மதுபானங்களை நீ குடிக்க வேண்டுமா?
அதிகாரம் 14
மதுபானங்களை நீ குடிக்க வேண்டுமா?
மேலும் அதிகமாக இளைஞர் இன்று இந்தக் கேள்வியை எதிர்ப்படுகின்றனர். ஏன்? ஏனென்றால் மதுபானத்தின் உபயோகம் பருவவயதினரிடையே பெருகிக் கொண்டு வருகிறது, போதை மருந்துகளுக்குப் பதிலாக இதையே ஏற்க முற்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, நாம் சில நடைமுறை உண்மைகளை ஆராய்ந்து, நம்முடைய சொந்த நிலைவரமான நன்மைக்காக இந்தக் காரியத்தை நல்லறிவுடன் நோக்க அவை நமக்கு உதவி செய்யுமாவென்று பார்க்கலாம்.
2மதுபானங்கள்—விரிவாய்ப் பல வகைகள் இருக்கின்றன. பியர் போன்ற சில மதுபானங்களில் பெரிதும் குறைந்த அளவில் மது அடங்கியிருக்கிறது. வேறு சிலவற்றில் இன்னும் அதிகம் இருக்கிறது. மேசை திராட்ச மது வகைகள் பெரும்பான்மையானவற்றைக் குறித்ததில் அவ்வாறு இருக்கிறது. பின்னும் “டிஸ்டில்ட் ஸ்பிரிட்ஸ்” என்றழைக்கப்படுகிறவற்றில் மிக அதிக அளவில் மது அடங்கியிருக்கிறது. இது பிராந்தி வகைகள், விஸ்கி வகைகள், ஜின், வோட்கா, இன்னும் இவற்றைப் போன்ற மற்றவற்றில் இவ்வாறு இருக்கிறது.
3வெவ்வேறு இடங்களின் மனப்போக்குகளும் பழக்க வழக்கங்களும் வெகு விரிவாய் வேறுபடுகின்றன. சில நாடுகளில்—ஃபிரான்ஸ், இத்தாலி, ஸ்பெய்ன், கிரீஸ், மற்றும் சில நாடுகளில்—குடும்ப சாப்பாட்டு மேசையில் திராட்ச மது சாதாரண பானமாய் இருக்கிறது. நல்ல தண்ணீர் கிடைப்பது பிரச்னையாயிருப்பதன் காரணமாக அல்லது ஒருவேளை வெறும் பழக்கவழக்கத்தின் காரணமாக இது விருத்தியாகியிருக்கலாம். என்றாலும் இந்த நாடுகளிலுங்கூட மதுபானங்களின் உபயோகத்தைக் குறித்த மனப்பான்மை வேறுபடும். இது மட்டுமல்ல, மதுபானங்களைப் பயன்படுத்துவதன் விளைவுகளுங்கூட நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன. இப்படிப்பட்ட
மதுபானங்களினிடமாக ஒரு நியாய அறிவுள்ள நோக்கு நிலையை வளர்த்து வருவதில் நீ இதை மனதில் வைப்பது அவசியம்.4அப்படியானால், இந்தப் பற்பல வேறுபாடுகளைக் கருதுகையில், இந்தக் காரியத்தில் உன்னை வழி நடத்த நிலையான, முரண்பாடற்ற ஏதாவது தராதரம் இருக்கிறதா? ஆம், பைபிள் இதை அளிக்கிறது. இது சொல்வதைக் கவனிக்கையில், அது ஞானமும் சமநிலையுமான ஓர் அறிவுரை என்று நீ ஒப்புக் கொள்ளுகிறாயா இல்லையா என்று பார்.
சமநிலையான கருத்து
5பூர்வ காலங்கள் முதற்கொண்டு திராட்ச மதுபானமானது சாப்பாட்டுடன் பரிமாறும் சாதாரண பானமாக இருந்து வந்தது என்றும், ஆபிரகாம், ஈசாக்கு ஆகியவர்களாலும் மற்றும் பலராலும் பயன்படுத்தப்பட்டதென்றும் பைபிள் காட்டுகிறது. இயேசு, ஒரு கலியாண விருந்துக்கு திராட்ச மதுபானத்தை ஏற்பாடு செய்தார். அப்போஸ்தலனாகிய பவுல், “உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்ச ரசமும் [திராட்ச மதுபானமும், NW] கூட்டிக்கொள்,” என்று தீமோத்தேயுவுக்கு அறிவுரை கூறினார்.—1 தீமோத்தேயு 5:23.
6மனிதர் மகிழ்ச்சி அனுபவிப்பதற்குக் கடவுள் கொடுத்திருக்கிற ஏற்பாடுகளும் ஆசீர்வாதங்களுமானவற்றின் பட்டியலோடு திராட்ச மதுபானத்தையும் பைபிள் சரியாகவே சேர்த்திருக்கிறது. பைபிளிலுள்ள சங்கீதம் பின்வருமாறு சொல்லுகிறது: “அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார். மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்ச ரசத்தையும் . . . விளைவிக்கிறார்.” (சங்கீதம் 104:14, 15) மேலும் கடவுளுடைய ஜனங்கள், பியர், சாராயம் உட்பட மற்ற மதுபானங்களையுங்கூட சில சமயங்களில் பயன்படுத்தினர் என்றும் பைபிள் காட்டுகிறது.
7அப்படியானால், மதுபானங்களைக் குடிப்பதைக் குறித்ததில் உன் பங்கில் எச்சரிக்கைக்கு அவசியமில்லை என்று இது அர்த்தங் கொள்ளுகிறதா? இல்லவே இல்லை. ஏனெனில் ‘நாணயத்தின் மறுபுறத்தை’யுங்கூட கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. வாழ்க்கையில் பல காரியங்கள் தங்களில் தாமே தவறாக இல்லை, ஆனால் தவறான முறையில் பயன்படுத்தினால் அல்லது அதற்குரிய காலத்திற்கு முன்னதாகவே
பயன்படுத்தினால் ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும். கடவுள் மனிதருக்கு மக்களைப் பிறப்பிக்கும் வல்லமைகளைக் கொடுத்தார், ஆனால் இவை நன்மதிப்புள்ள திருமணத்தில் மாத்திரமே பயன்படுத்தப்படவேண்டும், இவற்றின் உபயோகம் ஒரு குடும்பத்தைக் கவனிப்பதற்குரிய கனத்த உத்தரவாதத்தைக் கொண்டுவரக்கூடும். நெருப்பு, நீராவி, மின்சக்தி, மற்றும் பற்பல கருவிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய வேலையில் மிகவும் உதவியாக இருக்கக்கூடும், என்றாலும், கவலையீனமாய் உபயோகப்படுத்தினால், அவை மிகத் தீங்கும் செய்யக்கூடும். மதுபானங்களைக் குடிப்பதுங்கூட, எச்சரிக்கை செலுத்தாவிட்டால் அபாயகரமான விளைவுகளை உண்டாக்கக்கூடும்.மதுவின் பாதிப்பு
8மனித உடலமைப்பின் இந்த மதுவின் பாதிப்புகளைக் கவனி. மற்றப் பொருட்களைப்போல் இதற்கு ஜீரணம் தேவைப்படுகிறதில்லை. பெரும்பாலும் இரத்தத்தில் உட்கிரகிப்பு சிறு குடலில் நடக்கிறபோதிலும், வயிற்றுக்குள் சென்றவுடனேயே இது உன் இரத்தத்துக்குள் உறிஞ்சுக் கொள்ளப்படத் தொடங்குகிறது. இது உன் மூளைக்கும், உன் ஈரலுக்கும் உடலின் மற்றப் பாகங்களுக்கும் விரைவில் கொண்டு செல்லப்படுகிறது. மதுபானத்தில் எரிபொருள் அடங்கியிருப்பதால், உன் உடல் அதை ஜீரணிக்கத் தொடங்குகிறது, அதாவது மதுவை, ஓர் இரசாயன அமைப்பாக மாற்றுகிறது, இவ்வாறு உன் உடல், செயல்முறையளவில் அந்த எரிபொருளை எரித்துப் போடக்கூடும்படியாகிறது. இந்த வேலையில் பெரும்பாகம் ஈரலால் செய்யப்படுகிறது. உன் நுரையீரலும் சிறுநீரகங்களும், சுவாசத்தின் மூலமும் மூத்திரத்தின் மூலமும் இந்த மதுவின் சிறிது பாகத்தை வெளியேற்றுவதனால், இந்தப் பாரத்தில் சிலவற்றை இலகுவாக்குகிறது.
9இரத்த ஓட்டத்தில் சேர்ந்தவுடன், இந்த மது ஒருவனை எப்படிப் பாதிக்கிறது? சிறிய அளவுகளில் உட்கொண்டிருந்தால், இலேசாக அமைவடக்கம், தளர்வு அல்லது சாந்தி உண்டாக்குகிறது. அதிக அளவுகளில் உட்கொண்டிருந்தால் மூளையின் ‘மின் தொடர்பிணைப்புக் கட்டுப்பாடுக்குத்’ தளர்ச்சி உண்டாக்கிவிடுகிறது. ஆகவே, சிலர் காரியத்திலாவது, இது ஒருவனை மட்டுக்குமீறி பேசிக் கொண்டிருப்பவனாக, மீறிய வண்ணமாய்ச் சுறுசுறுப்பாயும், வலியச் சண்டை செய்ய
முனைகிறவனாகவுங்கூட செய்விக்கிறது. சிலருக்கு இவ்வாறு ஏற்படுவதை நீ பார்த்திருக்கிறாயல்லவா?10இன்னும் அதிகப்படியாக மது அடர்த்தியாகச் சேர்கையில் மூளை கடுமையாய் ஊக்கம் அழிக்கப்பட்டதாகிறது. மத்திப நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. தன்னுடைய இயக்கங்களை ஒத்திசைய வைப்பதில் அவனுக்குக் கடினம் ஏற்பட தொடங்குகிறது. இதன் காரணமாகவே நடப்பதிலும், பார்ப்பதிலும், தெளிவாகப் பேசுவதிலும் தொந்தரவு ஏற்படுகிறது. மேலும் அவன் தன்னுடைய யோசனையில் குழப்பமடைகிறான். சாதாரணமாய் இருப்பதைவிட நன்றாய் தன் உணர்வுகள் உண்மையில் வேலை செய்கின்றன என்பதாக அந்த ஆள் கற்பனை செய்யும்படி செய்யும். இந்த மதுவின் தனி பாதிப்பால் இந்தப் பிரச்னை இன்னும் மிக மோசமாகும்படி செய்யப்படுகிறது. ஆகவே, பொதுவாய், தான் மட்டுக்குமீறி உட்கொண்டுவிட்டதாக உணரக்கூடாத நிலையில் இருக்கிறான். இந்த மயக்க வெறி நிலையை அவன் அடைந்துவிட்டானென்றால், நேரம் மாத்திரமே அவனுக்கு ஏதாவது தணிவைக் கொண்டு வரக்கூடும்.
11மதுபானங்களை மட்டுக்குமீறி குடிப்பதனால் வரும் அபாயங்களையும், உடல் மற்றும் மனநிலை குலைவுகளையும் பற்றிய வெகு திருத்தமான இந்தக் காட்சியைக் கவனியுங்கள். இது பைபிளில் நீதிமொழிகள் 23:29-35-ல் காணப்படுகிறது: “ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குத்தானே . . . உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்; நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப் போலும் [மூழ்கிப்போகிற ஆளைப்போல் மனக் குழப்பத்தையும் உதவியற்ற நிலையையும் அனுபவித்துக்கொண்டு] பாய் மரத்தட்டிலே இருக்கிறவனைப்போலும் இருப்பாய். [இங்கேயே கப்பல் முன்னும் பின்னும் சாயும் அந்த ஆட்டம் வெகுக் கடுமையாய் உணரப்படுகிறது]. ‘என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரனையில்லை என்பாய். [ஏனெனில் குடிவெறி மயக்கத்திலுள்ளவன், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிய முடியாமல் உணர்விழந்தவனாகவும், பெரும்பாலும் தன் குடி மயக்கம் தெளியும்வரையில் தன் காயங்களுக்குச் சொரணையற்றவனாகவும் இருக்கிறான்].’” இது வெகு இன்பமாக தொனிக்கிறதில்லையல்லவா? என்றாலும் ஒருவன் குடிவெறியடைகையில் இதுவே நடக்கிறது.
வளர்ந்து கொண்டே போகும் பிரச்னை
12இளைஞர், குடி மயக்க வெறிக்குள்ளாகும் அல்லது குடிவெறி பழக்கத்தினருமாகும் ஏதாவது உண்மையான அபாயத்தில் இருக்கின்றனரா? ஆம், இருக்கின்றனர். வாஷிங்டன் டி.சி.-யில் மதுபானத்தின் துர்ப்பிரயோகமும் வெறிய நச்சுத்தன்மையும் என்பதன் பேரில் தேசீய ஆய்வு அமைப்பின் இயக்குநர் டோனால்ட் ஜி. ஃபெல்ப்ஸ் பின்வருமாறு கூறினார்:
“நம்முடைய வளர் இளம் பருவத்தினரின் ஜனத்தொகையில் மதுபானங்களைத் துர்ப்பிரயோகம் செய்கிறவர்களின் [விகிதம்] ஏறக்குறைய முதியோர் ஜனத்தொகைக்குள் இருக்கிற அதே அளவில் இருக்கிறது. (பருவவயதினரை பேட்டிக் கண்ட ஒரு தேசீய சுற்றாராய்ச்சியில்) 13 வயது பையன்கள் எல்லாரிலும் பத்து சதவீதமானவர்கள் குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு முறையாவது குடி மயக்க வெறியில் இருக்கின்றனர். இது ஒரு வருடத்தில் 52 தடவைகளாகின்றன.”
13சிறு பிள்ளைகள் மதுபானம் குடிப்பதன் ஆபத்தான பிரச்னையைப் ஃபிரான்ஸ் நெடுங்காலமாக எதிர்ப்பட்டு வந்திருக்கிறது, சிலரில் வெகு பாலிய பருவத்திலேயே ஈரலரிப்பு நோயின் அறிகுறிகள் காணப்படுகின்றன. ஹங்கேரியில் (இது தற்கொலை விகிதங்கள் உச்ச அளவில் இருக்கிற நாடுகளில் ஒன்று), சமீப ஆண்டுகளில் முக்கிய மருத்துவ நிலையங்கள் வருடந்தோறும், குடி மயக்க வெறியில் இருக்கும் ஆயிரக்கணக்கான சிறு பிள்ளைகளைச் சிகிச்சை செய்து வந்திருக்கின்றன.
14இளைஞர் ஏன் இந்த நிலைமைக்குள்ளாகின்றனர்? பலருடைய காரியங்களில், அவர்கள் குடும்பத்தில் யாராவது ஒருவர் ஏற்கெனவே மட்டுக்குமீறிய குடிகாரராக இருக்கிறார். மற்றும் பலரின் காரியங்களில், மற்ற இளைஞர், குடிக்கத் தொடங்கும்படி அவர்களைத் தூண்டி செய்விக்கின்றனர். சில சமயங்களில் ஓர் இளைஞன், ஏதோ மதுபானத்தை மிகுந்த அளவில் குடிப்பதன்மூலம் தான் ‘ஆண்மையுள்ளவன் என்று நிரூபிக்கும்படி’ தன்னுடைய வயதிலிருக்கும் மற்றப் பையன்களால் வலியுறுத்தப்படுகிறான், அல்லது ஓர் இளம் பெண் தான் குடிக்காவிட்டால் கூட்டு வாழ்வுப் பண்பில்லாதவளாக உணரும்படி செய்யப்படுகிறாள்.
15ஆனால், உன்னை நீயே பின்வருமாறு கேட்டுக்கொள், மதுபானம் ஒன்றைக் குடிப்பதானது, நீ எவ்வகையான ஆள் என்பதைக் குறித்து ஏதேனும் உண்மையில் நிரூபிக்கிறதா? நிச்சயமாகவே இல்லை, ஏனென்றால் மிருகங்களையும்கூட, அதைக்குடித்து மயக்க வெறியடையும்படி
தூண்டி செய்விக்கலாம். குடிக்கும்படி உன்னை வற்புறுத்துகிறவர்கள் உண்மையில் விரும்புவது என்ன? உன்னுடைய நலனையே, உனக்கு நற்பலனை அளிக்கக்கூடிய ஒன்றையே தேடுகிறார்களா? அல்லது தாங்கள் தாமே இருக்கும் அதே வகுப்பில் உன்னையும் வைக்க அவர்கள் வெறுமென முயலுகிறார்களா? நீ உடலை அடக்கியாளும் ஆற்றலை இழந்து, முதிர்ச்சியுள்ள ஆண் அல்லது பெண்ணைப்போல் அல்ல, சரியாக நடக்க, பேச அல்லது தெளிவாகக் காண முடியாததும் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறதும் சொல்லுகிறதுமான ஒரு சிறிய பிள்ளையைப்போல் நடந்துகொள்ளும் இந்த “வேடிக்கையைப்” பார்க்கவேண்டும் என்பதற்காக இருக்கலாமா?16டாக்டர் ஜியோர்ஜியோ லோலி என்ற ஓர் அதிகாரி சொன்னதைக் கவனியுங்கள்:
“மித மீறிய குடிக்கு ஆட்படுகிறவன் உடல் சம்பந்தமாகவும் மன நிலையிலும் முதிர்ச்சியடைந்தவன் உலகத்திலிருந்து குழந்தைப் பருவத்துக்குப் பின்வாங்கிச் சென்று கொண்டிருக்கிறான். அவனுடைய மன உணர்வுக் காட்சிகளும் உடல் புலனுணர்வுகளும் வேறாகப் பிரித்தறிய முடியாதவையாகின்றன. குழந்தையைப்போல் ஒன்றும் இயலாதவனாகிறான், குழந்தைக்குத் தரவேண்டிய கவனிப்பு அவனுக்குத் தேவைப்படுகிறது.”
மேலுமாக, பாலுறவு ஒழுக்கக்கேட்டைத் தேடுகிற ஆட்களுங்கூட, ஒரு கூட்டாளியைக் குடிக்கும்படி தூண்டி ஊக்குவிக்கக்கூடும். இவ்வாறு அவன் அல்லது அவளுடைய தன்னடக்க ஆற்றல் படிப்படியாய்க் குறைய வைக்கப்பட செய்யலாம்.
17இந்த வற்புறுத்தல்களில் எதற்காவது இணங்கிப் போவதானது—ஒருவனுக்குப் பலம் இருக்கிறது அல்லது முதிர்ந்தவனாகிவிட்டான் என்று அல்ல—அவன் பலவீனனாகவும் ஒழுக்க தைரியமற்றவனாகவும் இருக்கிறான் என்றே நிச்சயமாகக் காட்டும். திராட்ச மதுபானம் “பரியாசஞ் செய்யும், [வெறியூட்டும், NW] மதுபானம் அமளி பண்ணும்; அதனால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல,” என்று நீதிமொழிகள் 20:1 நல்ல காரணத்துடன் எச்சரிக்கிறது. கால் உடைந்தால் எவ்வளவு வேதனையுண்டாகும் என்பதைத் தெரிந்துகொள்ள காலை உடைத்துப் பார்ப்பதற்கு அவசியமில்லாததைப் போலவே, குடிமயக்க வெறி எவ்வளவாய் விரும்பத் தகாததென்பதைத் தெரிந்துகொள்ள அதை நீ அனுபவித்துப் பார்ப்பதற்கு அவசியமில்லை.
18எச்சரிக்கை தேவைப்படுவது “பிரச்னைக்குரிய குடிகாரன்” அல்லது குடிவெறி பழக்கக்காரனாகும் அபாயத்திற்கு மாத்திரமே அல்ல. மதுபானத்தின் ஒரே கெட்ட அனுபவம் தானேயும் நிலையான கேட்டைக்கொண்டு வரக்கூடும். அது ஒருவேளை கடுமையான
மோட்டார் வண்டி விபத்தாக, உயிர் இழப்பதில் அல்லது கால், கை இழப்பதில் முடிவடைவதாக இருக்கலாம்—உனக்கே அவ்வாறு ஏற்படலாம் அல்லது குற்றமற்ற வேறொரு ஆளுக்கு ஏற்படலாம். அல்லது உன் வாழ்க்கை முழுவதிலும் மிகக் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடிய ஓயாத் தொல்லைக் கொடுக்கும் சிக்கல்களைக் கொண்டுவரக் கூடியதுமான ஓர் ஒழுக்கக்கேட்டு நடத்தையாக அது இருக்கலாம். அல்லது அது ஒருவேளை நீ நெடுங்காலம் வருந்தக்கூடிய ஏதோ ஒரு வன்முறை நடத்தையாக இருக்கலாம். அவசியமில்லாமல் அபாயத்தில் ஏன் துணிவு கொள்ளவேண்டும்?19ஐக்கிய மாகாணங்களின் பெருஞ்சாலைகளில் ஒவ்வொரு வருடமும் சாகும் ஏறக்குறை 50,000 ஆட்களில், பாதிக்கு மேற்பட்டவர்கள் மது சம்பந்தப்பட்ட காரணங்களால் உண்டான விபத்துகளில் சாகிறவர்களாக இருக்கும் இந்த உண்மையிலிருந்து இப்படிப்பட்ட கடுந்துயர் விளைவுகள் கூடியவையாக இருப்பது தெளிவாய் இருக்கிறது. மேலும், “80 சதவீதத்திற்கு மேற்பட்ட மனிதக் கொலைகளும், வலுச்சண்டைகளும் தாக்குதல்களும் குடிமயக்க வெறியிலிருக்கும் ஆட்களாலேயே நடப்பிக்கப்படுகின்றன,” என்று ஒரு நியு யார்க் டைம்ஸ் அறிக்கை சொல்லுகிறது.
காரியத்தை ஞானமாய் நிதானித்துப் பார்த்தல்
20இந்தக் காரியத்தை நிதானிக்கையில், மதுபானங்கள், உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத காற்று, உணவு, தண்ணீர் போன்றவற்றில் ஒன்றல்ல என்பதை நினைவுபடுத்திக்கொள். அவை இல்லாமல் நீ வாழலாம், பலர் இவ்வாறு செய்வதை மேம்பட்டதாகத் தெரிந்து கொள்கின்றனர். உயிரளிப்பவராகிய யெகோவா தேவனின் அங்கீகாரத்தை உடையவனாயிருக்க விரும்புகிறவன், அவரைத் லூக்கா 10:27) மதுபானத்தைத் துர்ப்பிரயோகம் செய்வதானது ஒருவனுடைய மனத்தெளிவையும் விழிப்பையும் உடல் பலத்தையும் கெடுப்பது மட்டுமல்லாமல், அவனுடைய இருதயத்தையுங்கூட பாதித்து, கெட்ட உள்நோக்கங்கள் தோன்றி வளருவதற்கு வழிநடத்தக்கூடும்.
தன் ‘முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் சேவிக்க வேண்டும்’ என்பதையுங்கூட நினைவில் வை. (21திராட்ச மதுபானம் போன்ற இப்படிப்பட்ட பானங்களின் மித உபயோகத்தைப் பற்றி பைபிள் பேசுகிறதென்பது உண்மையே. ஆனால் வாழ்க்கையின் மெய்மையிலிருந்து அல்லது சோர்வுணர்ச்சியிலிருந்து தப்பியோடும் வழியாக இப்படிப்பட்ட மதுபானங்களை ஒருவன் நாடுகிறானென்றால் என்ன ஆகும்? அல்லது பயத்தை மேற்கொள்வதற்காக ‘நரம்புகளுக்கு வலிமையூட்டுவதற்கு’ ஒரு சுபாவமருந்தாக உபயோகித்தால் எப்படி? அந்த நிவாரணம் நோயைப் பார்க்கிலும் மோசமாக இருப்பதாய் அவன் காண்பான். பணம் வெறும் போலி நாணயமாக நிரூபிக்கிறதென்றால் அதனால் பலன் என்ன? மகிழ்ச்சி அல்லது தைரிய உணர்ச்சி வெறும் கற்பனையாகத்தானே நிரூபிக்கிறதென்றால் என்ன பலன்?
22மன ஆரோக்கியத்தைப் பற்றிய தேசீய ஸ்தாபனத்தால் கொடுக்கப்பட்ட தெளிவுதரும் ஓர் அறிக்கையானது a பின்வரும் சூழ்நிலைமைகள் வியாபித்திருந்தால் மதுபான துர்ப்பிரயோகத்தின் அபாயங்கள் அநேகமாய் குறைந்த பட்சம் தோன்றாமலிருக்கும் என்று காட்டுகிறது: (1) ஒருவன் மதுபானங்களோடு முதன் முதல் அறிமுகமானது உறுதியான குடும்பம் அல்லது மதத் தொகுதிக்குள்ளாக இருந்து அங்கே குறைந்த மது அடங்கிய பானங்களே (மேசை திராட்ச மதுபானங்கள் அல்லது பியர்கள்) பொதுவாக பயன்படுத்தப்பட்டிருந்தால், மேலும் சாப்பாட்டின் வெறும் பாகமாகச் சாதாரணமாய்ச் சாப்பாட்டு நேரங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தால், (2) இந்தப் பானங்களின் உபயோகம் சிறந்த பண்பாகவோ அல்லது பாவமாகவோ நோக்கப்படாமல், குடிப்பது முதிர்ச்சியின் பாகமாக அல்லது ஒருவன் “உண்மையான ஆண்மை”யுள்ளவனாக இருப்பதாய்க் கருதப்படாதிருந்தால். (3) குடிக்கும்படி ஒருவரும் வற்புறுத்தப்படாதிருந்து, மதுபானம் வேண்டாமென்று மறுப்பது, இழிவாக நோக்கப்படாமல், ஒரு ரொட்டித் துண்டை வேண்டாமென்று மறுப்பதுபோல் கருதப்பட்டால். (4) மித மீறி குடிப்பது “நவநாகரிகமாகவோ” வேடிக்கையாகவோ அல்லது விட்டுக் கொடுக்க வேண்டிய ஒன்றாகக் கருதப்படாமல், கண்டிப்பாய்க் கண்டனம் செய்யப்பட்டால், மேலும், மிக முக்கியமாக (5) இப்படிப்பட்ட பானங்களின் உபயோகத்தைக் குறித்ததில் எது சரி எது தவறு என்பதில் ஒற்றுமைப்பட்ட நிலையான ஒப்புமை இருந்து, பெற்றோர் சமநிலைக்குரிய நல்ல முன்மாதிரியை வைத்து வருவார்களானால்.
23கடவுளுடைய வார்த்தையே நிச்சயமாக, உன்னுடைய மிகச் சிறந்த மிகப் பாதுகாப்பான வழிக்காட்டியாகும். நாம் பார்த்தபடி, அது, மதுபானங்களின் சரியான உபயோகத்தைப் பற்றி முன்மாதிரிகளை அளித்து அவற்றின் துர்ப்பிரயோகத்திற்கு எதிராக, பலமான எச்சரிக்கைகளைக் கொடுக்கிறது. இளம் பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் தீர்ப்புக்கு மரியாதை கொடுக்கும்படி அது அவர்களுக்கு அறிவுரை கூறுகிறது. ஆகவே ஞானமுள்ளவனாயிருந்து, நீ மதுபானங்களைக் குடிக்கவேண்டுமா இல்லையா, அல்லது எந்தச் சூழ்நிலைமைகளின் கீழ் நீ அப்படிச் செய்யலாம் என்பதைக் குறித்ததில் அவர்கள் சொல்வதைச் செவிகொடுத்துக் கேள். குடிப்பவர்கள் எல்லாரும் இளைஞராக இருந்து, அங்கே வழிநடத்தும் செல்வாக்குச் செலுத்த பெற்றோர் அல்லது உறவினர் எவரும் இல்லாதபோது இந்த மதுபானங்களை விருப்பம்போல் குடிப்பதைத் தவிர்ப்பாயானால் நீ ஞானமுள்ளவன்.
24உன் இளமையை மிக நன்றாய்ப் பயன்படுத்திக் கொள்ளவும் நிலையான மகிழ்ச்சியை அனுபவிக்கவும், வழிநடத்துதலுக்காகக் கடவுளுடைய வார்த்தையை நீ நோக்கியிருக்கவேண்டும். ஆகவே, “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.”—1 கொரிந்தியர் 10:31.
[அடிக்குறிப்புகள்]
a ஐக்கிய மாகாணங்களின் சுகாதாரம், கல்வி நல்வாழ்க்கை இலாக்காவால் பிரசுரிக்கப்பட்டது.
[கேள்விகள்]
1-4. (எ) உனக்குப் பழக்கமான இளைஞரில் எவராவது மதுபானங்களை உபயோகிக்கின்றனரா? (பி) மதுபானங்களை உபயோகிப்பதைப் பற்றி நம்முடைய இடப் பகுதியிலுள்ள ஆட்கள் எவ்வாறு உணருகின்றனர்? இப்படிப்பட்ட பானங்களின் பிரயோகம் எல்லா இடங்களிலும் அதே மாதிரியாய்க் கருதப்படுகிறதா?
5-7. (எ) பூர்வ காலங்களில் கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் திராட்ச மதுபானத்தின் உபயோகத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது? (பி) நல்ல ஒரு காரியம் தவறான முறையில் அல்லது அதற்குரிய காலத்துக்கு முன்னதாகவே பயன்படுத்தப்பட்டால் கடுமையான பிரச்னைகளை உண்டு பண்ணக்கூடும் என்பதைக் காட்டுவதற்கு ஓர் உதாரணத்தை நீ கொடுக்க முடியுமா?
8-11. (எ) உடலுக்குள் கிரகிக்கப்பட்டால், சிறிய அளவான மதுபானம் எவ்வாறு பாதிக்கிறது? இந்த அளவுகள் அதிகரித்துக் கொண்டு போகையில் என்ன நடக்கிறது? (பி) குடி மயக்க வெறியின் பாதிப்புகளை நீதிமொழிகள் 23:29-35 எப்படி விவரிக்கிறது? எவராவது இவ்வாறு குடி வெறியில் நடப்பதை நீ எப்பொழுதாவது பார்த்திருக்கிறாயா?
12-17. (எ) மதுபான துர்ப்பிரயோகத்தின் இந்தப் பிரச்னை இளைஞருக்குள் எவ்வளவு விரிவாய் இருக்கிறது? அவர்கள் முதல் தடவையாக இதை எப்படித் தொடங்குகிறார்கள்? (பி) குடிக்கும்படி எவனாவது உன்னை வற்புறுத்த முயலுகையில் அவன் உண்மையில் என்ன உள்நோக்கத்துடன் அவ்வாறு செய்யக்கூடும்? (ஆபகூக் 2:15)
18, 19. ஒருவன் ஒருவேளை குடிவெறி பழக்கமில்லாதவனாக இருந்தாலும் மதுபானம் குடித்ததனால் ஒரே ஒரு கெட்ட அனுபவம் தானேயும் என்ன விளைவிக்கக்கூடும்?
20, 21. (எ) சிலர் ஏன் மதுபானங்கள் எதையுமே உபயோகியாமல் இருக்கத் தெரிந்து கொள்கின்றனர்? (ஓசியா 4:11) (பி) பிரச்னைகளிலிருந்து தப்பிக்கொள்ள முயலும் வழியாக இப்படிப்பட்ட மதுபானங்களைப் பயன்படுத்துவது ஏன் ஞானமல்ல?
22. ஓர் அறிக்கையின் பிரகாரம் எந்தச் சூழ்நிலைமைகளின்கீழ் இந்த மதுபானங்களின் உபயோகம் குறைந்தபட்சம் பிரச்னைகளுக்கு வழிநடத்தாமல் இருக்கலாம்?
23, 24. (எ) மதுபானங்களின் உபயோகத்தின்பேரில் பைபிள் உனக்கு என்ன வழிநடத்துதலைக் கொடுக்கிறது? (நீதிமொழிகள் 23:20; 6:20; 1 கொரிந்தியர் 6:9, 10) (பி) ரோமர் 14:13-17, 21-ல் இக்காரியத்தின்பேரில் கொடுக்கப்பட்டிருக்கிற புத்திமதியை நீ எப்படி வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பாய்?