ஆண்மை பருவத்துக்கு வளருதல்
அதிகாரம் 3
ஆண்மை பருவத்துக்கு வளருதல்
தனித்தனி ஆட்களாக நம் ஒவ்வொருவருக்கும் எப்படிப்பட்ட தொடக்கம் இருந்ததென்பதை நோக்கிப் பார்ப்பதன் மூலம் நாம் பயனடையலாம். இதைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பார்: சில ஆண்டுகளுக்கு முன்பாக நீ கருவுற்ற ஒரு தனி உயிரணுவாக, இந்த வாக்கியத்தின் முடிவிலிருக்கும் இந்த முற்றுப் புள்ளியைவிட சிறியதாய் இருந்தாய். இந்தச் சின்னஞ் சிறிய தொடக்கத்திலிருந்து, நீ உன் தாயின் கருப்பைக்குள் வளரத் தொடங்கினாய். ஏற்ற காலத்தில் உன் உடல், சிந்திக்கிற ஒரு மூளையுடனும், காண்கிற கண்களுடனும், கேட்கிற காதுகளுடனும், அதிசயமான மற்றும் பல உறுப்புகளுடனும் பூரணமடைந்திருந்தது. இந்தத் தனி சிறப்பான வளர்ச்சி எப்படி நடந்தேறிற்று?
2உன்னை உண்டுபண்ண உன் பெற்றோர் திட்டவரைபடங்கள் வரைந்து வைக்கவில்லை. அதற்கு மாறாக, உன் தகப்பனிடமிருந்து வந்த விந்து உயிரணு உன் தாயின் கருப்பையிலிருந்த கரு உயிரணுவுடன் ஒன்று சேர்ந்ததால் உண்டான அந்தக் கருவுற்ற உயிரணுக்குள் இதெல்லாம் செய்யப்பட்டது. சில நிமிடங்களுக்குள்தானே அந்தச் சின்னஞ் சிறிய உயிரணுவுக்குள் நீ ஆன இந்த முழு புதிய மனிதனுக்குரிய அந்தத் திட்டங்கள் வரையப்பட்டாகிவிட்டன!
3உன்னை உண்டாக்கத் தேவைப்பட்ட எல்லாத் தகவலும் கருவுற்ற அந்தச் சின்னஞ்சிறிய உயிரணுவின் DNA-ல் a (டி என் ஏ) காணப்படுகிறது. இந்த DNA ஆனது ஒவ்வொரு உயிரணுவிலும் இருக்கிற பத்தாயிரக்கணக்கான ஜீன்களின் (உயிர்மத்தின் இணை மரபு கீற்றுகளின்) இன்றியமையாத பொருளாக இருக்கிறது, இந்த ஜீன்கள் இருபத்திமூன்று தொகுதிகளான குரோமோசோம்களுடன் (நிறத்திரிகளுடன்) இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு உயிரணுவிலும் அவ்வளவு அதிக தகவல் அடைத்து வைக்கப்பட்டிருக்க, அதை மனித மொழியில் எழுத வேண்டுமென்றால் ஒரு முழு அறை நிறைய கொள்ளும் புத்தகங்கள் தேவைப்படும். ஒருவேளை இதைப்பார்க்கிலுங்கூட அதிக ஆச்சரியம் தரும் உண்மையானது, இந்த நுட்ப விளக்க விவரமான தகவல் முழுவதும் உடலின் ஒவ்வொரு புதிய உயிரணுவுக்கும் கடத்தப்பட்டு வருவதாகும். ஆகவே ஒவ்வொரு உயிரணுவும், கருவுற்ற அந்த முதல் உயிரணுவில் அடங்கியிருந்த அதே தகவல் முழுவதையும் தன்னில் கொண்டிருக்கிறது!
4ஆனால் நீங்கள் ஒருவேளை பின்வருமாறு கேட்கலாம்: இந்த DNA எப்படி ஓர் ஆளின் பல வெவ்வேறு உடற்பகுதிகளைக் கட்டுவதற்கு, அதற்கு வேண்டிய தகவலை மாத்திரமே, மேலும் அதற்கு வேண்டியபோது மாத்திரமே பயன்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கிறது? உதாரணமாக, ஒரு கண்ணைக் கட்டியமைக்க அதற்குத் தேவையான கட்டளைகளை மாத்திரமே அது எப்படித் தெரிந்தெடுத்துக் கொள்ள முடிகிறது? மேலும் அது ஒரு கண்ணைக் கட்டியமைக்கையில், உன் காதுகள், சிறுநீரகங்கள், ஈரல், முதலியவற்றைக் கட்டுவதற்கான எல்லாத் தகவலையும் எப்படி அடக்கி வைக்கிறது?
5இது விளங்கா மெய்மையாக இருக்கிறது. மனிதர் இதைக் கவனித்துப் பார்க்க முடிகிறதில்லை. இது மகா உன்னத சிருஷ்டிகரின் திட்டம்! பைபிள் எழுத்தாளரில் ஒருவன் மனித உடலைப்பற்றி தான் அறிந்திருந்தவற்றின் காரணமாக, கடவுளிடம் பின்வருமாறு கூறினான்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்ணபட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள் அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” (சங்கீதம் 139:14) நீயும் இவ்வாறு உணருகிறாயா?
6நீ தொடக்கமான அந்தக் கருவுற்றத் தனி உயிரணு ஒன்பது மாதங்களுக்குள்தானே முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையாகிவிட்டது, ஆம், ஏறக்குறைய 20 கோடி உயிரணுக்கள் அடங்கிய அதிசயமாய்ச் சிக்கலாயுள்ள ஒரு முழு அமைப்பாகிவிட்டது. உன்னுடைய வளர்ச்சி இனி ஒருபோதும் b வளரிளமை என்று அறியப்படுகிற இந்த மாற்ற இடைநிலைப் பருவம் முழுவதும் பல ஆண்டுகள் நீடிக்கின்றன. இது, பொதுவாய் இருபது இருபத்திமூன்று வயதுகளுக்கிடையில், நீ உடல் சம்பந்தப்பட்ட முதிர்ச்சியை அடைகையில் முடிவடைகிறது. இந்தப்பருவம் உன் வாழ்க்கையில் இலகுவான காலமாக இருப்பதில்லை, என்றாலும் இது மிக மிக முக்கியமான காலம். உன் எதிர்கால முன்னேற்றத்திற்கு ஒரு சோதனை அடிப்படையாக இருக்கிறது.
இவ்வளவு வேகமாய் இராது! என்றாலும் நீ பிறந்து ஏறக்குறைய பதின்மூன்று அல்லது பதினான்கு ஆண்டுகள் ஆன பின்பு நீ மறுபடியுமாக மற்றொரு வேகமான ஒரு திடீர் வளர்ச்சியடைய தொடங்குகிறாய். இந்தக் குறிப்பிட்ட காலத்தில் நீ ஒரு பையனாய் இருப்பதிலிருந்து முழு மனிதனாக மாறத் தொடங்குகிறாய்.பூப்புப் பருவத்தின்போது மாற்றங்கள்
7பூப்புப் பருவமானது (பாலின முதிர்ச்சி தொடக்கக்காலம்), வளரிளமை பருவத்தின் தொடக்கக் காலமாகும். கண்டிப்பாக, இது பாலின முதிர்ச்சியடையும் குறிகள் தோன்றுகிற வயதாகும். இந்த வயதானது பொதுவாய்ப் பையன்களுக்கு பதினான்கு என்றும் பெண்களுக்குப் பன்னிரண்டு எனவும் முடிவு செய்யப்படுகிறது. என்றாலும் இயல்பாக இது வெகுவாய் வேறுபடுகிறது. நீ ஒருவேளை பதினோரு அல்லது பன்னிரண்டு வயதில் இந்தப் பூப்புப் பருவத்திற்குள் பிரவேசித்திருக்கலாம், அல்லது நீ ஒருவேளை பதினைந்து அல்லது பதினாறு வயதானவனாய் இருக்கலாம், என்றாலும் பால் சம்பந்த முதிர்ச்சியடைய இன்னும் தொடங்காதிருக்கலாம். சீக்கிரத்திலோ பிந்தியோ முதிர்ச்சியடைய தொடங்குவது அசாதாரணமானதல்ல, ஆகவே மனக்கலக்கங் கொள்வதற்கு எவ்விதக் காரணமுமில்லை. இந்தப் பூப்புப் பருவத்தின்போது நீ எதிர்பார்க்கக்கூடிய சில பிரச்னைகள் யாவை?
8ஒரு காரியமானது, நீ ஒரு வகையான மனக் குழப்பத்தையும் ஒத்திசைவு குறைவையும் அனுபவிக்கக்கூடும். இது ஏனென்றால் உன்னுடைய எலும்புகள் நீளமாகின்றன, தசைகளும் அவற்றோடுகூட நீளமாக விரிய வேண்டும். இந்த விரிவாகுதலில் உடலின் சில பாகங்கள் விரைவாய் வளருவதாகவும் மற்றவை ஒருவேளை தாமதம் செய்வதாகவும் தோன்றுகின்றன. என்றபோதிலும், இதன் விளைவாக உண்டாகும் எவ்வித அலங்கோலமும் கடந்துபோய்விடும். கூடுதலான கவனம் நிச்சயமாகவே பயனுள்ளது, அது, ஏதாவது விபத்துக்குள்ளாகி உனக்குத் தீங்கு ஏற்படுவதிலிருந்து உன்னை காக்கக்கூடும்; என்றபோதிலும் இது
மிகுதியாய்க் கவலைப்படுவதற்குக் காரணமில்லை.9விரிவாக நீளுகிற இந்த உடல் பகுதிகளுக்குள் குரல்வளை அதிர்வு நாளங்களும் அடங்கியிருக்கின்றன. இந்தக் கூடுதலான நீளம் குரல் தாழ்விசை அடையும்படி செய்கிறது. ஆனால் இந்த நீளமாகும் செயல்முறையின்போது உன்னுடைய குரல் அடிக்கடி “வெடிப்போசை” உண்டுபண்ணுகிறது, அதாவது, நீ சற்றும் எதிர்பாராதபோது ஓர் உயர் கீச்சல் தொனியை வெளிப்படுத்துகிறது. இதுவும், வளரிளமைக்குரிய “வளரும் வலிகளின்” பாகமாய் இருக்கிறது. ஆகையால் இது நடந்து மற்றவர்கள் சிரிக்கையில் அவர்களோடுகூட நீயும் சிரித்துக்கொள், அப்பொழுது எந்தச் சங்கட உணர்ச்சியும் சீக்கிரமாய்க் கடந்துவிடும்.
10இந்த உடல் மாற்றங்களுக்கு அடிப்படைவேர் உன்னுடைய சுரப்பிகளே, இவற்றில் தைராயிடுசுரப்பி, அட்ரினால் சுரப்பிகள், கோனாட் சுரப்பிகள் (பாலின சுரப்பிகள்) ஆகியவையும் உட்பட்டிருக்கின்றன. இவை இன்னும் வேறு பல மாற்றங்களை உண்டுபண்ணுகின்றன. இவற்றில் ஒன்று, இன உறுப்புகளைச் சுற்றிலும், மேலும் உன்னுடைய அக்குள்களிலும் உன்னுடைய மார்பின் மீதுங்கூட முடிவளருதல். இதன் அடர்த்தி ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது, இது நீ எவ்வளவு “ஆண்மை”யுள்ளவனாய் இருக்கிறாய் என்ற எதையும் சுட்டிக்காட்டும் குறியாக இல்லை. முகத்திலுங்கூட முடி தோன்ற தொடங்குகிறது. இச்சமயத்தில் இது அடர்த்தியாயிராமல் வெறும் “பஞ்சு போன்ற முடியாக” இருக்கலாமென்றாலும், சவரம் செய்யவேண்டிய அனுபவத்தை நீ எதிர்ப்படப்போவது படிப்படியாய் நெருங்கிவருகிறது.
11ஒருவேளை ஆண்மை பருவத்துக்கு வளர்ந்துகொண்டிருக்கும் பையன்களுக்கு உண்டாகும் மாற்றத்தின் காரணமாக ஏற்படும் அமைதிக்குலைவு அநேகமாய் பிறப்பு உறுப்புகள் அதாவது ஜனன-இந்திரியங்கள் உட்பட்டதாய் இருக்கலாம். பூப்புப் பருவத்தின்போது இவை அவற்றின் முழுமையான அளவை அடைவது மட்டுமல்லாமல் இயங்கவும் தொடங்குகின்றன. பைபிளில் லேவியராகமம் 15:16, 17, ‘இந்திரிய [விந்து] கழிவைப்’ பற்றிக் குறிப்பிடுகிறது. இந்தக் காரியத்தைப் பற்றி உன் பெற்றோர் முன்னதாகவே உன்னிடம் கலந்து பேசத் தவறியிருப்பார்களானால், முதல் தடவையாக உன் விந்து கழிவது உனக்கு ஒருவாறு உன் மன அமைதியைக் குலைக்கிற ஓர் அனுபவமாய் இருக்கக்கூடும். இப்படிப்பட்ட கழிவை உண்டுபண்ணுவது எது?
12குழந்தையைத் தோற்றுவிக்கக்கூடிய போதியளவு வளர்ச்சியை நீ அடைகிறபோது, உன் பால் உறுப்பு, விந்து என்று அழைக்கப்படுகிற இந்த நீரைக் கசியச் செய்கிறது. இது தண்ணீரைவிட கனமான நீர்மம், இது பேரளவாகக் கசிகிறதில்லை என்றாலும், இலட்சக்கணக்காய் நுட்பமான விந்து உயிரணுக்களைக் கொண்டிருக்கிறது. இந்த உயிரணுக்களில் ஏதாவது ஒன்று ஒரு பெண்ணின் கரு அணுவை கருவுறச் செய்து அதைக் குழந்தையாக வளரச் செய்யக்கூடும். அநேகமாய் உன் உடல் அடுத்தடுத்து ஒழுங்காக இந்த விந்து நீர்மத்தை வெளிப்படுத்தி வரும். இந்தக் கழிவானது சாதாரணமாய் நீ தூங்குகையிலும் சொப்பனம் கண்டு கொண்டிருக்கையிலும் ஏற்படுகிறது.
பாலின் நோக்கம்
13பாலானது, ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்துவதற்கும், தங்கள் பிள்ளைகளைத் தோற்றுவிப்பதற்கும் ஒரு வழிவகையாக இருக்கும்படி நம்முடைய சிருஷ்டிகர் இதைத் தந்தார். என்றபோதிலும் இந்தப் பால் சம்பந்தமாகக் கடவுள் சில சட்டங்களை வைத்தார், இவை பால் உறவுகள், விவாகத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிற ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மாத்திரமே அனுபவிக்கப்படவேண்டும் என்று விளக்குகின்றன. இது ஏனென்றால், உலகத்திற்குள் பிறப்பிக்கப்படுகிற ஒவ்வொரு குழந்தையும், அதைப் பேணி வளர்ப்பதற்கான எல்லா உத்தரவாதத்தையும் ஏற்கிற தகப்பனும் தாயுமாகிய இருவரையும் உடையதாக இருக்கவேண்டுமென்பது கடவுளுடைய நோக்கம். ஆகையால், விவாகம் செய்திராத ஆட்கள் பால் உறவுகளில் ஈடுபடுவது கடவுளுடைய பார்வையில் தவறாக இருக்கிறது.
14மறுபட்சத்தில், விவாகம் செய்திருக்கிற ஆட்களுக்கு, பால் உறவுகள், ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கு அதிசயமான ஒரு வழியாக இருக்கின்றன. கணவன் தன் மனைவிக்கு மிக நெருங்க படுக்கிறான் இவ்வாறாக அவனுடைய ஆண் பாலுக்குரிய உறுப்பு மனைவியுடைய குழந்தை பிறப்பிக்கும் குழாய் வழியினுள் இயல்பாய்ப் பொருந்துகிறது. இது அவர்கள் இருவருக்கும் மிகுந்த இன்பத்தைக் கொடுக்கக்கூடும். இந்தப் போக்கில் கணவனுடைய விந்து உயிரணுக்கள் அவனுடைய உடலிலிருந்து வெளிப்பட்டு அவனுடைய ஆண்பால் உறுப்பின் வழியாய் நேரே அவனுடைய மனைவியின் பிறப்புக் குழாய்க்குள் செல்லுகின்றன. இந்தப் பால் உயிரணுக்கள் இந்தக் குழாய் வழியாய்ச் சென்றுகொண்டிருக்கின்றன, அங்கே மனைவிக்குள்
முதிர்ச்சியடைந்த ஒரு பெண் கரு இருக்கிறதென்றால், அவளுடைய கணவனின் விந்து உயிரணுக்களில் ஒன்று அதோடு இணைந்து கொள்ளக்கூடும். இந்தக் கருவுற்ற உயிரணு ஒரு குழந்தையாக வளரத் தொடங்கும். ஆகவே, பார், கடவுள் இந்தப் பால் உறுப்புகளை ஒரு பரிசுத்தமான நோக்கத்திற்காக, அதாவது உயிரைக் கடத்துவதற்கு உண்டாக்கினார். இதன் காரணமாக, அவை கடவுளுடைய சட்டங்களின்படி பயன்படுத்தப்படவேண்டியது சரியானதாய் இருக்கிறது.15பால் வளர்ச்சியைப் பற்றிய உன்னுடைய கேள்விகளுக்குப் பதில்களை அடைவதற்கான மிகச் சிறந்த முறையானது உன்னுடைய பெற்றோரை, முக்கியமாக உன் தகப்பனைக் கேட்பதேயாகும். நீ அனுபவித்திருக்கிற எல்லாவற்றையும், இன்னும் மிகப் பலவற்றையும் உன் தகப்பன் ஏற்கெனவே அனுபவித்திருக்கிறார். மற்ற இளைஞர், பாதி மாத்திரமே சரியாய் இருக்கிற—ஒரு சில உண்மைகளும் உணர்ச்சிக்கு ஆட்பட்ட ஏராளமான கதைகளும் அடங்கிய—தகவலையே உனக்குக் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கையில், உன் தகப்பனோ உனக்கு உதவி செய்யக்கூடியதும், படிப்படியாய் உனக்குச் சந்தோஷத்தைக் கொண்டுவருவதில் பயன் தரக்கூடியதுமான நல்ல தகவலைக் கொடுக்கக்கூடியவராக இருக்கவேண்டும். கடவுளுடைய வார்த்தையில் அடிப்படை கொண்ட தகவலை அல்லது ஆலோசனையைக் கொடுக்கும் நிலையில் உன் தகப்பன் இல்லையென்றால், கடவுளுடைய வார்த்தை சொல்வதை நீ தெரிந்துகொள்வது உனக்கு விலைமதியாததாய் இருக்கும். யெகோவாவின் சாட்சிகளின் சபையிலுள்ள மூப்பர்கள் உனக்கு உதவியாயிருப்பதில் சந்தோஷப்படுவார்கள் என்றும் நீ காண்பாய்.
பொறுப்பறிந்தவனாக உன்னை நிரூபித்தல்
16நீ ஆண்மை பருவத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில் தன்னொருமைப்பாட்டிற்கான ஆசையை உணருவது அதாவது, நீ ஒரு தனி ஆளாக மதிக்கப்பட வேண்டுமென்று உணருவது இயல்பானதே. மேலும் ஓரளவான தற்சார்பு அல்லது சுதந்தரத்திற்கான ஆசை உனக்கு இருப்பதுங்கூட இயல்பானதே. நீ தற்சார்புள்ளவனாய் இருக்கக்கூடிய அந்தக் காலத்திற்காக உன் பெற்றோர் உன்னை ஆயத்தப்படுத்த அநேகமாய்த் தொடங்குவார்கள். எப்படி?
17சந்தேகமில்லாமல், நீ செய்யப்போகிற காரியங்களைக் குறித்தவற்றில் சில தீர்மானங்களைச் செய்வதில் பங்கு கொள்ளும் பொறுப்பையும் சிலாக்கியத்தையும் படிப்படியாய் உனக்கு அதிகமதிகமாகக் கொடுத்துவருவதன் மூலமே. பள்ளியில் நீ ஏற்கப்போகிற சில பாடங்களைக் குறித்ததில்
உன் விருப்பத்தைத் தெரிவிக்கும்படி அவர்கள் அழைக்கலாம் அல்லது ஒரு பகுதி-நேர வேலையை ஏற்கும்படி அவர்கள் உன்னை அனுமதிக்கலாம். உன்னுடைய தனிப்பட்ட உபயோகத்துக்குரிய சில பொருட்களை நீயே வாங்கிக் கொள்ளும்படி நீ அனுமதிக்கப்படலாம். இதன் சம்பந்தமாகச் செய்யும்படி உன் பெற்றோர் தகுதியாகக் காணும் எதிலும், நீ பொறுப்பேற்கத் தகுதியுள்ளவனாக உன்னைக் காட்டுவது அப்பொழுது உன்னைப் பொறுத்தது. நீ சிறு பிள்ளைத்தனமான முறையில் நடப்பாயானால் அல்லது “தலைவீக்கங்” கொண்டவனாய்ப் பெருமையடைவாயானால், அப்பொழுது அவர்கள், நீ ஓர் ஆண் தன்மையுள்ளவனாகக் காட்டும் வரையில் உன் சிலாக்கியங்களைக் குறைத்து வைக்கவேண்டியதாய் இருக்கும்.18மேலுமதிகமாய்த் தனி ஆளாக மதிக்கப்படவேண்டும், ஓரளவு சுதந்தரம் வேண்டும் என்பதற்கான இந்த ஆசையோடுகூட மற்ற இயல்பான ஆசைகளும் தொடர்ந்து உண்டாகின்றன. நீ எப்படிப்பட்டவனாய் இருக்கிறாய் நீ என்ன செய்யக்கூடும் என்பவற்றை மற்றவர்கள் மதித்துப் போற்றவேண்டுமென்ற ஒரு தேவையை உணருவாய். சில இளைஞர் “கூட்டுக் கும்பல்களைச்” சேர்ந்துகொள்வதன் மூலம் அல்லது உண்டாக்குவதன் மூலம், தான் தனி ஆளாக மதிக்கப்படவேண்டும் என்ற தங்கள் ஆசையையும் ‘இணை பகுதியாயிருக்க வேண்டுமென்ற ஓர் உணர்ச்சியையும்’ திருப்தி செய்துகொள்ள தேடுகின்றனர். ஆனால் இப்படிப்பட்ட கூட்டுக் கும்பல்கள் பொதுவாய்த் தங்கள் நடத்தைக்குத் தங்கள் சொந்த ஒழுக்கச் சட்டங்களை உண்டுபண்ணிக் கொள்கின்றனர், இது அநேகமாய் எப்பொழுதும் தவறான செயல் நடப்பிப்பதற்கு, சில சமயங்களில் வினைமையான கடுங்குற்றச் செயல்களுக்குங்கூட வழி நடத்துகிறதென்று உண்மை நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. இளம் ஆண்கள் தொந்தரவுக்குள் உட்படுகையில், மற்ற எந்தத் தனி காரணத்தைப் பார்க்கிலும் அதிகமாக, கெட்ட சகவாசமே அந்தப் பிரச்னையின் அடிவேராக இருப்பதாய்க் கண்டுபிடிக்கப்படுகிறது.
19வாழ்க்கையின் இந்தக் காலப் பகுதியில் உடல் சம்பந்தமாய் முழுமையாய் வளர்ந்த ஓர் ஆணாக நீ எப்படிப்பட்ட தோற்றமுடையவனாய் இருக்கப்போகிறாய் என்பதைப் பற்றி ஓரளவான அபிப்பிராயத்தை நீ அடைய தொடங்குகிறாய். என்றாலும் உட்புறத்தில், அதாவது, “இருதயத்தின் அந்த மறைவான ஆள்” என்று பைபிள் அழைக்கிறதில், நீ எப்படிப்பட்டவனாய் இருக்கப்போகிறாய் என்பதைப் பற்றியும் நீ மேலும் மேலும் அதிகமாய்ச் சிந்திக்கத் தொடங்கவேண்டும். (1 பேதுரு 3:4, NW) உன் வாழ்க்கையின் இந்தப் பருவமானது, அதிகப்படியான சுதந்தரத்தை நாடும் உன் ஆசை, உன்னை உன் பெற்றோரிடமிருந்தும் குடும்பத்தின் மீதிபேரிடமிருந்தும் ஒருவாறு பிரித்துவிட அனுமதிப்பதற்கான காலமல்ல. பூப்புப் பருவத்தில் நீ அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்த மாற்றங்களும், நீ உணருகிற, மேலும் அடக்கியாளக் கற்றுக் கொள்ளவேண்டிய புதிய தூண்டுதல் உணர்ச்சிகளும், உண்மையில், அவர்களுடைய அன்பும் சரிநிலைப்படுத்தும் அவர்கள் செல்வாக்கும் உனக்கு மேலும் அதிகப்படியாய்த் தேவைப்பட செய்கின்றன.
20ஆகையால், உன் பெற்றோரிடமிருந்து தூர விலகிப் போய்க்கொண்டு ஒரு பிளவு உண்டாக அனுமதிப்பதற்குப் பதிலாக, அவர்களிடமாக நெருங்கி வந்து, இப்பொழுது நீ முழு வளர்ச்சியடையும் நிலையை அணுகுகையில், அவர்களிடமிருந்து நீ கற்றுக்கொள்ளக்கூடிய எல்லாவற்றையும் கற்றுக்கொள். இதற்காக நீ ஒருபோதும் வருந்தமாட்டாய். மேலும், அவர்களுக்கும் மெய்யான சந்தோஷத்தை நீ கொண்டுவந்து, தங்கள் மகனாக உன்னைக் கொண்டிருப்பதற்காக அவர்கள் பெருமையுள்ளவர்களாய் உணரும்படியும் செய்வாய்.
[அடிக்குறிப்புகள்]
a DNA ஆனது டியாக்சிரிபோ நியூக்ளியிக் அமிலம் என்பதைக் குறிக்கும் சுருக்கு எழுத்துக்களைக் கொண்ட பெயர்.
b பின்வரும் அதிகாரம் சிறுமி பருவத்திலிருந்து இளம் பெண் பருவத்துக்கு மாறும் மாற்றத்தை ஆராய்கிறது.
[கேள்விகள்]
1-6. பிறப்பு சமயம் வரையாக நம்முடைய வளர்ச்சியைப்பற்றிய அதிசயமான உண்மைகள் சில யாவை? இந்த எல்லாவற்றிற்காகவும் நன்மதிப்பு கொடுக்கப்பட தகுதியாயிருக்கிறவர் எவராவது இருக்கிறாரா? (சங்கீதம் 139:13-18)
7-12. (எ) பூப்புப் பருவத்தின்போது ஒரு பையனில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? இந்த மாற்றங்களைப் பற்றி மனக்கலகங் கொள்வற்கு ஏதாவது காரணமிருக்கிறதா? (பி) தன்னுடைய பால் உறுப்புகள் முழு வளர்ச்சியை அடைந்துவிட்டன, தான் பிள்ளைகளைத் தோற்றுவிக்கக்கூடும் என்று ஓர் இளம் ஆண் எப்படிச் சொல்லக்கூடும்?
13-15. (எ) என்ன நோக்கத்திற்காகப் பால் கடவுளால் அருளப்பட்டது? இதைக் கட்டுப்படுத்த அவர் ஏன் சட்டங்களை வைத்தார்? (எபிரெயர் 13:4) (பி) பாலைப்பற்றிய நம்பத்தக்கத் தகவலைப் பெறுவதற்கான மிகச் சிறந்த இடம் பெரும்பாலும் எங்கே இருக்கிறது? (நீதிமொழிகள் 6:20)
16-18. (எ) ஓரளவான சுதந்தரத்தைப் பயன்படுத்துவதற்கு உன் பெற்றோர் என்ன முறைகளில் உனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள்? இந்தச் சிலாக்கியங்களை நீ பயன்படுத்தும் முறை எப்படி உன்னுடைய எதிர்கால வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும்? (பி) இளைஞர்கள் பலர் ஏன் “கூட்டுக் கும்பல்களைச்” சேர்த்துக் கொள்கின்றனர்? இது எதற்கு வழி நடத்தக்கூடும்? (1 கொரிந்தியர் 15:33)
19, 20. உன் பெற்றோருடன் நல்ல உறவைக் கொண்டிருப்பது ஏன் முக்கியமானது? இதை எது கெடுக்கக்கூடும்? (நீதிமொழிகள் 23:24, 25)
[பக்கம் 19-ன் படம்]
ஒன்பதே மாதத்திற்குள் ஒரே உயிரணு ஒரு குழந்தையாக ஆகிறது