எப்படிப்பட்ட நண்பர்கள் உனக்கு வேண்டும்?
அதிகாரம் 8
எப்படிப்பட்ட நண்பர்கள் உனக்கு வேண்டும்?
உண்மையான ஒரு நண்பனைக் கொண்டிருப்பது வாழ்க்கையில் பேரளவான மகிழ்ச்சியைக்கூட்டுகிறது. “தன்னந்தனியாய்” இருப்பவர்களும் மற்றவர்களைவிட்டு தூர ஒதுங்கிக் கொள்ளுகிறவர்களுமான ஆட்கள் உண்மையாய்ச் சந்தோஷமாக இருப்பது வெகு அரிதே. உன்னுடைய சந்தோஷத்திற்கு இவ்வளவு அதிகத்தைக் கூட்டுகிற இந்த நட்பைப் பற்றியது என்ன?
2ஒரு நண்பனோடு எதையாவது செய்வது அந்தக் குறிப்பிட்ட அனுபவத்தின் மகிழ்ச்சியை வெகுவாய்ப் பெருக்குவதாகத் தோன்றுகிறது. ஒரு சமயத்தில் இயேசு, காணாமற்போன தன் செம்மறியாட்டைக் கண்டுபிடித்த ஒரு மேய்ப்பனைப் பற்றியும், காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்த ஒரு பெண்ணைப் பற்றியும் சொன்னார். இவர்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைத்து, “என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள்,” என்று சொன்னார்கள். (லூக்கா 15:6, 9) ஆம், இயல்பாகவே, உன் தோழரோடு நல்ல காரியங்களைப் பகிர்ந்து கொள்ள நீ விரும்புகிறாய், இதன் பலனாக உன்னுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாவதாகத் தோன்றுகிறது. இதை நீ அனுபவித்திருக்கிறாய் அல்லவா?
3மறுபட்சத்தில், காரியங்கள் சரியாக நடவாமல் நீ மனச்சோர்வுற்றவனாய் உணருகையில், ஒரு நல்ல நண்பனானவன் உன்னுடைய துயரத்தை ஆற்ற மிக அதிகம் செய்யக்கூடும். தொந்தரவு ஏற்படப் போவதாக இருக்கையில் நண்பர்கள் உண்மையான உதவியாய் இருக்கக்கூடும். அபாயத்தைப் பற்றி உன்னை எச்சரித்து அதிலிருந்து தப்பிக்கொள்ள அவர்கள் உனக்கு உதவி செய்யக்கூடும், மேலும் வாழ்க்கைப் போக்கு கடினமாய் இருக்கையில் அவர்கள் உன்னை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கக்கூடும். நீதிமொழிகள் 17:17 பின்வருமாறு சொல்வதை நீ அநேகமாய் ஒப்புக்கொள்வாய்: “உண்மையான ஒரு தோழன் எல்லாச் சமயத்திலும் நேசிக்கிறான், துயரமுண்டாயிருக்கையில் உதவுவதற்குப் பிறந்திருக்கிற ஒரு சகோதரனாய் இருக்கிறான்.”—NW.
4உண்மையான நண்பர்களை உறுதியாய்க் குறித்துக் காட்டுகிற ஒரு தன்மையை வேத எழுத்துக்கள் அழுத்திக் காட்டுகின்றன: அதுவே
உண்மை தவறாமை. நண்பனாய் இருப்பது வெறுமென சிநேகப்பான்மையாய் நடித்துக் காட்டுவதைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறது. உண்மையான நண்பனானவன் உனக்கும் உன்னுடைய மிகச் சிறந்த அக்கறைகளுக்கும் உண்மை தவறாதவனாக இருக்கிறான். உன்னுடைய நண்பர்கள் இவ்வாறு இருக்கிறார்களா?5இன்று மக்கள் பெரும்பான்மையர் தங்கள் அயலானுக்கு உதவி செய்வதைப் பார்க்கிலும் அவனைவிட மேம்பட வேண்டும் என்பதிலேயே அதிக அக்கறை கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றனர். “நண்பர்கள்” என்று அழைக்கப்படுகிறவர்களுக்குள்ளும் உண்மை தவறாமைக்குரிய ஆவியல்ல, போட்டி மனப்பான்மையே இருந்து வருகிறது. பல நண்பர்களின் காரியத்தில், நட்பு கொண்டிருக்கிற இருவரில் எவராவது அந்த மற்றவரின் நன்மைக்காக ஏதோ மாற்றத்தைச் செய்ய அல்லது ஏதோ தன்னல அக்கறையை விட்டுவிட கேட்கப்படாத வரையிலேயே அவர்கள் நட்பு நீடித்திருக்கிறது. இந்தப் போட்டி மனப்பான்மையுள்ள உலகத்தில் உண்மையான நண்பரைக் கண்டுபிடிப்பது எளிதல்ல.
6உண்மையில் பயனுள்ள நண்பர்கள் சிலரைக் கொண்டிருந்த ஒரு சிறந்த பைபிள் முன்மாதிரியை தாவீதில் காணலாம். ஓர் இராட்சத சத்துரு போர்வீரனாகிய கோலியாத்தைத் தான் கொன்ற பின்பு, தாவீது எப்படி அரசனாகிய சவுலின் குமாரனான யோனத்தானை ஒரு நல்ல நண்பனாக அடைந்தான் என்பதைப்பற்றி நீ கேள்விப்பட்டிருக்கலாம். யோனத்தான், பொறாமையுள்ளவனாக இருந்திருந்தால், தாவீதை, இஸ்ரவேலின் சிங்காசனத்திற்குத் தன்னுடைய போட்டியாளனாக எண்ணி பகைத்திருக்கலாம். அதற்கு மாறாக, தாவீதின்மேல் கடவுளுடைய தயவு இருந்ததென்று யோனத்தான் மதித்துணர்ந்தான், மேலும் “யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.” (1 சாமுவேல் 18:1) தாவீதின் தைரியத்தினிமித்தமாகவும் யெகோவா தேவனில் அவனுக்கிருந்த விசுவாசத்தினிமித்தமாகவும் யோனத்தான் அவனை நேசித்தான். யோனத்தான் தானேயும் கடவுளிடம் அதைப் போன்ற பக்தியை உடையவனாக இருந்திருக்கவேண்டும். ஒருவருக்கொருவர் நட்பு கொள்வதற்கு இதைப் பார்க்கிலும் மேம்பட்ட அடிப்படை இருக்க முடியாது.
7பின்னால் தாவீதுக்கிருந்த மற்றொரு நண்பனாகிய ஊசாயைப் பற்றி நீ மேலுமாக வாசிக்கலாம், இவன் தாவீதின் அரசாட்சியின்போது அவனுடைய நெருங்கிய தோழரில் ஒருவனாக இருந்தான். தாவீதின் குமாரரில் ஒருவனாகிய அப்சலோமின் ராஜதுரோக சதியைக் குலைத்துப் 2 சாமுவேல் 15:10-37; 16:16-17:16 ஆகியவற்றைப் பாருங்கள்.
போட ஊசாய் தன் உயிரை அபாயத்துக்குள்ளாக்கத் துணிந்த முறை, நாம் வாசிப்பதற்கு உணர்ச்சியார்வம் ஊட்டுகிற ஒரு விவரமாய் இருக்கிறது.—8ஒருவேளை உனக்கு இவ்வகையான நண்பர்கள் இருக்கலாம். இல்லையென்றால் இப்படிப்பட்ட நண்பர்களை நீ எப்படி அடையக்கூடும்? இதற்கு உண்மையான முயற்சி எடுக்க வேண்டியதாயிருந்திருக்கும், என்றாலும் அது நிச்சயமாகவே பயனுள்ளது.
தகுதியான நண்பர்களைத் தேடுதல்
9‘ஒரு நண்பனை அடைவதற்கு ஒரே வழி ஒரு நண்பனாக இருப்பதே,’ என்ற கூற்றில் அதிக உண்மை இருக்கிறது. சிலர் தாங்கள் வியந்து பாராட்டுகிற மற்ற இளைஞர் செய்யும் காரியங்களில் தாங்கள் ‘சேர்க்காமல் விடப்படுகையில்’ கூர்ந்த வருத்த உணர்ச்சியை அடையக்கூடும். அல்லது அவர்களுக்கு நண்பர்கள் இருந்திருக்கக்கூடும், என்றாலும் அவர்களை இழந்துவிட்டிருக்கலாம். இதைப்பற்றி அவர்கள் உள்ளத்தில் வருத்த உணர்ச்சியடைகிறார்கள். நட்பு இரு திக்கிலும் செல்லக்கூடிய தெருவைப் போல் இருக்கிறது என்பதை அவர்கள் ஒருவேளை உணராதிருக்கலாம்.
10ஆகையால் நம்மை நாமே பின்வருமாறு கேட்டுக் கொள்வது நல்லது: மற்றவர்களிடம் சிநேகப்பான்மையாய் இருக்க நான் என்ன செய்கிறேன்? மற்றவர்களில் நான் எவ்வளவு உண்மையான தன்னலமற்ற அக்கறை எடுக்கிறேன், அவர்களுடைய சந்தோஷத்துக்கும் நன்மைக்கும் என் பங்காக நான் என்ன செய்கிறேன்? என்னை உண்மையில் நண்பனாகக் கொண்டிருக்க மற்றவர்கள் உணரச் செய்வதற்கேதுவான என்ன நற்பண்புகளை நான் வளர்த்து வருகிறேன்?
11நீ அடையக்கூடிய வகையான நண்பர்கள், நீ அவர்களைக் கண்டடைய முயலும்முறையின் பேரில் பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. சிலர் மற்றவர்களுக்காகப் பணத்தைச் செலவிடுவதன்மூலம், அல்லது இசை சம்பந்தப்பட்ட கருவிகள், இசைத்தட்டுகள் விளையாட்டு கருவிகள் நீதிமொழிகள் 14:20; 19:6.
போன்ற பொருள் உடைமைகளை அனுபவித்து மகிழுவதில் தங்களுடன் பங்கு கொள்ளும்படி மற்றவர்களை அழைப்பதன் மூலம் நண்பர்களை அடைய தேடுகின்றனர். இது சிலரை உன்னிடமாக இழுக்கக்கூடுமென்பது மெய்யே. “ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு,” என்றும் “கொடை கொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்,” என்றும் நீதிமொழிகள் சொல்லுகின்றன. ஆம், ஒருவன் தன் பணத்தைத் தாராளமாய்ச் செலவிடுகையில் பலர் சிநேகப்பான்மையுடன் இருப்பதாக நடிக்கிறார்கள். பணம் இல்லாமற் போய்விடுகையிலோ “சிநேகிதர்களுங்”கூட இல்லாமற்போய்விடுகிறார்கள்.—12தகுதியான நண்பர்களை, பொருளுடைமைகளைப் பயன்படுத்தியோ, முகப் புகழ்ச்சி செய்தவன்மூலமோ, அந்த மற்றவர் விரும்புகிறதற்கெல்லாம் எப்பொழுதும் விட்டுக் கொடுப்பதன் மூலமோ “வாங்க” முடியாது. விலை எவ்வளவு அதிகமாய் இருந்தாலும் சரி, வாங்கக்கூடிய எந்த நண்பனும் அந்த விலைக்கு ஈடானவனாய் இரான். உண்மையான நண்பர்கள், நீ உண்மையில் எப்படிப்பட்டவனாய் இருக்கிறாய் என்பதாலும், உன்னுடைய நற்பண்புகளாலுமே கவரப்படுகிறார்கள். உன்னிடமிருந்து தாங்கள் என்ன பலன் அடையலாம் என்பதால் அல்ல.
13ஆகவே, ஆட்களிடம் சிநேகப்பான்மையான மனநிலையுடையவனாய் இருப்பது நல்லதேயென்றாலும், உனக்கு உண்மையான நண்பர்கள் வேண்டுமென்றால் உன்னுடைய நம்பிக்கைக்குரிய நெருங்கிய தோழர்களாக இருக்க விரும்புகிறவர்களை நீ கருத்தாய்த் தேர்ந்தெடுக்கவேண்டும். தாவீது அவ்வாறு செய்தான். அவன் சொல்லுகிறதாவது: “மேட்டிமைக் கண்ணனையும் கர்வநெஞ்சனையும் பொறுக்க மாட்டேன். தேசத்தில் உண்மையுள்ளவர்கள் என்னோடே வாசம் பண்ணும்படி என் கண்கள் அவர்கள் மேல் நோக்கமாயிருக்கும்; . . . கபடு செய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை.” (சங்கீதம் 101:5-7) நெருங்கிய தோழர்களைக் கவனமாய்த் தேர்ந்தெடுப்பது இன்று இளைஞருக்கு ஏன் அவ்வளவு முக்கியமாய் இருக்கிறது?
நல்ல தேர்ந்தெடுப்பு ஏன் இன்றியமையாதது
14உன்னைச் சுற்றியிருக்கிறவர்களோடு போதிய காலம் நீ கூட்டுறவு வைத்திருப்பாயானால் நீ அவர்களைப் போல் ஆகிவிடக்கூடும் என்பது சமுதாய உறவுகளின் அடிப்படை நியமமாய் இருக்கிறது. நண்பர்களை நீ தேர்ந்தெடுப்பது, நீ எவ்வகையான ஆளாக இருக்கிறாய் அல்லது பெரும்பாலும் ஆகப்போகிறாய் என்பதைப் பற்றி பேரளவாய்ச் சொல்லுகிறது. உன்னுடைய நெருங்கிய நண்பர்கள் உன் பேரில் “உருப்படுத்தும்” ஒரு பாதிப்பைக் கட்டாயமாகவே கொண்டிருப்பார்கள்.
15நேர்மையுள்ளவர்களும், நற்பண்புள்ளவர்களும், மற்றவர்கள் நலத்தைக் கருதுகிறவர்களும், கடவுளுக்கும் அவருடைய வார்த்தைக்கும் மரியாதை காட்டுகிறவர்களும் சரியானதைச் செய்ய தைரியமுள்ளவர்களுமாய் இருக்கிற இப்படிப்பட்ட நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாயா? அல்லது ‘மற்றவர்களை மிஞ்சிவிடக்’கூடியவர்களாய் இருப்பதாகத் தங்களைப் பற்றிப் பெருமை பாராட்டிக் கொள்ளுகிற ஆட்களாலும் உண்மையான தைரியத்துக்குப் பதிலாக வெறுமென வெளிப் பகட்டுக்காகக் குருட்டுத்தனமான துணிகரச் செயல்களில் ஈடுபடுகிறவர்களாலும் நீ கவரப்படுகிறாயா? ஒழுக்கக்கேடான நடத்தையில் பங்கு கொள்வதில், அல்லது திருடுவதில் அல்லது போதை மருந்துகளை உட்கொள்வதில் அவர்கள் தயங்காமல் துணிந்து ஈடுபட்டு பின்பு தாங்கள் ‘அகப்படாமல் தப்பிக் கொள்வதைப்’ பற்றிப் பெருமை பாராட்டிக் கொள்கிறார்களா? உனக்குத் தீங்கு செய்யக்கூடிய ஏதோ ஒன்றில் அவர்களோடுகூட நீயும் செல்லும்படி அவர்கள் தூண்டி உன்னைச் “சிக்க வைக்க” முயலுகிறார்களென்றால், அவர்களை உன்னுடைய “நண்பர்கள்” என்று சரியாய் அழைக்க முடியுமா?
16இப்படிப்பட்ட ஆட்களில் நெருங்கிய தோழனாய் நீ இருக்கிறாய் என்றால், ஒன்று நீ அவர்களோடுகூட சேர்ந்து செல்லவேண்டியதாய் இருக்கும், அல்லது அவர்களோடு ஒத்துப் போகாமல் இருக்கவேண்டியதாய் இருக்கும் என்பதை நினைவில் வை. அவர்களோடு ஒத்துப் போகாமல் இருப்பது அநேகமாய் அந்த “நட்பை” முடிவு செய்யும். ஏன்? ஏனென்றால் ஒத்துப் போகாமையை அவர்கள் குற்றங்கண்டு பிடிப்பதாக அல்லது கண்டனம் செய்வதாக நோக்குவார்கள். பொதுவாய் இப்படிப்பட்ட ஆட்கள் மற்றவர்களைப் பரியாசம் செய்ய விரும்புகிறார்கள், தாங்களோவென்றால் கண்டனத்தை ஏற்கக்கூடாதவர்களாக இருக்கிறார்கள். நீதிமொழிகள் 9:8 இவ்வகையான ஆளைப் பற்றிப் பேசி பின்பு, அதற்குமாறாக: “ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்,” என்று மேலும் சொல்லுகிறது. உண்மையான நண்பர்கள் ஒருவரோடொருவர் மனம் விட்டுப் பேசி, முன்னேற்றமடையவோ, தேவைப்படுகையில் தங்களைத் திருத்திக்கொள்ளவோ ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளலாம். திறந்த மனதுடன் நேர்முகமாய்ச் சிந்திக்கிறவனும், நேர்முகமாய்ப் பேசுகிறவனுமான, உண்மையில் நல்ல ஒரு தோழன் உனக்கு இருக்கையில், நீ விலைமதியா ஓர் அரும் செல்வதைத் உடையவனாய் இருக்கிறாய். உண்மையான நண்பர்கள் வைரக் கல்லைப்போல் இருக்கின்றனர்—அருமையாய் ஆனால் அரிதாய் இருக்கின்றனர். இதற்கு எதிர்மாறாக, போலி நண்பர்கள் சாதாரண கற்களைப் போல் இருக்கின்றனர்—எல்லா இடங்களிலும் காணப்படுகின்றனர்.
17இன்று பல இளைஞர்கள், தனிப்பட்ட சிருஷ்டிகரில் அல்லது அவருடைய வார்த்தையில் விசுவாசம் கொண்டிராததனால், “நாளைக்குச் சாகப்போகிறபடியால் புசிப்போம் குடிப்போம்,” என்ற இந்த மனப்பான்மையை ஏற்கின்றனர். வட்டரங்கில் மூர்க்க மிருகங்களோடு போராடும்படி தண்டனைத் தீர்ப்பு கொடுக்கப்பட்ட பூர்வ கால மனிதர் இவ்வாறே உணர்ந்தனர். யெகோவா தேவனிலும் தமக்கு உண்மையாயிருப்பவர்களுக்கு மறுபடியும் உயிரைக் கொடுப்பதற்குரிய அவருடைய வல்லமையிலும் அவர்களுக்கு விசுவாசம் இருக்கவில்லை. இளைஞனாக, உண்மையில் நீ இப்பொழுது தான் வாழ்க்கையை வெறுமென தொடங்குகிறாய். அப்படியானால் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட அந்தக் கைதிகள் வாழ்க்கையினிடமாகக் கொண்டிருந்த அந்த மனப்பான்மையையா நீ ஏற்க விரும்புகிறாய்? வெறுமென ‘இன்றைக்காகவே வாழும்’ இந்த நோக்கு நிலையை விவரித்தப் பின்பு, அப்போஸ்தலனாகிய பவுல் மேலும் தொடர்ந்து: “மோசம்போகாதிருங்கள். துர்ச் சகவாசம் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்,” என்று கூறினான். (1 கொரிந்தியர் 15:32, 33, தி.மொ.) இதன் உண்மையைப் பற்றிச் சிந்தித்துப் பார். தற்காலத்தைப் பற்றி மாத்திரமே சிந்திக்கிற ஆட்களுடன் நெருங்கிய தோழமையை நீ தேடுகிறாய் என்றால், அவர்கள் உன் நம்பிக்கைகளையும் நிலையான ஒரு சந்தோஷ எதிர்காலத்தை அடைவதை நோக்கிய உன் முயற்சிகளையும் கெடுத்துப் போடுவார்களென்று நீ நிச்சயமாயிருக்கலாம்.
18சில சமயங்களில், ஓர் இளைஞன் அல்லது இளம் பெண் சந்தேகத்திற்கேதுவான வழிகளில் நடக்கிறவனும் நற்பெயர் இல்லாதவனுமான மற்றொருவனோடு சகவாசம் வைத்துக் கொள்வது அந்த ஆளுக்கு உதவி செய்யும்படிக்கே என்று சொல்லலாம். மற்றவர்களுக்கு உதவி செய்ய விரும்புவது சிறந்த காரியமே. ஆனால் அவர்களுடைய தன்னல இன்பங்களில் அவர்களோடுகூட நீயும் செல்வாயானால், அவர்களுக்கு நீ எவ்வளவு உதவி செய்கிறாய்? உதாரணமாக, சேற்றுக் குட்டையில்
ஒரு பிள்ளை விளையாடிக் கொண்டிருப்பதை நீ கண்டாயென்றால் ஏதாவது சோப்புடன் அந்தக் குட்டைக்குள் சென்று அதற்குள்ளேயே அந்தப் பிள்ளையைக் கழுவி சுத்தம் செய்ய முயலுவாயா? அப்படிச் செய்தால் உன்னைத்தான் நீ அழுக்காக்கிக் கொள்வாய். அருகிலிருந்து அந்தப் பிள்ளையைச் சுத்தம் செய்வதைப் பற்றி ஏதாவது செய்ய நீ நம்பிக்கைக் கொள்வதற்கு முன்னால், முதலாவதாக அந்தப் பிள்ளையை அந்தச் சேற்றுக் குட்டையிலிருந்து வெளியே வரும்படி உற்சாகப்படுத்த நீ முயலவேண்டும்.19ஒருவனை அவனுடைய கெட்ட பழக்கங்களுடன் தன் நெருங்கிய கூட்டாளியாக ஏற்பது, உண்மையில், அந்த ஆளின்பேரிலும் (அதோடுகூட உன்பேரிலும்) கெட்ட பாதிப்பையே உண்டாக்கும். ஏன்? ஏனென்றால் அவனைத் தாங்கும் உன்னுடைய பக்க ஆதரவில் தான் எப்பொழுதும் சார்ந்திருக்கலாம் என்ற உணர்ச்சியுடன், மாறாமல் அதே வழியில் தொடர்ந்து சென்றுகொண்டிருக்க இது அவனை ஊக்குவிக்கக்கூடும். இதற்குப் பதிலாக நல்ல ஆலோசனையை அந்த ஆளுக்குக் குறிப்பிட்டுக் காட்டுவதன் மூலமும் இந்த ஆலோசனை விளக்கிக் காட்டப்படுகிற இடங்களுக்கு உன்னுடன் வரும்படி அவனை அழைப்பதன் மூலமும் அவனுக்கு நீ உண்மையில் உதவி செய்யக்கூடிய நேரங்களுக்கு மாத்திரமே உன் கூட்டுறவை மட்டுப்படுத்திக் கொள்வது மிக அதிக உதவியாயிருக்கும் அல்லவா?
மிக அதிக முக்கியமான நண்பர்கள்
20எல்லாவற்றிற்கும் மேலாக, சந்தேகத்திற்கேதுவான பழக்கங்களையுடைய ஆட்களுடன் கூட்டுறவு வைத்துக் கொள்வது, கடவுளுடனும் அவருடைய குமாரனுடனும் உன்னுடைய உறவை எப்படிப் பாதிக்கக்கூடும் என்பதைக் குறித்து நீ வெகு கவலையுடன் சிந்திக்கவேண்டும். யாக்கோபு 4:4-ல் பின்வரும் இந்தச் சத்தியம் கூறப்பட்டிருக்கிறது: “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” இந்த நியமமானது முழுமையாக இந்த உலகத்துடன் வைத்துக்கொள்ளும் நம் உறவுக்குப் பொருந்துவதுபோலவே இந்த உலகத்திலுள்ள எந்த ஓர் ஆளுடனும் வைத்துக்கொள்ளும் நம்முடைய உறவுக்கும் பொருந்தக்கூடும். எவரிலாவது தகாத வழிகளை நாம் சம்மதிக்கிறோமென்றால் அல்லது உண்மையில் கடவுளுக்குப் பிரியமாய் நடக்க விரும்புகிற இளைஞருடைய தோழமைக்கு மேலாக இப்படிப்பட்டவனுடைய தோழமையையே விரும்புகிறோமென்றால், அப்பொழுது நாம் நம்மை ‘உலகத்துக்குச் சிநேகிதராக’ காட்டுகிறோமல்லவா?
21இப்பொழுதும் எதிர்காலத்திலும் உனக்கு உண்மையில் சந்தோஷம் வேண்டுமென்றால், கட்டாயமாகவே கடவுளுடைய சிநேகத்தையும் அவருடைய குமாரனின் சிநேகத்தையும் மிக அருமையானதாக உயர்வாய் மதிக்கக் கற்றுக்கொள். நீதியை நேசிக்கிறவர்களுக்கு, உண்மையில் சந்தோஷமான நிலைமைகளில் நித்திய ஜீவனைக் கொண்டு வரும்படியான தம்முடைய மிக மேன்மையான நோக்கங்களைப் படிப்படியாய் நிறைவேற்றிக்கொண்டு வருவதன் மூலம், இப்பொழுது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடவுள் தம்முடைய நட்பை நிரூபித்துக் காட்டி வந்திருக்கிறார். கடவுளுடைய குமாரன், தாம் பூமியில் இருக்கையில், நேர்மையான இருதயமுள்ள ஆட்களுக்குத் தம்முடைய உண்மை தவறா அன்பை நிரூபித்துக் காட்டினார். அவர் தம்முடைய சீஷர்களிடம்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.”—22உன்னுடைய நண்பர்களாகப் பாசாங்கு செய்கிற பலரைப்போல் இராமல், யெகோவா தேவனும் அவருடைய குமாரனும், நீ தொந்தரவுகளுக்குள் சிக்கிக்கொள்வதன் காரணமாக உன்மேல் நம்பிக்கை இழந்து உன்னைவிட்டு விலகிக்கொள்ளவோ அல்லது உன்னைக் கைவிடவோ மாட்டார்கள். அவர்களில் நீ நம்பிக்கை வைப்பாயானால், நீ தொந்தரவுக்குள்ளாகும் சமயங்களில் அவர்களுடைய உதவியும் ஆதரவும் உனக்கு உண்மையில் இருப்பதை நீ காண்பாய்.
23இந்தப் பெரிய நண்பர்களை நீ உண்மையில் நன்றியோடு மதித்துணர விரும்புகிறாயா? அப்படியானால், “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல,” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினபோது குறிப்பிட்ட இந்தக் கடமையை ஏற்று அதன்படி வாழ விரும்புகிற உண்மை தவறாதத் தோழர்களையே தேடுவதன் மூலம் இதைக் காட்டு. (1 யோவான் 5:3) கஷ்டத்திலும் நஷ்டத்திலும், இப்படிப்பட்ட தோழர்கள் தகுந்த வகையான நண்பர்களாக நிரூபிப்பார்கள்.
[கேள்விகள்]
1-5. (எ) நட்பு உன் வாழ்க்கையின் மகிழ்ச்சியை மேலும் எப்படிக் கூட்டக்கூடும்? (பி) உண்மையான ஒரு நண்பனை நீ எப்படி விவரிப்பாய்? (நீதிமொழிகள் 18:24)
6-8. என்ன வழிகளில் யோனத்தானும் ஊசாயும் தங்களைத் தாவீதின் நண்பர்களாக நிரூபித்தார்கள்?
9-13. (எ) தகுதியான நண்பர்களை ஒருவன் எப்படி அடையக்கூடும்? பொருளுடைமைகளைக் கொடுப்பதன் மூலம் அல்லது பகிர்ந்துகொள்வதன் மூலம் நண்பர்களை அடைய முயலுவது ஏன் விவேகமல்ல? (பி) சங்கீதம் 101:5-7-ல் காட்டியிருக்கிறபடி எவ்வகையான ஆட்களை நெருங்கிய தோழர்களாகக் கொள்ளாமல் தவிர்த்திருப்பது நல்லது?
14-16. (எ) ஒருவனுடைய நண்பர்கள் அவனை எவ்வாறு பாதிக்கக்கூடும்? உதாரணத்தைக் கொண்டு விளக்கு. (பி) நீ அவனோடு ஒத்துப்போவதில்லை என்று சொல்வாயானால் அந்த நட்பு எப்படிப் பாதிக்கப்படும்?
17-19. (எ) கடவுளிலோ பைபிளிலோ உண்மையில் நம்பிக்கைக் கொண்டிராத எவராவது ஒருவரின் நெருங்கிய தோழனாக நீ இருந்தாயானால் எப்படிப் பாதிக்கப்படுவாய்? (நீதிமொழிகள் 11:9; ஆதியாகமம் 34:1, 2) (பி) இப்படிப்பட்ட ஆளுக்கு நீ உண்மையில் உதவி செய்ய விரும்புகிறாயென்றால் அவ்வாறு செய்வதற்கு மிகச் சிறந்த வழி என்ன?
20. எப்படிப்பட்ட நண்பர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது எப்படி நம்மை உண்மையில் கடவுளுடைய சத்துருக்களாக்கக்கூடும்?
21-23. (எ) கடவுளையும் கிறிஸ்துவையும் உண்மையில் தன்னுடைய நண்பர்களாகக் கொண்டிருக்கிற ஒருவனுக்கு என்ன நன்மைகள் உண்டாகின்றன? (ரோமர் 8:35, 38, 39) (பி) நாம் உண்மையில் அவர்களை நண்பர்களாகக் கொண்டிருக்க விரும்புகிறோமென்று நாம் எப்படிக் காட்டக்கூடும்?
[பக்கம் 61-ன் சிறு குறிப்பு]
நண்பர்களைக் கொண்டிருக்க நீங்கள் ஒரு நண்பராய் இருக்கவேண்டும்.
[பக்கம் 63-ன் படம்]
உண்மையான நண்பர்கள் வைரங்களைப் போன்றவர்கள்