உடல் சம்பந்தமாய் உன்னை நீ கவனித்துக் கொள்ளுதல்
அதிகாரம் 6
உடல் சம்பந்தமாய் உன்னை நீ கவனித்துக் கொள்ளுதல்
ஞானியாகிய சாலொமோன் மனித உடலை, ஜன்னல்களையும், கதவுகளையும் கொண்ட ஒரு வீட்டுக்கு ஒப்பிட்டான். பல நூற்றாண்டுகளுக்கப்பால், கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் அதை “கூடாரமாகிய தம்முடைய வீடு” என்று அழைத்தான். (பிரசங்கி 12:3-7; 2 கொரிந்தியர் 5:1, 2) உன் உடலிலிருந்து முழுமையாய் நீ பலனடைய வேண்டுமென்றால், ஒரு வீட்டைப் போல் அதற்குச் சரியான கவனிப்பு தேவைப்படுகிறது.
2உடல் சம்பந்தமாய் உன்னைக் கவனித்துக் கொள்வதற்கு வருகையில் நீ எப்படிப்பட்ட வீட்டுக்காரனாய் இருக்கிறாய்? உனக்கு இருக்கிற அந்த உடலை நீ நன்றியோடு மதிக்கிறாயா? நீ அவ்வாறு மதிக்க வேண்டும், ஏனென்றால் மனித உடலானது பூமியின் எல்லாப் படைப்புக்குள்ளும் மெய்யாகவே தலைசிறந்த படைப்பாய் இருக்கிறது. கண்டுபிடிக்கப்பட்ட எந்தக் கணக்கிடும் பெரிய பொறியையோ இயந்திர நுட்பம் வாய்ந்த கருவியையோ பார்க்கிலும் அதிக சிக்கலானதாக உன் உடல் இருக்கிறது. என்றபோதிலும் அது தட்டுத்தடங்கலின்றி மிருதுவாய் இயங்குவதாயும், அதிசயமான இயக்குத் திறமையுள்ளதாயும் மிக எளிதாய் வளைந்து கொடுக்கக் கூடியதாயும் இருக்கிறது. எல்லா எலும்புகளும், தசைகளும், இரத்தக் குழாய்களும் வலை பின்னல் போன்ற நரம்பு மண்டலங்களும், இவற்றோடுகூட மற்ற எல்லா உறுப்புகளும் மனித உறுப்பமைப்பின் பாகங்களும் ஒன்றே என்பதாக எப்படி ஒருமிக்க இசைந்து செயலாற்றுகின்றன என்பதை எண்ணிப் பார்ப்பது மனதைத் தடுமாறச் செய்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினதைப் போல், பல அவயவங்களையுடையதாக இருக்கிறபோதிலும் “சரீரம் ஒன்றே.” இதை நாம் நினைவில் வைத்திருப்பதும், மேலும், “ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடவே பாடுபடும்,” என்று அவன் கூறினதன் உண்மையை மதித்துணருவதும் நல்லது. ஆம், கோடிக்கணக்கான உயிரணுக்களை உடையதாக அது இருக்கிறபோதிலும் உடல் ஒன்றே. உன் இளமையையும் உன் முழு வாழ்க்கையையும் மிகச் சிறப்பாய்ப் பயன்படுத்திக்கொள்ள நீ விரும்புகிறாயென்றால் உன் 1 கொரிந்தியர் 12:12, 14-26.
உடலின் எந்தப் பாகத்தையும் நீ கவனிக்காமல் விட முடியாது.—3உன் உடலுக்கு உன்னால் கூடிய மிகச் சிறந்த கவனத்தைக் கொடுக்க விரும்புவதற்கு இதைவிட மேம்பட்ட உயர்வான ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது, உன் சிருஷ்டிகருக்கும் உன் பெற்றோருக்கும் கனத்தைக் கொண்டு வருவதற்கும், உன் அயலானுக்கு நன்மை கொண்டுவருவதற்கும் அதை நீ பயன்படுத்தக்கூடும்படி அப்படிச் செய்யவேண்டும். சரியாய்க் கவனிக்கப்படாத ஒரு வீடு அதன் சிற்பாசாரிக்கோ அதைக் கட்டுகிறவனுக்கோ நற்பெயரைக் கொண்டுவராது. உடைந்து, அசுத்தமாக அல்லது துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிற வீடு அதைச் சூழ்ந்துள்ள சுற்றுப்புறம் முழுவதையும் கெடுதியான முறையில் பாதிக்கிறது. உடல் சம்பந்தமாய் நாம் நம்மை சரியானபடி கவனிக்கத் தவறினால் நம்மைக் குறித்ததிலும் இதுவே உண்மையாயிருக்கிறது.
4‘எதை விதைக்கிறாமோ அதையே அறுப்போம்’ என்ற இந்தப் பைபிள் நியமம், உடலை நாம் கவனிப்பதைக் குறித்ததிலும் உண்மையாய் இருக்கிறது. (கலாத்தியர் 6:7) “அறுவடை” நல்லதாக இருக்குமா கெட்டதாக இருக்குமா என்பது நம்பேரில் சார்ந்திருக்கிறது. அறுக்கத் தொடங்குவதற்கு ஒருவன் அல்லது ஒருத்தி தனக்கு முதிர்வயதாகும் வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. இது வெகு வெகு சீக்கிரமாய்ச் சில சமயங்களில் வாழ்க்கையின் வெகு இளமையிலேயே தொடங்குகிறது.
5இது வெறுமென “நோய்ப்படுவதைத்” தவிர்க்க முயலும் காரியமல்ல. சந்தோஷத்திற்கும், நல்ல வேலை செய்வதற்கும், தெளிவாகச் சிந்திப்பதற்கும் உதவி செய்கிற, மேலும் அருகிலிருப்பதற்கு மனதுக்குகந்த ஓர் ஆளாக உன்னைச் செய்விக்கிற, சுகமாயிருக்கும் அந்த உணர்ச்சியை அனுபவித்து மகிழ நீ விரும்ப வேண்டும். அப்படியானால் தவறாமல் ஒழுங்காய் நீ கவனம் செலுத்துவதற்குகந்த சில காரியங்கள் யாவை?
சமநிறைவான உணவின் மதிப்பு
6நீ சாப்பிடும் உணவானது வெறும் சக்தியை அளிப்பதைப் பார்க்கிலும் மிக அதிகத்தைச் செய்கிறது. உன் உடல் தன்னை அழியாமல் காத்து வருவதற்குத் தேவைப்படும் கட்டும் பொருட்களையும் அது கொடுக்கிறது. சர்க்கரை, ரொட்டி, உருளைக்கிழங்குகள் ஆகியவற்றில்
காணப்படுகிற மாவுப் பொருள்கள் உனக்குச் சக்தியை அளிக்கின்றன. என்றாலும் இப்படிப்பட்டவற்றை மாத்திரமே நீ முற்றிலுமாய் சாப்பிட்டு வருவாயானால் என்ன நடக்கும்? மிட்டாயும், பானங்களும் மாத்திரமே சாப்பிட்டுவர முயலுவாயானால் என்ன நடக்கும்? உன் உடலில் தினந்தோறும் இழப்பு சரி செய்யப்பட வேண்டியதற்குத் தேவைப்படும் பொருட்கள் இல்லாததனால் அது சீர்கெடத் தொடங்கும்.7பால், பால்கட்டி, பயிறு வகைகள், கறி, மீன் முதலியவற்றில் காணப்படுகிற புரதப் பொருள்கள் உனக்குத் தவறாமல் தேவைப்படுகின்றன. இவை இல்லாமற்போனால் உன் தசைகள் சீக்கிரத்தில் மிருதுவாயும் உரமற்றவையாயும் ஆகிவிடுகின்றன, வளர்ச்சி குன்றிவிடுகிறது. உனக்குக் கனிப்பொருட்களும் தேவைப்படுகின்றன, இவை இல்லையென்றால் உன் பற்கள் சீக்கிரத்தில் கெட்டுப் போகும், உன்னுடைய எலும்புகள் பலவீனப்படும். கீரைகள் கனிப்பொருட்கள் நிறைந்தவையாய் இருக்கின்றன. வைட்டமின்களும் உனக்குத் தேவை, ஏனென்றால் இவை உடலின் இரசாயனத்தை ஒழுங்குபடுத்தி இயக்குகின்றன, மேலும் சில நோய்கள் ஏற்படாதபடி உடலைப் பாதுகாக்கின்றன. பழங்களிலும் தானியங்களிலும் வைட்டமின்கள் பெரும்பாலும் கிடைக்கின்றன. மேலும் உனக்கு மிகுதியான தண்ணீரும் தேவை, ஏனெனில் அது உன் இரத்தத்திற்கும் உன்னுடைய எல்லா இழைம நீர்களுக்கும் அடிப்படையாகிறது.
8நீ அறுபதோ எழுபதோ வயதாகையில்தானே அல்ல, பருவ வயதிலேயே நீ நல்ல அல்லது கெட்ட திட்ட உணவின் விளைவுகளை அறுக்கக்கூடும். உதாரணமாக, மாணாக்கர் முன்னேற்றுவிக்கப்பட்ட சத்துள்ள உணவு கொடுக்கப்பட்டபோது, அவர்களுடைய கற்கும் திறனுங்கூட முன்னேற்றமடைந்ததாக ஆராய்ச்சி காட்டியிருக்கிறது. சத்துக் குறைவான உணவு பொதுவாய்த் தரம்குறைந்த வேலையில்
விளைவடைகிறது, மேலும் ஆட்கள் எளிதாய் விபத்துக்குட்படும்படியும் செய்கிறது. உடலின் ஆரோக்கியமான தோற்றத்தையும் இயற்கை அழகையும் விரைவில் போக்குகிறது.சுத்தம் உடல் நலத்திற்கு உதவி செய்கிறது
9சுத்தமான வீட்டில் வாழ்வதால் நாம் மிக அதிக மகிழ்ச்சியடைவதைப் போலவே, நம்முடைய உடலைச் சுத்தமாய் வைத்து வருவோமானால் வாழ்க்கையில் நாம் அதிக மகிழ்ச்சியை அடைவோம். தவறாமல் ஒழுங்காய்க் குளித்து வருவதானது புத்துயிரளிப்பதாயும், ஆரோக்கியம் தருவதாயும் இருக்கிறது. காற்றிலும் நீ கையாளும் பொருட்களிலும் இருக்கிற கண்ணுக்கும் புலப்படாத மிக நுட்பமான கிருமிகளுடன் உன் உடல் தொடர்ந்து தொடுநிலையில் இருந்து வருகிறது. இவற்றில் சில நோய்களைக் கொண்டு வரக்கூடும். சோப்பு இவற்றைக் கொல்லும் நுண்மக் கொல்லியாகச் செயல்படுகிறது, தண்ணீர் இவற்றைக் கழுவி போக்குகிறது. முக்கியமாய் உன் கைகளுக்கு நீ அடிக்கடி கவனம் செலுத்த வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் அவற்றைக் கொண்டு உன் உணவைத் தொடுகிறாய் மேலும் மற்றவர்களை அல்லது அவர்கள் பயன்படுத்தும் பொருட்களையும் தொடக்கூடும்.
10உன்னைச் சுத்தமாய் வைத்துக் கொள்கையில் நீ நல்ல உணர்ச்சியடைவது மட்டுமல்லாமல், உன்னைப் பார்ப்பவர்கள் அல்லது உன் அருகில் வருகிறவர்களுக்கும் வாழ்க்கையை இன்பகரமாக்குகிறாய். அழுக்காயும் அலங்கோலமாயும் இருக்கிற ஒரு வீட்டை நீ பார்க்கிறாயென்றால் அதில் வாழும் மக்களைப் பற்றி எப்படிப்பட்ட அபிப்பிராயம் உனக்கு உண்டாகிறது? அவ்வாறே, உன் தோற்றத்தைக் கொண்டு நீ எப்படிப்பட்டவன் என்று ஆட்கள் தீர்மானிக்க முனைவார்கள். உன் முகத்தில், உன் காதுகளில், உன் கழுத்தில், உன் முடியில், உன் கைகளில் அல்லது உன்னுடைய நகங்களுக்குள் அழுக்கு இருப்பதானது மற்றவர்களுடைய நட்பையும் மதிப்பையும் அறிவதற்குத் தடங்கலாக இருக்கக்கூடும். மேலும், நீ உன்னைச் சுத்தமாய் வைத்துக் கொள்வாயானால் அதிக சுயமரியாதையுடையவனாய் இருப்பாய்.
11ஒருவன் மிகுந்த பயிற்சியோ வேலையோ செய்யாதிருக்கிறபோதிலுங்கூட உடல் வியர்க்கிறது. வியர்வை சேர்ந்துகொண்டு வந்தால், உன் உடல் வெறுப்புண்டாக்கும் துர்நாற்றம் வீசும்படி செய்யும். தவறாமல் ஒழுங்காய்க் குளிப்பதும், அக்குள்களையும் அப்படிப்பட்ட மடிப்பான மற்ற இடங்களையும் தேய்த்துக் கழுவுவதும் உன்னை அருகில் இருப்பதற்கு
அதிக விரும்பத்தக்க ஆளாக்குவதற்கு உதவி செய்கிறது. நல்ல சத்துள்ள உணவோடுகூட, சுத்தம் உனக்கு மேம்பட்ட தெளிவான தோற்றத்தைக் கொடுப்பதற்கும் உதவி செய்கிறது.12பற்கள் முக்கியமாய்க் கவனிக்கப்பட வேண்டிய பாகமாக இருக்கின்றன. உணவு துணுக்குகள் அவற்றிக்கு இடையில் அல்லது அவற்றின்மேல் தங்கக்கூடும். இந்தத் துணுக்குகள் வெளிவிடுகிற அமிலங்கள் உன் பற்களின் பளபளப்பு பற்சிப்பிப் பகுதியைத் தாக்குகின்றன. திரும்பத் திரும்ப அவ்வாறு தாக்கின பிறகு, சில சமயங்களில் சில மாதங்களுக்குள்ளேயே இந்தக் கடினமான இனாமல் துளைக்கப்பட்டு சொத்தையாகிறது. அல்லது ஈறுகளில் வீக்கம் உண்டாகலாம், இது, நாளடைவில் பற்களைத் தளர்ந்து போகச் செய்யக்கூடும். சில பற்களை நீ இழக்கக்கூடும். சொத்தையான அல்லது விழுந்துபோன பற்கள் உன் தோற்றத்தைக் கெடுக்கக்கூடும்.
13சுத்தமான வாயுங்கூட துர்நாற்ற சுவாசமுண்டாவதற்கு எதிரான ஒரு பாதுகாப்பாய் இருக்கிறது. தினந்தோறும் தண்ணீர் பல குவளைகள் குடிப்பது உதவி செய்கிறது. உன் வாய் ஒரு வீட்டின் கதவைப்போல் அல்லது வாசலைப்போல் ஒருவாறு இருக்கிறது என்பதை நினைவில் வை. வீட்டின் தோற்றமும் வாசல் வழியாய் வந்துகொண்டிருக்கிற நாற்றமும் நல்லதாக இல்லையென்றால் ஆட்கள் தூர விலகிப்போகவே விரும்புவார்கள்.
14(இந்தக் காரியத்தில் சிலர் செய்வதுபோல்) மட்டுக்குமீறி செல்லாமல், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் சுத்தமாயிருக்கும்படி ஊக்கப்படுத்தி கற்பிக்கிறது. சுத்தமான கைகளும் குளித்து சுத்தமாயிருக்கிற உடலும் ஒருவன் ஆவிக்குரிய பிரகாரமாய்ச் சுத்தமாயும் தூய்மையாயும் இருப்பதைக் குறிப்பிட அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும் அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு அறிவுரை கூறினான்: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) நாம் உள்ளே, நம்முடைய இருதயத்திலும் மனதிலும் சுத்தமுள்ளவர்களாக இருக்கிறோமா? அப்படியானால் வெளியேயுங்கூட சுத்தமாயிருக்கும்படி நாம் பிரயாசப்பட வேண்டுமல்லவா?
தக்க ஓய்வுக்கான தேவை
15ஒவ்வொரு நாளும் உடலின் இலட்சக்கணக்கான உயிரணுக்கள் நொறுங்கிப்போகின்றன, இவை புதுப்பிக்கப்பட வேண்டும். உன்னுடைய
உடல் சில கழிவுப் பொருட்களை உண்டுபண்ணுகின்றன, இவை தசைகளில் ஒன்று சேருகின்றன, முக்கியமாய் வேலை, உடல் பயிற்சி ஆகியவற்றின் விளைவாக இவ்வாறு நடக்கிறது. இந்தக் கழிவுப் பொருள்களே உனக்கு ஒரு களைப்பு உணர்ச்சியைக் கொடுக்கின்றன. இவ்வாறு ஒன்று சேர்க்கப்பட்ட கழிவு பொருள்களை உடல் தன்னிலிருந்து வெளியேற்றவேண்டுமானால், மேலும் உன் உடலை நல்ல கட்டமைப்பிலும் இழப்பு சரிசெய்து நல்ல நிலையிலும் வைப்பதற்குப் புதிய உயிரணுக்களை அது உண்டுபண்ணக்கூடியதாய் இருக்கும்படி உன் உடலுக்குப் போதிய ஓய்வு இருக்கவேண்டும். உன்னுடைய மத்திய நரம்பு மண்டலத்திற்கும் உன்னுடைய மூளைக்குங்கூட ஓய்வு தேவை. நீ தூங்கினால் தவிர இவை தளர்ந்து ஓய்விலிருக்க முடியாது.16இளைஞனாய் இருப்பதனால், குறைந்த தூக்கத்தோடு நீ சமாளித்துக் கொள்ளலாம் என்று உணரக்கூடும். ஆனால் இளமையின் விறுவிறுப்பும் ஊக்கமும் ஏமாற்றுதலாய் இருக்கக்கூடும். போதிய ஓய்வில்லாமையால் ஏற்பட்டு மோசமாகிக் கொண்டுவரும் கவலைக்கிடமான சேதத்தின் அறிகுறிகளை அவை மறைத்துப் போடக்கூடும். உண்மையில், ஓர் இளைஞனின் வளர்ந்துகொண்டு வரும் உடலுக்கு, முழு வளர்ச்சியடைந்தவரின் உடலுக்குத் தேவைப்படுகிறதைப் பார்க்கிலும் குறைந்த தூக்கமல்ல அதிக தூக்கம் அவசியமாய் இருக்கிறது. தூக்கக் குறைவானது யோசிக்கும் ஆற்றலைக் குறைக்கிறது, மறதியை அதிகரிக்கிறது. ஒருவனுடைய விழிப்புத் தன்மையையும் உடலின் தன்னியல் இயக்கங்களையும் மந்தமாக்குகிறது. அது உன்னை விறைப்பாகவும், அமைதியற்றவனாகவும், எளிதில் கோபங்கொள்ளுகிறவனாகவும் கூடி வாழ்வதற்குக் கடினமாயிருப்பவனாகவும் செய்விக்கக்கூடும். இது முக்கியமாய் நெருக்கடியும் அவசர வற்புறுத்தலுமான நிலைமைகளின் கீழ் உண்மையாயிருக்கிறது.
17ஆகையால், உன் உடலுக்குத் தேவையான ஓய்வைக் கொடுப்பதன் மூலம் அதோடு ஒத்துழை. ஒரு குறிப்பிட்ட மணி நேரத்தில் படுக்கையில் இருக்கும்படி உன் பெற்றோர் உனக்கு கட்டளையிடுகையில்,
அவர்களுடைய வழிநடத்துதலின் சரியான தன்மையை நீ மதித்துணர வேண்டும். ஒவ்வொரு இரவிலும் போதிய அளவு தூக்கம் உனக்கு இருப்பதன் மூலம், உன் வேலையின் தன்மையும் வேகமும் முன்னேற்றமடையும். வாழ்க்கை மேலும் மகிழ்வளிப்பதாய் இருப்பதாக நீ காண்பாய், குறைகூற உனக்கு அதிகம் இராது.18நம்முடைய உடலில் நாம் அனுபவித்து மகிழுகிற உயிராகிய இந்தக் கொடையை நாம் நன்றியோடு மதிக்கிறோமென்றால், அப்பொழுது நாம் நம்முடைய உடலை நம்மை உண்டாக்கினவருக்கும் நாம் நித்திய ஜீவனை அடையக்கூடும் படியாகத் தம்முடைய உயிரைக் கொடுத்தவராகிய அவருடைய குமாரனுக்கும் கனமுண்டாகப் பயன்படுத்துவோம். வெறும் அசட்டுத்தனத்தாலோ மதிகேட்டினாலோ தன்னல காரணங்களினிமித்தமாகவோ நம்முடைய உடலை நாம் ஒருபோதும் தவறான முறையில் பயன்படுத்தவோ கவனியாமல் விடவோ கூடாது. இது நம்முடைய உயிருக்காக நாம் யாருக்குக் கடன்பட்டிருக்கிறோமோ அவருக்கு மரியாதைக் குறைவைக் காட்டுவதாயிருக்கும். இதற்கு மாறாக பைபிளின் பின்வரும் புத்திமதியை நாம் பின்பற்றுவோமாக: “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.” கடவுளுடைய அன்புள்ள ஏற்பாடுகளுக்கு நீ நன்றியோடு கூடிய மதித்துணர்வைக் காட்டுவதற்காக அவர் உனக்கு நிறைவாய்ப் பலனளித்து உன்னை ஆசீர்வதிப்பார்.—1 கொரிந்தியர் 10:31.
[கேள்விகள்]
1, 2. என்ன வகையில் மனித உடலானது உண்மையாய்த் தலைசிறந்த படைப்பாய் இருக்கிறது?
3-5. (எ) உன் உடலை நீ எவ்வாறு கவனித்துக் கொள்கிறாய் என்பதனால் யார் பாதிக்கப்படுகிறார்? (ரோமர் 14:7, 8) (பி) உடலைக் கவனிப்பதைக் குறித்ததில், ‘எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்’ என்பது எப்படி உண்மையாய் இருக்கிறது?
6-8. பின்வருபவற்றைக் குறித்ததில் சமநிறைவான உணவின் மதிப்பின்பேரில் சில விவரங்களைக் கொடுங்கள்: (எ) மாவுப் பொருள்கள், (பி) புரதப் பொருள்கள், (சி) கனிப் பொருள்கள், (டி) வைட்டமின்கள்.
9-14. (எ) தவறாமல் ஒழுங்காகக் குளித்துவருவது உன் சுகத்தை எவ்வாறு பாதுகாக்கக்கூடும்? (பி) உன்னைச் சுத்தமாய் வைத்துக் கொள்ளும் உன்னுடைய பழக்கங்கள் மற்றவர்கள் உன்னைக் கருதும் முறையை எப்படிப் பாதிக்கும்? ஏன்? (சி) ஒழுங்காயும் கவனமாயும் பற்களைச் சுத்தப்படுத்துதல் ஏன் முக்கியமானது? (டி) சுத்தத்தைப் பற்றி பைபிளில்தானேயும் என்ன சொல்லுகிறது? (யாத்திராகமம் 30:17-21; மத்தேயு 6:17, 18)
15-18. (எ) மனித உடலுக்கு ஏன் ஓய்வும் தூக்கமும் தேவையாக இருக்கிறது? (பி) உனக்கு சக்தி இருக்கிறது, ஆகையால் ஓய்வில்லாமல் சமாளித்துக் கொள்ளலாம் என்று நீ உணர்ந்தாலுங்கூட, நீ போதிய ஓய்வெடுக்காவிட்டால் எப்படிப் பாதிக்கப்படுவாய்? (சி) உடல் சம்பந்தமாய் நம்மை நாம் கவனித்துக் கொள்வது எப்படிக் கடவுளுக்கு மரியாதை காட்டுவதாய் இருக்கிறது?
[பக்கம் 46-ன் படம்]
சமநிறைவான உணவை அருந்துதல் நல் ஆரோக்கியத்திற்கு அவசியம்
[பக்கம் 49-ன் படம்]
உடலிலிருந்து கழிவுகளை நீக்கிட உங்கள் உடலுக்குப் போதுமான இளைப்பாறுதல் அவசியம்