான் உண்மையில் ‘மெய்த் தேவனுக்குப் பயப்படுகிறாளா’ இல்லையா என்பதை அவளுடைய செயல் காட்டும். (பிரசங்கி 12:13) பிள்ளைகள் கடவுளுடைய வார்த்தையை விளங்கிக்கொண்டு கீழ்ப்படிய போதிய வயதாகையில், அவர்கள் காரியத்திலும் அவ்வாறே இருக்கிறது. யெகோவாவைச் சேவிக்கும்படியான அவர்களுடைய ஆசையில் அவர்கள் பெற்றோர் பங்குகொள்ளாவிடில், கடவுளிடம் தாங்கள் உண்மைத் தவறாதிருப்பார்களா அல்லது அவ்வாறு இராத பெற்றோருக்கு வரப்போகிற முடிவில் பங்குகொள்வார்களா என்பதை அந்தப் பிள்ளைகள் தீர்மானிக்க வேண்டும். (மத்தேயு 10:37-39) ஆனால் அவர்கள் முதல் கடவுளுக்குக் கடமைப்பட்டிருப்பது தவிர, பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு “எல்லாக் காரியத்திலேயும்” கீழ்ப்படிந்திருக்க வேண்டும். இது, தங்களுக்கு விருப்பமில்லாதக் காரியங்களைச் செய்வதைக் குறித்தாலும் அவ்வாறு இருக்கிறது. (கொலோசெயர் 3:20) இந்த நடத்தைப் போக்கு, அவர்கள் பெற்றோரை இரட்சிப்புக்குரிய யெகோவாவின் ஏற்பாட்டுக்குக் கவர்ந்திழுக்கவுங்கூடும். ஒருவனுடைய உள்நோக்கத் தூண்டுதல் சுயாதீன ஆவியால் தோன்றின கீழ்ப்படியாமையாயிராமல், யெகோவாவுக்கும் அவருடைய நீதியுள்ள வழிகளுக்கும் உண்மைத்தவறாமையாக இருந்தால் இது மெய்யாகவே “கர்த்தருக்குப் பிரியமானது.”

கிறிஸ்தவ சபையில்

22யெகோவாவிடம் கொண்டுள்ள அதே உண்மைத்தவறாமை அவருடைய கிறிஸ்தவ சபையினிடமும் அதைக் கண்காணிப்போரிடமும் கொண்டுள்ள நம்முடைய மனப்பான்மையில் பிரதிபலிக்கவேண்டும். “மந்தை”யை மேய்ப்பதற்கு யெகோவா கண்காணிகளை ஏற்பாடு செய்திருக்கிறார். இவர்கள் தங்கள் வேலைக்காகச் சம்பளம் பெறுகிறதில்லை, ஆனால், தங்கள் கிறிஸ்தவ சகோதரர் சகோதரிகளின் பேரிலுள்ள உண்மையான அக்கறையினிமித்தமே அவர்களுக்காக உழைக்கத் தங்களை முழுவதும் ஈடுபடுத்துகின்றனர். (1 பேதுரு 5:2; 1 தெசலோனிக்கேயர் 2:7-9) கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை நிறைவேற்றுவதற்கு இவர்கள் சபைக்கு உதவி செய்கின்றனர். மேலும், சபையின் ஒவ்வொரு அங்கத்தினரிலும் அக்கறைகொண்டு, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பது எவ்வாறென கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவி செய்கின்றனர். மேலும், சபை உறுப்பினர் எவராவது சரியாய் அறியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவரைத் திரும்பச் சீர்திருத்த முயற்சி எடுக்கின்றனர். (கலாத்தியர் 6:1) ஓர் உறுப்பினன் வேத அறிவுரையை மதியாமல் மோசமான தவறு செய்வதில் விடாது தொடர்ந்துகொண்டிருந்தால் கண்காணிகள், அவனைச் சபைக்குப் புறம்பாக்குவார்கள். இவ்வாறு அவனுடைய கறைப்படுத்தும் செல்வாக்கிலிருந்து சபை பாதுகாக்கப்படுகிறது.—1 கொரிந்தியர் 5:12, 13.

23தம்முடைய ஜனத்தின் மத்தியில் சமாதானம் இருப்பதை நிச்சயப்படுத்துவதற்கு யெகோவா அருளிய அந்த அன்புள்ள ஏற்பாட்டுக்காக நன்றியுணர்வைக் காட்டி, எபிரெயர் 13:17-ல் காணப்படும் அறிவுரைக்கு நாம் செவிகொடுக்க வேண்டும்: “உங்களை நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கியிருங்கள்; அவர்கள் உங்கள் ஆத்துமாக்களுக்காகக் கணக்கொப்புவிக்கப் போகிறவர்களாய் விழித்திருக்கிறார்கள்; அவர்கள் மனவேதனையொடல்ல சந்தோஷத்தோடு அப்படிச் செய்யும்படி பாருங்கள்; அவர்கள் மனவேதனையோடு அப்படிச் செய்தால் அது உங்களுக்கு நலமாகாது.”— தி.மொ.

24இந்தக் கண்காணிகள் அல்லது மூப்பர்கள் மரியாதைக்குத் தகுதியாயிருப்பதற்கு முக்கிய காரணம், அவர்கள் “கடவுளுடைய வார்த்தை”யைக் கற்பிப்பதேயென பைபிள் அழுத்திக் கூறுகிறது. (எபிரெயர் 13:7, NW; 1 தீமோத்தேயு 5:17) அந்த வார்த்தையின் வல்லமையைக் குறித்து எபிரெயர் 4:12, 13 பின்வருமாறு கூறுகிறது: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.”

25இவ்வாறு யெகோவாவின் வார்த்தையிலுள்ள சத்தியங்கள் ஓர் ஆள் வெளித் தோற்றத்தில் காணப்படுவதற்கும் அவன் உண்மையில் இருப்பதற்குமுள்ள வேறுபாட்டை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. கடவுளில் அவனுக்கு உண்மையான விசுவாசமும் தன்னுடைய சிருஷ்டிகரைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற உண்மையான ஆவலும் இருந்தால், சபை மூப்பர்களின் பார்வைக்கு மறைவாயிருக்கையிலும், அவனுடைய உள்நோக்கத் தூண்டுதல் “கடவுளுடைய மகிமையைத்” தக்க முறையில் பிரதிபலிக்கும். (ரோமர் 3:23, NW) வேத எழுத்துக்களுக்கு முரணான ஒரு நடத்தை, சபைநீக்கம் செய்வதற்கேதுவான வினைமையுள்ள தவறுகளில் ஒன்றாயிராததனிமித்தம் அதில் ஈடுபடலாமென துணியமாட்டான். ஆகவே, கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற எந்த அறிவுரையையாவது இலேசாக எடுத்துக்கொள்ள எவராவது மனஞ்சாய்ந்தால், கடவுளிடம் தன்னுடைய மனப்பான்மை உண்மையில் எவ்வாறு இருக்கிறதென்பதை அவன் கவனமாய் சோதித்தறிய வேண்டும். சங்கீதம் 14:1-ல் (NW): “‘யெகோவா இல்லை’ என்று மதிகெட்டவன்”—வெளிப்படையாக அல்ல—“தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்,” என்று சொல்லப்பட்டுள்ள அந்த ஆளைப்போல் அவன் ஆகிக்கொண்டிருக்கிறானா?

26பிசாசால் சோதிக்கப்பட்டபோது, இயேசு: “மனுஷன் . . . தேவனுடைய [யெகோவாவின், NW] வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்,” என்று உறுதியாய்க் கூறினார். (மத்தேயு 4:4) யெகோவாவின் “ஒவ்வொரு வார்த்தையும்” முக்கியமானதென்றும் அவற்றில் ஒன்றையும் புறக்கணிக்கக்கூடாதென்றும் நீங்கள் நம்புகிறீர்களா? யெகோவாவின் சில கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அதே சமயத்தில் அவருடைய மற்றக் கட்டளைகளை முக்கியமல்லாதவைப்போல் பாவிப்பது சற்றும் போதுமானதல்ல. நாம் யெகோவாவின் அரசாட்சியின் நேர்மையையாவது அல்லது நன்மை தீமை எதுவென்பதில் நம்முடைய சொந்தத் தராதரத்தை ஏற்படுத்திக்கொண்டு இந்த விவாதத்தில் பிசாசின் பக்கத்தையாவது, இந்த இரண்டில் ஒன்றையே ஆதரிக்கிறோம். தாங்கள் உண்மையில் யெகோவாவின் சட்டத்தை நேசிக்கிறார்களெனக் காட்டுகிறவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்கள்.—சங்கீதம் 119:165.

27இத்தகைய ஆட்கள் உலகத்தின் பிரிவினைக்குரிய ஆவியால் கண்ணியில் சிக்கவைக்கப்படுவதில்லை. மேலும் ஒழுக்கக் கட்டுப்பாட்டை மீறி மனம்போன போக்கில் செல்கிறவர்களின் வெட்கங்கெட்ட நடத்தையில் இவர்கள் ஈடுபடமாட்டார்கள். யெகோவாவுக்கும் அவருடைய நீதியான வழிகளுக்கும் ஆழ்ந்த மதிப்புக் காட்டுவது அவர்கள் வாழ்க்கைக்கு உறுதி நிலையை அளிக்கிறது. யெகோவாவையும் அவருடைப் பயன்படுத்துவதும் எந்த அளவுக்குச் சென்றிருக்கிறதென்பதை வேறு எவரைப் பார்க்கிலும் மிக நன்றாய்க் கடவுள் அறிந்திருக்கிறார். ஒடுக்குதலுக்குக் காரணர் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் பொருட்படுத்தாமல் தாம் அவர்களைக் கணக்கு ஒப்புவிக்கச் செய்வாரென அவர் தம் உறுதிமொழி தந்திருக்கிறார். (ரோமர் 14:12) கடவுளுடைய குறிக்கப்பட்ட காலத்தில், “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள் [அதினின்று பிடுங்கப்படுவர், தி.மொ.].” (நீதிமொழிகள் 2:22) ஆனால் நாம் பொறுமையிழந்து, நமக்குச் செய்யப்பட்ட தீங்குக்கு நாமே வன்முறையால் பழிவாங்க முற்பட்டால், அது நமக்கு முடிவில் எவ்வித நிலையான நன்மையும் பயக்காது.—ரோமர் 12:17-19.

[கேள்விகள்]

1-3. (எ) அதிகாரத்தை வேண்டாமெனத் தள்ளுவது நம் நாளில் எங்கும் பரவியிருப்பதற்குக் காரணமாயிருந்தது எது? (பி) இந்த மனப்பான்மை எந்தப் பல வழிகளில் வெளிப்படுத்திக் காட்டப்படுகின்றன? (சி) இதன் விளைவுகள் எங்கே உணரப்படுகின்றன?

4. இந்தக் காரியத்தில் நாம் நடந்துகொள்ளும் முறையால் எந்த விவாதத்தின்பேரில் நம் மனப்பான்மையை தெரிவிக்கிறோம்?

5. (எ) “சுயாதீனத்தை” வாக்குக் கொடுக்கிற மனிதரின் வழிநடத்துதலைப் பின்பற்றுவது பல தடவைகளில் எதில் விளைவடைகிறது? (பி) கடவுளுடைய சித்தத்தைச் செய்பவன் எவ்வகையில் சுயாதீனமுள்ளவன்?

6, 7. (எ) அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவதன் பேரில் நடவடிக்கை எடுக்க யார் மிகச் சிறந்த நிலையில் இருக்கிறார்? (பி) தனக்குச் செய்யப்பட்ட தீங்குக்குத் தானே வன்முறையால் பழிவாங்க முற்படும் ஆட்களுக்குச் சம்பவிப்பதை இயேசு எவ்வாறு காட்டினார்?

8. (எ) ரோமர் 13:1, 2-ல் சொல்லியுள்ளபடி உலக அதிபதிகளை கிறிஸ்தவர்கள் எவ்வாறு கருதவேண்டும்? (பி) அவர்கள் ‘தங்கள் சம்பந்தப்பட்ட ஸ்தானங்களில் கடவுளால் வைக்கப்பட்டிருக்கின்றனர்’ என்றக் கூற்றின் பொருள் என்ன?

9. அதிகாரிகள் தவறான செயல்களில் ஈடுபட்டாலும், நாம் ஏன் அவர்களுக்கு மரியாதை காட்டலாம்?

10. வரிகள் செலுத்துவதை எவ்வாறு கருதவேண்டும்? ஏன்?

11, 12. (எ) கருதவேண்டிய மற்றொரு அதிகாரமும் உண்டென வேத எழுத்துக்கள் எவ்வாறு காட்டுகின்றனர்? (பி) கடவுளுடைய கட்டளைகளுக்கு முரன்டபடும் கட்டளைகளை உலக அரசதிகாரிகள் கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஏன்?

13, 14, (எ) நம் சொந்தகாரணங்களினிமித்தமே உலகப் பிரகாரமாண சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமற் போகாதபடி நாம் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும்? (பி) இதற்குக் காரணங்களை வேத எழுத்துக்களிலிருந்து குறிப்பிட்டுக்காட்டுங்கள்?

15. பள்ளி ஆசிரியரிடம் அல்லது எஜமானரிடம் ஒருவன் காட்டவேண்டிய மன்பபான்மையைக் குறித்து எது அவனை வழிநடத்த வேண்டும்? (பி) இவ்வாறு யாருடைய ஆவியால் செல்வாக்கு செலுத்தப்படுவதை நாம் தவிர்க்கிறோம்?

16. குடும்ப வாழ்க்கை ஒத்திசைவுடன் நடக்க என்ன தேவை 1 கொரிந்தியர் 11:3-ல் கூறப்பட்டிருக்கிறது?

17. (எ) தலைவை வகிப்பைக் குறித்ததில், கணவனின் ஸ்தானம் என்ன? (பி) கனவனுக்குரிய தலைமை வகிப்புக்கு என்ன சிறந்த முன்மாதிரியைக் கிறிஸ்து வைத்தார்?

18. (எ) மனைவி, தன் கணவனின் அதிகாரத்தை மதிப்பதை என்ன வழிகளில் காட்டலாம்? (பி) பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு எவ்வாறு மரியாதை காட்ட வேண்டும்? ஏன்?

19. கடவுளுடைய வார்த்தையால் வழிநடத்தப்பட முற்சி செய்பவர் குடும்பத்தில் நீங்கள் ஒருவரேயெனில், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

20, 21. (எ) கணவனுடைய மற்றும் பெற்றோருடைய அதிகாரம் வரம்பற்றதல்லவென பைபிள் எவ்வாறு காட்டுகிறது? (பி) ஆகவே, கிறிஸ்தவ மனைவி அல்லது விசுவாசிகளான பிள்ளைகள் என்ன தீர்மானத்தை எதிர்ப்பட நேரிடலாம்? அவர்களைத் தூண்டும் உள்நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?

22, 23. கிறிஸ்தவ கண்காணிகள் சபையின் உறுப்பினருக்கு எவ்வாறு சேவை செய்கிறார்கள்? (பி) ஆகவே, அவர்களிடம் நாம் என்ன மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டுமென எபிரேயர் 13:17-ல் சொல்லியிருக்கிறது?

24, 25. (எ) மூப்பர்கள் கற்பிப்பது நாம் அவர்களைக் கருதும் முறையை எவ்வாறு பாதிக்க வேண்டும்? (பி) பைபிளிலிருந்து நாம் கற்பிக்கப்படுகிறவற்றை எப்பொழுது, எங்கே நாம் பொருத்திப் பயன்படுத்த வேண்டும்? ஏன்?

26, 27. (எ) யெகோவாவின் “ஒவ்வொரு வார்த்தையையும்” பயபக்தியுடன் ஏற்பது ஏன் முக்கியம்? (பி) இவ்வாறு நாம் அதிகாரத்துக்கு மதிப்பு காட்டுகையில் நம் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது?

[பக்கம் 134-ன் படம்]

இயேசுவின் அப்போஸ்தலர் உயர் நீதிமன்றத்தினிடம்: “மனிதருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் அரசராகக் கடவுளுக்கே நாங்கள் கீழ்ப்படியவேண்டும்,” என்று சொன்னார்கள்