யார் தப்பிப்பிழைப்பார்கள்?
அதிகாரம் 8
யார் தப்பிப்பிழைப்பார்கள்?
வரப்போகிற உலக அழிவில் தப்பிப்பிழைப்பது, மனிதரின் போர்களில் அடிக்கடி நடப்பதுபோல், தற்செயலான காரியமாக இராது. இது ஒருவன் வாழும் இடத்தாலோ, அல்லது அபாய எச்சரிக்கைச் சங்கு ஒலிப்பதைக் கேட்டு ஏதோ அணுக்குண்டு பாதுகாப்பிடத்துக்கு அல்லது வேறு புகலிடத்துக்கு அவன் விரைந்து செல்வதனாலோ உறுதிசெய்யப்படாது. தப்பிப்பிழைப்பது கடவுளுடைய இரக்கத்தின்மீதும் “மிகுந்த உபத்திரவம்” தொடங்குவதற்கு முன்னால் ஒவ்வொருவரும் செய்யும் தெரிவிலும் சார்ந்திருக்கும். பூமியில் கடவுளுடைய சமாதானமுள்ள, பரதீஸான புதிய ஒழுங்கில் வாழும்படி தப்பிப்பிழைப்போருக்குள் உங்களை வைக்கக்கூடிய இந்தத் தெரிந்துகொள்ளுதலை நீங்கள் எவ்வாறு செய்யக்கூடும்?—வெளிப்படுத்துதல் 7:9, 10, 14, 15.
2 வரப்போகிற இந்த உலக அழிவை ஆட்கள் தப்பிப்பிழைப்பார்கள் என்று பைபிள் முன்னறிவிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் எவ்வகையான ஆட்கள் என்பதைத் தெரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்யும்படி ஒரு மாதிரியையும் அளிக்கிறது. தப்பிப்பிழைப்பதைக் கடவுளே சாத்தியமாக்குவதால், நேர்மையாக அவரே அதற்குரிய நிபந்தனைகளையும் தீர்மானிக்கிறார்.
3தம்முடைய புதிய ஒழுங்குக்குத் தீங்கு உண்டாக உழைப்போரல்ல, அதில் நன்மைக்கேதுவாக இருக்கும் ஆட்களே தப்பிப்பிழைக்கும்படி கடவுள் ஞானமாயும் நியாயமாயும் பார்த்துக்கொள்வார். அநீதியுள்ள ஆட்களைத் தப்பிப்பிழைத்திருக்க விடுவாராகில், நீதிமான்களுக்குச் சமாதானமும் பாதுகாப்பும் இராது. அவர்களுடைய வீடுகளும் தனிப்பட்ட பாதுகாப்பும் இன்னும் அபாயத்தில் இருக்கும். ஆனால் பைபிள் பின்வருமாறு வாக்குக் கொடுக்கிறது: “பொல்லாதவர்கள் சங்கீதம் 37:9-11-ல் விவரித்துக் கூறியிருக்கும் இந்தத் தராதரத்தைக் கடவுள் பிரயோகிப்பதன் மூலமே, தப்பிப்பிழைப்பவர்கள் “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சி”யைக் கண்டடைய முடியும். கடவுள் இதை எவ்வாறு செய்வார் என்பது மனிதரின் பொல்லாங்கு அழிவைக் கொண்டுவரும்படி கடவுளைக் கடமைப்படுத்தின கடந்தகால சந்தர்ப்பங்களில் காணப்படுகிறது.
அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் [யெகோவாவுக்கு, NW] காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.”தப்பிப்பிழைத்ததைப் பற்றிய கடந்தகால முன்மாதிரிகள்
4இன்று ரோம் நகரத்தில், பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டு முதற்கொண்டு இருந்துவரும், ‘ஆர்ச் ஆப் டைட்டஸ்’ என்றறியப்படுகிற, ஒரு நினைவுச்சின்ன வில் வளைவு வாசல் இன்னும் நின்றுகொண்டிருக்கிறது.
அதில் பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவுக்குப் பின்பு அதன் ஆலயத்திலிருந்து பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்வது ஓவியந்தீட்டிக் காட்டியிருக்கிறது. ஆகவே, இந்த அழிவு சரித்திரப் பூர்வ நிகழ்ச்சியாகும். இந்த அழிவுக்குச் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் அதன் வருகையையும், ஆட்கள் அதை எவ்வாறு தப்பிப்பிழைக்க முடியுமெனவும் இயேசு கிறிஸ்து முன்னறிவித்த உண்மையும் அதைப்போலவே சரித்திரப் பூர்வமானது.5யூத மக்கள் கடவுளை விட்டு விலகி, மனிதரையும் மனிதர் உண்டாக்கின மத பாரம்பரியங்களையும் பின்பற்றிக் கொண்டிருந்தனர். (மத்தேயு 15:3-9) அவர்கள் தங்கள் நம்பிக்கையைக் கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட ராஜ்யத்தில் அல்ல, மனித அரசியல் அதிபதிகளிலேயே வைத்தனர். (யோவான் 19:15) கடவுளுடைய குமாரனும் அவருடைய அப்போஸ்தலரும் அறிவித்த சத்தியத்தை வேண்டாமெனத் தள்ளி அதற்கு எதிராகப் போர் செய்யுமளவாகவும் அவர்கள் சென்றனர். இத்தகைய போக்கு கொண்டுவரும் விளைவுகளைக் குறித்து இயேசு எச்சரித்தார்.—மத்தேயு 23:37, 38; 24:1, 2.
6முன்னறிவித்தபடியே இந்த விளைவுகள் உண்டாயின. பொ.ச. 66-ம் ஆண்டில் யூதர் ரோமுக்கு எதிராகக் கலகம் செய்தனர். ரோமர் முதலில் எருசலேமைத் தாக்கி, பின், எதிர்பாராமல் பின்வாங்கிச் சென்றனர். இது, இயேசுவின் வார்த்தையை நம்பினவர்கள் அவர் சொன்னபடி செய்வதற்கு, அறிகுறியாகவும் வாய்ப்பாகவும் இருந்தது: தப்பியோடுங்கள்—பின்னால் எவற்றை விட்டுப் போக வேண்டியிருந்தாலும் கவலைப்படாமல், தண்டனை விதிக்கப்பட்ட அந்த நகரத்திலிருந்தும் யூதேயா மாகாணம் முழுவதிலிருந்தும் வெளியேறுங்கள். இயேசுவின் உண்மையான சீஷர்கள் இதையே செய்தனர். பின்பு பொ.ச. 70-ம் ஆண்டில், ரோமர் திரும்பி வந்தனர், ஒரு முற்றுகைக்குப் பின் எருசலேமையும் செவிகொடுக்கத் தவறினவர்களையும் அழித்தனர். எருசலேமில் பஞ்சம், நோய், உள்ளூர் கலகம் அல்லது ரோம பட்டயம் ஆகியவற்றால் 11,00,000 ஆட்கள் மாண்டனர் என கண்கண்ட சாட்சியான யூத சரித்திராசிரியன் ஜொஸிபஸ் சொல்கிறான். எனினும், நம்பிக்கையுடன் நடவடிக்கை எடுத்த கிறிஸ்தவர்கள், தப்பிப்பிழைத்தனர்.—லூக்கா 19:28, 41-44; 21:20-24; மத்தேயு 24:15-18.
7இதற்கு ஏறக்குறைய ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னால், அரசன் (இரண்டாம்) நேபுகாத்நேச்சாரின்கீழ் பாபிலோனிய எசேக்கியேல் 33:11) தொனிக்கப்பட்ட எச்சரிக்கையில் பெரும்பான்மையர் விசுவாசம் வைக்கவில்லை. பாபிலோன் சேனைகள் எருசலேமை முற்றுகையிட்டபோதும் அந்த இஸ்ரவேலர் அழிவு வராது என்றே இன்னும் தொடர்ந்து நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் முன்னறிவித்தபடியே அழிவு வந்தது. என்றாலும் கீழ்ப்படிதலின் மூலம் கடவுளில் தங்கள் விசுவாசத்தை மெய்ப்பித்துக் காட்டினவர்கள் பாதுகாக்கப்படும்படி கடவுள் பார்த்துக் கொண்டார்.—எரேமியா 39:15-18; செப்பனியா 2:2, 3.
சேனைகள் இஸ்ரவேல் தேசத்தைப் பாழாக்கக் கடவுள் அனுமதித்தபோது, இதைப் போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அந்த அழிவும் சரித்திர மெய்ந்நிகழ்ச்சியாகும். அதற்கு முன் பல ஆண்டுகளாகக் கடவுள் தம்முடைய தீர்க்கதரிசிகளின் மூலம், இந்த விசுவாசத் துரோகியான ஜனத்தை, அவர்களுடைய போக்கு அழிவுக்கு வழிநடத்திக் கொண்டிருந்ததென்று எச்சரித்து வந்திருந்தார். “உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும்?” என்பது கடவுள் அவர்களுக்குக் கொடுத்த அழைப்பாகும். (8மனித சரித்திரத்தில் இதற்கும் முன்னால், தப்பிப்பிழைப்பதற்கான தெய்வீக மாதிரியின் பூர்வ வெளிக்காட்டை நாம் காண்கிறோம். இது வெறும் தேசீய அழிவை அல்ல, உலக அழிவை உட்படுத்தினது. இதுவும் சரித்திரப் பூர்வ மெய்ந்நிகழ்ச்சியாகும். இது நோவாவின் நாட்களில், பொ.ச.மு. 2370/2369 ஆகிய ஆண்டுகளின்போது நிகழ்ந்த அந்தப் பூகோள ஜலப்பிரளயம் சம்பந்தப்பட்டது. இந்த உலக அழிவுக்கு முன்னால் வியாபித்திருந்த நிலைமைகளைக் குறித்து, பைபிளில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் [யெகோவா, தி.மொ.] கண்டார். பூமியானது [உண்மையான] தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.”—ஆதியாகமம் 6:5, 11.
9இந்த அக்கிரமமும் வன்முறையும், கடவுள் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கும்படி செய்தன. நோவாவும் அவனுடைய குடும்பமும் மாத்திரமே விசுவாசமும் கீழ்ப்படிதலும் காட்டினர். அவர்கள்மீது இரக்கமுள்ளவராயும், பூமியில் நியாயத்தையும் நீதியையும் பாதுகாத்து 2 பேதுரு 2:5, NW; 3:5-7.
வைக்கவும் யெகோவா தேவன் “தெய்வ பக்தியற்ற ஜனங்களாலாகிய” “ஒரு பூர்வ உலகத்தைத் தண்டிப்பதிலிருந்து பின்வாங்கவில்லை.” இதன் விளைவு, “அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்தது.”—10எனினும் நோவாவும் அவனுடைய குடும்பமும் தப்பிப்பிழைத்தனர். ஏன்? முதலாவது, நோவாவும் அவனுடைய குடும்பமும் அந்தத் “தெய்வபக்தியற்ற ஜனங்களாலாகிய உலகத்”தோடுகூட அவர்களுடைய அநீதியில் செல்லவில்லை. கடவுளுடைய சித்தத்துக்கு உணர்ச்சியற்று அல்லது அவருடைய எச்சரிக்கைக்குச் செவிகேளாதுபோகுமளவுக்கு அவர்கள் சாப்பிடுவதும், குடிப்பதும், மணம்செய்வதுமான வாழ்க்கையின் சாதாரண காரியங்களில் முழுவதும் மூழ்கியிருக்கத் தங்களை அனுமதிக்கவில்லை. நோவா நீதியில் ‘கடவுளோடு நடந்தான்.’ அவனும் அவனுடைய குடும்பமும் தீங்குசெய்வதைத் தவிர்த்துமட்டுமே இருந்தார்களென்று இது குறிக்கவில்லை. அதைப் பார்க்கிலும், சரியானதைச் செய்ய அவர்கள் நம்பிக்கையான நடவடிக்கை எடுத்தார்கள். கடவுள் சொன்னதை அவர்கள் உண்மையில் நம்பினார்கள், நீளத்தில் நானூறு அடிகளுக்கு மேற்பட்ட, மூன்று அடுக்குத் தளங்களையுடைய ஒரு பெரிய பேழையைக் கட்டுவதன்மூலம் அதைக் காண்பித்தார்கள். மேலும் நோவா “நீதியைப் பிரசங்கித்தவனாக,” கடவுளுடைய நோக்கங்களை யாவரறிய பேசிக்கொண்டும், நீதியின் வழியைச் சிபாரிசுசெய்துகொண்டும் இருந்ததிலும் நம்பிக்கையுடன் செயல்பட்டான்.—ஆதியாகமம் 6:9, 13-16; மத்தேயு 24:37-39; எபிரெயர் 11:7.
11இந்த எட்டு ஆட்கள் தங்கள் விசுவாசத்தினாலும் விசுவாசத்தால் தூண்டப்பட்ட செயல்களினாலும் தப்பிப்பிழைத்தார்கள். அந்த உலக அழிவு இந்த “முடிவு காலத்தில்” ஜனங்களை என்ன எதிர்ப்படுகிறதோ அதற்குத் தீர்க்கதரிசன மாதிரியென இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் குறிப்பிட்டார்கள். ஆகவே, நோவாவும் அவனுடைய குடும்பமும் செய்ததைப் போலவே நாமும், அழிவை நோக்கிச் செல்லும் உலகத்திலிருந்து தொடர்பறுத்துக்கொள்ள வேண்டுமென்பது தெளிவாயிருக்கிறது. நாமும் கடவுளுடைய சித்தத்துக்குப் பொருந்த வாழவேண்டும். நம்முடைய சொந்தத் தராதரங்களால் வெறுமென வழிநடத்தப்பட்டு தப்பிப்பிழைக்கும்படி நாம் எதிர்பார்க்க முடியாது. “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்,” என்று கடவுளுடைய நீதிமொழிகள் 16:25) எந்த மேற்போக்கான நீதிக்குரிய தோற்றமும் தப்பிப்பிழைப்பதைக் கொண்டுவராது. ஏனெனில் யெகோவா தேவன் இருதயத்தில் இருப்பதைக் காண்கிறார்.—நீதிமொழிகள் 24:12; லூக்கா 16:15.
வார்த்தை சொல்லுகிறது. (மனித இருதயங்களில் காணும்படி யெகோவா எதிர்பார்ப்பது
12தற்போதைய நிலைமைகளால் பலர் வருத்தமுற்று, இதைத் தங்கள் குறை தெரிவிப்புகள், பொது ஆர்ப்பாட்டங்கள், சில நாடுகளில் வன்முறைக் கலகம் ஆகியவற்றின்மூலம் வெளிப்படுத்திக் காட்டுகின்றனர். மீறிய வரி உயர்வையும் ஏறிக்கொண்டேபோகும் வாழ்க்கைச் செலவையுங் குறித்துப் பலர் ஆத்திரமடைகின்றனர். அக்கிரமச் செயல்களால் ஏற்படும் ஆபத்தைக் குறித்து அவர்கள் புலம்புகின்றனர். பயம் மாற்றத்தை நாடும்படி அவர்களைச் செய்விக்கிறது. ஆனால் கடவுளுடைய புதிய ஒழுங்குக்குள் அவர்கள் தப்பிப்பிழைப்பதை நிச்சயப்படுத்துவதற்கு இது போதுமானதா? இல்லை, இது போதாது. ஏன்?
13ஏனென்றால் இந்த நிலைமைகளைக் குறித்து ஒருவன் வருந்தலாம் அதே சமயத்தில் தன்னலத்துடனும் இருக்கலாம். தான் தீமைக்கு ஆளாகாத வரையில் நேர்மையில்லாமை, ஒழுக்கக்கேடு ஆகியவற்றில் குறிப்பிட்ட வகைகளை அவன் சம்மதிக்கவுங்கூடும். எனினும், நேர்மையான இருதயமுள்ள ஆட்கள் காரியங்களை வேறு வகையில் நோக்குகின்றனர். அவர்கள் பைபிளைப் படிக்கையில், தீய நிலைமைகள் இவ்வுலகத்தின் மெய்யான நோயின் வெளிப்புற அத்தாட்சிகளே என்பதைக் காண்கிறார்கள். இந்த நோய்க் குறிகளுக்குப் பின்னால், யெகோவாவின் சித்தத்தை அறிவதற்கும் செய்வதற்கும், அவருடைய நீதியுள்ள தராதரங்களின்படி வாழ்வதற்கும் அக்கறையில்லாமையை அவர்கள் ஊடுருவிக் காண்கிறார்கள். ஆகவே, சமுதாய அநீதிகள், குற்றச் செயல்கள், தூய்மைக்கேடு, அல்லது போர் பயமுறுத்தல் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் முக்கியமாய் வருந்துகிறதில்லை. அவற்றைப் பார்க்கிலும், இத்தகைய நேர்மை இருதயமுள்ள ஆட்கள், மனிதவர்க்கத்தின் சீரழிந்தப் போக்கால் கடவுளுடைய நற்பெயர் அவமதிக்கப்படுவதைக்
கண்டே முக்கியமாய் வருந்துகின்றனர். மேலும் இதன் விளைவாகத் தாங்கள் மாத்திரமேயல்ல, மற்றவர்கள் இவ்வளவு மிகப் பாடனுபவிக்கின்றனரே என அவர்கள் வருந்துகின்றனர்.14வரப்போகிற இந்த உலக அழிவைத் தப்பிப்பிழைக்க, பொ.ச.மு. 607-ல் பாபிலோன் எருசலேமை அழித்தபோது, தப்பிப்பிழைத்திருக்க விட்டவர்களைப்போல் நாம் இருக்கவேண்டும். அவர்கள், அந்த நகரத்தின் மத்தியில் செய்யப்பட்டு வந்த “சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுது” கொண்டிருந்ததாக விவரிக்கப்பட்டனர். (எசேக்கியேல் 9:4) நிலைமைகள் பற்பல வழிகளில் “அருவருப்பாக” இருந்தன. உதாரணமாக ஏழைகள் ஒடுக்கப்பட்டனர், சிலர் தங்கள் நாட்டவரால் சட்ட விரோதமாக அடிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர். (எரேமியா 34:13-16) யூதா ராஜ்யத்தின் ஒழுக்கநிலை, இஸ்ரவேலின் வட ராஜ்யத்தினுடையதைப் பார்க்கிலும் மோசமாயிருந்தது. முன்னால் அந்த வட ராஜ்யத்தைக் குறித்து தீர்க்கதரிசியாகிய ஓசியா பின்வருமாறு விவரித்தான்: “பொய்யாணையிட்டு, பொய்ச் சொல்லி, கொலை செய்து, திருடி, . . . இரத்தப் பழிகளோடே இரத்தப் பழிகள் சேருகிறது.” (ஓசியா 4:2; எசேக்கியேல் 16:2, 51) இத்தகைய அநீதியினிமித்தமும் அது கடவுளுக்குக் காட்டின அவமரியாதையினிமித்தமும் இருதயத்தில் துக்கித்தவர்கள் மாத்திரமே தப்பிப்பிழைப்பதற்காக ‘அடையாளம் போடப்பட்டனர்.’—எசேக்கியேல் 9:3-6.
15சமாதானத்திலும், செழுமையிலும் ஆறுதலுடனும் பூமியில் என்றென்றும் வாழ்க்கையை அனுபவித்து மகிழ இன்று பலர் விரும்பினாலும், நேர்மையான வாழ்க்கைக்குரிய பைபிளின் மாதிரியைக் கற்றுப் பின்பற்றுவது கொண்டுவரும் மாற்றங்களைத் தங்கள் வாழ்க்கை முறையில் செய்ய அவர்கள் விரும்புகிறதில்லை. உள்ளத்தின் ஆழத்தில், அவர்கள் உண்மையில் நீதியை நேசிப்பதுமில்லை. தங்கள் உடனொத்த மனிதருக்கு உண்மையான அக்கறை கொண்டிருப்பதுமில்லை. கடவுளுடைய புதிய ஒழுங்கு, “நீதி வாசமாயிருக்கும்” ஒரு புதிய சமுதாயத்தை உண்டுபண்ணுமாதலால், அதைப் பற்றிய நற்செய்தி, நீதியை நேசிப்போருக்கு மாத்திரமே கவர்ச்சியூட்டுகிறது. மற்றவர்கள் அதால் கண்டனம் செய்யப்படுவதாக உணருகின்றனர்.—2 பேதுரு 3:13; 2 கொரிந்தியர் 2:14-17.
நீங்கள் இப்பொழுது செய்யக்கூடியது
16தம்முடைய நீதியுள்ள ஆட்சியின்கீழ் வாழ உள்ளப்பூர்வமாய் விரும்புகிற ஆட்களை மாத்திரமே யெகோவா பாதுகாத்து வைப்பார். தாங்கள்தாமே விரும்பாத சூழ்நிலைமைகளின்கீழ் அப்பொழுது வாழ அவர் எவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. ஆகையால், பாதுகாக்கப்படுவோர் இப்பொழுதே அவருடைய தெய்வீக ஆட்சியைத் தாங்கள் மெய்யாய் ஏற்றுக்கொள்வதை நிரூபிக்கவேண்டும். அவர்கள் கிறிஸ்தவ “புதிய சுபாவத் தன்மையைத்” தரித்துக்கொண்டு, தங்கள் வாழ்க்கையைக் கடவுளுடைய வழிகளுக்குப் பொருந்த சரிசெய்து, தாங்கள் கடவுளுடைய குமாரனின் சீஷர்களென்று அத்தாட்சியளிப்பதனால் தப்பிப்பிழைப்பதற்காக ‘அடையாளம் போடப்பட்ட’வர்களாகின்றனர். இதன்மூலம் அவர்கள் மரணத்தையல்ல, “ஜீவனையும்” ஆசீர்வாதங்களையும் ‘தெரிந்துகொள்கிறார்கள்.’ (கொலோசேயர் 3:5-10; உபாகமம் 30:15, 16, 19) நீங்கள் எதைத் தெரிந்துகொள்வீர்கள்?
17உங்கள் தெரிவு, வணக்கத்தில் கடவுளுக்குக் கீழ்ப்படிவதை உட்படுத்துகிறது. இயேசு பின்வருமாறு கூறினார்: “உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.” (யோவான் 4:23) ஆகையால் வரப்போகிற இந்த உலக அழிவில் தப்பிப்பிழைப்பதற்கு ஒருவர் எல்லாவகை பொய் வணக்கத்தையும் விட்டு விட்டு உண்மையான வணக்கத்தில் பங்குகொள்ள வேண்டும். மேலும் ஐக்கிய நாட்டு சங்கமும் மற்ற அரசியல் நிறுவனங்களும் அழிக்கப்படவிருக்கிற உலகத்தின் பாகமாக இருப்பதனால், அவற்றில் தங்கள் நம்பிக்கையை வைக்கிறவர்கள் தப்பிப்பிழைப்போருக்குள் இரார்.—வெளிப்படுத்துதல் 17:11; 18:17-21.
18தப்பிப்பிழைப்பதற்கு வழிநடத்துகிற போக்கை ஏற்போருக்கு முடிவில்லாத ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன. கடவுளுடைய வார்த்தையில் விசுவாசம் வைத்து, அந்த விசுவாசத்தை நம்பிக்கையோடு செயல்படுவதால் நிரூபித்துக் காட்டுகிறவர்களுக்குக் கடவுள் வாக்குகொடுக்கிற மகத்தான காரியங்கள் சிலவற்றை இப்பொழுது கவனித்துப் பாருங்கள்.
[கேள்விகள்]
1. (எ) கடவுளுடைய சமாதான புதிய ஒழுங்குக்குள் ஒருவன் தப்பிப்பிழைப்பது எதன்பேரில் சார்ந்திருக்கும்? (பி) பூமியில் பரதீஸில் வாழும்படி தப்பிப்பிழைக்கப் போகிறவர்களை வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரம் எப்படி விவரிக்கிறது?
2. தப்பிப்பிழைப்பதற்குரிய நிபந்தனைகளை வைக்கிறவர் யார்? இவை எங்கே காணப்படுகின்றன?
3. சமாதானமும் பாதுகாப்பும் இருப்பதற்கு, பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவது ஏன் அவசியமாயிருக்கிறது?
4-6. (எ) பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவு சரித்திரப் பூர்வ மெய்ந்நிகழ்ச்சி என்று எது சாட்சி பகருகிறது? (பி) இந்த அழிவு ஏன் வந்தது? (சி) இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் தப்பிப்பிழைப்பதைச் சாத்தியமாக்கினது எது?
7. பாபிலோன் இஸ்ரவேல் தேசத்தைப் பாழாக்கினபோது தப்பிப்பிழைப்பதற்கு ஆட்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?
8-10. (எ) நோவாவின் நாட்களில் யெகோவா ஏன் உலக அழிவைக் கொண்டுவந்தார்? (பி) நோவாவும் அவனுடைய குடும்பமும் ஏன் பிழைத்திருக்க விடப்பட்டனர்?
11. இந்த எச்சரிக்கை முன்மாதிரிகள் காட்டுகிறபடி, வரவிருக்கும் உலக அழிவைத் தப்பிப்பிழைக்க நாம் என்ன செய்யவேண்டும்?
12, 13. (எ) என்ன நிலைமைகள் பலர் ஒரு மாற்றத்தை நாடும்படி செய்விக்கின்றன? (பி) கடவுளுடைய புதிய ஒழுங்குக்குள் அவர்கள் தப்பிப்பிழைப்பதை உறுதிப்படுத்த இது ஏன் போதுமானதல்ல? (சி) தப்பிப்பிழைப்போருக்குள் நாமிருக்க, தற்போதைய கெட்ட நிலைமைகளின்பேரில் நம்முடைய துயரத்தைத் தூண்டுவிக்கும் உள்நோக்கம் என்னவாயிருக்கவேண்டும்?
14. பாபிலோன் எருசலேமை அழித்தச் சமயத்தில் தப்பிப்பிழைப்பதற்கு ‘அடையாளம் போடப்பட்டவர்கள்’ யாவர்?
15. வரவிருக்கும் உலக அழிவைத் தப்பிப்பிழைப்பதற்குத் தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதிலிருந்து சில ஆட்களைத் தடுத்து வைப்பது எது?
16-18. (எ) தப்பிப்பிழைப்பதற்கு ஒருவன் எவ்வாறு ‘அடையாளம் போடப்பட்ட’வனாகிறான்? (பி) பொய் வணக்கத்தைக் குறித்தும், பின்பு உண்மையான வணக்கத்தைக் குறித்தும் அவன் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும்? (சி) ஐநா-வைப் போன்ற அரசியல் ஸ்தாபனங்களை அவன் எவ்வாறு கருதவேண்டும்?
[பக்கம் 87-ன் படம்]
பூமியில் கடவுளுடைய புதிய ஒழுங்கில் வாழ்வதற்கு ஒரு “திரள் கூட்டம்” தப்பிப்பிழைக்கும்