Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உன் உடையும் தோற்றமும் –உன்னைப் பற்றி பேசுகின்றன

உன் உடையும் தோற்றமும் –உன்னைப் பற்றி பேசுகின்றன

அதிகாரம் 7

உன் உடையும் தோற்றமும் –உன்னைப் பற்றி பேசுகின்றன

தளிர்ப்புப் பருவகால பூக்கள் நிரம்பிய நிலப்பரப்பில் அவற்றின் அழகிய இன்பந்தரும் பற்பல நிற வகைகளை நீ எப்பொழுதாவது பார்த்து மனமகிழ்ந்ததுண்டா? அல்லது வெப்பமண்டல மீன்களுக்குள் காணப்படும் அழகிய படிப்படியாய் மாறும் நிறத் திண்மைகளைக் கண்டு அதிசயித்திருக்கிறாயா? இவற்றை நாம் காண்பதானது, நம்முடைய சிருஷ்டிகர் பற்பல வகையையும் அழகையும் விரும்புகிறார் என்று நமக்கு உறுதியைத் தருகின்றன. பார்ப்பதற்கு எல்லாம் மந்தமாயும், மங்கலாயும், சலிப்பூட்டுவதாயும் இருக்கும்படி அவர் விரும்புகிறதில்லை. உலகம் முழுவதிலும் இருக்கிற மக்களுக்குள் காணப்படுகிற மிகப் பற்பல வகையான நடை உடைப் பாங்குகளைக் காண்பது ஆ, எவ்வளவு உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது! ஆனால் வெளியில் நீ தோன்றுகிற முறை உள்ளே நீ எப்படிப்பட்டவனாய் இருக்கிறாய் என்பதைப் பற்றி எவ்வளவாய்ச் சொல்லுகிறதென்பதை சற்று நின்று எண்ணிப் பார்த்திருக்கிறாயா?

2நீ மிகச் சிறியவனாய் இருக்கையில் உன் உடை அநேகமாய் நீ எவ்வகையானவன்[ள்] என்பதைப் பற்றி அதிகம் சொல்லியிருக்காது. உன் பெற்றோர் உனக்காக உன் உடைகளைத் தெரிந்தெடுத்து உன் தலை முடியைச் சீவிவிட்டார்கள். ஆனால் நீ பெரியவனாக[ளாக] வளர்ந்து வருகையில் உன் உடையைத் தெரிந்தெடுப்பது உன் தலை முடியைச் சீவுவது முதலியவற்றைப் பற்றியதில் உனக்குப் படிப்படியாய் அதிக சுயாதீனத்தை அனுமதித்து வந்தார்கள். இப்பொழுது நீயே சொந்தமாய்த் தெரிந்து கொள்ளும் சுயாதீனம் வந்தது. மேலும் மேலுமாக உன் தோற்றமானது உள்ளே, உன்னுடைய சொந்த சுபாவத்தில் நீ எப்படிப்பட்டவனாய் இருக்கிறாய் என்பதைப் பிரதிபலித்தது. உன்னுடைய உடைகளும் தோற்றமும் உன்னைப் பற்றி என்ன சொல்லுகின்றன?

உன் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல்

3தங்களைப் பற்றி மிகப் பெருமையுள்ளவர்களாக இருக்கிறவர்கள் உடையைப்பற்றி மட்டுக்குமீறிய உணர்ச்சியுள்ளவர்களாக இருப்பதன் மூலம் அதை வெளிப்படுத்துகிறார்கள். தங்கள் உடைகளிலும் தோற்றங்களிலும் எப்பொழுதும் மற்ற எல்லாரையும்விட “மேம்பட்டுத் தோன்ற” அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பெருமை அல்லது தன்னலம் வெகு அலங்கோலமாய் இருப்பதன் மூலமும் வெளிப்படுத்தப்படக்கூடும். ஏன்? ஏனென்றால் அலங்கோலமாய் இருப்பவன் வெறுமென சோம்பேறியாய் இருக்கலாமென்றாலும், தன் தோற்றம் மற்றவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதைக் குறித்ததில் தனக்கு “அக்கறையில்லை” என்ற தன்னல மனப்பான்மையுள்ளவனாகவும் இருக்கக்கூடும். மட்டுக்கு மீறிய இந்த இரண்டு நிலைகளுக்கு இடையில், தன்னைப்பற்றி மட்டுக்கு மீறி நினையாதவனும் மற்றவர்களைப்பற்றி அக்கறையுள்ளவனுமாக இருக்கிறான். இவனுடைய தோற்றம் விரும்பத்தக்க நல்ல பாங்குடையதாயும் அடக்கமுள்ளதாயும் இருப்பதன்மூலம் அதை வெளிப்படுத்தும்.

4சில இளைஞர்கள், பழங்கால நடைபாணியில் தோன்றாதபடி, எல்லாப் புத்தம் புதிய நடைபாணிகளோடும் தாங்களும் விடாமல் மாறிச் சென்றுகொண்டிருக்க வேண்டுமென்று உணருகின்றனர். என்றாலும், “தீவிர பழமைப் பற்றாளனாக” அல்லது மிக “நவ நாகரிகமானவனாக” இருக்கும் இந்த உச்சநிலைகளுக்கிடையில் மத்திபநிலை ஒன்று இருக்கிறது. இந்த மத்திப நிலையில் நிலைத்திருப்பாயானால், அப்பொழுது நீ எப்பொழுதும் நன்றாய் உடுத்தியிருப்பவனாக இருப்பாய், கம்பி இழுக்கப்படும் ஒவ்வொரு சமயத்திலும் மாறி மாறி ஆடிக்கொண்டிருக்கும் பொம்மையைப்போல் ஒவ்வொரு புதுப் புதுபாணிக்கும் மாற்றத்திற்கும் இசைவாக உன்னை மாற்றிக் கொண்டிருக்கமாட்டாய்.

5உன்னை நீயே பின்வருமாறு கேட்டுக்கொள்: நான் வெகு நவ நாகரிக உணர்ச்சியுள்ளவனாய் இருப்பதிலிருந்து யார்தான் பயனடைகின்றனர்? வியாபார உலகமே அடிப்படையாய் புது உடைபாணிகளை ஏற்படுத்தி ஊக்குவிக்கிறது. அவர்களுடைய ஒரே பெரிய அக்கறையானது: பணத்தைச் சம்பாதிக்கவேண்டும் என்பதே. நீ எப்பொழுதும் அவர்களுடைய கைகளால் ஆட்டி வைக்கப்பட்ட உன்னை விட்டுக் கொடுப்பாயானால் அவர்களே இலாபமடையும்படி செய்கிறாய், ஆனால் நீயோ உண்மையாய் எந்த முறையிலும் பயனடைய மாட்டாய்.

6அலங்கோலமாய் இருப்பது உனக்கு அதிகப் பண செலவை உண்டுபண்ணாதிருப்பதாகத் தோன்றலாம், என்றாலும் மற்ற வழிகளில் அது உனக்கு அதிக இழப்பை உண்டுபண்ணக்கூடும். ஒரு வேலையை இழக்கும்படி அல்லது மற்றவர்களின் மரியாதையை இழக்கும்படி அது செய்யக்கூடும். ஒருவனுடைய உடை அதிக விலையுயர்ந்ததாக இராதபோதிலும் அவன் அவற்றை ஒழுங்காகவும் சுத்தமாயும் வைத்திருந்தால் இது அவனுக்குச் சுய மரியாதை இருக்கிறதென்று காட்டுகிறது. மற்ற ஆட்கள் அவனை அதிகமாய் மதித்து அவனில் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பார்கள்.

7வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் பின்பற்றுவதற்கான ஒரு நல்ல விதி பைபிளில் ரோமர் 15:2-ல் காணப்படுகிறது: “நம்மில் ஒவ்வொருவனும் அயலானுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.” (தி.மொ.) நாம் நம்மைப் பார்ப்பதைவிட, மற்றவர்களே நம்மை அதிகமாய்ப் பார்க்கிறார்கள். அப்படியானால், அவர்கள் பார்ப்பதற்கு இன்பமாய்க் காணும் எதையாவது அவர்களுக்குக் கொடுப்பதற்கு நாம் முயல வேண்டாமா? தங்களுடைய சொந்தத் தோற்றத்தின் காரணமாக அவர்கள் சங்கட உணர்ச்சியடையும்படி செய்யும் ஒன்றை அல்ல, அவர்கள் உணர்ச்சிகளைப் பற்றி நாம் அக்கறையுள்ளவர்களாயிருக்கிறோம் என்று காட்டுகிற ஒன்றையேயாகும்.

உடையால் அடையாளங் கண்டுகொள்ளப்படுதல்

8நீ உடுத்தும் விதம் மற்றொரு முறையிலும் உன்னைப் பற்றிச் சொல்லுகிறது. அது உன்னை ஒரு குறிப்பிட்ட வகுப்பாரோடு அடையாளப்படுத்திக் காட்டக்கூடும். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாக பைபிள் எழுதப்பட்டு வரும்பொழுதுங்கூட இது உண்மையாயிருந்தது. உதாரணமாக, இரண்டு இராஜாக்களின் புத்தகத்தில், செய்தி கொண்டு செல்பவர்கள் அரசனாகிய அகசியாவிடம் திரும்பி வந்து தாங்கள் ஒரு மனிதனைச் சந்தித்ததாகவும் அவன் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தியை கொடுத்ததாகவும் கூறினதாக நாம் வாசிக்கிறோம். அரசன் அவர்களை நோக்கி: ‘அந்த மனிதன் பார்ப்பதற்கு எப்படியிருந்தான்?’ என்று கேட்டான். அவர்கள் அவனுடைய உடைகளை விவரித்தபோது, அரசன் உடனடியாக “எலியாதான்” என்று சொன்னான். அவனுக்கு எப்படித் தெரியும்? எப்படியென்றால் எலியா ஒரு தீர்க்கதரிசிக்குரிய தனி மாதிரியான உடையை உடுத்தியிருந்தான்.—2 இராஜாக்கள் 1:2, 5-8.

9ஒரு தீர்க்கதரிசியாக அடையாளங் கண்டுகொள்ளப்படுவது மதிப்புக்குரிய காரியமாய் இருந்தது. என்றாலும் ஒருவனுடைய உடை ஒருவனை மதிப்புக் கேடானதோடும் இணைத்துக்காட்டக்கூடுமென்று பைபிளிலுள்ள மற்றொரு உதாரணம் காட்டுகிறது. யூதாவின் மருமகளாகிய தாமார், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றும்படி, தன்னை விதவையாக அடையாளங் கண்டுகொள்ளச் செய்யும் உடைகளைக் கழற்றிவிட்டு ஒரு சால்வையை மூடிக்கொண்டு முக்காடிட்டு பாதையருகே உட்கார்ந்தாள். யூதா அவ்வழியே வந்தபோது, “அவள் [முக்காடிட்டு] தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்தான்,” என்று பதிவு சொல்லுகிறது. அவளுடைய உடையானது அக்காலத்து விபசாரியின் தோற்றத்தை அவளுக்குக் கொடுத்தது.—ஆதியாகமம் 38:13-15.

10அக்காலத்தில் இருந்ததைப் போலவே இன்றும் நாம் உடை உடுத்தும் முறை நம்மை சில குறிப்பிட்ட வகையான ஆட்களோடு இணைக்கக்கூடும்; நாம் ஒருவேளை அவர்கள் பழக்கச் செயல்களைச் செய்யமாட்டோம் அல்லது அவர்கள் நம்புவதை நம்பமாட்டோம், என்றாலும் அவ்வாறு அவர்களோடு இணைக்கப்படுவோம். அவ்வாறு உடை உடுத்தும் வகுப்பான ஆட்களோடு நாம் இணங்கிச் செல்வதாக மக்கள் எண்ணிக்கொள்கின்றனர். அவர்களை நாம் குறைகூற முடியுமா?

11உடை பாங்கு, காவல் துறையாளர், தீயணைப்பவர், தாதிப் பெண்கள் ஆகியோரை வேறுபடுத்திக் காட்டுவது மட்டுமல்லாமல், இழிவான தொழில்புரிகிற ஆட்களையுங்கூட வேறுபடுத்திக் காட்டுகிறது. இன்று விபசாரிகள், ஏறக்குறைய மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கானானில் இப்படிப்பட்டவர்கள் செய்ததைப்போல் சால்வைகளையோ முக்காடுகளையோ போட்டுக்கொள்ளுகிறதில்லை. என்றாலும், இப்பொழுது அவர்கள் உடுத்திக்கொள்ளும், உடற்பாகங்களை வெளிப்படுத்திக் காட்டி காமத்தைத் தூண்டுகிற வகையான உடை அவர்கள் பழக்கமாய்ச் செய்துவரும் தொழில் இன்னதென்று இன்னும் அதிகத் தெளிவாய்க் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆண்களுக்குள், எதிர்ப்பு கலகத்தையும் தீவிர முன்னேற்ற அரசியல் நடவடிக்கையையும் ஆதரிக்கிற ஆட்கள் தனிப்பட்ட பாங்கான உடைகளை அணிந்து வந்திருக்கின்றனர். அவ்வாறே ஒத்த பாலினத்தவர் புணர்ச்சிக்காரரைக் குறித்ததிலும் இருக்கிறது. இவ்வகையார் எவருடனாவது நாம் இணைத்து நோக்கப்பட விரும்புகிறோமா? அவர்களைப் போல் நாம் உடை உடுத்தி அதன் விளைவாகப் பிரச்னைகள் உண்டாகிறதென்றால், உதாரணமாக, வேலை தேட அல்லது கிறிஸ்தவ சபையில் சில சிலாக்கியங்களுக்குத் தகுதிபெற முயலுகையில் ஏற்படுவதுபோல் பிரச்னைகள் உண்டாகிறதென்றால் நாம் ஆச்சரியப்பட வேண்டுமா?

முடி அலங்கார முறைகளை எது தீர்மானிக்க வேண்டும்

12உன் முடியை ஒழுங்குபடுத்துவதற்குப் பல வகைகள் இருக்கின்றன. நூற்றாண்டுகளினூடே முடி அலங்கார வகைகள் நாட்டுக்கு நாடும் காலத்துக்குக் காலமும் வேறுபட்டு வந்திருக்கின்றன. நீ எந்த வகையான முடி அலங்காரத்தைத் தெரிந்து கொள்ளுகிறாய் என்பது ஏதாவது வேறுபாட்டை உண்டு பண்ணுகிறதா? ஆம், உண்டுபண்ணுகிறது. மனித பெருமையானது சில சமயங்களில் வெகுவாய் மட்டுக்கு மீறிய முடி அலங்கார வகைகளை உண்டுபண்ணியிருக்கிறது. இந்தக் காரணத்தினிமித்தமாகவே அப்போஸ்தலராகிய பவுலும் பேதுருவும் முடி அலங்கார வகைகளில் அளவு கடந்த அல்லது மட்டுக்குமீறிய முக்கியத்துவத்தை வைக்கவேண்டாமென்று கிறிஸ்தவ பெண்களுக்கு அறிவுரை கொடுப்பதை அவசியமாகக் கண்டார்கள். “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல் . . . ” என்பதாக பேதுரு எழுதினான்.—1 பேதுரு 3:3.

13என்றபோதிலும், சமீப ஆண்டுகளில் வாலிபப் பையன்களின் முடி அலங்காரப் பாங்குகள்—முக்கியமாய் மிக நீண்ட முடியும் நீண்ட பக்கக் கிருதாவும்—தனிப்பட்ட கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. இருந்தபோதிலும், பைபிள் காலங்களிலிருந்த ஆண்கள், இன்று பெரும்பான்மையான நாடுகளில் வழக்கமாயிருப்பதைப் பார்க்கிலும் அதிக நீளமான முடியைப் பொதுவாய் வைத்திருக்கவில்லையா? சந்தேகமில்லாமல் வைத்திருந்தார்கள். என்றாலும் வேறு ஒன்றும் இதைப்போலவே நிச்சயமாய் இருக்கிறது. அது என்ன? ஆண்களின் முடியானது பெண்களுடையதைப் பார்க்கிலும் போதியளவு குட்டையாக இருந்தது என்பதே. இதனிமித்தமாகவே அப்போஸ்தலனாகிய பவுல், கிரீஸிலுள்ள கொரிந்திய சபைக்குப் பின்வருமாறு எழுதக் கூடியவனாய் இருந்தான்: “புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது, அவனுக்குக் கனவீனமென்று, ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையென்றும் இயற்கையாகவே உங்களுக்குத் தெரியவில்லையா?” (1 கொரிந்தியர் 11:14, 15, தி.மொ.) இதை “இயற்கை” நமக்கு எப்படிக் கற்பிக்கிறது?

14பவுல் யாருக்கு எழுதிக் கொண்டிருந்தானோ அந்த அலையலையாய் வளைந்துள்ள முடியைக்கொண்ட மக்களாகிய செமிட்டிக் இனத்தை சார்ந்தவர்கள், ஐரோப்பியர் ஆகியோருக்குள், பொதுவாய், ஆண்களின் முடியும் பெண்களின் முடியும் இயற்கையாய் வளரும் நீளத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருக்கிறது. பெரும்பாலரின் காரியத்தில், இந்த நீளமானது இயற்கையாய் ஆண்களுக்குக் குறைவாய் இருக்கிறது. அதே சமயத்தில், ஆண்கள் தங்கள் முடியை மிதமான நீளத்திற்குப் பெண்கள் முடியைவிட குட்டையாய், வெட்டிக் கொள்வது “இயற்கை”யான காரியம்—தகுந்த சரியான காரியம்—என்று மக்கள் பொதுவாய் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். ஒரு மனிதனோ, அல்லது பையனோ, தான் ஒரு பெண்ணைப்போல தோன்றும் வண்ணமாய்த் தன் தலைமுடியை வைத்திருப்பது இயற்கையான காரியமல்ல. அதற்கு மாறாக, இது, ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி பெருகிக் கொண்டிருக்கிற காலத்தின் (மேலும் நாடுகளின்) குறியடையாளமாய் இருக்கிறது. ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி “சுபாவத்துக்கு விரோதமானது” என்றும் கடவுளுடைய பார்வையில் தகாததும் அருவருப்பானதுமாய் இருக்கிறது என்றும் பைபிள் காட்டுகிறது.—ரோமர் 1:26, 27.

15இது நம்மைக் கடுமையாய்க் கட்டுப்படுத்துகிறதா? இல்லை, எப்படியெனில், உடைகளைக் குறித்ததில் எப்படி இருக்கிறதோ அப்படியே முடி அலங்கார பாங்குகளைக் குறித்ததிலும் அடக்கமற்று அல்லது இயற்கைக்கு மாறாய் இராமல் விரும்பத்தக்கக் கவர்ச்சிகரமாய் ஒருவன் தன் முடியை ஒழுங்குபடுத்துவதற்கு மிகப் பரந்த பற்பல வழிவகைகள் இருக்கின்றன. கடவுளுடைய பார்வையில் சரியாயிருப்பதன் வரையறைகளைத் தாண்டிப் போகாமல் இன்னும் புதுக்கிளர்ச்சியூட்டுகிற பற்பல வகைகள் இருக்கக்கூடும்.

சிங்காரிப்புப் பொருட்களைப் பற்றியதென்ன?

16பூர்வகாலங்கள் முதற்கொண்டு மக்கள் சிங்காரிப்புப் பொருட்களைப் பயன்படுத்தி வந்திருப்பதாக பைபிள் காட்டுகிறது. மக்கள் உடைகளை, வெறுமென உடலை மூடிக்கொள்வதற்காக மட்டுமல்ல, கவர்ச்சிகரமான தோற்றத்தை உண்டுபண்ணுவதற்காகவும் உடுத்துகிறார்கள் என்று நாம் தெரிந்திருக்கிறோம். தாங்கள் முன்னிலையில் இருப்பதை இன்னும் அதிக இன்பமாக்க, பூர்வ எபிரெயர் அடிக்கடி நறுமணத் தைலங்களைப் பயன்படுத்தினர். மேலும் சில சிங்காரிப்புப் பொருட்களையும்கூட அவர்கள் பயன்படுத்தினார்கள் என்பதற்கு அத்தாட்சி இருக்கிறது, முக்கியமாய் தோல் வறட்சியைப் போக்கவும் தங்கள் தோற்றத்தை அபிவிருத்தி செய்யவும் வாசனை தைலங்களைப் பயன்படுத்தினார்கள்.

17அப்படியானால், இன்று, கடவுளுடைய அங்கீகாரத்தைக் கொண்டு வருகிறதையே செய்ய விரும்புகிற இளம் பெண்களுக்கு எது வழிகாட்டியாக இருக்க வேண்டும்? எல்லாக் காரியங்களையும் “நாணமும் நிதான [ஆரோக்கியகரமான] புத்தியுமுடையவர்களாய்ச்” செய்யும்படியும், “சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியின் அழியாத அழகாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்கள் [முக்கிய] அலங்காரமாகட்டும்; அதுவே கடவுளின் பார்வையில் விலையுயர்ந்தது,” என்றும் கூறப்பட்டிருக்கிற இந்த நல்ல அறிவுரையை அவர்கள் பின்பற்ற வேண்டும்.—1 தீமோத்தேயு 2:9, 10; 1 பேதுரு 3:3, 4.

18இந்த (முகத்தோற்றம் முதலியவற்றைச் சிங்காரிக்கும்) சிங்காரிப்புப் பொருட்கள் அநேகமாய் நன்மை செய்வதைவிட தீமையே அதிகம் செய்யக்கூடும் என்பதை இளம் பெண்கள் தெரிந்து கொள்வது நிச்சயமாகவே நல்லது. அவற்றால் அவர்கள் ஒரு நல்ல முகத் தோற்றத்தைக் கெடுத்துக்கொள்ளக்கூடும், அல்லது இருக்கிறதை இன்னும் மோசமாக்கிக்கொள்ளக்கூடும். இதுமட்டுமல்லாமல், பெரும்பாலும் இந்தச் சிங்காரிப்புப் பொருட்கள் இளமையின் புதுமலர்ச்சி வாய்ந்த அழகை மறைத்துப் போடுகின்றன. இளமையின் இந்தத் தோற்றமே சிங்காரிப்புப் பொருட்கள் உண்டுபண்ணும் செயற்கை பாதிப்பைப் பார்க்கிலும் உண்மையில் மிக அதிக அழகுள்ளது.

19இளம் பெண்கள் சிங்காரிப்புப் பொருட்களை மட்டுக்கு மீறி பயன்படுத்துவது அவர்களுடைய குறைகளையே அதிகப்படியாய் எடுத்துக்காட்ட செய்கிறது. அதற்கும் மோசமாக, அது ஒருவரின் தனி சுபாவத்துக்குரிய எந்த அழகும் (இதுவே நல்ல தோற்றத்தைப் பார்க்கிலும் உண்மையில் அதிகக் கவர்ச்சிகரமாயும் நீடித்திருப்பதாயும் இருக்கிறது) வெளிப்பட்டுக் காணப்படுவதை அல்லது கவனிக்கப்படுவதை இது தடுத்து வைக்கக்கூடும். சிங்காரப் பொருட்களின் மித மீறிய உபயோகமானது நீ எப்படிப்பட்டவள் என்பதை மற்றவர்களின் பார்வையில் தகாதவண்ணமாய்த் தவறாக எடுத்துக்காட்டக்கூடும், மேலும் காலப்போக்கில், நீ இவ்வாறு தோற்றமளிக்கிற கீழ்த்தரமான சாயலில் உன் தனி சுபாவத்தையே அது உருவாக்கியமைக்கவுங்கூடும்.

சரியான வழிகாட்டும் நியமங்களைப் பின்பற்றுதல்

20இப்படிப்பட்ட காரியங்களின் பேரில் திட்டவட்டமான கட்டளைகள் கடவுளுடைய வார்த்தையில் இல்லை, ஆனால், இவற்றிற்குப் பதிலாக, சிறந்த வழிகாட்டும் நியமங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இளைஞர் சமநிலையுடன் நோக்கும் ஒரு மனப்பான்மையைத் தேட வேண்டும், இதைச் செய்ய பைபிள் அவர்களுக்கு உதவி செய்யும்.

21வழிகாட்டும் கூடுதலான துணை நியமங்களை வைத்திட உங்கள் பெற்றோருக்கு இயற்கையான உரிமை இருக்கிறது. நீ வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு பொருத்தமற்ற வர்ணங்கள் அலங்கோலமாய்ப் பூசப்பட்டதாக இருந்தால் அந்த வீட்டின் தலைவருக்கு, அல்லது அவருடைய மனைவிக்கு ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா என்பதாக மக்கள் எண்ணுவார்கள். அல்லது, வீடு கவனியாமல் விடப்பட்டு பாழடைந்த தோற்றத்தைக் கொடுக்குமானால், அந்த வீட்டின் சொந்தக்காரரை மக்கள் மதிக்க மாட்டார்கள். அந்த வீட்டைப் பார்க்கிலும் மிக அதிகமாய் நீ உன் பெற்றோரைப் பிரதிநிதித்துவம் செய்கிறாய். நீ அவர்களுடைய பெயரைத் தரித்திருக்கிறாய், மேலும் நீ செய்வதும் சொல்வதும் அவர்கள் உனக்குக் கொடுக்கிற பயிற்றுவிப்பு எப்படிப்பட்டது, அவர்கள் எவ்வகையான ஆட்கள் என்பதைப் பிரதிபலிப்பதைப் போலவே உன் தோற்றமுங்கூட செய்கிறது. அதிக முக்கியமாய், நீ கடவுளுடைய ஊழியரில் ஒருவனாக உரிமை பாராட்டுகிறாயென்றால் நீ அவரையும் பிரதிநிதித்துவம் செய்கிறாய். உன்னுடைய உரிமைப் பாராட்டலுக்குப் பொருத்தமாய் உன் தோற்றம் இருக்கிறதா?

22“நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால் இவைகளைச் செய்வீர்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள் [சந்தோஷமுள்ளவர்களாயிருப்பீர்கள், NW]” என்ற இயேசுவின் வார்த்தைகளை எண்ணிப் பாருங்கள். (யோவான் 13:17) பைபிள் சொல்லும் அறிவுரையின் கருத்தை நீ தெளிவாக உணரக்கூடியவனாய் இருக்கிறாயா? பைபிளின் அறிவுரையை உன் வாழ்க்கையில் செயல்பட வைப்பதன்மூலம் உனக்கு மெய்யான உள்நோக்கம் தனி சுபாவ பலமும் இருக்கிறதென்று நீ காட்டக்கூடும். அப்பொழுது கடவுளுடைய பார்வையிலும் அவருடைய குமாரனின் பார்வையிலும், கடவுளை நேசித்து சேவிக்கிற எல்லாரின் பார்வையிலும் பிரியமுள்ளவனாய் இருக்கிறாய் என்று அறியும் சந்தோஷம் உனக்கு இருக்கும்.

[கேள்விகள்]

1-4. நாம் உடை உடுத்தும் முறை ஏன் உள்ளத்தில் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைப் பற்றி ஏதோ சொல்லுகிறது? உதாரணங்களைக் கொடுங்கள்.

5-7. (எ) நவநாகரிக புத்தம் புதிய மாதிரிகளோடு தன் உடையும் மாறிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒருவன் முயலுகையில் உண்மையில் பயனடைகிறவர்கள் யார்? (பி) ஒருவனுக்கு அதிகப் பணம் இல்லாவிட்டாலுங்கூட அவனுக்குச் சுயமரியாதை இருக்கிறதென்று அவனுடைய உடை எப்படிக் காட்டக்கூடும்? (சி) பிலிப்பியர் 2:3, 4-லும் ரோமர் 15:2-லும் காணப்படுகிற இந்த நியமங்களை நாம் உடை உடுத்தும் விதத்திற்கு எப்படிப் பொருத்திப் பிரயோகிக்கலாம்?

8-11. (எ) எப்படி பற்பல வகுப்பார் அல்லது வகையார் அவர்களுடைய உடையால் அடையாளங் கண்டு கொள்ளப்படுகின்றனர்? (பி) ஆகவே, ஒருவன் உடை உடுத்தும் முறையிலிருந்து மக்கள் என்ன முடிவுக்கு வரக்கூடும்? இது எப்படி பிரச்னைகளைக் கொண்டுவரலாம்?

12-15. (எ) என்ன வகையான முடி அலங்காரங்கள் இன்று பேரளவாய்க் கவனத்தைக் கவருவதாக நீ உணருகிறாய்? ஏன்? (பி) 1 பேதுரு 3:3-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையின் கருத்தென்ன? (சி) 1 கொரிந்தியர் 11:14, 15-ன் அர்த்தமென்ன? இதை நீ தற்போதைய போக்குகளுக்கு எப்படிப் பொருத்திப் பிரயோகிப்பாய்? (டி) பெண்கள் தங்கள் முடியை அலங்கரிக்கும் முறையை ஆண்கள் பின்பற்றுவார்களானால் இது மற்றவர்களுக்கு எதைக் குறிப்பாய் உணர்த்துவதாக இருக்கும்?

16-19. (எ) சிங்காரிப்புப் பொருட்களை உபயோகிப்பதைப் பற்றி நீ எப்படி உணருகிறாய்? (பி) சில சமயங்களில் அவை என்ன கெட்ட விளைவுகளை உண்டுபண்ணுகின்றன? (சி) இந்தக் காரியத்தின் பேரில் பைபிள் நியமங்கள் எப்படிச் சமநிலையான வழிநடத்துதலைத் தருகின்றன?

20-22. (எ) உடை, முடி, அலங்காரம் ஆகியவற்றின் பேரில் கட்டளைகளுக்குப் பதிலாக எவற்றை நாம் பைபிளில் காண்கிறோம்? ஆகவே இவற்றைப் பொருத்திப் பிரயோகிக்க நம் பங்கில் என்ன தேவைப்படுகிறது? (நீதிமொழிகள் 2:10, 11) (பி) தங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டும் கூடுதலான துணை நியமங்களை வைக்க பெற்றோருக்கு ஏன் உரிமை இருக்கிறது?

[பக்கம் 53-ன் சிறு குறிப்பு]

உங்கள் உடை உங்களைக் குறித்து தெரிவிப்பது என்ன?